எப்பப்பா பதிவு எழுதலைனா கை அரிப்பா அரிக்குதுப்பா. சரி விஷயத்துக்கு வருவோம் [[இருந்தாதானே]] நேற்றைக்கு தம்பி பிரவீணை [[டெரர் பிரவீண்]] பார்க்க அவன் ஊருக்கு போனேன், ரெண்டு சாக்கு நிறைய கருவாடும், சீடை, முறுக்கு இத்யாதிகளுடன் ஆட்டோவில் போயி அவன் வீட்டு முன் இறங்கினேன் [[சிங்காரவேலன் படத்தில் கமல் நண்பர்கள் வீட்டு முன் ஆட்டோவில் இறங்குவதை மனதில் கொள்க]] என்னை கண்டதும் பிரவீண் ஓடி வந்து சாக்கு மூட்டையை தூக்கி கொண்டான், இவளவுதானா இன்னும் இருக்கான்னும் ஆட்டோ உள்ளே எட்டி பார்த்துகொண்டான். வீட்டினுள்ளே அன்பாக அழைத்து சென்று, சாப்புடுரியான்னு கேட்குமுன் செல்'லை கையில் எடுத்து கோமாளி செல்வாவுக்கு போனை போட்டான், எலேய் தம்பி மனோ அண்ணா என் வீட்டிற்க்கு வந்துருக்காங்கன்னு சொன்னதுதான் தாமதம், எதிர்முனை சடேரென செவியில் அறைந்தாற்போல் கட் ஆனது,
ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை வெளியே பைக் சத்தம் கேட்டது. பிரவீண் சொன்னான் அண்ணே மொக்கையன் வந்துட்டான்னு நான் வெளியே வரவும், செல்வா பைக்கில் வந்து இறங்கி பைக்கை ஸ்டேண்ட் கூட போடாமல் கீழே போட்டுவிட்டு ஓடிவந்து அண்ணே என்று சொல்லி என்னை கட்டி பிடித்துகொண்டான். [[என்னை கொல்லப்போறான்னு எனக்கு அப்போ புரியவே இல்லை]]
அப்பிடியே பெசிகொண்டிருக்கும் போது, செல்வா சொன்னான் அண்ணே எனக்கு ஒரு காதலி இருக்கிறாள் வாங்க பார்த்துட்டு வருவோம் என்றான். சரி நண்பனின் காதலி பார்க்கலாமே என்றேன். பிரவீண் உடுத்திக்கொள்ள ஒரு வேஷ்டி கொண்டு தந்தான் [[எனக்கு வேஷ்டி பிடிக்கும்னு தம்பிக்கு தெரிஞ்சிருக்கேன்னு ஆச்சர்யம்]]]
செல்வா என் கையை பிடித்து [[இழுத்து]] கூட்டி போயி, பிரவீனின் சைக்கிளை எடுத்தான். டேய் அதான் பைக் இருக்கே பின்னே எதுக்கு சைக்கிள் என்றேன், அண்ணே சைக்கிள்ள போனாதான் சுவாரஸ்யமா இருக்கும் என்றான், நானும் சரியென்று ஏறிக்கொண்டேன். அவன் காதலி வீட்டின் முன் ஒரு தெப்பகுளம் தண்ணீரோடு இருந்தது, அந்த தெப்பக்குளத்தை தாண்டிதான் அவள் வீட்டுக்கு போகவேண்டும்.
தெப்பகுளம் நெருங்கவும், செல்வா சத்தமா கேட்டான் அண்ணே பட்டாபட்டி போட்டுருக்கீன்களா...? நான் ஆமா என சொல்லும் முன் சைக்கிளை தெப்பக்குளத்தில் ஓடவிட்டு கொண்டிருந்தான், நான் வேஷ்டி'யை உருவி தலையில் கட்டி கொண்டே, எலேய் தம்பி என்னடா சைக்கிளை தெப்பக்குளத்தில் ஓட்டுறே'ன்னு கேட்டேன். அண்ணே இது ஷாட் கட் அண்ணே, ரோட்டுல போனா சுத்தி போகவேண்டி வரும் அதான் என்றான் [[அவ்வ்வ்வ்வ்வ்]]
எப்பிடியோ அக்கறையை அடஞ்சிட்டோம். அவன் காதலி வீட்டுக்கு கூட்டிப்போனான், அங்கே அவன் காதலியும் பக்கத்து வீட்டு சிறுமியும் நல்லா உறங்கி கொண்டிருந்தனர். அவள் முகம் நன்றாக மலர்ந்த ரோஜாவை போலவும் இதழ்கள் ரோஜா இதழ்போல தேவதையின் தேவதையாய் இருந்தது. அண்ணா எப்பிடி என் செலக்சன் என்றான், சூப்பர் என்றேன்.
அப்புறம் அவன் மெதுவாக காதலி பக்கம் நெருங்கினான், நான் நினைச்சேன் பயபுள்ள ஏதோ முத்தம் குடுக்க போறான் போலன்னு நினச்சேன், ஐயோ அதுதான் இல்லை கோமாளி வேலையை காட்டிபுட்டான், பக்கத்துல படுத்திருந்த சின்னபிள்ளை காலில் பலமாக நுள்ளிவிட்டான் அது அலறி எழும்பி ஐயய்யோ கள்ளன் கள்ளன் பிடிங்க பிடிங்கன்னு கத்த நான் மறுபடியும் வேஷ்டியை உருவிக்கொண்டு ஓட, செல்வா எனக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்தான்.
மறுபடியும் தெப்பகுளத்துல விழுந்து எழும்பி ஓட்டம் [[நண்பனை பார்க்க வந்ததுக்கு இது எனக்கு வேனும்தான்]] அப்புறமா பிரவீண் வீட்டுல இருந்து பேசிட்டு இருந்தோம், அப்போ செல்வா சொன்னான், அண்ணே இம்புட்டு பெரிய ஊருக்கு ஒரே ஒரு பள்ளிககூடம்தான்னே இது ஏன்னு கேட்டு நம்ம சிபி வேற பதிவில் போட்டு தாக்கி இருக்கார் அல்லாமலும் அந்த ஸ்கூலுக்கு சித்ரா மேடம்தான் டீச்சராம் என்றான்.
அதுக்கு பிரவீண் சித்ரா மேடம் இங்கே இல்லைடா அவங்க அமெரிக்காவுல இருக்காயிங்க, இங்கே டீச்சரா இருப்பது நம்ம "வேடந்தாங்கல்" கருண் என்றான். எனக்கு ஆர்வம தாங்காமல் வாங்க போயி அவரை பார்த்துட்டு வருவோம் என்றேன், பிரவீண் கழண்டு கொள்ள, செல்வா மறுபடியும் சைக்கிள் எடுத்தான் இந்த முறையும் அதே பதிலைத்தான் சொன்னான், சுவாரஸ்யமாம். ம்ஹும்.
ஸ்கூல் போனோம் அங்கே ஒரு மூலையில் பயங்கர கூட்டம் கியூவில் நிற்க என்னவென்று விசாரித்தேன், அது ரேஷன் கடையாம் பெட்ரோல் இலவசமாக குடுக்குராயிங்களாம், ஓ அப்பிடியா அப்போ அய்யா ஆட்சிக்கு வந்தாச்சா என நினைச்சி கொண்டிருக்கும் போதே, ஆயுதபோலீஸ்கள் சாரை சாரையாக வந்துகொண்டிருந்தனர்.
நாங்கள் சைக்கிளில் வரும் வழியில் ஒரு ஆள் நடமாட்டமே இல்லை போலீஸ் போலீஸ் போலீஸ்'தான்...!!! கேட்டால் எமெர்ஜென்சி அமலில் இருப்பதாக சொன்னார்கள்... இரவு நேரம் வேறு எனக்கு ஒரே பயமாக இருந்தது. திடீரென சைக்கிளை நிறுத்திய செல்வா, சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு விட்டு சொன்னான் அண்ணே இப்போ பாருங்க வேடிக்கையை என சொல்லியவாறே குனிந்து ஒரு கல்லை எடுத்து "அகோரம்" என கத்திக்கொண்டே போலீஸை நோக்கி வீச, போலீஸ் துப்பாக்கியை இங்கே திருப்பி சுடுகிறார்கள், நானும் செல்வாவும் ஓட்டம் ஓட்டம் ஓட்டம் [[நான் என்ன பாவம் செஞ்சேன் என்னை இந்த கதிக்கு ஆளாக்கிட்டானே]]
எங்களை பிடிக்க ஹெலிகாப்டரும் வந்துவிட ஓடிக்கொண்டு இருக்கும் போதே ஹெலிகாப்டரில் இருந்து குண்டு போட ஆரம்பித்து விட்டார்கள் ஒரு குண்டு என்மீது விழ........நான் அலறி எழும்பினேன்......பார்த்தா....."சொப்பனம்"...... ஹே ஹே ஹே ஹே....
டிஸ்கி : இது உண்மையாக நேற்றிரவு கண்ட சொப்பனம். அதை சற்றும் மாற்றாமல் சொல்லி இருக்கேன்...ஹி ஹி ஹி....
டிஸ்கி : எனக்கு பதிவுலகின் சூட்சுமங்களை சொல்லி வலையுலகில் படரவிட்ட தம்பிகள் கோமாளி செல்வா மற்றும் தம்பி பிரவீனுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.








