கேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்...
திருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப்பிடியே நின்னுருச்சு கீழே இறக்க முடியவில்லை...எத்தனையோ வைத்தியர்கள் வந்து சோதித்து அம்மிணிக்கு கை கீழே இறங்கவில்லை...
மன்னனுக்கு கவலை [என்னடா சரண்டர் ஆன மாதிரியா இருக்கேன்னு கூட நினைத்திருக்கலாம் ஹி ஹி] என்ன செய்யலாம்ன்னு ரோசிச்சார் மன்னர், திடீரெனெ ஒரு ஐடியா தோன...
ராணியை ஒரு பெரிய மைதானத்தின் மேடையில் நிறுத்தி [ஐயோ பாவம்] அறிவிப்பு செய்தார்...
"ராணியின் கையை சுகமாக்குகிறவர்களுக்கு...பொன்னும் பொருளும் ஏராளமான ஊர்களும் கொடுக்கப்படும்"
நம்மாளு ஒருத்தன் சைக்காலிக்கா சிந்திச்சுட்டு, நான் குணமாக்குகிறேன் என்று கைதூக்கினான் ஆனால் ஒரு நிபந்தனையோடு...
"என்ன நிபந்தனை ?"
"இளவரசியை எனக்கு கல்யாணமும் செய்து தரவேண்டும்"
"அடேய் அது பத்து வயசு பிள்ளைடா"
"பரவாயில்லை கல்யாண வயசு வந்தபிறகு கட்டி தரணும்"
ஆலோசிச்சு ஓக்கே சொன்னார் மன்னர்...
நம்மாளு ராணி நிற்கும் மேடையில் ஏறினார் [ராணி கையை தூக்கிட்டு மேடையில் நிற்பதை கற்பனை செய்யவும் அத்தனை ஜனங்கள் முன்னாடி, சிரிக்கப்படாது]
மெதுவா ராணியின் காதில் என்னமோ சொன்னார்...படாரென நம்மாளுக்கு கன்னத்தில் அறை விழுந்தது, ராணிக்கு சுகமும் ஆனது...
மன்னருக்கும் மக்களுக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம்... ரகசியமாக என்ன சொன்னாய் என்று எல்லாரும் கேட்க, இவன், அது ரகசியம் சொல்லவே மாட்டேன்னு சொல்லிட்டான் நம்மாளு...
ராஜாவுக்கு அது என்னான்னு தெரிஞ்சே ஆகணும்ன்னு ஆசை...இவன் சொல்லமாட்டேன்னு சொன்னதும் ராணியிடம் கெஞ்சி கெஞ்சி கெஞ்சி கெஞ்சி கேட்டதால், காலைப்பிடித்து கதறியதாலும் ராணி இரக்கப்பட்டு சொல்லி விட்டாள்...
"நான் உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கப்போறேன்"
நானும் ஏடாகூடாமாக ஏதோ கேட்டுத்தான் அடி வாங்கியிருப்பார் என்று நினைத்தேன்!))) ஒரு முத்தத்துக்கு இப்படியா ஒரு மனுஷனை அடிப்பது)))
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅதானே! கடேசி ல தனக்கு முத்தங் கூட குடுக்க தகுதி இல்லாவன் கிட்ட தன் மகளை காலமெல்லாம் முத்தம் வாங்க வச்சிட்டாளே அந்த ராணி.
ReplyDelete//நம்மாளு ஒருத்தன் சைக்காலிக்கா சிந்திச்சுட்டு//
அடைந்தால் இளவரசி அடையாவிட்டால் மகாராணி ன்னு ராசசிந்தனை யால்ல சிந்திச்சிருக்கான்.