Showing posts with label உன் நினைவு. Show all posts
Showing posts with label உன் நினைவு. Show all posts

Saturday, March 26, 2011

உன் நினைவு

உன் நினைவு
சுடுகிறது தீயாய்
குளித்தாலும்
குடித்தாலும் தாகம்
தணியவில்லையடி...
 
உன்னை மறக்க
நினைக்கும் நினைவலைகள்
உன்னோடு சாம்பலாகி விட்டதோ
ஆழியில் கரைந்து விட்டதோ...
 
உன்மத்தம் பிடித்தவனாய்
இருப்பது போல் உணர்கிறேன்
உன் நினைவின் நிறைவு
என்னை ஆட்கொண்டுள்ளது ரணமாக...
 
எனை துடிக்க வைத்து விட்டு
நீ துடித்து மடிந்தாயே
அந்த கணம்
என்னுயிரும் போகாமல் காத்தவளே....
 
உன் நினைவை சுமந்து
தினம் தினம்
நான் எரிந்து போவதற்கா
என்னை உயிரோடு வாழ விட்டாய்....
 
நீ வாங்கிய சத்தியம்
என்னில் எரிமலையாய்
அது நான் உறங்கும்
கல்லறையிலும் தொடரும்...
 
இதற்க்கு [நமக்கு]
சாட்சியாக அந்த
ஒற்றை பனை மரம்
ஜீவித்தும்  இருக்கும்....
 
 
 
.
 
 
 
 
 

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!