Sunday, March 2, 2014

இது கதிர்வேலன் காதல், நாஞ்சில்மனோ விமர்சனம் !

 "இது காதர்கான் வேலன் ச்சே ஸாரி இதி கதர்வேலன் ஸாரி இது கதிர்வேலன் காதல்"

கண்ணுல நடிப்பு சரி இல்லைன்னு கூலிங் கிளாசை அடிக்கடி கண்ணுல மாட்டுறது சரியில்லை...ஆனாலும் முதலுக்கு இப்போ கொஞ்சூண்டு பரவாயில்லை பரவாவுண்டுன்னும் சொல்றாயிங்க.

அடுத்து, மன்மதராசா பாட்டு ராணியை அக்கா ஆக்கி இருப்பது கொடுமையிலும் கொடுமை...[[சாயாசிங்...நயனை விடவும் அழகு]]

பாடல்கள் பரவாயில்லை ரகம், இசையும் அம்புட்டு சரியில்லை ஆமான்னும் சொல்லமாடன் ச்சே சொல்லமாட்டேன்.

நயன்தாரா இடுப்பை அதாங்க வயறு எக்கி எக்கி நடிச்சது, சரி அதாவது போகட்டும் சில இடங்களில் அம்மிணியின் உண்மை உடலழகு வெளியே கண்றாவியாக தெரிகிறது ! [[ஒளிப்பதிவாளர் பால சுப்பிரமணியன் கவனத்திற்கு]]

 நயன்தாரா மூஞ்சியில ஆறுகிலோ பவுடர் அப்பட்டமாக தெரிகிறது....!

செலவே இல்லாம படத்தை எடுத்திருக்காங்க என்ன...வெடிவைக்க மட்டும் ச்சே பாட்டுக்கு மட்டும் வெளிநாடு போயிருக்காங்க அது ஒண்ணுதான் செலவு !
முணுக்குன்னு முக்கியதும் முக்காததுமாக பாட்டு வருவது எரிச்சலாக இருக்கிறது.

ஒரு காட்சியில் வந்தாலும் மயில்சாமி ஒரு கலக்கு கலக்கிவிட்டு செல்வது நன்றாக ரசி[சிரி]க்க வைத்தது.

சந்தானம் மட்டுமே நம்மை காப்பாற்றுகிறார் ! என்னைப் பொறுத்தவரை சந்தானம்தான் இந்த படத்தின் ஹீரோ, கேப்ல கேப்ல எஸ் எம் எஸ் மெசேஜை அப்பிடியே போட்டு தாக்குறார் !

ஒரு முறை ரசிக்கலாம் சந்தானம் என்னும் ஒரு கலைஞனுக்காக...!

என்ன.......பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லியிருக்காங்க இது ஒன்னுதான் கதை !

ஒரு டிஸ்கி : 12.03.14 முதல் 14.03.14 வரை டெல்லியில் உணவு பாதுகாப்பு குறித்த மூன்று நாள் TOT (Training of Trainers ) தமிழகத்தில் பணிபுரியும் 585 FSOக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரில் நம்ம ஆபீசரும் ஒருவர்,11.03.14ல்ல் மதுரை-டெல்லி விமானம். 16.03.14ல் ரிட்டர்ன்.

டில்லியில் இருக்கும் நண்பர்கள் கவனிக்கவும்.

12 comments:

 1. சாயாசிங் ரொம்ப பிடிக்குமோ...?

  ReplyDelete
 2. பல இடங்களில் சிரிப்பு வரவைத்தாலும் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் எந்தெந்தக் காட்சிகளில் சிரித்தோம் என்று யோசிக்கும்போது ஒண்ணுமே தோணமாட்டேங்குது...

  ReplyDelete
 3. ஆனாலும் இவ்ளோ ஸ்பீடா விமர்சனம் எழுதக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. தம்பி சொன்னா சரிதாம்ய்யா ஒத்துக்குறேன்.

   Delete
 4. அர பக்க விமர்சனத்துக்கு ஆறு போட்டோஸ் போட்ட மொதோ ஆளு நீர்தாம்யா... :)

  ReplyDelete
 5. படம் பாக்கலாமா, வேண்டாமா....

  ReplyDelete
 6. சந்தானம் வழக்கம் போல் கலக்கி இருக்கிறார். படம் டீசண்டா இருக்கு.நயன் தாரா நடிச்சு இருக்காரா என்ன? சும்மா வந்து போகிறார்.

  ReplyDelete
 7. விமர்சனத்தை விஞ்சும் புகைப்படங்கள். வித்தியாசமான பாணி.

  ReplyDelete
 8. இன்னும் பார்க்கவில்லை மன்மதராணி அக்காவா!இது அடுக்குமா!ஹீ

  ReplyDelete
 9. கூலிங் கிளாஸ் கண்களை மட்டுந்தான மறைக்கும்? அவருக்கு எந்த உணர்ச்சியுமே வர மாட்டேங்குதே. டான்ஸே தெரியாதவருக்கு மூனு பாட்டு குடுக்கறதும் தேவையான்னு கேக்க தோனுது. முந்தைய படத்த விட பரவால்லைன்னு சொன்னது ரொம்ப சரி.

  ReplyDelete
 10. நல்ல விமர்சனம்......

  ஆஃபீசர் தில்லி வருவது குறித்து தெரிவித்தமைக்கு நன்றி. என்னுடைய மின்னஞ்சல் முகவரி venkatnagaraj@gmail.com.. அவரது மின்னஞ்சல் முகவரி கொடுங்களேன்...... அவர் தில்லி வரும்போது சந்திக்கிறேன்...

  ReplyDelete
 11. சுருக்கமான அருமையான விமர்சனம்
  நம் ஆபீஸர் டெல்லி போவது குறித்தத் தகவல்
  அதிக மகிழ்வளிக்கிறது
  பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!