Sunday, December 8, 2013

பலவந்தமாக சமயலறையில் மாட்டின பதிவர் !

காலையில்....

"பாப்பாவை நான் ஸ்கூல் கொண்டு விட்டுட்டு வரட்டுமா பிள்ளே ?"

"ஒன்னும் வேண்டாம் ஸ்கூல் போற வழியில்தான் உங்க "குண்டா" நண்பனுங்க நின்னுட்டு இருக்கானுக, உங்களைக் கண்டால் காலையிலேயே தூக்கிட்டுப் போயிருவானுக, நானே பாப்பாவை விட்டுட்டு வாறேன்"

"அவ்வ்வ்வவ்"

"என்ன அவ்வ்வ்வவ்?"

"இல்ல வடாபாவ் சாப்புட்டுட்டு வரலாம்னு நினைச்சேன்"
"அதெல்லாம் வெளியில சாப்பிடப்டாது"

"கிழிஞ்சிது போ" மனசுக்குள்ளே

"ஆங்...மனசுக்குள்ளே என்ன சொன்னீங்கன்னு எனக்கு நல்லாப் புரியுது"

"அவ்வ்வ்வவ் இது வேறயா ?"

"சரி நான் பாப்பாவை விட்டுட்டு வாரேன்"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

சரி வடாபாவ் வாங்கிட்டு வருவாங்கன்னு நினைச்சா......வெறும் பாவ் மட்டும் வருது....
"என்ன இது ?"

"ஆங் பாவ்.....பட்டோட்டோ பாஜி பண்ணித் தாறேன் பாவ் கூட சாப்பிடுங்க, அப்புறம் எழும்புங்க, அந்த ரெண்டு பட்டட்டோவை எடுத்து நறுக்கித் தாங்க சீக்கிரம்"

"வசமா மாட்டிகிட்டியோ மனோ ?" மனசுக்குள்ளே

"அதான் அப்பவே சொன்னேம்ல நீங்க மனசுல என்ன நினைகிறீங்கன்னு"

"சீக்கிரம் பட்டட்டோ நறுக்கிட்டு, இந்த ரெண்டு வெங்காயத்தை நறுக்குங்க"

"இதெல்லாம் அநியாயம் இல்லியா?"

"மனசுக்குள்ளே அது இதுன்னு நினைக்காம சீக்கிரம் வெட்டுங்க"

"யாரை ?"

"அருவா காலுக்கு கீழேதான் இருக்கு வேணுமா?"

"ஏன் ஏன் இப்பிடி கொலைவெறியா இருக்கே ? நறுக்குன்னா நறுக்குறேன், வேட்டுன்னா ச்சே ச்சீ வெட்டுன்னா வெட்டுறேன், இன்னும் என்னவெல்லாம் நறுக்கணும் தா...."

"நாலு பச்சைமிளகாய் எடுத்து நறுக்குங்க, அப்புறம் நாலஞ்சி பல் பூண்டு எடுத்து, கொஞ்சூண்டு இஞ்சி எடுத்து நல்லா இந்த கப்புல போட்டு இடிச்சு தாங்க"

"அவ்வ்வ்வ்வ்வ்வ் ஊருக்கு டிக்கெட் எடுத்திட்டியாலேய் தம்பி..."

அவனும் என் அவஸ்தை புரிந்தவனாக [[சிரிச்சுட்டே இருக்கான் ராஸ்கல்]] "ஆமா டாடி அது நேற்றைக்கே எடுத்தாச்சு"

"எலேய் நீ சும்மா இரு, நீங்க இங்கே வாங்க அந்த சட்டியை அடுப்புல தூக்கி வச்சி அடுப்பை பத்த வையுங்க"
"நீ எனக்கு எம்புட்டு செல்லம் தெரியுமா ?" ஹி ஹி...

"மஸ்கா மாலீஸ் ஒன்னும் வேண்டாம், கொஞ்சூண்டு எண்ணெய் சட்டியில ஊத்துங்க, கொஞ்சூண்டு கடுகு அள்ளிப் போடுங்க...."

"அய்யய்யோ அம்மா ஆத்தா....கடுகு வெடிச்சி சிதறுதே"

"ம்ஹும்....எனக்கு இத்தனை நாள் எப்பிடி இருந்திருக்கும், ம்ம்ம்ம்ம் அந்த கறிவேப்பிலை எடுத்து சட்டியில போடுங்க"

"அய்யய்யோ சட சட'ன்னு பொரிஞ்சி இப்பிடி பயங்காட்டுதே...?"

"அந்த வெட்டுன வெங்காயத்தை உள்ளே அள்ளிப் போடுங்க, போட்டு கிண்டி"கிட்டே இருங்க.."

"சென்னை போனா கண்டிப்பா கிண்டி போவேன்"
"நான் கரண்டி எடுத்து கிண்டி"ன்னு சொன்னேன், அப்புறம் அந்த இடிச்சி வச்ச இஞ்சிப்பூண்டு எடுத்து போட்டு வதக்குங்க"

"நீதான் இப்போ என்னை வதக்கிட்டு இருக்கே"

"என்ன ?"

"ஹி ஹி" காலுக்கடியில் அருவாள் சாக்கிரத மனோ....

"அப்புறம் அந்த அவித்த மேஸ் பட்டட்டோ எடுத்து உள்ளே போட்டு நல்லா கிண்டுங்க அப்பிடியே கொஞ்சூண்டு மஞ்சள் போடி.........ச்சே ச்சீ மஞ்சள் பொடி....."

"நான்தான்னா உனக்குமா டங் சிலிப் ஆகுது ?"

"ஆங் உங்களுக்கு வாக்கப்பட்டுருக்கேனே....சரி....இனி ஏதாவது சட்டியில போடனுமான்னு "நல்லா" யோசிச்சு சொல்லுங்கப் பார்ப்போம் ?"

"ப்பூஊஊஊ.........உப்பு போடனும், இது கூட எனக்குத் தெரியாதா என்ன ?"

"ச்சே இன்ட்ரஸ்டா போயிகிட்டு இருந்தது இப்பிடி சப்புன்னு போயிறிச்சே...?"
ஆஹா.....இதை சொல்லைன்னா பூரிக்கட்டை அடி குடுக்கலாம்னு பிளான் பண்ணி இருப்பாயிங்க போல....

ஆக...பட்டட்டோ பாஜி ரெடி, கீழே இறக்கி வச்சி...ஒரு பாத்திரத்தில் போட்டு, பாவ் கையிலெடுத்து பியித்து என் வாயில் ஊட்டி விட்டாள் செல்லம்....சுவர்க்கம் பூமியில் தெரிந்தது எனக்கு....!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் "மனோ"கரா...?

9 comments:

 1. //////இதற்குத்தானே ஆசைப்பட்டாய் "மனோ"கரா...?/////
  இதுதான் நிஜம்...
  நிகழ்வுகளில் மூழ்கிவிடுங்கள்....
  அன்புக் கட்டளைகளிலும்
  ஆருயிர்களின் வேடிக்கை சிறை பிடிப்பிலும்
  சுகம் காணுங்கள்...

  ReplyDelete
 2. பகரைன்ல மட்டுமல்ல பம்பாயிலேயும் இந்த தென்பாண்டி சிங்கம் கிச்சன் குள்ள போய் மாட்டிகிட்டு அவதிபடுது...ஹும்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 3. சமையல்கட்டுல மாட்டினாலும், நல்ல நொறுக்கு தீனி கிடைச்சிருக்கே அண்ணாச்சி !!!

  ReplyDelete
 4. வாவ்.. சுகமான சுமைகள்!! ;-)

  ReplyDelete
 5. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 6. ப்பூபூபூபூ ...............அட ஒண்ணுமே நடக்கிலியே?சப்பு ன்னு போயிடுச்சே?

  ReplyDelete
 7. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மனோ அண்ணா...
  சந்தோஷம் தொடரட்டும்...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!