Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday, August 27, 2015

ராஜாக்களின் ராஜதந்திரங்கள்...!


கேரளா நண்பன் சொன்ன ஒரு கதை.

நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்பாக வாழ்ந்த செல்வந்ததம்புரான் கட்டிய ஒருவீடு, தலைமுறைகள் மாற மாற வீடு கஷ்டமான நிலையில் தள்ளப்பட, நான்காவது தலைமுறையில் வந்தவருக்கு ஒரு பெரிய டவுட்டு...

இந்த வீட்டுக்குள்ளே எங்கேயோ நம் முன்னோர்கள் புதையல் வைத்திருப்பார்கள் என்று...காம்பௌன்ட் வீடு என தோண்டி தோண்டி பார்த்தும் ஒன்றுமே அகப்படவில்லை.

குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டதால் வீட்டை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்...ஆனால்...சாபம் கொண்ட வீடு என்று தம்புரான் வீட்டை யாரும் வாங்கவேயில்லையாம்.

சம்பிராதயம் சாபம் இவைகளில் நம்பிக்கை இல்லாத ஒருவர் [[சவுதியில் வேலைப் பார்த்தவர்]] அல்ப விலையில் அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்...அவர் அந்த வீட்டிற்கு குடிவர விரும்பாமல், வீட்டின் மரவேலைப்பாடுகளை கழட்டி விற்கலாம் என்ற எண்ணத்தில் வீட்டை வாங்கினாராம்.

நான்கைந்து நாட்கள் வீட்டை சுற்றி பார்த்தவருக்கு, வீட்டில் ஒரு இடத்தில் ஒரு தேக்கு மரத்தூண் வித்தியாசமாக இருக்க...[[சேட்டன் அல்லவா ?]] சந்தேகம் வலுக்க ஆரபிச்சுதாம்.

ஒருநாள் யாருமில்லாமல் தனியாக வந்து அந்த தூணை வேகமாக சுத்தியால் அடிக்க..சத்தம் வித்தியாசமாக இருக்க...தூணை உடைத்தால்....

தூணின் உள்ளே எல்லாம் தங்கம் பவுடராக நிரம்பி வைக்கப்பட்டிருந்ததாம்...சேட்டன் குடும்பம் இப்போது அமெரிக்காவில் வசிப்பதாக சொன்னார் நண்பன்...!

உண்மையா பொய்யா தெரியல சாமீ...ஆனால் திருவிதாங்கூர் ராஜாக்கள் தங்கத்தை பவுடராக சேமித்து வைத்திருந்தார்கள் என்று படித்து இருக்கிறேன்.

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமிகள் கோவிலில் மார்த்தாண்ட வர்மா, சுவாமிதான் ராஜா நான் அவரின் தாசன் என்று கூறி வாளை சுவாமி காலடியில் சரண்டர் செய்யும்போதே உஷாராகி இருக்கனும், ஏன் வாளை சரண்டர் பண்ணினார்ன்னு, மொத்த கஜானாவும் அங்கல்லா இருந்துருக்கு ?!!!
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் யாவருக்கும்...


Sunday, November 20, 2011

புலியின் வீரமும் தமிழனின் அன்பும்...!!!


 ஒரு காட்டுக்குள்ளே புலி இருக்குறதா தகவல் கிடைச்சதும், ஐநா சபை ஒரு டெஸ்ட்டுக்காக அமெரிக்கன் போலீஸ், ரஷ்யன் போலீஸ், இந்தியன் போலீஸ் டீமை தேர்ந்தேடுத்துச்சாம்....


முதலில் பேரிக்காய் ச்சே ச்சீ அமெரிக்க போலீசை காட்டுக்குள் அனுப்பினார்களாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு திரும்பி வந்துட்டாயிங்களாம்...


அடுத்து ரஷ்யன் போலீஸ் டீம் போனதாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு சொல்லிட்டு திரும்பிட்டாங்களாம்...

கடைசியா களம் புகுந்த நம்ம இந்தியன் டீம், ரொம்ப நேரமாகியும் திரும்பலையாம், அதிர்ச்சி ஆன ஐநா தலைவர், இவங்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துருச்சுன்னு பார்க்கலாம் வாருங்கள் என காட்டுக்குள் போயி பார்த்தால்.....

நம்மாளுங்க ஒரு கரடியை பிடிச்சி கட்டி வச்சி அடி பின்னிட்டு இருந்துருக்காங்க, நான்தான் புலி'ன்னு சொல்லு சொல்லுன்னு அடிச்சிட்டு இருந்துருக்காங்க.....[[ஹா ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]

கொசுறு : எங்கேயோ படிச்சது...!!!


டிஸ்கி : சம்மந்தமே இல்லாத என் நண்பனை என்கவுன்டரில் கொன்ற மும்பை போலீஸ்.....!!!

டிஸ்கி : நானும் இந்தியன்தான், கருத்து சொல்றவன் இங்கே வந்து கருத்து சொல்லு பதில் சொல்ல ஆளுங்க ரெடியா இருக்காங்க ஹி ஹி....


டிஸ்கி : புலின்னு சொன்னாலே மலையாளிகளுக்கு கொலை நடுங்குது, ஏன்னு என் உண்மை பேசும் மலையாளி நண்பன்கிட்டே கேட்டேன், அவன் சொன்னது ஆச்சர்யமா இருந்தது, பொறாமையும், கடுப்பும், இயலாமையும்தான் காரணம்னு சொன்னான்....!!!!


Friday, November 18, 2011

நண்பனிடமும் சூதனமாக இரு....!!!

எங்க அப்பா சொன்ன இன்னுமொரு கதை....

ஒரு குளத்துல ஒரு முதலையும், கரையின் ஓரத்துல இருந்த மாமரத்துல குடியிருந்த ஒரு குரங்கும் இணைபிரியா நண்பர்கள், குரங்கை முதலை அதன் மேலே ஏற்றி குளத்தை எல்லாம் சுற்றி காட்டும், இப்படி ஓடியாடி விளையாடி வந்தனர்...


ஒருநாள் மாமரத்தில் மாம்பழம் காய்த்து குளுங்கவே குரங்கு மாம்பழத்தை பறித்து சுவைத்து கொண்டிருப்பதை கண்ட முதலை எனக்கும் மாம்பழம் தருவாயா நண்பா என கேட்டது....

குரங்கும் ஒ தாராளமாக எனக்கூறி மாம்பழங்களை பறித்து கொடுத்தது, சாப்பிட்ட முதலை ஆஹா நல்ல ருசியாக இருக்கிறதே என சொல்லி இன்னும் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிட்டது....


இப்படி கொடுத்தும் வாங்கியும், விளையாடியும் இருந்த நண்பர்களின் வாழ்க்கையில் விதியும் விளையாடியது, முதலையின் மனதில் ஒரு குரூர எண்ணம் வெளிப்பட்டது......இந்த மாம்பழமே இம்புட்டு ருசியாக இருந்தால் அதை தினமும் திங்கும் குரங்கின் குடல் எம்புட்டு சுவையாக இருக்கும் என நினைத்து கொண்டு காத்து இருந்தது....!!


ஒருநாள் வழக்கம் போல முதலை குரங்கை முதுகில் ஏற்றி வலம் வரும் போது, குரங்கின் குடல் நியாபகம் வரவே குரங்கை குளத்தின் நடுவில் கொண்டு போயி நின்று கொண்டு கேட்டது, குரங்கே குரங்கே நீ பறித்து தரும் மாம்பழங்களே எவ்வளவு சுவையாக இருக்கிறது, அப்போ அதை சாப்பிடும் உன் குடல் இன்னும் சுவையாக இருக்குமல்லவா...? என கேட்க.....


இதை சற்றும் எதிர்பாராத குரங்கு சுற்றும் முற்றும் பார்க்க, தான் தப்பிக்க முடியாதபடி நடு குளத்தில் இருப்பதை உணர்ந்த குரங்கு சமாளித்துக்கொண்டு சொன்னது, அதற்கென்ன நண்பா நான் குடலை மரத்தில் அல்லவா வைத்து விட்டு வந்தேன் என்னை அங்கே கொண்டு போ எடுத்து தருகிறேன் என சொல்ல, முதலை வேகமாக குரங்கை கரையில் கொண்டு சேர்த்தது...


கரையிறங்கிய குரங்கு வேகமாக ஓடிபோயி மரத்தில் ஏறிக்கொண்டு முதலையை பார்த்து சொன்னது "போடா ங்கொய்யால"


[[எங்க அய்யா கதையை கொஞ்சம் மாத்தி சொல்லி இருக்கிறார்னு பின்னாட்களில் புத்தகங்களில்  வாசித்து தெரிந்து கொண்டேன்]]


அப்பா சொன்ன நீதி : என்னதான் நண்பனா இருந்தாலும் நாம சூதானமா இருக்கணும்....!!!

டிஸ்கி : உலக தமிழர்கள் யாவரும் அறிந்த, தமிழில் வெற்றிக்கொடி கட்டி நம் நெஞ்சில் வாழும்  மகா காமெடி நடிகரின் பேட்டி, பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக நாஞ்சில்மனோ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளி வருகிறது, 

அவர் யாரென்று நாளை பதிவில் சொல்கிறேன், பேட்டி எடுத்தது நாஞ்சில்மனோ...!!! காத்திருங்கள் திங்கள் வரை....!!!




Thursday, November 17, 2011

புத்தியுள்ள நீதிபதி.....!!!

பழைய காலத்துல நடந்த சம்பவம் எங்க அப்பா அழகா விவரிச்சு சொல்லும்போது சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் மனசுக்கு, ஊரில் பெரியவரை ஒருத்தன் ஜாதி விரோதத்தால் வெட்டி கொலை செய்துவிட்டான்...

கொலையாளியையும் சந்தேகத்தில் போலீஸ் பிடித்துவிட்டாலும் ஆதாரம் இல்லை, கேஸ் கோர்ட்டுக்கு போனாலும், கொலை செய்த அருவாள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது, கொலையாளியோ அந்த அருவாள் என்னுடையது அல்ல என்று அடித்து சொல்லிவிடவே கேஸ் விவகாரம் நீண்டுகொண்டே போனது...


போலீஸ் எவ்வளவோ விசாரிச்சும் அவன் கொலை செய்ததற்கான ஆதாரம் கிடைக்கவே இல்லை, கொலை செய்தது அவன்தான் என நன்றாக தெரிஞ்சும் கொலையாளியை ஒன்றும் செய்ய முடியவில்லை ஆதாரம் இல்லையே...


எல்லாவற்றையும் பார்த்து, கணித்து, கவனித்து கொண்டிருந்தார் நீதிபதி, கடைசி வரையும் ஆதாரம் கிடைக்காததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து சந்தேகப்பட்ட நபரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு சொன்னார்.



கொலையாளி மிகுந்த சந்தோசத்தோடு கிளம்பினான் பரிவாரத்தோடு, அப்போது திடீரென நீதிபதி சத்தமாக சொன்னார், அதான் கேஸ் முடிஞ்சி போச்சுல்ல அந்த அருவாள் யாருடையதோ அதை எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும், கொலையாளி ஓடிப்போயி அருவாளை எடுக்கவும், கொலையாளி வகையாக சிக்கிக்கொண்டான்.....!!!

அப்பா சொன்ன நீதி : தப்பு செய்தால் என்னதான் தகடுதத்தம் செய்தாலும், தண்டனை நிச்சயம் உண்டு...!!!

மனோ"தத்துவம் : சந்தனம் சுமக்கும் கழுதைக்கு சந்தனத்தின் மகிமை தெரியாது....!!!

Sunday, November 13, 2011

லாட்டரி சீட்டில் பல்பு வாங்குவது எப்படி....!!!

வாழ்க்கையில நடந்த நடக்கும் முதல் ஆச்சர்யமாச்சே வரலாறு ஆச்சே, வெஸ்டன் யூனியன் பேங்க்ல லாட்டரி அடிச்சதுன்னு அதை கொஞ்சம் விரிவா சொல்றேன் முதல்ல இருந்தே....


நாசமாபோச்சு போங்க....

பொதுவா வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு பணம் அனுப்பும் பேங்குகளில் நாம் பணம் அனுப்பியதும் கஸ்டமர்களை கவர்வதற்காக இப்பிடி லாட்டரி சீட்டுகள் கொடுப்பதுண்டு, எனக்கு இதில் ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை காரணம் ஒரு நாளும் லாட்டரி விழுந்ததே கிடையாது...!!!

பணம் அனுப்பியதும் அவர்கள் தரும் லாட்டரி சீட்டை பக்கத்தில் இருக்கும் இந்திய [[மொராக்கோ]] பிரஜைகளுக்கு கொடுத்து விட்டு செல்லும் என்னை லூசோன்னுதான் பார்ப்பாயிங்க நம்ம ஆளுங்க....!!!

இல்லைன்னா ரூமுக்கு வந்ததும் தூக்கி தூரப்போட்டுருவேன். இது ஒரு பன்னெண்டு வருஷமா நடக்கும் தொடர்கதை, இந்த தடவை ஊர் போயிட்டு வந்தபின் இந்த டிக்கெட்டை முன்பு போல களையாமல் எங்கோ போட்டு வைத்திருந்தேன்...

நேற்று [[அதான் முந்தாநாள்]] நான் பணியில் இருக்கும் போது, போன் வந்தது ஹலோ எனக்கு மனாசே கூட பேசணும் முடியுமா பிலிப்பயினி ஆங்கிலத்தில் பேசினாள், நான்தான் என்ன மேட்டருன்னு கேட்டதுக்கு செர் உங்களுக்கு லாட்டரியில பிரைஸ் அடிச்சிருக்கு, டிக்கெட்டையும், உங்கள் சிபிஆரையும் [[சிபி அல்ல அதுதான் எங்கள் அத்தாரிட்டி கார்ட்]] கொண்டு வந்து பரிசை பெற்று செல்லுங்கள் என்றாள்...

நான் கேட்டேன் என்ன பரிசென்று அதற்கு அவள் அது சர்பிரைஸ் செர் நீங்க நேர்ல வந்து பாருங்கள் என்றாள், நமக்குதான் மனசுக்குள்ளே ஒன்னும் வைக்க முடியாதே, பிளாக், பேஸ்புக், டுவிட்டர், பஸ் லாரி ஆட்டோ'ன்னு எல்லா ஆத்தாகிட்டேயும் சொல்லி பரப்பிட்டேன் ஹி ஹி...

போதாததுக்கு நண்பர்களிடமும் சொல்ல, ஒருத்தன் சொல்றான் தங்க பிஸ்கட் கிடைக்கும்னு, ஒருத்தன் சொல்றான், 5000 டாலர் கிடைக்கும்னு, ஒருத்தன் சொல்றான் எல் சி டி கிடைக்கும்ங்குறான், ஒருத்தன் சொல்றான் ஆயிரம் தினாராவது கிடைக்குங்குறான்....!!!


ஆக எனக்கு வேலையே ஓடவில்லை, எப்படா டியூட்டி முடியும்னு தவிச்சுகிட்டு இருக்கும் போதே, ஆமாம் எல்லாம் சரி லாட்டரி டிக்கெட்டை எங்கே வச்சோம்னு மறந்து போச்சே, வழக்கமா தூரப்போட்ட மாதிரி போட்டுட்டோமா தெரியலையேன்னு யோசிச்சு யோசிச்சு தாவு தீர்ந்து போனதுதான் மிச்சம், கொய்யால நியாபகமே இல்லை சலிப்பாக இருந்தது...

சரி எதுக்கும் வேலை முடிந்ததும் போயி பார்க்கலாம்னு தவிப்போடு காத்து இருந்தேன். வேலை முடிஞ்சதும் டாக்ஸி பிடிச்சு நேரே ரூமுக்கு ஓடினேன் டிக்கெட்டை தேடு தேடுன்னு தேடி சலிச்சு, ஒரு மூலையில் கண்டெடுத்தேன். பேங்க் மூட அரை மணித்துளிகளே இருந்தது...!!

டிராப்பிக்கில் டாக்ஸி மெதுவாக செல்லவே, இறங்கி ஓடுனேன் ஆவலாக, நான் பேங்க் செல்லுமுன்பாகவே அந்த டாக்ஸிகாரன் சிரிச்சி தலையில் அடித்துக்கொண்டே என்னை கடந்துபோனான்...ஹி ஹி...

ஒருவழியா உள்ளே நுழைந்து டிக்கெட்டை பிலிப்பைனி ஊழியரிடம் கொடுத்ததும், வாழ்த்துக்கள் செர் என்று கைகுளுக்கினாள் அவள் முகத்தில் அப்பிடி ஒரு சிரிப்பு, எனக்கோ ஆர்வம் தாங்க முடியவில்லை, ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாள் போட்டதும், அழகான ஒரு பார்சலை தந்தாள் வாழ்த்துக்களோடு...

ஆஹா இதுக்குள்ளே என்ன இருக்குன்னு பிதுக்கி பிதுக்கி பார்த்துக்கொண்டே ரூமுக்கு ஓடி வந்தேன் [[டாக்ஸிலதான்]] ரூம் கதவை பலமா லாக் செய்துட்டு மறுபடியும் நல்லா பூட்டியிருக்கான்னு செக் பண்ணிட்டு பார்சலை பிரித்தேன், அடப்பாவிகளா இப்பிடியா ஒரு பச்சைபுள்ளையை ஏமாத்தி பல்பு கொடுப்பாயிங்க ஹி ஹி என்னான்னு கீழே பாருங்க....






ஒரு ஹேன்ட் பேக், ஒரு கேப், ஒரு கப், ஒரு கேரி பேக் இம்புட்டுதான் அயிட்டம், ஆண்டவா ஒருகிலோ தங்கமாவது மினிமம் கிடைச்சிருக்க கூடாதா ம்ம்ம்ம் இன்னும் பயிற்ச்சி வேணுமோ....???!!!

அந்த தொப்பி என் தலையில் ஹி ஹி...

டிஸ்கி : அப்பாடா இப்பதான் ஆமினா மேடத்திற்கு மனசு குளிர்ந்திருக்கும், நேற்றைக்கே பதிவுல நான் பல்பு வாங்கப்போவதை சொல்லி இருந்தாங்க ஹி ஹி....!!!

Sunday, October 30, 2011

அரபியின் வழிப்பறி...!!!

 பஹ்ரைனில் நடந்த உண்மை சம்பவம்.

எட்டு வருஷம் முன்பு, மாலை நான்குமணி டியூட்டிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்துதான் போவேன். டிரான்ஸ்போர்ட் இருந்தாலும் காத்திருப்பது எனக்கு பிடிக்காத காரணத்தால் நடந்துதான் போவது வழக்கம். ஆட்களையும் கடைகளையும் ரசித்தவாறு செல்வதுண்டு.


அப்படி போகும் போது எல்லா நாட்களிலும் நான் போகும் அதே நேரம் ஒரு அம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா வீட்டை பூட்டிவிட்டு வெளியே போவதை எல்லாநாளும் கவனிப்பேன், பார்க்க தமிழ் ஆண்டி மாதிரி இருக்கும்.


அருகில் வரும்போது எப்போதும் நான் ஆச்சர்யகாக பார்ப்பது அவர் போட்டிருக்கும் தங்கச்செயினை, செயின்'ன்னு சொல்றதை விட தங்கவடம் இல்லை இல்லை சைக்கிள் செயின் மாதிரி ஒரு செயின் இடுப்புவரை நீளமாக அணிந்திருப்பார்கள், எனக்கு பார்க்க பார்க்க ஆச்சர்யமா இருக்கும்!!!!


சும்மா தெனாவட்டா ஆம்பிளை மாதிரி அலட்சிய பார்வையும், அகங்கார நடையுமாக செல்லும் அவர்களை அதிசயமாகத்தான் எல்லாரும் பார்ப்பார்கள். இத்தனைக்கும் எல்லாநாளும் விதவிதமான சேலையில் வருவதை பார்ப்பதற்கு [[வயசு அம்பதுக்கும் மேல்]] அழகாதானிருக்கும்...!!!


ஒருநாள், எனக்கும் அவர் வீட்டிற்கும் இடையே ஒரு நூறு அடி தூரத்தில் நான் வந்துகொண்டிருக்கும் போது, அந்தப்பெண் கதவை பூட்டி வெளியேறுவதை கவனித்துக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தேன்....


திடீரென ஒரு அரபி அந்த அம்மா மீது பாய்ந்து, செயினை இழுக்க முயல அது கட்டியாக இருந்தமையால் அறுபடவில்லை, இதற்கிடையில் சுதாரித்த அந்த அம்மா, அரபியை கட்டி பிடித்துக்கொண்டு ஹெல்ப் ஹெல்ப் என்று அலற, நான் ஓடினேன் வேகமாக, நான் அருகில் வருமுன் சுதாரித்த அரபி, அந்த அம்மாவை உதறி தள்ளிவிட்டு ஓடிவிட்டான்...!!!


ஆண்டவா என் செயின் பத்திரமா இருக்கு'ன்னு மூச்சு வாங்கிட்டு நின்னாங்க, நான் அருகில் போயி என்னாச்சுன்னு கேக்க, தமிழ்ல பொரிஞ்சாங்களே பார்க்கணும் [[ஹா ஹா ஹா ஹா]] என் ஹஸ்பண்ட்டுக்கு போன் பண்ணனும் மொபைல் தரமுடியுமான்னு கேக்கவும் கொடுத்தேன் சத்தமா விஷயத்தை சொல்லி அழுதாங்க...


அப்புறமா மெதுவா கேட்டேன், நானும் உங்களை பலமாசமா பார்த்துட்டுதான் இருக்கேன் இம்புட்டு பெரிய தங்க செயினை போட்டுட்டு ஒய்யாரமா போற நீங்கள் மாட்டுவீங்கன்னு, என்னை முறைத்துவிட்டு வீட்டினுள் போயிடுச்சு...


அந்த அரபி செயினை பிடுங்கும் போது அருகில் நெறைய இந்தியா'காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்...!!! அவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே ஒழிய அரபியை பிடிக்கவில்லை, ஏன் அரபிகள் கூட அங்கே நின்று கொண்டுதான் இருந்தார்கள் அவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை...!!!


நான் ஒருவன் மாத்திரமே ஓடி வந்துள்ளேன், மெதுவா ஒரு மலையாளி அண்ணாச்சிக்கிட்டே கேட்டதுக்கு, ஏதாவது பிரச்சினைன்னா யாருப்பா போலீஸ்கிட்டே போயி அழுறது, அடுத்து பிடிபடும் அரபியின் ஆட்கள் வந்து மொய் வைக்கும் போது என் கதி...?? [[யதார்த்தம்தான்]]


ஆடம்பரம் வேணும்னா இப்பிடியா நகை அணிவது...?? என் நெருங்கிய சொந்தத்தில் என் அண்ணி ஒருவர் இப்படி நகைகள் அணிந்து பெருமையா நடந்து செல்வது வழக்கம், மும்பையில் இருந்து ஊர்போனவர், தான் கொண்டுவந்த எல்லா நகைகளையும் அணிந்து கொண்டே விருந்துக்கு போக நெல்லை பஸ்நிலையத்தில் காத்திருந்தாராம்...


எப்பிடி தெரியுமா...? முந்தானையை தலையோடு கூட சேர்த்து நகைகளை மறைத்தவாறே நின்னாராம், குழந்தைகளை பார்த்துவிட்ட உறவுக்காரர் ஒருவர் அருகில் போயி பார்த்துவிட்டு, ஊருக்கே டமாரம் அடித்ததும் அல்லாமல், இங்கே நெல்லையில பயங்கரமா களவு நடந்துட்டு இருக்கு, கொலையும் நடந்துட்டு இருக்குன்னு குண்டையும் போட்டுட்டு போயிருக்கார்.


வெடவெடத்துப்போன அண்ணி அலறியடிச்சி திரும்ப ஊருக்கே ஓடினாராம், இதை இப்பவும் சொல்லி சிரிப்போம்....

நான் தெரியாமதான் கேக்குறேன் இம்புட்டு ஆடம்பரம் தேவையா....???!!! இதில் கேரளா பெண்களை பாராட்டுவேன், எவ்வளவு நகை இருந்தாலும், ஒன்னு ரெண்டு சின்ன சின்ன செயின்கள்தான் அணிகிறார்கள், ம்ஹும் நம்ம தமிழ்பெண்கள் ரொம்பதான் அலப்பறை செய்கிறார்களோன்னு தோணுது...!!!


அடுத்தநாள் வேலைக்கு செல்லும் போது, அந்த அம்மா அதேபோல வீட்டை பூட்டி வெளியேறினார்கள், அருகில் வந்ததும் குட் ஆஃடர் நூன் என்றார், நான் வணக்கம்னு சொல்லிட்டே செயினை பார்த்தேன் ஹி ஹி, என்ன பாக்குறீங்க செயினை கழற்றி எங்க சொந்தகாரங்க வீட்டுல பத்திரப்படுத்திட்டோம்னு சொன்னாங்க, 


ம்ம்ம்ம் செயின் இல்லாமல் இப்போதான் அழகா இருக்கீங்க மேடம், இதை முதல்லயே செய்திருந்தா இப்படி அரபிக்காரனை கட்டிபிடிச்சி உருண்டுருக்க வேண்டியதில்லைன்னு, உள்குத்தா சொல்லவும், புரிஞ்சி சிரிச்சுட்டு வெக்கத்துல ஒரு ஓட்டம் ஓடுனாயிங்க பாருங்க ஹா அழகு....!!!!

குத்துங்க எஜமான் குத்துங்க....!!!

முன்பு ஒரு சமயம் நான் மும்பையில் இருந்து ஊர் போன போது நடந்த சம்பவம். எங்கள் ஊரிலேயே உள்ள ஒரு பெண்ணை நண்பன் லவ்வி கொண்டிருந்தான். ஆனால் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் வீட்டில் கடுகடுமையான எதிர்ப்பு. நண்பர்கள் வழக்கம் போல சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள். ஓடிப்போகவும் முடியாத நிலை. நண்பன் பிளேடால் கைகளில் கீறி கொண்ட காயங்களை பார்த்து நொறுங்கி போனேன். யோசிக்க ஆரம்பித்தேன் ஹி ஹி ஹி ஹி நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே...



நண்பர்களை அழைத்து கொண்டு எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்கு போனேன், அந்த கிணறு நாங்கள் சிறுபிள்ளைகளில் குதித்து சாடி குளித்த கிணறு அதின் ஆதி அந்தம் நல்லாவே தெரியும் எங்களுக்கு. பிளான் ரெடியானது, அதன்படி...[[ அந்த கிணற்றில் இப்போது யாருமே குளிப்பது கிடையாது, எப்பவுமே அதில் ஆறு எழு அடி தண்ணீர் இருக்கும். ஆனால் அந்த சமயம் இடுப்பளவுதான் தண்ணீர் இருந்தது]]

ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஊரே உறங்கிட்டு இருக்கும் நேரம், நண்பனின் காதலி, ஓ என அலறிக்கொண்டே ஓட....ஊராரும் எழும்ப, காதலி ஓடிபோயி கிணற்றில் குதித்து விட்டாள்....!!! [[எங்கள் நண்பர்கள் குழு தயாராய் பார்த்து கொண்டு இருந்தோம்]]  பின்னாலேயே ஓடி வந்த நண்பன், அவனும் கிணற்றில் குதிக்க ஊரே அல்லோலகல்லோல பட்டது.

அந்த பெண்ணுக்கு நீச்சல் தெரியாது. எப்பிடியோ காப்பாற்றி பெண்ணையும் நண்பனையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து பஞ்சாயத்து நடந்தது. எவ்வளவு அன்பு இருந்தால் இந்த பெண் அவனுக்காக கிணற்றில் குதித்து இருப்பாள் என்று நாங்கள் ஸ்துதி ஏற்ற [[ஹி ஹி நாடகாசிரியர் மனோ]] 

இரண்டு வீட்டாரும் சாதி மறந்து சம்பந்தி ஆனார்கள். ஊரே வாழ்த்த கல்யாணம் நடந்தது.

சரி இனி நாடகம் எப்பிடி அரங்கேறியது...??? சொல்றேன். . . . . 

இரண்டு நாள் முன்பே முதலில் நான் கிணற்றினுள் குதித்து ஆழம் எவ்வளவு என பார்த்தேன். தண்ணீர் இடுப்பளவுதான் இருந்தது. காதலனையும் குதிக்க சொன்னென் அவனும் குதித்து ஊர்ஜிதம் செய்தான். அப்புறமா காதலியை ரகசியமாக அழைத்து வந்து, செயல் முறை விளக்கினேன். அவள் பயந்துபோனாள் [[நீச்சல் தெரியாது]] , அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு...


அப்புறம்தான் அவளுக்கு தைரியம் [[என் மீது இரக்கபட்டோ என்னவோ]] வந்தது. நாடக அரங்கேற்றமும் வந்தது, அவள் கிணற்றில் குதிக்கும் போது நண்பர்கள் நாங்கள் எல்லோரும் சுற்றி உள்ள மரங்களின் மேலே இருந்தோம் [[ம்ஹும் குரங்கே]] ஊராருக்கு தெரியாது. 

அப்புறம் என்ன டும் டும் டும் டும்தான்....


டிஸ்கி : நண்பனின் காதலியின் அண்ணனுக்கு ஒரு டவுட்டு வர, தற்செயலாக அந்த கிணற்றை சுத்தி பார்த்திருக்கிறான். அவனுக்கு லேசாக பொறி தட்ட, என் நினைவும் வர டவுட் கிளீயராகிருச்சி. ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம்  [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன். அண்ணன் காரனுக்கு எங்கள் நாடகம் புரிஞ்சி போச்சு. ஆனால் என்ன ஒரு விஷயம்னா, அதுக்குள்ளே நண்பனுக்கும் காதலிக்கும் கல்யாணம் முடிஞ்சி போயிருந்தது.

டிஸ்கி : பெண்ணின் அண்ணன் இப்போதும் எனக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள் [[வேற எதுக்கு முதுகுல டின் கட்டத்தான் ஹி ஹி ஹி]]  அடகொன்னியா மூணு குழைந்தங்க உன் தங்கச்சிக்கு பிறந்த பிறகும் ஏன் இந்த கொலைவெறி...??? 


இப்போ இடையில் ஒரு லீவுக்கு போன போது அவனை ஒரு கல்யாண வீட்டில் பார்த்தேன். அவன் என்னோடு பேசவில்லை நானும் பேசவில்லை, ஆனால் அவன் என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான். என் மனைவி அதை கண்டு என்னிடம் சொன்னாள். ஹி ஹி ஹி மேட்டரை நான் சொன்னதும் குஷி ஆகிவிட்டாள், ஏன்னா நாங்களும் காதலிச்சிதானே கல்யாணம் செஞ்சோம் [[இரு வீட்டாரின் சம்மதத்தோடு]]....

இது ஒரு மீள்பதிவு, யார்லேய் அங்கே கல்லெடுக்க கீழே குனியுறது....?
ள்பதிவு...[[யாருலேய் 

Tuesday, October 25, 2011

வாங்க கேசியோ கத்துக்கலாம்...!!!

நான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[!]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன வயசுலே இருந்தே எனக்கு கீபோர்ட் படிக்கணும்னு தீராத ஆசை, காதல். 


இது எனது கீபோர்ட்.

சர்ச்'ல கீபோர்ட் பிளே பண்ணுரவிங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும், நமக்கும் இப்படி முடியலையேன்னு, கல்யாணமாகி நான் பஹ்ரைன் வரும் வரை அது கைகூடவில்லை, பஹ்ரைன் வந்தும் சர்ச் போகும் போது அங்கே கீபோர்ட் வாசிப்பவர்களை பார்க்கும் போது ஆசையாக இருக்கும்.

என் மனைவியின் அண்ணன் சபை போதகராக இருப்பதால், அவர் கற்றுக்கொள்ள கிளம்பினார், மியூசிக் மாஸ்டரிடம், மாதம் இருபது தினார் மாசத்துக்கு நான்குநாள் டியூஷன். ஒரு கீபோர்ட் சொந்தமாக வாங்கினார். கிளாஸ் ஆரம்பம்.

யமகா கீபோர்ட் வந்ததும், எனக்கும் படிக்க ஆசை வர, பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை, மச்சான் சொன்னார் கவலைப்படாதே நான் உனக்கு சொல்லி தருகிறேன்னு சொன்னதும் அல்லாமல், அவர் அங்கே படித்து விட்டு வருவதை எனக்கு சொல்லித்தர ஆரம்பித்தார்.


ஒன் டூ த்ரீஃபோர் என சொல்லி சரிகம பதனிச படிக்க ஆரம்பித்தேன், முதலில் வலது கைமட்டுமே பிராக்டிஸ் நடந்தது, இப்படியே ஒரு ரெண்டு வருஷம் வலது கை பிராக்டிஸ் செய்தும் எந்தபலனும் இல்லை. ஒரு முன்னேற்றமும் இல்லை, நான் வலது கையால் வாசிப்பேன அல்லாமல் சர்ச்'ல பிளே பண்ணத்தெரியாது...?

பிறகு அதே பிராக்டிஸ் இடது கைக்கு மாறியது, என் மச்சான் எவ்வளவோ முயற்சி செய்தும் [[மூனுவருஷம்]] இடது கை பிராக்டிஸ் செய்யமுடியாமல் போயிற்று, அவர் ஆர்வம காட்டாமல் விட்டு விட்டார், ஆனால் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு டிரம்ஸ் கற்று கொடுக்கவே ஐயா டிரம்ஸ்'ல இன்ட்ரெஸ் எடுத்து போகவே நான் அனாதையானேன்.


ஆனாலும் கற்றுக்கொள்ளும் வெறி அடங்கவில்லை, எப்போதும் கீபோர்ட் என் ரூமில் வைத்திருப்பேன், நான் என் மச்சானைவிட நல்லா வாசிப்பது தெரிந்துகொண்டு என் மச்சானுக்கு கடுப்பு வேற ஹி ஹி அதுக்கு நான் என்ன செய்ய... அப்புறம் சும்மா தெரிஞ்சதை வைத்து இசை வெள்ளத்தில் மிதப்பேன்.

இப்படி இருக்க எங்கள் சர்ச்சில் ஒரு அண்ணன் சொன்னார் என் ஆர்வத்தை பார்த்துட்டு, கன்னியாகுமரி'யில இருந்து ஒரு ஆள் புதிதாக பஹ்ரைன் வந்து இருக்கிறார், அவர் பார்டைமாக கீ போர்ட் கற்று தருகிறார் மாசம் பத்து தினார்தான் பீஸ் வாங்குறார்னு சொன்னதும் நானும் மச்சானும் அவரை போயி பார்த்தோம். ஓகே சொல்லிவிட்டார்.


அடுத்து அவர் வந்து என்னெல்லாம் படிச்சீங்க சொல்லுங்கன்னு கேட்டுட்டு, அவரும் சொல்லி தந்தார் ஒரு வருஷம். ஆக நான்கு வருஷம் ஆச்சு ஒரு முன்னேற்றமும் இல்லை, அதையும் மச்சான் நிப்பாட்டிட்டாரு.

எனக்கு தாகம் அடங்கவில்லை எப்பிடியாவது கற்று கொள்ளனும்னு, இப்பிடி ஒரு ஆறுமாசம் கழிஞ்சது, மறுபடியும் இதே மாதிரி ஒருவர் கிடைச்சார் அவரும் கன்னியாகுமரிதான், அவர் வந்து சொன்ன முதல் வார்த்தை, முதலில் படித்தவகளை முற்றிலும் மறந்து விடுங்கள் நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் எனக்கூறினார்.


என் மச்சான் கொஞ்சம் மேதாவி'தனம் காட்டினது அவருக்கு பிடிக்கவில்லை, அவரும் வாராவாரம் வந்து நோட்ஸ் குடுத்து டியூசன் எடுப்பார், அப்படி இருக்க ஒருநாள், சும்மா ஊர்பேச்சு வரும் போது எனக்கு எந்த ஊர்னு கேட்டார், என் ஊர் பெயரை கேட்டதும், எங்க அக்காளை அங்கேதான் கட்டி கொடுத்திருக்கொம்னு சொன்னார்.

பெயர் விலாசம் கேட்கும்போது, எங்க பெரியப்பா மகனுக்குதான் கட்டிகுடுத்துருப்பது தெரிஞ்சது, ஆக சொந்தக்காரனாகி விட்டார், எங்கே எனக்கு சீக்கிரமா கத்து தந்துருவாறோன்னு நினைச்ச மச்சான், கொஞ்சம் தில்லுமுல்லு காட்ட, இவருக்கு கோபம், வெளிகாட்டி கொள்ளவில்லை....


அப்புறம் மச்சான் நிறுத்திகொண்டார் காரணம் பிராக்டிஸ்'ன் கடுமை அப்பிடி, மாஸ்டர் பெயர் ராபர்ட், எனக்கு வாராவாரம் என் ரூமிற்கே வந்து டியூஷன் எடுத்தார், பனிரெண்டு மணிநேரம் வேலை முடிந்தும் நேரத்தை பொருட்படுத்தாமல், பிராக்டிஸ் செய்யசொன்னார்....

நிற்க : கேசியோ படிப்பவர்கள் தினமும் ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பிராக்டிஸ் செய்யவேண்டும் [[நான் என் பெட் அருகில் எப்போதும் தயார் நிலையில் வைத்து இருப்பேன் எப்பல்லாம் முழிப்பு வருதோ அப்பெல்லாம் பிராக்டிஸ் செய்வேன்]]


நிற்க : நாம் எம்புட்டு பிராக்டிஸ் செய்யுறோமோ அவ்வளவு சீக்கிரம் கேசியோ படிக்கலாம் "மாஸ்டர் நல்லவராக" இருந்தால்....

மிகவும் கஷ்டமான நோட்ஸ் தரும்போது சுனங்குவேன், சுனங்கும் அந்த இடத்தில்தான் அடுத்த ஸ்டெப்பே இருக்குன்னு உற்சாகப்படுத்துவார், இப்போ இன்னொரு விஷயம் என்னான்னா ராபர்ட் எனக்கு கேசியோ கற்று தருவது ஊரிலும், எங்கள் சபையிலும் எல்லாருக்கும் தெரிந்து விட்டதால், மாஸ்டருக்கு எப்பிடியும் எனக்கு கற்று தந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக்கிட்டார் [[பாவம் ஹி ஹி]]


நிற்க : இப்படி கஷ்டமான நோட்ஸ் பிராக்டிஸ் வரும்போது இடையில் படிக்காமல் பலர் ஓடி போகிறார்கள் என்று மாஸ்டர் வருத்தப்படுவார்.  ஆக எங்கே நமக்கு கஷ்டமான நோட்ஸ் பிராக்டிஸ்'க்கு வருதோ அந்த இடத்தில் அழகான இசையின் மாற்றமும் இருக்கும், அந்த மாற்றத்தின் ருசியை அறிந்து விட்டால், வாசிக்க வெறியே வந்துரும் இன்னும் இன்னும் ஆவலை தூண்டும்.

ராத்திரி பகலாக விழுந்து விழுந்து பிராக்டிஸ் செய்தேன், சொல்லமறந்துட்டேன், இந்த மாஸ்டர் ஆரம்பத்துலையே இரண்டு கைகளுக்குமே பிராக்டிஸ் கொடுத்தது ஆச்சர்யம் அதை பின்னால் சொல்கிறேன்.


ஒரே வருஷம்தான் வெரிகுட் என சொல்லி அவர் பாட நான் கேசியோ [[கீபோர்ட்]] வாசிக்க அமர்களமாக ஆசீர்வதித்து, இனி போயி சர்ச்ல தைரியமா பிளே பண்ணுன்னு சொன்னார், 

அடுத்தவாரமே சர்ச்சில் எனது அரேங்கேற்றம், நண்பர்கள், சர்ச் மெம்பர்கள் போதகர், சொந்தங்கள் எல்லாம் வாயடச்சி போனார்கள், எப்பிடிய்யா படிச்சே எனக்கும் சொல்லிதான்னு நச்சரிப்பு வேற, இதுல என் மச்சானுக்குதான் காதுல புகை, காசு குடுத்து படிக்கப்போனவரு அவரு, ஆனால் படிச்சதோ நான் ஹி ஹி...

கீபோர்ட் வாசிப்பது ஒன்லி ஃபோர் சர்ச்'க்கு மட்டும்தான் என்பது நான் கொண்ட உறுதி, இங்கே நடன பார்களில் கீபோர்ட் வாசித்தாலே செம காசு, இருந்தாலும் மனம் கொண்ட வைராக்கியம் அதேபோல் இப்பவும் இருக்கிறது.


சரி இனி விஷயத்துக்கு வருவோம், இந்த கீபோர்ட் கத்துகுடுக்கும் மாஸ்டர்'கள் சிலர் வெறும் காசுக்காக காலம் தாழ்த்துகிரார்கள், ராபர்ட் போன்ற மாஸ்டர்கள் காசுக்காக அல்ல, உண்மையான ஈடுபாட்டுடன் செய்கிறார்கள், பாருங்கள் என் மச்சான் மூணு வருஷம் படித்தும் பொது இடத்துல வாசிக்க இயலவில்லை, முதலிலேயே இரண்டு கையிலும் பிராக்டிஸ் கொடுக்கலாமே அதை பணத்துக்காக அவர்கள் செய்வதில்லை..!!!

அடுத்த மாஸ்டர், அவரும் பணத்துக்காக சரியாக சொல்லிகுடுக்கவில்லை...!!!!

நிற்க : நீங்கள் கற்றுகொள்ளப்போகும் மாஸ்டர், பணத்துக்காக செயல் படுகிறாரா, அற்பணிப்புடன் செயல் படுகிறாரா என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள்.


நான் எப்போதும் கீபோர்ட் ரூமில் வைத்திருப்பேன், ஊருக்கு கொண்டு வந்தாலும் திரும்ப கொண்டு போயிருவேன், நன்கு படித்த பின்னரும் நாள்தோறும், பயிற்சி செய்வேன் காரணம் ரெண்டுநாள் கேப் வந்துச்சுன்னா விரல்கள் இறுக்கமாகி விடும், அடுத்து கீபோர்ட் வாசிப்பவர் நகங்களே வைக்கக்கூடாது, காரணம் உணர்வுகள் விரலில் இருந்துதான் ஆரம்பிக்கிறது, ஏ ஆர் ரஹ்மானும் மற்ற இசை அமைப்பாளர்களும், கண்ணை மூடிக்கொண்டு கீபோர்ட் வாசிப்பதை கவனித்தீர்களா..?? அது அந்த உணர்வுதான்...!!! 


போனதடவைக்கும் முந்தின முறை லீவில் போனபோது என் மகனுக்கும் இரண்டு கைகளிலும் பிராக்டிஸ் மற்றும் சிலபாடல்களும் சொல்லிகுடுத்துட்டு, அவனை டியூஷன் அனுப்ப சொல்லிட்டு வந்துட்டேன், முதல்நாள் கிளாஸ் போனவனிடம் மாஸ்டர் கேட்டிருக்கிறார், உனக்கு கீபோர்ட் பற்றி ஏதாவது அடிப்படை தெரியுமான்னு கேட்க, இவன் எனக்கு கொஞ்சம் பாடல்கள் பிளே பண்ண தெரியும்னு சொல்ல...

சரி பிளே பண்ணு பார்ப்போம்னு சொல்லவும், என்மகன் சூப்பரா வாயால் பாடி "இரண்டு கையால்" பிளே செய்ய, வாத்தியாருக்கு ஆச்சர்யம், இது யார் சொல்லி தந்தார்கள் என கேட்க இவன் எங்க அப்பா சொல்லி தந்தார்கள் என சொல்ல, அப்போ உங்க அப்பாவுக்கு கீபோர்ட் தெரியுமான்னு கேட்டுருக்கிறார். ஆமாம் எங்க அப்பாவுக்கு தெரியும் சர்ச்ல அப்பாதான் ஆர்கன் பிளேயர்னு சொல்ல, ஒரு வருஷத்துக்கு மேலே உள்ள நோட்ஸ் குடுத்து படிக்க சொல்லி இருக்கிறார். என்ன இசை தெரிஞ்சவன் இருக்கான்னு தெரிஞ்சா இவங்க பணம் பப்பு வேகாதுன்னு இவர்களுக்கு நன்றாக தெரியும்.


ஆறேமாசத்தில் என் மகன் படித்து முடித்துவிட்டான், இப்போ சர்ச்ல சார்தான் கீபோர்ட் பிளேயர், நான் ஊருக்கோ, மும்பையிலோ சர்ச் போனால், கீபோர்ட் வாசிப்பவர்கள் நெர்வஸ் ஆகிவிடுவார்கள், இசையில் சின்ன தப்பு நடந்தாலும் இசை படித்தவர்களுக்கு கோபம் வந்துரும், எங்கே தப்பு செய்கிறார்கள், எந்தப்பாட்டுக்கு எந்த ஸ்கேல் போடணும்னு, நமக்கு தெரியும்...

இசை தெரியாதங்களுக்கு தப்பை உணரமுடியாது, மும்பையில் சர்ச் உள்ளே நுழைந்ததுமே, மியூசிக் வாசிக்கும் தம்பிகள் தங்களுக்குள்ளே கிசுகிசுப்பார்களாம் நாஞ்சில்மனோ வந்தாச்சுடோன்னு, இதை என் மகன் சொல்லி சிரிப்பான், பசங்க எல்லாரும் பேஸ்புக், டுவிட்டர், பஸ், வலைதளங்களில் இருப்பதால் அவர்களுக்கும் நான் நாஞ்சில்மனோ'தான்....!!!


இன்ட்ரெஸ்ட் இருக்கா துணிஞ்சி போயி படியுங்க, ரொம்ப ஈசிதான், நல்லா பிராக்டிஸ் பண்ணுங்க, படிச்சிட்டீங்கன்னா அதன் சுவையே வேறு, ஊரில் இருக்கும் போது எங்கள் வீட்டில் இசை மழைதான், என் மகன் கீபோர்ட் வாசிக்க நாங்கள் பாடல்களை பாட'ன்னு செமையா இருக்கும், என் மகளும் படிக்கவேண்டும் என்றாள், சின்ன பொண்ணு கைவிரல் இன்னும் கொஞ்சம் வளரனும், அடுத்தமுறை லீவுக்கு போகும் போது என் வீட்டில் மூனாவதாக ஒரு இசையாளினி ரெடியாக்கப்படுவாள்.

டிஸ்கி : மேலே சொல்லியுள்ளது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

டிஸ்கி : விக்கி'க்கு வார்னிங், இன்ட்லி இன்ட்லி இன்ட்லி ஹி ஹி....

"மனோ"தத்துவம் : வாயை அகலமாக்கினால் அடி உறுதி....!!!!






நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!