Tuesday, September 24, 2013

நீ வாங்குற அஞ்சி பத்துக்கு இது உனக்கு தேவையா...?

மும்பை ஏர்போர்ட் பக்கத்தில் என் வீடு இருப்பதால் [[நான் லீவில் இருந்த சமயம்]] பஹ்ரைனில் இருந்து வந்த நண்பன் ஒருத்தன், அவனை பிக்கப் பண்ணி உள்நாட்டு விமான [[சாந்தா குரூஸ்]] நிலையத்தில் விடுமாறு சொன்னான்.
ஏர்போர்ட் செக்கிங் எல்லாம் முடிந்ததும் எனக்கு போன் பண்ணு பத்தே நிமிஷத்தில் வந்துருதேன்னு சொன்னேன், அவனும் போன் பண்ணினான் [[மழை சமயம் வேற]]

அவனை பிக்கப் பண்ண வேகமாக ஏர்போர்ட் நோக்கி நடந்து கொண்டிருந்த போது, ஏர்போர்டில் வேலை பார்க்கும் ஒரு சொந்தக்காரர் வேலை முடிந்து வந்து கொண்டிருந்தார்.

"என்ன மனோ வேகமா போறாப்புல இருக்கு ?"

நான் மிகவும் பெருமையாக "அமெரிக்காவுல இருந்து என் நண்பன் வந்துருக்கான் அவனை பிக்கப் பண்ண போயிகிட்டு இருக்கேன் அண்ணே" என்றதும் அவர் கேஷுவலாக சொல்லிட்டு போனார்....

"தம்பி இன்னைக்கு அமெரிக்காவுல இருந்து எந்த பிளேனும் வரலை..."

நாக்கை கடிச்சுட்டு நான் ஓடின ஓட்டம் இருக்கே......
நீ வாங்குற அஞ்சி பத்துக்கு இது உனக்கு தேவையான்னு கவுண்டமணி செந்தில்கிட்டே சொல்லும் காமெடி மனசுல ஓடுச்சு.

[[வெளியே வந்த நண்பன் ஏர்போர்ட்டை லேசா திரும்பி பார்த்துட்டு கைய நீட்டிகாட்டி இதாடா உங்க மும்பை ஏர்போர்ட்? என்றான். அவன் கையை காட்டிய இடத்தில் "சத்ரபதி சிவாஜி இன்டர் நேஷனல் ஏர்போர்ட்" என்று எழுதப்பட்ட பெரிய துணி கிழிஞ்சி தொங்கிட்டு இருந்துச்சு..அவ்வ்வ்வ்]]
எப்பிடி எல்லாம் பல்ப் வான்ட்டடா போயி வாங்குறோம் பாருங்க....!
-----------------------------------------------------------------------------------------

சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம் போடவேண்டும் என்று, கட்டப்பஞ்சாயத்து அவங்களுக்குள்ளே நடத்திட்டு இருக்காயிங்க காங்கிரஸ் மேலிடத்து ஆளுங்க, அதனால்தான் நம்ம மண்ணு வாயில இருந்து வார்த்தை வெளியே வந்துருச்சு.
ஏன்னா சமூக வலைத்தளங்களில் நாத்தம் பிடிச்சு நாறுறதே இந்த நாதாரிங்கதானே இல்லையா ?

15 comments:

  1. செம பல்புதான் போங்க...

    சமூக வலைத்தளங்கள் மீது நம்ம மண்ணு பாயிறார்னா காரணம் இல்லாமலா... காங்கிரசின் பல வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்தியது இந்த சமூக வலைத்தளங்கள் தானே

    ReplyDelete
  2. மும்பைலயாவது பேனர் கிழிஞ்சு தொங்குது... இங்க சென்னைல கூரையே இடிஞ்சு விழுந்திருது அப்பப்ப.... ஹிஹி....

    ReplyDelete
  3. ஹஹா சூப்பர் .. நல்லா இருக்கு

    ReplyDelete
  4. சரியான காமெடி தான் மனதில் ஓடி இருக்கு...!

    ReplyDelete
  5. நல்ல பல்ப்!(ஒரு,100 வால்ட் இருக்குமா?)

    ReplyDelete
  6. ஹஹஹா.. ஓ மாமா.. பேனர் கிளிஞ்சுச்சு..

    ReplyDelete
  7. அமெரிக்கான்னாலே தனி மவுசுதான் இல்லைண்ணா!

    ReplyDelete
    Replies
    1. பின்னே.....வைரங்கள், வைடூரியங்கள் இருக்கும் நாடாச்சே ஹா ஹா ஹா ஹா...

      Delete
  8. பின்ன நம்ம மனோ அண்ணா இருக்குறரே!! அதைவிட வேற மைனஸ் பாய்ண்ட் வேணும் பஹ்ரைனுக்கு!?

    ReplyDelete
  9. சரியான காமெடி அனுபவம்தான்! நன்றி!

    ReplyDelete
  10. சரிதான், ஆஜர். நா வரலேன்னு தெரிந்தா அங்க வந்து அருவாள போடுவியே அதான் .

    ReplyDelete
  11. என்ன செய்வது நம் நாட்டைப் பற்றி காமெடியாய் சொல்லத்தான் நிறைய இருக்கிறது...

    ReplyDelete
  12. ஆஹா.....சாதாரணம் போயி இப்போ சர்வ"வும் செர்ந்திருச்சா ஹி ஹி....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!