Saturday, January 10, 2015

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் ! பாகம் 3

முன் பகுதி கீழே உள்ள லிங்கில்.

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் தொடர் 2...!

தல வீட்டிற்குள் நாங்கள் நான்குபேரும் போனதும் உற்சாகமாக எங்களை வரவேற்றார், அவரது அப்பா போட்டோ ஒன்று கம்பீரமாக இருக்கிறது அவர் வீட்டில், அதோடு கூட பிரபல பதிவுலக தல'யும், சினிமா நடிகர் தல'யும் சேர்ந்து எடுத்த போட்டோ ஒன்றும் இருக்கிறது.
தல என்று அன்போடு அழைக்கப்படும் சந்திர சேகரன் நாராயண சுவாமி சார்.


கணேஷ் அண்ணன் அதை போட்டோ பிடிச்சி கிராபிக்ஸ் பண்ணப்போவதாக கிளிக்'க நானும் ஒரு கிளிக்'கினேன். கணேஷ் அண்ணன் எனக்கு தந்தது போன்று தல'க்கும் இரண்டு புஸ்தகங்கள் பரிசளித்தார்.

என்னென்ன புரோகிராம் இன்று என்று அங்கேயும் டிஷ்கஷன் நடந்தது, வேடியப்பன் அண்ணன் மீட்டிங் போகலாம் என்று தல'யை சிவா அழைக்க, எனக்கு வெளியே எங்கேயும் போக முடியாது இருந்தாலும் முயற்சிக்கிறேன் என்றார் அந்த தாயை பேணும் தாயுமானவர் !
வலமிருந்து நான், மெட்ராஸ் பவன் சிவகுமார், தல, பால கணேஷ் அண்ணன்.

அப்போது ஆஜானுபாவாக ஒரு ஆள் வீட்டிற்குள்ளே வர, பதிவர்கள் எழும்பி ஓட எத்தனித்த போது, அது என் மகன்தான், ஜிம் பாடி என்றார் தல [[நாங்களும் என்னமோ கூலிபடையை தல ஏற்பாடு பண்ணிட்டாரோன்னு நினைச்சிட்டோம் அவ்வவ்]]

தல ரொம்ப சந்தோஷமாக பிரஷாக இருந்தார், அந்த உற்சாகம் எங்களையும் தொற்றி கொண்டது.
வலப்புறம் இருப்பவர் என் நண்பன் மகேஷ்.

சந்தோஷமாக அவர் வீட்டில் உரையாடி கொண்டு இருக்கும் போது கணேஷ் அண்ணன் தல"யிடம் சரி சரி அந்த ஒயினை எடுங்க என்று சொல்ல, நாங்கள் கண்களை விரிக்க, ஒயின் வந்தது ரோஸ் கலரும் இல்லாமல் ரெட் கலரும் அல்லாமல், பயப்படாதீங்க அது ஜூஸ்தான் என்று சொன்னார் தல.

இனிமையாக இருந்தது, ஜூஸும், மனதிற்கும், நேரமின்மை காரணமாக புலவர் ஐயாவை சந்திக்க இயலவில்லை, அடுத்து ரஹீம் கசாலிக்கும் வேலை நிமித்தம் புக் பேலஸ் மீட்டிங் வரமுடியாத காரணத்தால் அவரையும் நுங்கம்பாக்கம் போயி பார்க்க முடிவு செய்தார்கள்.

நல்லா இருங்கடேன்னு சொல்லுதாரோ கணேஷ் அண்ணன்.

சந்தோஷமாக தல'யிடம் விடை பெற்று, நுங்கம்பாக்கம் எப்படி போவது என்ற பஸ் நம்பரை கணேஷ் அண்ணன் சிவாவுக்கு சொல்லிவிட்டு புல்லட்டில் கிளம்பி விட, நாங்கள் பஸ் ஸ்டாப் வர, எனது கூலிங் கிளாஸ் லூஸாகி [[அந்த லூசல்ல]] இருந்தமையால், அங்கே ஒரு கண்ணாடி கடை இருந்தமையால் உள்ளே சென்றோம் நானும் மகேஷும்.

இரண்டு பிகர்கள் உள்ளே இருந்தார்கள், கண்ணாடியை கொடுத்து டைட் பண்ண சொன்னேன், டைட்டே ஆகலை புது ஆள்ன்னு நினைகிறேன், திருப்பி தந்தபோது, முன்பிருந்த மாதிரியே இருக்க, என்னான்னு கேட்டதுக்கு இதுக்கு மேலே [?] டைட் பண்ண முடியாது சார் [[அவ்வவ்]] என்று சொல்லி பத்து ரூபாய் கறந்தாள்.[[ மும்பை வந்து டைட் பண்ணினேன்]]

பஸ்சுக்கு சில்லறை காசு என்னிடம் இல்லை சிவா என்றதும் "உங்களை பர்ஸ் கொண்டு வர கூடாதுன்னு அப்பவே சொன்னேனே ?" என்று கடிந்து கொண்டு எல்லா செலவையும் அவரே ஏற்று கொண்டார் சிவா.

பஸ் ஏறி அடுத்து ஆட்டோ ஷேர் ச்சே ஷேர் ஆட்டோ பிடித்து நுங்கம்பாக்கம் இறங்கி நடந்தோம் ரஹீம் கஸாலி ஆபீஸ் நோக்கி...

தொடரும்...

4 comments:

  1. நல்ல கலகலப்பா இருந்துச்சு போல சென்னை டிரிப்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தல எப்போதும் பிரஷ் தான்...!

    ReplyDelete
  3. தலயை சந்தித்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  4. ஜாலிதான் போல...
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!