என் நண்பன் ஒருவன் நன்றாக புகைக்க கூடியவன், புகையை குறைக்க சொல்லி பார்த்து பார்த்து முடியாமல் அப்பிடியே விட்டு விட்டோம் திருந்துனாதானே....!
தனியாக என்னோடு அவன் இருக்கும் போது, நான் நெட்டில் படித்த ஒரு தகவலை சொன்னேன். அதாவது, சாப்பிட்ட உடன் சிகரெட் புகைத்தால் அது பத்து சிகரெட்டுக்கு உண்டான கேட்டை உடம்புக்கு உண்டாக்கும் ஆகவே இனி சாப்பிட்ட உடன் புகைக்காதேன்னு சொன்னேன் அவனும் அப்பிடியானு கேட்டுகிட்டான்.
ரொம்ப நாளைக்கு பின் ஒரு நாள் மதியம் சாப்பாடு அவனுடன் சாப்பிட நேர்ந்தது, சாப்பாட்டு ரூமில் சாப்பாடு இருந்தது இருவருக்கும்....ரெண்டு பேரும் அந்த அறையில் போயி சாப்பாட்டின் முன் அமர்ந்தோம். அப்போது திடீரென நண்பன் இதோ வருகிறேன்னு எழும்பி வெளியே போனான். எனக்கோ பசி, இப்போ ஏன் இவன் எழும்பி போகிறான்னு எனக்கு சந்தேகம் வர, போயி பார்ப்போம்னு வெளியே வந்தேன் அங்கே அண்ணாச்சி சிகரெட்டை சுவாரஸ்யமாக இழுத்து கொண்டிருந்தான்...!!
டேய் என்னடா இது சாப்பாட்டு நேரத்துல இப்பிடி புகைச்சிட்டு இருக்கேன்னு கோபமாக கேட்டேன். அவன் சொன்னான், என்னங்கடா நீதானே சொன்னாய் சாப்பிட்ட பின் புகைத்தால் பத்து மடங்கு எஃபக்ட்னு...... அதான் சாப்பாட்டுக்கு முன்பே புகைக்கிறேன்னு சொன்னான்ய்யா....... நான் "ங்கே"..............................நீங்க..............???
இவனுங்களை பத்து விவேக் என்ன ஆயிரம் விவேக் வந்தாலும் திருத்த முடியாது.....