Friday, March 8, 2013

மனதுக்கு வேதனைகள் தரும் நாட்டு நடப்புகள்...!

சொல்லிப்பாரு, தள்ளிப்பாரு, விட்டு தள்ளு...என்று பெரியவாள்கள் சொல்லக்  கேட்டுருக்கேன், அதேபோல சொல்லி பார்த்தாச்சு தள்ளியும் பார்த்தாச்சு இனி, விட்டு  தள்ளுதான்....ஆண்டவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை...!
[[ஆபீசருக்கு புரியும்னு நினைக்கிறேன்]]
-------------------------------------------------------------------

டிமுக தலைமை, நாடகத்தின் உச்சகட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது, இலங்கை தமிழருக்காக போராட்டம் நடத்துகிறார்களாம், தமிழா தமிழா ஏய் உலக தமிழா, மறந்துவிடாதே போர் நிறுத்தம் வேண்டும் என்று ஒரு சட்டி இட்லியை தின்று விட்டு, ஒரு மனைவி ஒரு துணைவியுடன் உண்ணா விரதம் இருந்து தமிழனையும், உண்ணா விரதத்தையும் கேவலப் படுத்தின மனிதன் இவர் என்பதை மறந்து விடாதே தமிழா...!

இனி எப்படியும் காங்கிரஸ் ஜெயிக்கப் போவதில்லை என்பதை அறிந்து, பிஜேபி"யுடன் கூட்டணி வைக்கவே இந்த ஓரங்க நாடகம் என்பதை தமிழனே நீ அறிவாயாக, இது உன்னை பகடைக்காயாக வைத்து தலீவர் [[ப்பூப்பூப்ப்]] ஆடும் ரத்த விளையாட்டு...!

தமிழனுக்கு தமிழன் என்று சொன்னாலே சட்டென்று உணர்ச்சி வசப்படுவான் என்று மற்ற மாநிலத்தவர்கள் சொல்லக் கேட்டு இருக்கேன், திராவிடனின் ரத்தம் அப்படியாம்...!

அதை வைத்தே இத்தனை வருஷம் தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்தி கொண்ட உன்னத மனிதன்தான் இவர். தமிழ், தமிழன் என்று கூறியே தமிழனை ரத்த ஆறு ஓடவைத்த மாமனிதன் இவர்...!

தமிழனுக்கு எதிராக இந்த உலகமே ஏன் ஒன்று திரண்டு நிற்கிறது என்பதுதான் எனக்கு விளங்காத வெளக்குமாறாகவே இருக்கிறது...!

அதிமுக இன்டர் நெட் விங்க்ஸ்ல சொல்றது உண்மைதான் இல்லையா...?

கடிதம் எழுதுவது 

3 மணி நேர உண்ணாவிரதம் 

கறுப்புச் சட்டை 

மனித சங்கிலி

இப்போது...


தூதரக முற்றுகை 


பொது வேலை நிறுத்தம்

இனிமேல்..

வேறென்ன வரும்..???


மறுபடியும் முதல்ல இருந்து தான்... 


கடிதம் 


3 மணி நேர உண்ணா விரதம்..

இவரால் நாடகத்தை தவிர வேறேதும் நடத்த முடியாது என்பதை திமுக உடன்பிறப்புகள் உட்பட அனைவரும் அறிந்து விட்டார்கள்..

சாகும் வரை நாடகம் நடத்தி,
நாடகம் நடக்கும் வரை திமுக செத்தே கிடக்கும்...

-------------------------------------------------------------------------
வெடிவேலு ச்சே ச்சீ வடிவேலு மறுபடியும் அவர் இடத்தை பிடிக்க வந்துட்டு இருக்கார், படத்தின் தலைப்பு "ஆப்பிரிக்காவில் வடிவேலு" கே எஸ் ரவிகுமார் டைரக்ஷன் என்பது இன்னும் சிறப்பு, சிரிப்புக்கு கேரண்டி இருக்குன்னு இப்பவே சொல்லி வைக்குறேன்.
--------------------------------------------------------------------------

தன்னை ஜேபிசி முன் ஆஜராக விடாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்: ஆ.ராசா

#அதான் மொத்தமா குழி தோண்டி ஸ்பெக்ட்ரம் மேட்டரை மண்ணில் புதைச்சாச்சே, இன்னுமா நோண்டுறீங்க, அய்யா ராசா நீ உயிர் பொழச்சதே பெரிய விஷயமாச்சேய்யா, இல்லைன்னா அண்ணா நகர் ரமேஷ் கதிதானே உங்களுக்கும் ஆகியிருக்கும் சாக்குரத நைனா...
-------------------------------------------------------------------------------------

விஸ்பரூபம் படத்துல வரும் முல்லா ஓமர் கேரக்டர் நம்ம காமெடி நடிகர் சந்தானத்துக்கு தாடி வச்சாப்புல இருக்குன்னு பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன், சாட்டிங்க்ல வந்து தாளிக்குறாயிங்க, சரியாதான் சொல்லி இருக்கீங்க, திரும்ப அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் வில்லனை நினைச்சு சிப்பு சிப்பா வருதுன்னு ஹா ஹா ஹா ஹா...
[[டேய் மனோ, கமலுக்கு ஆதரவா குரலும் குடுத்துட்டு இப்பிடி காலை வாரிட்டியேடே]]
-----------------------------------------------------------------------------------

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. தமிழர்கள் சமஉரிமை பெற்று மதிப்புடனும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். இதற்காக தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அங்கு அரசியல் ரீதியிலான சமரசம் ஏற்பட வேண்டும். அது ஏற்படும்வரை பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது - ம"ண்" மோகன் சிங் 
# ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்ட கதையால்லா இருக்கு...?!

9 comments:

 1. சொன்ன சொல்லு
  என்ன ஆச்சு - தங்க ரத்தினமே...
  நேத்து செஞ்ச சத்தியமெல்லாம்
  காத்துல போனதா- பொன்னு ரத்தினமே...///

  ReplyDelete
 2. நாட்டு நடப்புகளை
  கண்டால்
  காடுவாசியா மாறிட்டா என்ன
  என்று தான் தோன்றுகிறது...

  ReplyDelete
 3. பதவிய விடமாட்டாராம். ஆனா எதிர்த்து பந்த் நடத்துவாராம்.

  சேனல்4 போட்ட ஆவணபடத்தை இவர் டிவில் போடமாட்டாரான் ஆனா நாங்கதான் தமிழருக்கு குரல் கொடுப்போம்னு புலம்புவார். . .

  ReplyDelete
 4. சிப்பு சிப்பா வருது... இனி மேலும் வரும் வ.வேலு வந்தவுடன்...

  ReplyDelete
 5. லைக் பட்டன் இல்லையா மனோ அண்ணா?

  ReplyDelete
 6. நாட்டு நடப்பு - கொடுமை தான் மனோ!

  ReplyDelete
 7. செத்த பாம்பு அடித்த கதைபோல இவர் நாடகம் செத்தது உடன்பிறப்புக்கள் இவர் கூடப்பிறந்த உறவு இல்லையே??? செம சூடான பதிவு!

  ReplyDelete
 8. எல்லாமே வடிவேலு காமெடி போலத்தான் இருக்கு!

  ReplyDelete

 9. வணக்கம்

  நாட்டு நடப்புகளைப் போட்டுக் கொடுக்கின்றாய்!
  பாட்டு படைத்தேன் படித்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!