Sunday, March 24, 2013

பெயர் சொல்ல வைத்த மும்பை தமிழ் தாதா...!

மரியம் என்று எங்கள் ஏரியாவில் [[மும்பை]] ஒரு தாதா இருந்தார், சாராயம் காய்ச்சு வித்தவரும் கூட, என் நண்பனின் அப்பா அவர்...!


அவர் கோலோச்சிய காலத்தில் ஒரு மராட்டிக்காரன் வாய் திறப்பதில்லை தமிழர்களுக்கு எதிராக, ஆனால் தமிழன் தமிழனுக்குள்ளே மோதுறது நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே...!

அவங்களுக்குள்ளே நீயா நானான்னு வெட்டுகுத்து அடிக்கடி நடப்பதுண்டு, அதில் ஒருவர் திடீரெனெ ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார், மறுபடியும் நம்ம மரியம் அண்ணாச்சியின் ஆட்சி.
இந்த நேரத்தில் தாதாக்களை ஒழிப்பதற்கு மஹாராஷ்ட்ரா  அரசு புதிய சட்டம் கொண்டுவர, தாதாக்கள் எல்லாம் தடிஃபாராக [[குண்டர்கள்]] மாற்றப்பட்டு சிட்டிக்குள் வர தடை விதித்தது.

நம்ம அண்ணாச்சியும் அவுட்டாஃப்  சிட்டிக்கு போயிட்டார், அடுத்து எங்களின் ஆட்டம் தொடங்கியது. போலீசுக்கு டிமிக்கி கொடுத்துட்டு அவருக்கு எதிரா செயல்படுபவர்களுக்கு அண்ணாச்சி அர்த்த ராத்திரியில் வந்து பூசை கொடுப்பதை நானே பலமுறை நேரில் பார்த்து இருக்கேன்.

அய்யனார் என்று ஒரு அண்ணனை பக்கத்து குளத்தங்கரையில் அருவாளால் கொத்து கொத்து என்று கொத்தியதை நானும் நண்பன் செல்லப்பாவும் அருகில் இருந்து பார்த்தோம் விலக்கினோம் [[நாங்க அப்போ சின்ன பிள்ளைங்க]]
அம்புட்டு பெரிய தாதா கடைசியில் அநாதை ஆகிப்போனார், குடும்பமோ சிட்டியில் அவரோ வெளியே....ஒளித்து ஒளித்து வந்தாலும், அதில் சுகமில்லாமல் போனது அவருக்கு.

எங்கள் இடம் ஏர்போர்ட் முன்பு இருப்பதால் வேகமாக முன்னேறியது, அதுவரை பெயரில்லாமல் இருந்த அந்த இடத்திற்கு எங்கள் தலைமையில் வந்த நண்பர்களாகள், மாரியம்மன் நகர் [[மாரியம்மன் கோவில் ஒன்று அங்கே உள்ளது]] என்று பெயர் சூட்டினோம்.
ஆனால் வட  இந்தியர்கள் மாரியம்மன் என்ற பெயரை மரியம் என்று [[நம்ம தாதா நியாபகம்]] அழைக்க ஆரம்பித்தனர், போலீஸ் ரெக்கார்டுகளில் [[நம்ம பையலுவ சும்மா இருப்பானுகளா ஒரே அடிதடி அருவாவாதான் இருக்கும்]] மரியம் நகர் என்றே பதிவாக தொடங்க...
எவளவோ முறை மாரியம்மன் நகர் என்று எடுத்து சொல்லியும், அவர்கள் மரியம் நகர் என்றே அழைக்க தொடங்கினர்.

அண்ணாச்சி மரித்தும் போனார் ஆனாலும் அவர் பெயர் ஒரு ஊரை சூழ்ந்து கொண்டது ஆச்சர்யமோ ஆச்சர்யம்....!
முன்பு இரண்டு தாதாக்கள் வெட்டுகுத்துன்னு இருந்தார்களே அவர்கள் இருவரின் மகன்களும் இப்போது உயிர் நண்பர்களாக இருப்பது இன்னும் ஆச்சர்யம், இவர்கள் இருவரும் என் நண்பர்கள் சர்க்கிளில் இருப்பது இன்னும் ஆச்சர்யம்....!

என்னத்தை சொல்ல, உலகம் உருண்டை இல்லையா...?

இவர் நான் பெண்ணெடுத்த வழியில் [[சீவலப்பேரி]] எனக்கு சொந்தமும் கூட....!

31 comments:

  1. , ///இவர்கள் இருவரும் என் நண்பர்கள் சர்க்கிளில் இருப்பது இன்னும் ஆச்சர்யம்....!///

    அவர்கள் "வலையுலக தாதாவான" உங்களுக்கு நண்பராக இருப்பதில் என்ன ஆச்சிரியம்

    ReplyDelete
    Replies
    1. பாவம் ஏதாவது போட்டு குடுங்க சாமியோ....

      Delete
    2. ஏதோ எங்களால முடிஞ்சது..!!

      Delete
  2. எனக்கு சில தாத்தாக்களைத்தான் தெரியும். தாதாக்களா? அதிலும் ஒருத்தர் உங்களுக்கு உறவினரா? பீ கேர்ஃபுல்! நான் என்னைச் சொன்னேன்...!

    ReplyDelete
    Replies
    1. வெளியேதான் தாதா வேஷம் அண்ணே, உள்ளுக்குள்ள பாசக்காரப் பயலுவ ஹா ஹா ஹா ஹா...

      Delete
  3. முதன்முதலா வந்திருக்கிறேன்.. வரும்போதே தாதாப் பதிவு வரவேற்கிறதே... ஹ்ம்ம்.. அண்ணாச்சி பெயர் வாழ்வதை விட தாதாக்களின் வாரிசுக்கள் உயிர்நண்பர்களாக வாழ்வது கேட்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி பூங்கோதை....

      எங்கள் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில்தான் இவர்கள் இருக்கிறார்கள்...அதில் ஒருத்தன் அடுத்த கவுன்சிலர் ஆக காய்கள் நகர்த்தி கொண்டு இருக்கிறான்.

      Delete
  4. பூனையை புலின்னு நினச்சு கதறி ஓடின ஆளுதானே ஆபீசர் உங்க நாஞ்சில்மனோ ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  5. எங்களுக்கு ஆச்சரியம் இல்லே... ஹிஹி...

    பயமாவும் இருக்கு அண்ணே...!

    ReplyDelete
    Replies
    1. பச்ச புள்ளையை பார்த்தா பயம் அவ்வ்வ்வ்....

      Delete
  6. பங்காளிகிட்ட ரொம்ப ஜாக்கிரதையா ..பழகணும் போல ! நாமெல்லாம் சாதா'வாச்சே...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாய்யா இப்பிடியே உசுப்பெத்துங்க நம்மளால அடி வாங்கமுடியாது சாமியோவ் அவ்வவ்....

      Delete
  7. மனோ கடேசியில என்ன தான் சொல்ல வரீங்க?நானும் ரௌடி தான் அப்புடீன்னு......................ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. ரவுடி என்னைக்குய்யா நான் ரவுடின்னு சொல்லி இருக்கான்...? பச்ச புள்ளைங்கதான் [[கைபிள்ள]] பிதட்டிகிட்டு அலையும் ஹி ஹி

      Delete
  8. எனக்கு தாதாவெல்லாம் தெரியாதுண்ணே தாத்தாவ தான் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா பயபுள்ள தப்பிச்சுருச்சே ஹா ஹா ஹா ஹா....

      Delete
  9. எனக்கு தெரிஞ்ச ஒரே தாதா நம்ம கங்குலிதேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா அந்த தாதா வேற....

      Delete
  10. மக்களே.....
    நாமளும் தாதாவுக்கு சொந்தம்னு
    சொல்லி வைச்சிக்குவோம்
    எதுக்கும் உதவும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா புலவரே அடி வாங்கும்போது இன்னும் ரெண்டு கூடுதலாக கிடைக்க உதவும் ஹா ஹா ஹா ஹா...

      Delete
  11. வியக்க வைப்பது தாதாவின் வாரிசுகள் நட்பாக இருப்பது அண்ணாச்சி!

    ReplyDelete
    Replies
    1. அதுதாம்ய்யா எங்க எல்லாருக்குமே ஆச்சர்யம், நேரில் கேட்டு சொல்லி இவனுகளை நாங்க கலாயிப்பதும் உண்டு...!

      Delete
  12. அப்படியா சங்கதி

    ReplyDelete
  13. அதுதாம்ய்யா எங்க எல்லாருக்குமே ஆச்சர்யம், நேரில் கேட்டு சொல்லி இவனுகளை நாங்க கலாயிப்பதும் உண்டு...!

    ReplyDelete
  14. தாதா மனோ! :)

    சொல்லிப் பார்த்தேன் மக்கா... டெரரா இருக்குது!

    ReplyDelete
  15. மும்பையில்தானே தாதாக்களை தடை பண்ணாங்க , பதிவுலக தாதாவாகிய உங்களை இங்கே யாரும் தடை பண்ணலையே , ஏன் பதிவுகளுக்கு ரொம்ப இடைவெளி விடுறிங்க . இதெல்லாம் சரியில்லை . ஆமா. சொல்லிட்டேன் .

    ReplyDelete
    Replies
    1. நேரம் பத்தலை அதான்....இனி கொஞ்சம் சீக்கிரமாகவே வாறன் நன்றி...

      Delete
  16. பெற்றோர்கள் தாதாக்கள்
    பிள்ளைகள் சாதாக்கள்
    அப்படியே இருக்கட்டும் நிம்மதியோடு வாழட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாக்கள் சேர்த்து வித்தை சொத்தை ஆண்டு அனுபவிக்கிறார்கள் வாரிசுகள்...

      Delete
  17. புரிந்தது. உங்களிடம் கவனமாக இருக்கவேண்டுமென்று. இல்லையெனில் மும்பாய் வரும்போது தாதாக்கள் நம்மைக் கவனித்துவிடக்கூடும்....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!