Showing posts with label சத்தியம். Show all posts
Showing posts with label சத்தியம். Show all posts

Wednesday, January 26, 2011

சத்தியம்

ஆர்ப்பரிக்கும் ஆழி அலை போல
ஓயாமல் பொங்குதடி உன் நினைவு
அந்த ஒற்றை பனை மரத்தை சுற்றி
அதுவும் உன்னோடு 
ஏன் எரிந்து போகவில்லை
நம் காதலுக்கு சாட்சி சொல்ல
நீ விட்டு போனாயா,
ஓங்கி அடிக்கும் உன் நினைவுகளை
பகிர்ந்து கொள்ள எனக்காக நீ
விட்டு சென்ற அந்த ஒற்றை பனை மரத்தை
காலம் இன்னும் அழிக்கவில்லையடி
என் மனதில் உள்ள காயம் போல....
என் பிள்ளைகளுக்கும் தெரியும்
அந்த ஒற்றை பனை மரத்தை,
அதை கடக்கும் போதெல்லாம் என்
மகள் சத்தமாகவே சொல்கிறாள்
இது என் டாடியின் முன்னாள்
காதலி வாழ்ந்த இடமென்று.....!!!
அக்கணம் பொங்கும் உன் நினைவு
கண்ணீராய் வெளி கொண்டு 
வர முடியவில்லை,
காரணம் நான் அழக்கூடாது என 
நீ வாங்கி கொண்ட சத்தியம்.... 
 

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!