Showing posts with label ஜட்ஜ்மென்ட். Show all posts
Showing posts with label ஜட்ஜ்மென்ட். Show all posts
Monday, December 6, 2010
ஜட்ஜ்மென்ட்
நான்கு பஞ்சு வியாபாரிகள் இருந்தனர், பஞ்சை எலிகள் நாசமாக்கி விடுவதால் அவற்றை பிடித்து தின்ன ஒரு பூனை வளர்த்தனர்,பூனையின் நான்கு கால்களையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு பராமரித்தனர். அவரவர் கால்களுக்கு தங்க மோதிரம், சங்கிலி என போட்டு அழகு பார்த்தனர். ஒருநாள் பின்னங்கால் ஒன்றில் பூனைக்கு அடிபட, அந்த காலுக்கு உரிய வியாபாரி மண்ணெண்ணையில் பஞ்சை நனைத்து காட்டு போட்டார், அந்த நேரம் பார்த்து பூனை அடுப்போரம் ஒதுங்க, காயம் பட்ட காலில் தீ பிடித்து கொள்கிறது, தன் காலில் தீயை பார்த்ததும் மிரண்ட பூனை, பயந்து பஞ்சு கொடாவுனுக்குள் ஓட, பல லட்ச ரூபாய் பஞ்சு எரிந்து நாசமானது, அதற்கு நஷ்ட ஈடு கேட்டு மற்ற மூன்று வியாபாரிகளும் அந்த எறிந்த காலுக்குரிய வியாபாரி மீது வழக்கு தொடுத்தனர், ஆனால், இந்த மூன்று வியாபாரிகளும்தான் அந்த வியாபாரிக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது எப்படி????? யோசிச்சு சொல்லுங்க......?
Subscribe to:
Posts (Atom)