கொஞ்சம் மேலே பாருங்க [[வானத்தை அல்ல]] தமிழ்மணம் ஒட்டு பட்டை இருக்கிறதா..? அதில் உங்கள் பொன்னான ஓட்டை போடுங்கள். இல்லைனா நீங்க உறங்கும் போது உங்க கனவுல வந்து என் முகத்தை குளோஸ் அப்'ல காட்டி குலை நடுங்க வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி...
ஃபிரண்ட் ஆபீசில் வந்த இரண்டு சவூதி அரபிகள், ஹோட்டல் டீடெயில் பற்றி கேட்டு கொண்டிருக்கும் போதே இன்னொரு அரபி கேட்டான், இங்கே ஏன் இம்புட்டு "இருட்டா" இருக்குன்னு. நான் பதில் சொல்லும் முன் மற்றொரு அரபி அவனிடம் சொன்னான், கொய்யால கூலிங் கிளாசை கழட்டி விட்டு பாருன்னு [[இது ஒரு மலையாள சினிமாவுலயும் பார்த்ததா ஞியாபகம்]] நம்ம சிபி மாதிரியான ஆளு போல...
அடுத்தும் அரபிதான்....எனக்கு அரபிகளில் பல நண்பர்கள் உண்டு, அதில் சில நண்பர்கள்
அவர்களின் நகைசுவை உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொள்வது உண்டு, அதில் ஒன்று
கீழே...
பொதுவாக சவூதி அரேபியாவில் பூரண மதுவிலக்கு உண்டு. மது அங்கே அனுமதியே கிடையாது. இரண்டு நண்பர்கள் எனது பாரில் இருந்து குடித்து கொண்டிருந்தார்கள் [[பஹ்ரைன்]] ஒருவன் குடிக்கவில்லை காரணம் சவூதி செல்ல கார் ஓட்டவேண்டும். குடித்து விட்டு கார் ஓட்டினால் கடுமையான தண்டனை இங்கே [[தக்காளி கவனிக்கவும்]]
அப்படி இருக்க என்னிடம் ஒரு குவாட்டர் பிளாக்லேபள் பார்சல் கேட்டான். குடுத்து விட்டு கேட்டேன், நீதான் சவூதி போறியே அங்கே எல்லையில் இதை அனுமதிக்க மாட்டார்களேன்னு. அவன் சொன்னான் இல்லை நான் ஒளித்து வைத்துதான் கொண்டு போவேன்னு சொல்லி வாங்கிக்கொண்டான். அவன் ஓவரா குடித்தபடியால் நண்பன் அவனை தாங்கி சென்றான்.... வானமும் சிவந்தது...[[ஹி ஹி ஒரு பில்டப்பு]]
அடுத்த வாரம் அதே நண்பர்கள் வார விடுமுறையில் பஹ்ரைன் வந்தவர்கள், எங்கள் ஹோட்டலுக்கும் வந்தார்கள். வந்தவர்கள் போன தடவை சவூதி எல்லையில் நடந்த கூத்தை சொன்னான் அந்த குடிக்காத அரபி...
அதாவது இவர்கள் எல்லையில் நெருங்கியதும் வாகன சோதனை நடக்க, பிளாக்லேபள் பாட்டல் பிடிபட்டுருச்சாம். பாட்டல் சவுதிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்னு போலீஸ் கறார் செய்ய குடிக்காத அரபி கெஞ்சி கேட்டும் அசராத போலீஸ்,
அப்போது காரில் இருந்து தள்ளாடி இறங்கிய அரபி அந்த பாட்டல கையில் வாங்கி வைத்து கொண்டு கேட்டானாம், நான் சவுதிக்குள் போகலாமா..? போலீஸ் : நீ போகலாம் ஆனால் பாட்டல் போககூடாது, என சொல்லவும்...
அந்த அரபி, பாட்டல்தானே உள்ளே போகக்கூடாதுன்னு கேட்டுவிட்டு உடனே பாட்டலை திறந்து வாயில் ஊற்றி குடித்து விட்டு பாட்டலை தூர வீசி விட்டு போலீசிடம் கேட்டானாம், "நான் இப்போ சவுதிக்குள் போகலாமா"ன்னு, தலையில் அடித்து கொண்டே போலீசும் உள்ளே விட்டார்களாம். இதை அந்த அரபி சொல்லி சொல்லி சிரித்தான். ஹா ஹா ஹா ஹா நானும்தான்...[[இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே பாண்டிச்சேரி போகுற மக்கள் நோட் திஸ்]]






