Sunday, June 24, 2012

ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் மோதினால்...? உண்மை சம்பவம்...!

ஹோட்டல் பேரும் சொல்லமாட்டேன், போலீஸ்ஸ்டேசன் பேரும் சொல்லமாட்டேன், ஆள் பெயரும் சொல்லமாட்டேன், பொண்ணு பெயரும் சொல்லமாட்டேன் ஆனால் சம்பவம் மட்டும் உண்மை...! ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு இது நல்லாவே தெரியும்...!



கொஞ்ச நாளைக்கு முன்னாடி அந்த ஸ்டார் ஹோட்டலில் டிஸ்கோதே படு சுவாரஸ்யமாக நடந்து கொண்டிருந்தது. இளைஞர்களும் இளைஞிகளும் குதுகலமாக நடனமாடி களித்துகொண்டிருந்தனர், அதில் தமிழக போலீஸ் உயர் அதிகாரியின் [[டில்லிகாரர்]] மகளின் நண்பிகளும், நண்பர்களும் உல்லாசமாக நடனமாடி களித்து கொண்டிருந்தனர்.


இந்த பொண்ணு மீது ஒரு மதுரை பாண்டியனுக்கு பயங்கர மையல், அந்த பொண்ணு போற இடமெல்லாம் போயி டார்ச்சர் கொடுப்பது இந்த பாண்டியனின் வழக்கம், அந்த பொண்ணும் சும்மாயில்ல அவளுக்கும் நல்ல நண்பர்கள் நெட்வொர்க் மற்றும் எதற்கும் துணிந்து நிற்பவர்கள், நம்ம லகுட பாண்டி என்னா டார்ச்சர் கொடுத்தாலும் அவங்களும் இவனுக்கு நல்லா உல்டா டார்ச்சர் குடுத்துட்டு இருந்துருக்காங்க...!!!


மையல் கொள்வதும் அது காதலாக மாறுவதும் சினிமாவில்தான் போல, நம்ம லகுடபாண்டி சினிமான்னு நினச்சிட்டானோ என்னவோ, அல்லது நம்ம செல்வாக்கை காட்டி மசிய வைக்கலாம் என்ற நப்பாசையோ தெரியல, விடாமல் விரட்டி இருக்கிறான், அவளும் இவனை விடலை, இவன் குரூப் எங்கே போகுதோ அங்கே அவளின் குரூப் ஹாஜர் ஆகும், அவளின் குரூப் எங்கே போகுதோ அங்கே லகுடபாண்டி குரூப்பும் ஹாஜர் ஆகும்...!


பயங்கரமாக வாய் தகராறு நடக்கும், பச்சை பச்சையாக [[சிகப்பா ஏன் இல்லைன்னு கேக்கப்புடாது]] திட்டிக்கொல்வார்கள் ச்சே ச்சீ திட்டிகொள்வார்கள், அப்புறம் மேனேஜர்கள், செக்கியூரிட்டிகள் தலையிட்டு சமாதானம் செய்து அனுப்புவார்கள்....!


நல்லா தண்ணியடிச்சு கூத்தடிச்சிட்டு சரக்குல போயி வீட்ல உறங்கினாலும், காலையில் எழும்பியதும் இருவரும் போனில் திட்டி சவடால் விடுவாயிங்களாம், நான் இன்னைக்கு இந்த இந்த ஹோட்டலுக்கு இந்த இந்த நேரத்துக்கு போறேன் முடிஞ்சா மாஞ்சா இருந்தா வந்து பாருடா[டி]ன்னு ரெண்டு பேரும் போனிலும் முட்டிப்பாங்களாம்...!


அன்னைக்கும் அப்பிடிதான் இரண்டு குரூப்பும் செமையா போட்டியா ஆடியிருக்காங்க, கொஞ்சம் சண்டை வரும் அடுத்து சமாதானம் அடுத்தும் சண்டை சமாதானம் இப்பிடி போயிட்டு இருக்கும்போது நம்ம லகுடபாண்டிக்கு மப்பு ஏறிப்போச்சு, "டேய் இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாக்காமல் விடவே மாட்டேன்'னு தகராறு செய்ய, அவளும் 'இன்னாடா இன்னா பண்ணுவே கொய்யா' என்று களத்தில் இறங்க முதன்முதலாக ரெண்டு குரூப்பும் அடிதடியில் இறங்க, லகுடபாண்டியின் நண்பனுங்க நண்பிகள் எல்லாம் ஓடிவிட, பாண்டிக்கு செமத்தியான அடி....!!!


அந்த பொண்ணு எதையெல்லாம் கொண்டு அடித்தாள் என்று சொல்லமாட்டேன், அய்யா நல்ல மப்பில் இருந்ததால ஒன்னுமே பிரியல ச்சே புரியலை, 'உன்னை விடமாட்டேன்டி விடமாட்டேன்டி'ன்னு மட்டும் உளறிகிட்டே இருக்க......

போலீசுக்கு போன் பண்ணுனதும் அந்த பொண்ணுதான், போலீஸ் வந்தது பொண்ணுக்கு சல்யூட் அடித்து விட்டு லகுடபாண்டியை அங்கேயே நாலு மொத்தும் மொத்திவிட்டு மாமியார் வீட்டுக்கு கூட்டி சென்றார்கள், இதுல இன்னொரு சுவாரஸ்யம் என்னான்னா அந்த பொண்ணு போலீஸ்கிட்டே தான் யார் என்பதை சொல்லி, தன் அப்பாவுக்கும் போன் செய்துவிட்டாள் [[நல்ல அப்பா கொய்யால]] நம்ம பாண்டி இருக்கானே அவன் யாருன்னு வாயே திறக்காமல் இருந்ததுதான் ஆச்சர்யம்...!!!


போலீஸ்ஸ்டேசன் கொண்டுபோயி தரையில் உக்காரவச்சு நாலு மிதி மிதிச்சும் போதை தெளியலை, டேய் உன் பெயர் என்னடா உன் அப்பன் பெயர் என்னடான்னு கேட்டும் தலையை தொங்க போட்டுட்டே இருந்துருக்கான்[[போதை]] சரி கொஞ்சநேரம் பொருப்போம்னு போலீஸ் காத்திருந்தது....!!!


கொஞ்சநேரம் கழித்து சிலிர்த்து எழும்பிய லகுடபாண்டி, யோவ் நான் எங்கே இருக்கேன்னு முனக....போலீஸ் எஃப் ஐ ஆர் போட ஃபைலை ரெடியாக்கிட்டு இவனை தூக்கி சேரில் உக்கார வைத்து கேட்டார்கள்......

போலீஸ் : டேய் உன் பெயர் என்னடா...?

பாண்டி : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ பயாநிதி....

போலீஸ் : உன் அப்பன் பெயர் என்னடா...?

பாண்டி : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........மு க பழகிரி..................!!!?

[[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]] கத்தியை ஆப்பாக்கி அதிலே உட்கார்ந்த கதையா ஜெர்க்கான போலீஸ், உடனே ஸ்டேசன் இன்ஸ்பெக்டருக்கு போனை போட, ரவுண்ட்ஸில் இருந்த அவர் அலறியடித்துக்கொண்டு ஓடிவர, பாண்டியை பார்த்து கதறி இருக்கார், ஐயய்யோ தம்பிக்கு சின்னபிள்ளையில ஸ்கூல் போகும் போதும் வரும் போதும் நான்தானே உங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துட்டு இருந்தேன், என் ஸ்டேசனிலயே இப்பிடி ஆகிப்போச்சே....யோவ் ஏன்யா எனக்கு உடனே போன் பண்ணலைன்னு சத்தம் போட்டுவிட்டு பாண்டியை வீட்டில் கொண்டு போயி விட்டுட்டு வீட்டுக்கும் தகவல் சொல்லிட்டார்...!


கொதித்தெழுந்த பழகிரி அந்த பொண்ணை என்னா செய்கிறேன் பார் என்று கர்ஜிக்க, அதே போலீஸ் உயர் அதிகாரி என்னா வேணாலும் பண்ணு நான் சந்திக்க ரெடின்னு சவால் விட, வீட்டு பெரியவரிடம் இருந்து பழகிரிக்கு அட்வைஸ் வந்தது, உன் பிள்ளையை ஒழுங்கா வளக்காமல் அடுத்தவன் மீது கோபம் கொள்ளகூடாது கண்மணி என்று கறார் அழுத்தம் வந்தது, ஏன்னா அந்த பொண்ணு குடும்பம் டில்லில செல்வாக்கான குடும்பம் என்பதை அறிந்த பழகிரி சைலன்ட்....!!!


ம்ம்ம்ம்ம்ம் அதுக்கப்புறம்தான் பாண்டி கார்த்திகை மாசத்து பிராணி மாதிரி அலையுதுன்னு தெரிஞ்சி, அவன் லவ் பண்ணுன பொண்ணையே கல்யாணம் கட்டி வச்சி மேடையில கோட்டு போட்டுட்டு பாட்டு பாடினார் பழகிரி....!!!

டிஸ்கி : இம்புட்டு சம்பவமும் நடந்தது அவிங்க ஆட்சியில் இருக்கும் போதுதான்...!

கடைசியாக ஒரு வேதனை போட்டோ...!!!
நாடு நல்லா வளரும் வளரனும் கொய்யால....!

16 comments:

  1. லேட்டா நியூஸ் போட்டாலும் சூப்பரா போட்டுட்டீங்க தல! ஆனானப்பட்ட பழகிரி பேரையே சொன்னவரு, அந்த போல்லிஸ்கார் பேரைச் சொல்லலீயே?

    ReplyDelete
  2. பதிவை படித்ததும் ஒரு தமிழ் படம் பார்த்த மாதிரி இருந்தது

    ReplyDelete
  3. லோகத்துல என்னெல்லாம் நடக்குதுப்பா!

    ReplyDelete
  4. பிள்ளைகள் வாழ்வில் முன்னேற பெரிதும் உதவிடும் பெற்றோர்!!!

    ReplyDelete
  5. ஹாலோ.. கண்டே பிடிக்கமுடியாத அளவிற்கு பெயர்களை மாற்றி பதிவு எழுதிய உங்களின் திறமைக்கு ..வார்த்தையே வரவில்லை. அண்டை நாட்டில் இருக்கும் எனக்கே இவ்வளவு தெளிவாக குழம்புகிறதென்றால், உங்க ஊர் காரர்கள்.. பாவம் முழிப்பார்கள்.

    ReplyDelete
  6. அண்ணன் பெரிய எடத்தையே டச் பண்ணிட்டாரே? எல்லாம் அம்மா இருக்கற தைரியம்?

    ReplyDelete
  7. மனோவுக்கு இந்த மேட்டர் எல்லாம் எப்படி கிடைக்குது!

    ReplyDelete
  8. அப்படி போடு...., விஷயம் அப்படியா போகுது

    ReplyDelete
  9. முதல் சம்பவம் :))
    எனக்கு இறுதி வரையிலும் யார்னே தெரியல .:))))
    கடைசி படத்த பார்க்கும்போது சென்ற வருஷம் பிளானிங் கமிஷன் சொன்ன ரூபாய் 32 தான் நினைவு வருகின்றது .
    // to live with a budget of 32 Rs/day. //

    ReplyDelete
  10. நல்லா நாறுது பெரிய இடத்துமேட்டரு!

    ReplyDelete
  11. யோவ்வ்வ்வ்வ்வ்வ்...
    மனோ...

    எப்பயா...புலனாய்ய்ய்ய்ய்வு செய்ய
    ஆரம்பிச்சே....?????

    ReplyDelete
  12. அதுசரி...
    பயகிரியோட பய ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்ல்ல்லவன் போல...
    வாங்கினது சரி.
    இந்த பசி தொகுதிக்கு செய்யாமத்தான் தூங்குறான்னு பாத்த அங்கயும் இதைத்தான் செய்யிறான். இதுல வாழும் அம்பேத்காரேன்னு பேனர் வேற வச்சிக்கிறாங்க...
    தூ..................

    ReplyDelete
  13. மேல் மட்டம் என்றால் எல்லாம் சகஜம் அண்ணாச்சி!

    ReplyDelete
  14. ஐயையோ ஆட்சில் இருக்கேக்கயே இப்பிடியா? நான் என்னமோ இப்போ நடந்த விஷயம்னு நினச்சேன்! என்ன கொடுமை பாஸ்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!