அரசியல்வாதிகளின் கபட நாடகம் மீண்டும் மேடையில் அரங்கேறி உள்ளது. சென்னையில் நடந்த பொது கூட்டத்தில் தமிழக முதல்வரும் சோனியாகாந்திகான் மற்றும் கூட்டணி [ங்கே] தலைவர்ளும் பேசினார்கள் அதில், சோனியாகான் சொல்கிறார் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் "இனி" தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடக்காது என்று!!!!
டிஸ்கி : கொய்யால அப்போ இதுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடெல்லாம் உன் ஆதரவில் நடந்ததாக நீயே ஒப்பு கொள்கிறாய்தானே...?
அடுத்து நம்ம தானை தமிழ் [[ப்பூப்ப்]] தலைவன் பேசுகிறார், தமிழ்மொழி இந்தியா ஆட்சி மொழியில் ஒன்றாக ஆக்க வேண்டும் இதற்க்கு சோனியாகான் உதவ வேண்டும்.
டிஸ்கி : மத்திய அரசின் குடுமியே ஒரு சமயம் உங்க கையில்தானே "ராசா" இருந்திச்சு அப்போ எல்லாம் என்னத்தை புடுங்கிட்டு இருந்தீங்க...?
நதிகளை தேசியமயமாக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், முதல்கட்டமாக, தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, அதற்காக, மாநிலங்களுக்கு நிதியுதவியையும் அளிக்க வேண்டும்.
டிஸ்கி : எடியூரப்பா ஒகனேக்கல் வந்து உங்க கண்ணுல விரல் விட்டு ஆட்டிட்டு போயி, அதை சொல்லி கர்நாடகத்துல ஜெயிச்சி முதல்வரும் ஆயாச்சி. நீங்க இன்னும் பேசிட்டே பேசிட்டே பேசிட்டே கோரிக்கை வச்சிகிட்டே அதுவும் தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவதை கேனைத்தனம் சின்னபிள்ளைதனம்னு வடிவேல் மாதிரி சொல்லலாம்....!!!
1976ம் ஆண்டு இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு இருந்த உரிமையை இழந்து விட்டோம். இதனால், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் மீது, இலங்கை ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவது அடிக்கடி நடக்கிறது. எனவே, கச்சத் தீவை திரும்பப் பெற உதவிட வேண்டும். இது, உரிமைப் பிரச்னை அல்ல. தழிழக மீனவர்களின் உயிர்ப் பிரச்னை.
டிஸ்கி : இதுதான் நாடகத்தின் உச்சம்!!!!! உங்க குடும்ப பிரச்சினைன்னா டெல்லிக்கு வீல்சேரில் பறக்குறீங்க!!! அதே மீனவனின் பிரச்சினைனா இங்கிருந்து லட்டர் எழுதுறது அறிக்கை விடுறது, காலையில ஒரு சட்டி இட்லியை முழுங்கிட்டு மதியம் வரை உண்ணாவிரதம் இருக்குறது ச்சேய் ஷேம் ஷேம் பப்பி ஷேம்........போங்கடா நீங்களும் உங்க அரசியலும், கபட நாடகங்களும்.
டிஸ்கி : நான் அதிமுக'விற்கு ஆதரவாளனும் அல்ல.





