Showing posts with label ஒரு பிரபல பதிவரின் தொடர் வெற்றி. Show all posts
Showing posts with label ஒரு பிரபல பதிவரின் தொடர் வெற்றி. Show all posts

Thursday, July 28, 2011

ஒரு பிரபல பதிவரின் தொடர் வெற்றி...!!!!!!

ஸ்கூலுக்கு குழந்தையை [[மும்பை]] விடபோன என் வீட்டம்மாவுக்கு போன் செய்து, செல்லம் அங்கே கடையில ஜூனியர் விகடனோ, ஆ விகடனோ, குமுதம் நாளிதழ் இருந்தால் எல்லாம் வாங்கிட்டு வாம்மா'ன்னு சொன்னேன், அவளும் சரி அத்தான் என சொன்னாள்....

கொஞ்சநேரvம் களிஞ்சதும் அவளிடமிருந்து போன், அத்தான் ஒரு வார இதழும் இல்லை ஆனால் குங்குமம் [[வார இதழ்]] தான் இருக்கு வாங்கிட்டு வரட்டுமா'ன்னு கேட்கவும் நானும் வாங்கிட்டு வாம்மானு சொன்னேன்...


அவள் கொண்டு தந்ததும் நான் அதை வாசிக்காமல், பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்தேன், குங்குமம் டேபிளில் இருந்தது, கொஞ்ச [[அதிக]] நேரம் கழிச்சி தலைப்பை பார்த்தேன் அங்கே...
'பெண்களை மயக்கும் மிஸ்டுகால் வில்லன்கள்" என்று எழுதி இருந்தது....!!!


அடடா உடனே படிக்கனுமேன்னு தோணியதும், பிரகாசின் பதிவில் கமெண்ட்ஸ் போடும் பிஸியில் இருந்தமையால், படிக்காமல் மறந்து பதிவில் பிஸி ஆகிவிட்டேன், நேற்று மதியம் என் மனைவி, குங்குமம் படித்துவிட்டு, அத்தான் பாருங்க, நீங்க ஒரு ஆளை [[நண்பனைதான் ஹி ஹி]] மூதேவி மூதேவி'ன்னு திட்டி எழுதுவீன்களே [[அவ்வ்வ்வ்வ்]] அந்தாளுதான் "பெண்களை மயக்கும் மிஸ்டுகால் வில்லன்கள்" என்ற கட்டுரையை எழுதி இருக்கார் போல என சொல்லவும் ஆச்சர்யமாக விரித்து படிக்க ஆரம்பிச்சேன்....!!!


ஆமாம் சி பி செந்தில்குமார்'ன்னு போட்டுருக்கு...!!! ஆனாலும் எனக்கு சந்தேகமாகவே இருக்கவும், சிபி'க்கு போனை போட்டேன் உடனே பிட்டு படம் பார்த்துட்டு இருந்தானோ அட்டு படம் பார்த்துட்டு இருந்தானோ தெரியலை ராஸ்கல் என் போனை அட்டென்ட் பண்ணிட்டு ஹா ஹா ஹா ஹா'ன்னு சிரிச்சிட்டே இருக்கான் [[ராஸ்கல்]] 


டேய் டேய் நிறுத்துடா உன் சிரிப்பை, ஆமாம் சாப்பிட்டியா [[ஓசி சாப்பாடு]] ஆமாம்.........சரி குங்குமத்துல நீ ஏதாவது எழுதினியா கேட்குமுன்னே டெலிபோன் கட்டானது, கடுப்பான நான்.........சரி நம்ம போன்ல காசு தீந்துருக்குமொன்ற டவுட்ல, செக் பண்ணினேன் ஹி ஹி ஆமா காசு முடிஞ்சி போச்சி......!


அப்புறம் வோடா [[வடை இல்லை]] போன்ல  காசு போட்டுட்டு மறுபடியும் போன் பண்ணினேன் அப்பவும் ஹி ஹி ஹி ஹி'ன்னு சிரிச்சிட்டே இருக்கவும் நாலு @#$%$#@@###@@$$$$$$$$##$$%@@ திட்டு திட்டவும் நார்மலானான்.....!!!


டேய் மக்கா குமுதத்துல'ன்னு நான் ஆரம்பிக்கவும் இடைமறித்தான், ஆமாம் குங்குமத்துல எழுதுனது நாந்தேன், அது மட்டுமா, ஆ விகடன்ல இந்த வாரம் எழுதி இருக்கேன், என்னமோ ஒரு தலைப்பு சொன்னான் மறந்து போச்சு.....ஆனால் அவன் குங்குமத்தில் எழுதிய கட்டுரை மிகவும் பெண்களுக்கு உபயோகம் உள்ளது என்பது என் மனைவியின் பாராட்டில் தெறிந்தது..!!! வாழ்த்துக்கள்'டா மக்கா.....


நண்பர்களின் எழுத்துக்கள் பேப்பரிலோ, வார இதழ்களிலோ வரும்போது மனசுக்கு என்னவோ நாமே எழுதுன ஃபீலிங்கும், பெருமையுமா இருக்கு இல்லையா........??? என் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......!!!


டிஸ்கி : டேய் கில்மா பத்திரிக்கைகளுக்கு சற்று தள்ளியே இரு, ஏன்னா உன்னை கடுமையாக கண்காணிப்பதாக உளவுத்துறை "ஆபீசர்கிட்டே" இருந்து ரகசிய தகவல் எனக்கு வந்துருக்கு சாக்குரதை....


டிஸ்கி : படங்கள் எல்லாம் குங்குமம் வார இதழில் சுட்டது ஹி ஹி........

நன்றி குங்குமம்.


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!