Sunday, December 1, 2013

நண்பனின் நண்பனுக்கு அசத்தலாக உதவிய பதிவுலக சக்கரவர்த்தி !

கீழே உள்ள ஸ்கூல் பையன் லிங்கை வாசித்து விட்டு அப்புறமா கீழே வாசிக்கவும்.


ஷாபி சேட்டன் பஹ்ரைன் வந்துவிட்டதாக அறிந்த நான், அவருக்கு போன் பண்ணவில்லை காரணம் அவர் லீவுக்கு போயிருந்த நாட்களுக்கான பணி சுமைகளை தீர்த்து முடிக்கும் பிஸி என்னவென்று எனக்குத் தெரியும் அதனால் அவரை தொந்தரவு செய்ய இயலவில்லை.
ஒரு பிரச்சினை காரணமாக ஜி எம்"மை காணப் போன எனக்கு, அவர் இல்லாததால் முதலாளி ஆபீசில் இருந்தபடியால் முதலாளி செகரட்டரி "மனோஜ் அந்த ஆளை பார்ப்பதை விட முதலாளி இருக்கிறார் அவரைப் பார்த்து செல்" என என்னை சோபாவில் அமரவைக்க...

கொஞ்ச நேரம் கழித்து முதலாளி ஆபீசில் இருந்து திடீரென வெளியே வந்தது ஷாபி சேட்டன், என்னைப் பார்த்ததும் கட்டி அணைத்துக் கொண்டு, கரம் பற்றினார், பயங்கர பிஸி கையில் மூன்று போன்கள், மூன்றுமே ரிங்காகிக் கொண்டிருக்கிறது பேசக்கூட நேரமில்லாமல் பேசினார்.

மனோஜ்.....உன் நண்பன் செய்த உதவியை என் வாழ் நாட்கள் முழுவதும் மறக்க மாட்டேன், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல சென்னையில் இருந்தேன், உன் நண்பன் ஸ்கூல் பையன்தான் எனக்கு கண்ணாக இருந்தார், மிகவும் நல்ல குணமும் நல்ல மனசும் நிறைந்தவர் உன் நண்பன். [[பிடித்த கையை விடவே இல்லை]]

படபடவென்று பேசினார், செகரட்டரி மேடம் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார், கண் ஆபரேஷன் என்னாயிற்று என்று கேட்டதற்கு, ஆபரேஷன் செய்ய வயது பத்தாது என்று பெங்களூரில் டாக்டர் சொல்லிவிட்டதாக சொன்னார்.

முன் பின் தெரியாத ஒரு நண்பன், அவன் வீட்டிற்கே என் குடும்பத்தை அழைத்து விருந்து வைத்தான் என்றால் ? ஒ மை காட்....நான் கொடுத்து வைத்தவன்...தமிழன் விருந்தோம்பல் பற்றி படித்து இருக்கிறேன், ஆனால் நேரில் இப்போதுதான் பார்கிறேன், இதே கேரளா என்றால் முன் பின் தெரியாதவனை அவன் இருக்கும் தெரு பக்கம் கூட கூட்டிட்டு போகமாட்டான்...!

ரொம்ப நன்றி மனோஜ்.....ஸ்கூல் பையனுக்கும் அவர் குடும்பத்திற்கும் எனது நன்றிகளை சொல்லிவிடு, இனி சென்னை போனால் உன் நண்பர்களை பார்க்காமல் திரும்ப மாட்டேன் என்று கண்ணில் கண்ணீர் மல்க கூறினார், இன்னும் பிடித்த கையை விடவே இல்லை.

அவர் பேசிய ஒவ்வொரு  பேச்சிக்குமிடையில் அவரின் கரத்தின் இறுக்கம் எனக்கு பல அர்த்தங்களை புரிய வைத்துக் கொண்டிருந்தது, நண்பன் உதவிய உதவி எப்படி என்று அவர் பேசியதை விட, கரம் பற்றலை வைத்து நன்றாக உணர்ந்து கொண்டேன்.

கடைசியாக அவர் என்னிடம் கேட்டது "சென்னை ரொம்ப அழகா இருக்குல்ல ?"

"அப்பிடியா நான் பார்த்ததில்லை அங்கே போனதே இல்லை சேட்டா"

கிண்டல் பண்றானோன்னு நினைச்சுட்டே "என்ன நீ பார்த்ததில்லையா ?"

"நான் மும்பைவாசின்னு உங்களுக்கு தெரியும்தானே ? அதனால கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி'யோடு சரி, இப்போ ஆபீசர் நண்பராக கிடைத்தமையால் நெல்லையையும் சுற்றி பார்த்து வருகிறேன் அதோடு சரி, முடிந்தால் இம்முறை நண்பர்களை சந்திக்க போகவேண்டும்" என்றேன் ஆச்சர்யமாக பார்த்து சென்றார்.

ஸ்கூல் பையனுக்கும் அவர் குடும்பத்துக்கும், உதவிய நண்பர்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை சொல்லி வணங்குகிறேன்....

பதிவுலகம் எனும் ஒற்றை சொல் மூலம் நண்பர்களை பெற்ற நான் பாக்கியம் நிறைந்தவன் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...!

ஷாபி சேட்டனை சந்தித்தபின் பதிவு எழுதலாம் என்று இருந்தேன் ஆனாலும் சற்று தாமதமாகி விட்டது.

11 comments:

 1. பதிவுலகின் பயன் இதுதான். முகமறியா நட்டை நமக்கு
  உருவாக்கித் தருகின்றது. எதிர்பார்ப்பில்லாத அன்பே
  உண்மையான நட்பு.
  அருமை ஐயா
  ஸ்கூல் பையனுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. School paiyan - great! Natpukku mariyathai thantha avarum pathivu ezhuthi perumai serkkum neenga - very great!

  ReplyDelete
 3. பதிவெழுதி என்னத்த சாதிச்சேன்னு கேக்குறவங்களுக்கு இந்தப் பதிவை காட்டுங்க.பிரதி உபகாரம் எதிர்பாராத உண்மையான அன்பை சம்பாதித்தோம்ன்னு.

  ReplyDelete
 4. Replies
  1. இது தான் பதியுலக வெற்றி...

   வாழ்த்துகள் அண்ணே..

   Delete
 5. எத்தனை விதமான நட்புக்களைப் பெற்றிருக்கிறோம் இந்தப் பதிவுலகின் மூலமாக...

  நண்பர் ஸ்கூல்பையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பதிவுலகம்/முக நூல் ...பல முகமறியா உறவுகளை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.அதிலும்,நமது நண்பர்களுக்கும் உதவும் மனம் எல்லோருக்கும் வந்து விடாது!///ஸ்கூல்பையனுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நல்ல பல நட்புகளை பெற்றுக் கொடுத்தது இப்பதிவுலகம்.

  ஸ்கூல் பையனுக்கும் வாழ்த்துகள். அவரது பதிவினை முன்னர் படிக்கவில்லை - பயணத்தில் இருந்திருக்க வேண்டும்! இப்போது படித்தேன்.

  ReplyDelete
 8. வாழ்த்துகள் ஸ்பை :-))))))

  ReplyDelete
 9. ஸ்கூல் பையனுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. இது தான் பதியுலக ஆத்ம திருப்தி அண்ணாச்சி!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!