எங்கள் ஊரில், ஸ்கூல் போயிட்டு வார பாதையில ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே, திறந்த இசக்கியம்மன் கோயில் ஒன்று இருக்கு, அந்தப்பக்கம் ஆளுங்க போக வரவே பயப்படுவாங்க...ஆனாலும் அந்த வழியாக போயித்தான் ஆகவேண்டும்...பெரிய காடு...இப்போ சிட்டி ஆகிருச்சு.
ஆலமரத்தின் கீழே சின்ன சின்ன சிலைகளாக இருக்கும், நடுவில் ஒரு பெரிய பயங்கரமான நாக்கை தள்ளிக்கொண்டு சிவப்பு சேலையில் ஒரு பெண்ணின் சிலை...
ஒருநாள், விவரம் தெரியாமல் பள்ளி விட்டு வரும்போது, அந்த சிலையிலுள்ள வளையல்கள் காற்றில் ஆடுவதைக் கண்டு, ஆச்சர்யப்பட்டு, எல்லாம் உருவிகிட்டு வீட்டுக்கு கொண்டு வந்து விளையாடிகிட்டு இருந்தேன்.
எங்கம்மா, இத எங்கே இருந்து கொண்டு வந்தேன்னு கேக்க, சொன்னதும், என்ன நடந்துச்சுன்னே [அடி] தெரியல...அப்புறம் கண்ணைத் தொறந்தப்போ அம்மா இடுப்புல இருக்கேன் அதுவும் அந்தக் கோவில் பக்கத்துல...
அம்மாவுக்கும் உள்ளேப் போகப் பயம்...அந்த ஆலமரத்தடியில் வளையல்களை வீசிவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓட...நாமதான் அம்மா இடுப்புல இருக்கோமேன்னு, பின்னாடி ஏதும் துரத்திக்கிட்டு வருதான்னு பார்த்தா...ஒருத்தருமில்லே...
அம்மா, ஓடாதம்மா பின்னால யாருமே வரலைன்னு சொன்னேனா ? மறுபடியும் கண்ணைக்கட்டிருச்சு [அடிதான்] அப்புறம் கண்ணைத் தொறந்து பார்த்தா, எங்கப்பாரு மடியில இருக்கேன்...
"பயத்துக்கே பயத்த காட்டிட்டியே செல்லம்,நீதாம்டா என் சிங்கக்குட்டி"ன்னு கொஞ்சுறாரு, அம்மா கடுகடுன்னு இருந்தாங்க, இப்பத்தான் புரியுது அது எங்கம்மாவைப் பார்த்து அப்பாரு சொல்லிருக்காருன்னு...
என்னா ஓட்டம்டா...
அது இசக்கியம்மன் மேல இருந்த பயம்....! உங்க மேல இல்லை...தன் பையனுக்கு ஏதுமாயிடக் கூடாதேங்கிற தாய்மையின் பயம்..அக்கறை...அதெல்லாம் உங்கப்பாருக்கு கிண்டலா இருந்திச்சாமா? நானா இருந்தால் அப்பாரு மண்டைல நங்குன்னு குட்டு வைச்சிருப்பேன்...ம்க்கும்
ReplyDeleteஹா ஹா ஹா ஹா பாவம் அம்மா...
Delete:))))
ReplyDeleteஹா ஹா ஹா ஹா பாவம் அம்மா... :-))))
ReplyDeleteஹா ஹா ஹா ஹா அப்பாவுக்கும் நல்ல டோஸ் கிடைச்சுது உங்க பிள்ளை வேற எப்பிடி இருக்கும்ன்னு அவ்வ்வ்...
Delete