கேரளா நண்பன் சொன்ன ஒரு கதை.
நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்பாக வாழ்ந்த செல்வந்ததம்புரான் கட்டிய ஒருவீடு, தலைமுறைகள் மாற மாற வீடு கஷ்டமான நிலையில் தள்ளப்பட, நான்காவது தலைமுறையில் வந்தவருக்கு ஒரு பெரிய டவுட்டு...
இந்த வீட்டுக்குள்ளே எங்கேயோ நம் முன்னோர்கள் புதையல் வைத்திருப்பார்கள் என்று...காம்பௌன்ட் வீடு என தோண்டி தோண்டி பார்த்தும் ஒன்றுமே அகப்படவில்லை.
குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டதால் வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்...ஆனால்...சாபம் கொண்ட வீடு என்று தம்புரான் வீட்டை யாரும் வாங்கவேயில்லையாம்.
சம்பிராதயம் சாபம் இவைகளில் நம்பிக்கை இல்லாத ஒருவர் [[சவுதியில் வேலைப் பார்த்தவர்]] அல்ப விலையில் அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்...அவர் அந்த வீட்டிற்கு குடிவர விரும்பாமல், வீட்டின் மரவேலைப்பாடுகளை கழட்டி விற்கலாம் என்ற எண்ணத்தில் வீட்டை வாங்கினாராம்.
நான்கைந்து நாட்கள் வீட்டை சுற்றி பார்த்தவருக்கு, வீட்டில் ஒரு இடத்தில் ஒரு தேக்கு மரத்தூண் வித்தியாசமாக இருக்க...[[சேட்டன் அல்லவா ?]] சந்தேகம் வலுக்க ஆரபிச்சுதாம்.
ஒருநாள் யாருமில்லாமல் தனியாக வந்து அந்த தூணை வேகமாக சுத்தியால் அடிக்க..சத்தம் வித்தியாசமாக இருக்க...தூணை உடைத்தால்....
தூணின் உள்ளே எல்லாம் தங்கம் பவுடராக நிரம்பி வைக்கப்பட்டிருந்ததாம்...சேட்டன் குடும்பம் இப்போது அமெரிக்காவில் வசிப்பதாக சொன்னார் நண்பன்...!
உண்மையா பொய்யா தெரியல சாமீ...ஆனால் திருவிதாங்கூர் ராஜாக்கள் தங்கத்தை பவுடராக சேமித்து வைத்திருந்தார்கள் என்று படித்து இருக்கிறேன்.
திருவனந்தபுரம் பத்மனாபசுவாமிகள் கோவிலில் மார்த்தாண்ட வர்மா, சுவாமிதான் ராஜா நான் அவரின் தாசன் என்று கூறி வாளை சுவாமி காலடியில் சரண்டர் செய்யும்போதே உஷாராகி இருக்கனும், ஏன் வாளை சரண்டர் பண்ணினார்ன்னு, மொத்த கஜானாவும் அங்கல்லா இருந்துருக்கு ?!!!
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் யாவருக்கும்...
இந்த கதை உண்மையோ பொய்யோ! அந்த தம்பிரான் குடும்பம் பாவம்! வாங்கியவர்கள் கொஞ்சமாவது அவருக்கு தந்திருக்கலாம்!
ReplyDeleteஇது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை விற்றவருக்கு கொஞ்ச்மாவது செய்திருக்கலாம்... அவர் பாவம்.
ReplyDeleteஉண்மை தெரியல சாமீயோவ்...
ReplyDeleteஆனாலும் அந்த தங்கம் கொஞ்சம் சரி அவர்களுக்கு உதவி இருக்குமா!கோவில் கதை இப்ப அமுக்கியாச்சு[[!பொது ஊடகத்தில்!
ReplyDelete