Monday, February 5, 2018

அடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க ?



முன்பு வேலை பார்த்த இடத்தில் ஒரு பாகிஸ்தான் டிரைவர் நண்பன் இருந்தான், நானென்றால் அவனுக்கு கொள்ளை பிரியம்.
நாள்தோறும் எனக்கும் சேர்த்தே சாப்பாடு செய்து வருவான் [சப்பாத்தி] என்னடா நாள்தோறும் தாலும் [பருப்பு] சப்பாத்தியுமா கொண்டு வாரேன்னு சொன்னதுக்கு...
அடுத்த நாள் அதே தால் கறி நடுவில் கொஞ்சூண்டு பாவைக்காய் கூட்டு இருந்தது, அடுத்தநாள் தால் கறி நடுவே மட்டன் இருந்தது, அடுத்தநாள் சிக்கன் இப்பிடியா வெரைட்டி சாப்பாடு செமையாக நடந்து கொண்டிருக்க...

ஒருநாள் லீவில் அவன் ரூமுக்கு போனேனா...இன்னைக்கு என்ன சாப்பாடுன்னு கேட்டதுக்கு, உனக்கு என்ன வேணுமோ எல்லாம் இருக்குன்னு சொன்னானா...எங்கேன்னு கேட்டதுக்கு ஃபிரிஜை திறந்து பாருன்னான்.
உள்ளே நான்கைந்து பாத்திரங்கள், திறந்து பார்த்தால்... ஒன்னுல மட்டன், இன்னொன்னுல சிக்கன், அடுத்துள்ள மட்டன் லிவர், பாவைக்காய்ன்னு இருக்கு, அடுத்ததா கொஞ்சம் பெரிய சட்டி, அதுல தால்கறி, அடேய்ன்னு திரும்பினா... பக்கத்துல நிக்கான்.
இங்கப்பாரு மனோஜ் பாய், பாத்திரத்துல தால்கறி எடுத்து அதன் நடுவே கொஞ்சம் மட்டன் சுக்காவை போட்டுட்டா அதுக்கு பெயர் தால்கா மட்டன், சிக்கன் சேர்த்தா சிக்கன்கா தால், பாவைக்காய் சேர்த்தால் தால்கா கரேலா, அப்பிடியே சொல்லிட்டுப்போக...தலைசுத்தி விழுந்தது நான்தான்...


6 comments:

  1. ஹாஹா.... நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  2. எல்லாம் உங்கள் மீது கொண்ட பாசம் தான் அண்ணாச்சி!))))))))))))))))

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவைதான்.. போங்க..

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!