Saturday, March 12, 2011

பெயர் புராணம் நாங்களும் சொல்லுவோம்ல...

நம்ம கக்கு-மாணிக்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நானும் எனது பெயர் புராணம் சொல்லி [[தேவையாடா]] புண்ணியத்தை கூட்டிகிடலாமுன்னு இருக்கேன் [[கல்லை தூக்காதீங்க]] 
 
என்னுடைய உண்மையான பெயர் மனாசே, இது எனது அப்பா அம்மா இட்ட பெயர், எனது  மூத்த அண்ணன் அந்த பெயரோடு எங்க தாத்தா பெயரையும் சேர்த்து மனாசே வேதமணி [வேலாயுதம்] என வைத்தான் அது எடுபடாமல் போயி மனாசே என எல்லோரும் அழைத்தனர். கிறிஸ்தவர் அல்லாதோர் இப்பெயரை உச்சரிக்க முடியாமல் சிலர் மனீசி மனுஷா மனூஸ் [லூசு'ன்னு சொல்லாம விட்டாங்களே] மனசே இப்பிடி கூப்புட்டு என் பெயர் அல்லோலகல்லோல பட்டது.
அப்புறம் மும்பை வாழ்க்கை அங்கே என் பேர் யாருக்குமே உச்சரிக்க முடியாமல் போனதால் நண்பர்களே என் பெயரை மனோஜ் என மாற்றி அழைக்க தொடங்கினர். மனோஜ் என்ற பெயர் பிரபலமானது போலீஸ் ஸ்டேசன் வரை [பில்டப்பை பாரு மிதி வாங்குனதுதான் உலகத்துக்கே தெரியுமே]
அப்புறம் கல்யாணம் ஆனதும் பெண் வீட்டில் அந்த பெயரையும் [என்ன கஷ்டமோ] சுருக்கி மனோ ஆக்கி விட்டார்கள். இப்போ எங்க வீட்டம்மா குடும்பத்து சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லோரும் என்னை பெயர் சொல்லித்தான் உறவை சொல்லுவார்கள். உதாரணம் மனோ மாமா, மனோ சித்தப்பா....
நண்பர்கள் வட்டத்தில் மனோஜ் பெயர் இன்றும் பஹ்ரைன் வரை தொடர்கிறது. மனோ என்ற பெயர் இன்றும் தொடர்கிறது என் வீட்டம்மா குடும்பத்தோடு சேர்ந்து பதிவுலகம் வரை...
அப்போ அதென்ன நாஞ்சில் மனோ? [ஹே ஹே ஹே ஹே ஹே]
நான் பதிவுலகம் வருமுன் நம்ம நாஞ்சில் எக்ஸ்பிரஸ் பிரதாப் கூட அடிக்கடி மெயிலில் பேசி கொண்டிருக்கும் போது, செய்தி எழுதி விட்டு கீழே நட்புடன் மனோ என்று போடுவது வழக்கம். ஒரு நாள் அவர்தான் சொன்னார் நீங்க ஒரு பிளாக் ஒப்பன் பண்ணுங்க என்று [இப்போ நான் போட்டு அறுக்குறது தெரிஞ்சி தலை தெறிக்க ஓடியே விட்டார் பாவம்] நாஞ்சில் மனோ என்ற பெயர் நல்லா இருக்குனு சொல்லி வாழ்த்தினார் மனுஷன். அன்னைக்கு பிடிச்சதுதான் இந்த பீடை... பேஸ்புக்'கையும் பிளாக்கையும் விடாம நாரடிச்சிட்டு இருக்கேன் [மன்னிச்சிகொங்கப்பா]
ஆக எனது அம்மா அப்பா சகோதர சகோதரிகள் மனாசே எனவும், நண்பர்கள் மனோஜ் எனவும் என் மனைவி குடும்பத்தாரும் பதிவுலகமும் மனோ எனவும், நாஞ்சில் எனவும் அன்புடன் அழைக்கிறார்கள்.
கக்கு மக்கா போதுமா....?
அடுத்து கக்குவின் கேள்வி [பலரின்] நாஞ்சில் என்பதின் அர்த்தம் என்ன..?
வயலும் வயல் சார்ந்த இடமும் உழவர் பூமி ஆகும். அது கன்யாகுமரி மாவட்டத்தில் அதிகம் உள்ளதால் நாஞ்சில் நாடு எனபட்டது. எனவேதான் அங்கிருந்து வந்தவர்கள் நாஞ்சில் மனோகரன், நாஞ்சில் சம்பத், நாஞ்சில் நாடன், நாஞ்சில் எக்ஸ்பிரஸ், நாஞ்சில் குமரன் என பெயரில் சேர்த்து கொண்டார்கள். வேறே எதுவும்  காரணம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிய படுத்துங்கள்

98 comments:

 1. நாஞ்சில் மனோ புராணம் அடுத்த சமசசீர் கல்வியிலே இணைத்திடலாம்...

  வரும் தலைமுறை கற்று பயன் பெறட்டும்..

  வரலாறு முக்கியம் அமைச்சரே..

  ReplyDelete
 2. அது யாரே கம்பியூட்ர் முன் அழக இருக்காங்களே அது யாறு..

  உங்க போட்டோவை போட்டிருக்கலாமே..

  ReplyDelete
 3. அந்தப் பேரெல்லாம் சரிதான்... அந்தக் கண்ணாடி எங்க புடிச்சீங்க?

  ReplyDelete
 4. //வயலும் வயல் சார்ந்த இடமும் உழவர் பூமி ஆகும். அது கன்யாகுமரி மாவட்டத்தில் அதிகம் உள்ளதால் நாஞ்சில் நாடு எனபட்டது. எனவேதான் அங்கிருந்து வந்தவர்கள் நாஞ்சில் மனோகரன், நாஞ்சில் சம்பத், நாஞ்சில் நாடன், நாஞ்சில் எக்ஸ்பிரஸ், நாஞ்சில் குமரன் என பெயரில் சேர்த்து கொண்டார்கள். வேறே எதுவும் காரணம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிய படுத்துங்கள்//


  இருக்கே, சும்மாவா விடுவோம்.

  ஜெய்லானி ....ஜெய்லானி........ஓடிவாங்க .........அட சீக்கிரமா வாங்கய்யா....... பெருச்சாளி மாட்டிகிச்சீ.....

  " நாஞ்சில் அரிசி மூட்ட " இது கூட நல்லாத்தான் இருக்கு. நம்ம ஜெய்லா வெச்ச பேரு......எப்டி??????

  ReplyDelete
 5. அது என்னாகிரன்?
  கம்ப்யுடர் மானிட்டரில் இருந்து ஒரு வொயறு உம்ம வாயிகுல்லார போகுது??

  ReplyDelete
 6. ஆமா அது எதுக்கு கன்யாகுமாரி போடோ எதாவுது உள்குத்து

  ReplyDelete
 7. //வயலும் வயல் சார்ந்த இடமும் உழவர் பூமி ஆகும்.//

  பாருய்யா...இந்த அநியாயத்தை நாங்க என்ன பிரன்ச் மீடியா படிச்சோம் ..கதை சொல்ற அழகைப்பாரு

  ReplyDelete
 8. //என்னுடைய உண்மையான பெயர் மனாசே//

  அப்படி வச்சா கூட மனுஷனா இருக்குமோன்னு ஒரு வேள வச்சாங்களோ ஹி..ஹி....

  ReplyDelete
 9. //" நாஞ்சில் அரிசி மூட்ட " இது கூட நல்லாத்தான் இருக்கு. நம்ம ஜெய்லா வெச்ச பேரு......எப்டி??????//

  அட நா புளி மூட்டைன்னுதானே சொன்னேன் ..அட டா உளறிட்டேனே ஹி...ஹி..

  ReplyDelete
 10. //அது கன்யாகுமரி மாவட்டத்தில் அதிகம் உள்ளதால் நாஞ்சில் நாடு எனபட்டது.//

  ஏன் கேரளாவில ( வயல்நாடு ) வயநாடுன்னே இருக்கே .

  தமிழ் நாட்டில மத்த இடத்துல வயல் இல்லைன்னு சொன்ன மனாசே டவுன்......டவுன்....

  ReplyDelete
 11. //உதாரணம் மனோ மாமா, மனோ சித்தப்பா...//

  இந்த குசும்பு தானே ஆகாது நான் எப்படி உங்களை அழைப்பேன் என்று சொல்ல வேண்டியது தானே ...நான் "மனோ தாத்தா" என்று அழைப்பேன்

  ReplyDelete
 12. நாஞ்சில் நெஞ்சில் உள்ள ஃபிகர் யார்?

  ReplyDelete
 13. அப்புறம் கல்யாணம் ஆனதும் பெண் வீட்டில் அந்த பெயரையும் [என்ன கஷ்டமோ] சுருக்கி மனோ ஆக்கி விட்டார்கள்//
  நிறைய வரதட்சணை வாங்கிட்டீங்களோ

  ReplyDelete
 14. அதான் பெயர் போன பதிவராயீட்டீங்களே

  ReplyDelete
 15. //சி.பி.செந்தில்குமார் said...
  நாஞ்சில் நெஞ்சில் உள்ள ஃபிகர் யார்?//

  எலேய் அங்கிட்டு வந்தேன் பிச்சி புடுவேன் பிச்சி....

  ReplyDelete
 16. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  அப்புறம் கல்யாணம் ஆனதும் பெண் வீட்டில் அந்த பெயரையும் [என்ன கஷ்டமோ] சுருக்கி மனோ ஆக்கி விட்டார்கள்//
  நிறைய வரதட்சணை வாங்கிட்டீங்களோ//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 17. அடேங்கப்பா...நீங்க ஒரு பலபேர் மன்னன்

  ReplyDelete
 18. //இம்சைஅரசன் பாபு.. said...
  //உதாரணம் மனோ மாமா, மனோ சித்தப்பா...//

  இந்த குசும்பு தானே ஆகாது நான் எப்படி உங்களை அழைப்பேன் என்று சொல்ல வேண்டியது தானே ...நான் "மனோ தாத்தா" என்று அழைப்பேன்///

  ஹே ஹே ஹே ஹே இந்த பெயரும் நல்லா இருக்கே....

  ReplyDelete
 19. //ரஹீம் கஸாலி said...
  அடேங்கப்பா...நீங்க ஒரு பலபேர் மன்னன்//

  அவ்வ்வ்வ்வ் திட்டாதீங்க மக்கா...

  ReplyDelete
 20. //ஜெய்லானி said...
  //" நாஞ்சில் அரிசி மூட்ட " இது கூட நல்லாத்தான் இருக்கு. நம்ம ஜெய்லா வெச்ச பேரு......எப்டி??????//

  அட நா புளி மூட்டைன்னுதானே சொன்னேன் ..அட டா உளறிட்டேனே ஹி...ஹி..//

  அடடா இவிங்க ரெண்டு பெரும் என்னமோ பிளான் பன்னுராங்களோ மக்கா சூதானமா இருந்துக்கோ....

  ReplyDelete
 21. //கக்கு - மாணிக்கம் said...
  அது என்னாகிரன்?
  கம்ப்யுடர் மானிட்டரில் இருந்து ஒரு வொயறு உம்ம வாயிகுல்லார போகுது??//

  நம்ம கனெக்ஷன் அப்பிடி....

  ReplyDelete
 22. //வேடந்தாங்கல் - கருன் said...
  அந்தப் பேரெல்லாம் சரிதான்... அந்தக் கண்ணாடி எங்க புடிச்சீங்க?//

  என்னாது கண்ணாடியா எங்கே எங்கே....

  ReplyDelete
 23. //கவிதை வீதி # சௌந்தர் said...
  அது யாரே கம்பியூட்ர் முன் அழக இருக்காங்களே அது யாறு..

  உங்க போட்டோவை போட்டிருக்கலாமே..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 24. அப்படியா.. சொல்லவே இல்லையே... மனாசே பெயர் காரணம் கூறுக.. ஹிஹி..

  ReplyDelete
 25. //கவிதை வீதி # சௌந்தர் said...
  நாஞ்சில் மனோ புராணம் அடுத்த சமசசீர் கல்வியிலே இணைத்திடலாம்...

  வரும் தலைமுறை கற்று பயன் பெறட்டும்..

  வரலாறு முக்கியம் அமைச்சரே..///


  முடியல....

  ReplyDelete
 26. //மதுரை பொண்ணு said...
  அப்படியா.. சொல்லவே இல்லையே... மனாசே பெயர் காரணம் கூறுக.. ஹிஹி..//

  மனாசே'யின் அர்த்தம் "மறக்க பண்ணின"

  ReplyDelete
 27. மனோ
  உம்ம மெயில் டப்பாவ பாருங்க. அதில் இருக்கும் "வாயில் ஒயரு " இல்லாத உங்க படத்த எடுங்க, இங்க போடுங்க. இனா....பிரீதா ?

  ReplyDelete
 28. நீங்கதான் சார் பேர் சொன்ன பதிவரு :-))))))0

  ReplyDelete
 29. சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்து சொல்லியிருக்கீங்க... தல..!!! கலக்கலான பதிவு.

  ReplyDelete
 30. இனி யாரும் உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்ததுனு கேட்க முடியாத அளவிற்கு வரலாறு முதற்கொண்டு எடுத்து சொல்லி சூப்பரா சொல்லீட்டீங்க...!!
  அசத்தல் தலைவா..!!!

  ReplyDelete
 31. இப்படிதான் வந்ததா பேரு..
  சொன்னதுக்கு நன்றிங்கோ..

  ReplyDelete
 32. //கக்கு - மாணிக்கம் said...
  மனோ
  உம்ம மெயில் டப்பாவ பாருங்க. அதில் இருக்கும் "வாயில் ஒயரு " இல்லாத உங்க படத்த எடுங்க, இங்க போடுங்க. இனா....பிரீதா ?//

  வரலியே மக்கா....
  தெரியாம வேற இடத்துக்கு ராக்கெட்டை விட்டுட்டீரோ...

  ReplyDelete
 33. //இரவு வானம் said...
  நீங்கதான் சார் பேர் சொன்ன பதிவரு :-))))))0//

  என்னய்யா கடைசியா ஒரு முட்டை போட்டு இருக்கீங்க "கூ முட்டைன்னு" சொல்லலைதானே ஹா ஹா ஹா....

  ReplyDelete
 34. //பிரவின்குமார் said...
  சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்து சொல்லியிருக்கீங்க... தல..!!! கலக்கலான பதிவு.//

  நன்றி மக்கா.....

  ReplyDelete
 35. //பெயர் புராணம் நாங்களும் சொல்லுவோம்ல...//
  பின்னூட்டம் நாங்களும் போடுவோம்ல!

  ReplyDelete
 36. கடிசீல பொண்டாட்டி வெச்ச பேருதான் நிலைச்சுதா, நண்பா!

  ReplyDelete
 37. //பிரவின்குமார் said...
  இனி யாரும் உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்ததுனு கேட்க முடியாத அளவிற்கு வரலாறு முதற்கொண்டு எடுத்து சொல்லி சூப்பரா சொல்லீட்டீங்க...!!
  அசத்தல் தலைவா..!!!//

  நன்றிலேய் மக்கா...

  ReplyDelete
 38. மனோ ரொம்ப நல்லவரு......ஹி ஹி ஹி

  ReplyDelete
 39. //பாட்டு ரசிகன் said...
  இப்படிதான் வந்ததா பேரு..
  சொன்னதுக்கு நன்றிங்கோ..//

  என்னய்யா ரொம்ப நாளா ஆளையும் காணோம் பதிவையும் காணோம்....

  ReplyDelete
 40. //FOOD said...
  //பெயர் புராணம் நாங்களும் சொல்லுவோம்ல...//
  பின்னூட்டம் நாங்களும் போடுவோம்ல!

  March 12, 2011 3:12 AM
  FOOD said...
  கடிசீல பொண்டாட்டி வெச்ச பேருதான் நிலைச்சுதா, நண்பா! ///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 41. //இளம் தூயவன் said...
  மனோ ரொம்ப நல்லவரு......ஹி ஹி ஹி//

  போலீஸ் காரங்கிட்ட நான் அடிபட்டதைதானே சொல்றீங்க....

  ReplyDelete
 42. மனேசே ரிலாக்ஸ் பிளீஸ்  நம்ம பதிவு
  திருமணத்திற்கு முன் - பின்
  http://speedsays.blogspot.com/2011/03/blog-post_12.html

  ReplyDelete
 43. நாஞ்சில் புராணமும் உங்க பேர் புராணமும் நல்லா இருந்துச்சு..

  ReplyDelete
 44. //Speed Master said...
  மனேசே ரிலாக்ஸ் பிளீஸ்//

  இனி இது வேறயா....

  ReplyDelete
 45. //தேனம்மை லெக்ஷ்மணன் said...
  நாஞ்சில் புராணமும் உங்க பேர் புராணமும் நல்லா இருந்துச்சு..//

  ஹா ஹா ஹா நன்றி மேடம்....

  ReplyDelete
 46. உங்க பெயர் புராணம் நல்லாருக்கு. நமீதா? அர்த்தம்...கேட்டு சொல்லுங்க!

  ReplyDelete
 47. புராணம் நல்லவே இருக்குங்க. நல்லாவே பில்டப் பண்ண முயற்சி செய்திருக்கிறீர்கள்..

  ReplyDelete
 48. நாஞ்சில் நாடு நல்ல இலக்கிய தரமுள்ளவர்களை தந்திருக்கிறது.
  (ஒண்ணுரெண்டு பேர் மட்டும் மொக்கையாயிடுட்டாங்க... திருஷ்டிக்காக)

  ReplyDelete
 49. மிஸ்டர் மனாசே.!! வணக்கம்.. உங்க பேரு மக்கள் வாயில மாட்டி படாதபாடு பட்டிருக்கும்போல.. மனாசே.. மனாசே.!! வித்யாசமா இருக்கே.!! நண்பர் மனாசே அவர்களே போன பதிவின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கவில்லையே.!! ஏன்.??? மத்தபடி உங்க பெயர எப்படி மாத்தலாம்னு யோசிச்சிட்டு சொல்றன்(எல்லாரும் மாத்தி கூப்பிடும்போது நான் மட்டும் மாத்தலனா எப்படி.!!)..

  ReplyDelete
 50. //பாரத்... பாரதி... said...
  நாஞ்சில் நாடு நல்ல இலக்கிய தரமுள்ளவர்களை தந்திருக்கிறது.
  (ஒண்ணுரெண்டு பேர் மட்டும் மொக்கையாயிடுட்டாங்க... திருஷ்டிக்காக)//

  ஹே ஹே ஹே ஹே குசும்பை பாரு....

  ReplyDelete
 51. உங்கள் பெயர் மாற்றப் பதிவு அருமை!
  நாஞ்சில் நாட்டிற்கு விக்கிபீடியா 'நாஞ்சில் நாடு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தைக் குறிக்கும் பகுதியாகும்.இன்றைய கன்னியாகுமரி மாவட்டம், நாஞ்சில் நாடு என்ற பெயரில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ( இன்றைய கேரளா) இணைந்திருந்தது.' என்று சொல்கிறது!

  ReplyDelete
 52. //தம்பி கூர்மதியன் said...
  மிஸ்டர் மனாசே.!! வணக்கம்.. உங்க பேரு மக்கள் வாயில மாட்டி படாதபாடு பட்டிருக்கும்போல.. மனாசே.. மனாசே.!! வித்யாசமா இருக்கே.!! நண்பர் மனாசே அவர்களே போன பதிவின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கவில்லையே.!! ஏன்.??? மத்தபடி உங்க பெயர எப்படி மாத்தலாம்னு யோசிச்சிட்டு சொல்றன்(எல்லாரும் மாத்தி கூப்பிடும்போது நான் மட்டும் மாத்தலனா எப்படி.!!)..//

  ஓஹோ யோசிங்க யோசிங்க....

  ReplyDelete
 53. //middleclassmadhavi said...
  உங்கள் பெயர் மாற்றப் பதிவு அருமை!
  நாஞ்சில் நாட்டிற்கு விக்கிபீடியா 'நாஞ்சில் நாடு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தைக் குறிக்கும் பகுதியாகும்.இன்றைய கன்னியாகுமரி மாவட்டம், நாஞ்சில் நாடு என்ற பெயரில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ( இன்றைய கேரளா) இணைந்திருந்தது.' என்று சொல்கிறது!//

  ஆஹா அப்பிடியா.....!!!!
  நன்றி மக்கா.....

  ReplyDelete
 54. உங்கள் பெயர் மாற்றப் பதிவு அருமை!Interesting.

  ReplyDelete
 55. /**அது யாரே கம்பியூட்ர் முன் அழக இருக்காங்களே அது யாறு..

  உங்க போட்டோவை போட்டிருக்கலாமே.. **/

  அழகா. முதல டாக்டர் அ பாருக

  ReplyDelete
 56. பெயரில் என்ன இருக்கிறது?ரோஜாவை வேறு பெயரால் அழைத்தாலும் அதே மணம்தானே! மனாசே,மனூஸ்,மனோஜ்,மனோ எல்லாமே மனதுடன் சம்பந்தப் பட்டதாக இருக்கின்றன.நல்ல மனிதர் அல்லவா!

  ReplyDelete
 57. தங்கள் பதிவைப் போலவே பெயரிலும்
  எந்தக் குழப்பமும் இல்லை
  வழக்கம் போல அதை
  நகைச்சுவை உணர்வு ததும்ப
  சொல்லிப் போனதும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 58. //இராஜராஜேஸ்வரி said...
  உங்கள் பெயர் மாற்றப் பதிவு அருமை!Interesting.//

  மிகவும் நன்றி.....

  ReplyDelete
 59. //rajatheking said...
  /**அது யாரே கம்பியூட்ர் முன் அழக இருக்காங்களே அது யாறு..

  உங்க போட்டோவை போட்டிருக்கலாமே.. **/

  அழகா. முதல டாக்டர் அ பாருக //

  ஏன் இந்த கொலை வெறி ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 60. //சென்னை பித்தன் said...
  பெயரில் என்ன இருக்கிறது?ரோஜாவை வேறு பெயரால் அழைத்தாலும் அதே மணம்தானே! மனாசே,மனூஸ்,மனோஜ்,மனோ எல்லாமே மனதுடன் சம்பந்தப் பட்டதாக இருக்கின்றன.நல்ல மனிதர் அல்லவா!//

  மிகவும் நன்றி தல......

  ReplyDelete
 61. //பெயரில் என்ன இருக்கிறது?ரோஜாவை வேறு பெயரால் அழைத்தாலும் அதே மணம்தானே!// அம்மோ....................!

  ReplyDelete
 62. //Ramani said...
  தங்கள் பதிவைப் போலவே பெயரிலும்
  எந்தக் குழப்பமும் இல்லை
  வழக்கம் போல அதை
  நகைச்சுவை உணர்வு ததும்ப
  சொல்லிப் போனதும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்//

  குரு'ன்னா குருதான்....
  மிக்க நன்றி....

  ReplyDelete
 63. //சிவகுமார் ! said...
  உங்க பெயர் புராணம் நல்லாருக்கு. நமீதா? அர்த்தம்...கேட்டு சொல்லுங்க!//


  யோவ் நல்லாதானே போயிகிட்டு இருக்கு...
  இடையில வந்து நமீதா கட்டய போடுதீறு....

  ReplyDelete
 64. //சென்னை பித்தன் said...
  பெயரில் என்ன இருக்கிறது?ரோஜாவை வேறு பெயரால் அழைத்தாலும் அதே மணம்தானே! மனாசே,மனூஸ்,மனோஜ்,மனோ எல்லாமே மனதுடன் சம்பந்தப் பட்டதாக இருக்கின்றன.நல்ல மனிதர் அல்லவா!//

  அரிசி மூட்டை, புளிமூட்டை, தடியன், பெயரில் என்ன இருக்கு? மணோ என்றும் நம்ம மணோ தான். :))))))))

  ReplyDelete
 65. வணக்கம் சகோதரம், உங்களின் பெயரின் பின்னாலுள்ள ரகளைகளையும், ரசிக்கும் படியான பல பெயர்களையும் ரசித்தேன்.

  ReplyDelete
 66. "மனோ மாமா, மனோ சித்தப்பா"

  -இதுல எத வச்சி கூப்புடறது............
  எடுக்கவோ கோக்கவோ ஹி ஹி!

  ReplyDelete
 67. /வயலும் வயல் சார்ந்த இடமும் உழவர் பூமி ஆகும்.//

  பாருய்யா...இந்த அநியாயத்தை நாங்க என்ன பிரன்ச் மீடியா படிச்சோம் ..கதை சொல்ற அழகைப்பாரு//
  hahaa...
  தூரதர்ஷனில் வயலும் வாழ்வும் ரொம்ப பார்ப்பார் போல!!!

  Good explanation!!

  ReplyDelete
 68. நல்ல நகைச்சுவையான பதிவு திரு மனோ
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 69. மனசே மனசே குழப்பம் என்ன......

  ReplyDelete
 70. பெயர்புராணம் புராணமாத்தான்யா இருக்கு...!

  ReplyDelete
 71. //////கக்கு - மாணிக்கம் said...
  அது என்னாகிரன்?
  கம்ப்யுடர் மானிட்டரில் இருந்து ஒரு வொயறு உம்ம வாயிகுல்லார போகுது?? //////

  அண்ணன் வாயில இருந்து கரண்டு எடுக்குறாராம்.. அண்ணே அப்பிடியே தமிழ்நாட்டுப் பக்கம் கொஞ்சம் போங்கண்ணே.... ஆற்காட்டாரு பெரச்சனை தாங்கமுடியலியாம்....!

  ReplyDelete
 72. ///////மனோஜ் என்ற பெயர் பிரபலமானது போலீஸ் ஸ்டேசன் வரை /////

  அப்போ உங்க போட்டோவும் பேரும் இன்னும் அந்த டேசன்ல இருக்கா.....? பெரிய ஆளுதாம்ல மக்கா....!

  ReplyDelete
 73. //அரிசி மூட்டை, புளிமூட்டை, தடியன், பெயரில் என்ன இருக்கு? மணோ என்றும் நம்ம மணோ தான். :))))))))//

  சரியான உள் குத்து....ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 74. //நிரூபன் said...
  வணக்கம் சகோதரம், உங்களின் பெயரின் பின்னாலுள்ள ரகளைகளையும், ரசிக்கும் படியான பல பெயர்களையும் ரசித்தேன்.//

  வணக்கம் நன்றி மக்கா....

  ReplyDelete
 75. //விக்கி உலகம் said...
  "மனோ மாமா, மனோ சித்தப்பா"

  -இதுல எத வச்சி கூப்புடறது............
  எடுக்கவோ கோக்கவோ ஹி ஹி!//

  ஹி ஹி ஹி ஹி.....
  ஆமா அந்த போன் பார்ட்டி என்னாச்சு...?

  ReplyDelete
 76. //vanathy said...
  /வயலும் வயல் சார்ந்த இடமும் உழவர் பூமி ஆகும்.//

  பாருய்யா...இந்த அநியாயத்தை நாங்க என்ன பிரன்ச் மீடியா படிச்சோம் ..கதை சொல்ற அழகைப்பாரு//
  hahaa...
  தூரதர்ஷனில் வயலும் வாழ்வும் ரொம்ப பார்ப்பார் போல!!!//

  ஹா ஹா ஹா இங்கே அரபி சானலும் அல்ஜசீரா'வும்தான் ஓடிட்டு இருக்கு....

  ReplyDelete
 77. //Rathnavel said...
  நல்ல நகைச்சுவையான பதிவு திரு மனோ
  வாழ்த்துக்கள்.//

  நன்றி ரத்னவேல்....
  தொடர்ந்து வருகை தாருங்கள்....

  ReplyDelete
 78. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////கக்கு - மாணிக்கம் said...
  அது என்னாகிரன்?
  கம்ப்யுடர் மானிட்டரில் இருந்து ஒரு வொயறு உம்ம வாயிகுல்லார போகுது?? //////

  அண்ணன் வாயில இருந்து கரண்டு எடுக்குறாராம்.. அண்ணே அப்பிடியே தமிழ்நாட்டுப் பக்கம் கொஞ்சம் போங்கண்ணே.... ஆற்காட்டாரு பெரச்சனை தாங்கமுடியலியாம்....!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 79. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////மனோஜ் என்ற பெயர் பிரபலமானது போலீஸ் ஸ்டேசன் வரை /////

  அப்போ உங்க போட்டோவும் பேரும் இன்னும் அந்த டேசன்ல இருக்கா.....? பெரிய ஆளுதாம்ல மக்கா....!//

  இனி ஏர்போர்ட்ல போனா கொஞ்சம் சாக்கிரதையாதான் இருக்கணும் போல, பய புள்ளைங்க போட்டு குடுக்குறாங்க....

  ReplyDelete
 80. நல்ல நகைச்சுவையான பதிவு.

  ReplyDelete
 81. //சே.குமார் said...
  நல்ல நகைச்சுவையான பதிவு.//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 82. பதிவும், கருத்துகளும் அருமை மனோ, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 83. கடிசீல பொண்டாட்டி வெச்ச பேருதான் நிலைச்சுதா, நண்பா!//

  ஒரே வரில சொன்ன்னாலும் சும்மா நச்சுனு சொல்லி இருக்காரு

  ReplyDelete
 84. மனோஜ் என்ற பெயர் பிரபலமானது போலீஸ் ஸ்டேசன் வரை//

  அண்ணா கலக்கிறிங்க !!!
  ஹ்ம்ம் நோட் பண்ணுங்க அடுத்த பதிவுக்கு தலைப்பு " ஏன் மனோ அண்ணா பெயர் போலீஸ் ஸ்டேஷன் வரை பிரபலம் ஆனது ??"
  ஓகே அண்ணா சரி யா????

  ReplyDelete
 85. நம்பளையும் நம்பி வராங்கப்பா...!!!???

  அசத்தல் அண்ணா

  ReplyDelete
 86. மனசே சார் சாரி ஐ ஆம் லேட்டு...

  ReplyDelete
 87. இந்த இடுகை தமிழ்மணம் மகுடம் சூடியதற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 88. தமிழ்மணம் டாப் 20 இல் 6 ம் இடம்.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 89. >>> Your comment will be visible after approval.

  இது எப்போதிருந்து,.? ஓ சாரி.. நீங்க பிரபல பதிவர் ஆனதை மறந்துட்டேன்.. ஹி ஹி

  ReplyDelete
 90. //கல்பனா said...
  கடிசீல பொண்டாட்டி வெச்ச பேருதான் நிலைச்சுதா, நண்பா!//

  ஒரே வரில சொன்ன்னாலும் சும்மா நச்சுனு சொல்லி இருக்காரு//

  ஹா ஹா ஹா ஹா.........

  ReplyDelete
 91. //கல்பனா said...
  மனோஜ் என்ற பெயர் பிரபலமானது போலீஸ் ஸ்டேசன் வரை//

  அண்ணா கலக்கிறிங்க !!!
  ஹ்ம்ம் நோட் பண்ணுங்க அடுத்த பதிவுக்கு தலைப்பு " ஏன் மனோ அண்ணா பெயர் போலீஸ் ஸ்டேஷன் வரை பிரபலம் ஆனது ??"
  ஓகே அண்ணா சரி யா????//

  பிரம்படி வாங்குனது எல்லாம் சொல்ல வேண்டி வருமே.....[நண்பனுக்காக வாங்குனது]

  ReplyDelete
 92. //March 13, 2011 9:04 PM
  சி.பி.செந்தில்குமார் said...
  இந்த இடுகை தமிழ்மணம் மகுடம் சூடியதற்கு வாழ்த்துக்கள்

  March 13, 2011 9:25 PM
  சி.பி.செந்தில்குமார் said...
  தமிழ்மணம் டாப் 20 இல் 6 ம் இடம்.. வாழ்த்துக்கள் //

  மிக மிக நன்றி மக்கா....

  ReplyDelete
 93. periya puraanam...kelvi pattu irukkiren...
  peyar puraanam ...ippothu thaan kelvi padukiren.. mika thelivaai eluthi irukkeenga oru sila thavirthu irukkalaamey....

  ReplyDelete
 94. இப்படிலாம் அநியாயம் பண்ணுவிங்கன்னு தெரிஞ்சிருந்தா உசுப்பேதி விட்ருக்க மாட்டேனே... அப்போ எல்லாம் நான் பண்ண தப்பா...:jees

  //பாரத்... பாரதி... said...
  நாஞ்சில் நாடு நல்ல இலக்கிய தரமுள்ளவர்களை தந்திருக்கிறது.(ஒண்ணுரெண்டு பேர் மட்டும் மொக்கையாயிடுட்டாங்க... திருஷ்டிக்காக)//

  குசும்ப பார்யா...:))

  ReplyDelete
 95. //நாஞ்சில் பிரதாப் said...
  இப்படிலாம் அநியாயம் பண்ணுவிங்கன்னு தெரிஞ்சிருந்தா உசுப்பேதி விட்ருக்க மாட்டேனே... அப்போ எல்லாம் நான் பண்ண தப்பா...:jees///


  ஹா ஹா ஹா ஹா கலிகாலம் மக்கா....

  ReplyDelete
 96. ////பாரத்... பாரதி... said...
  நாஞ்சில் நாடு நல்ல இலக்கிய தரமுள்ளவர்களை தந்திருக்கிறது.(ஒண்ணுரெண்டு பேர் மட்டும் மொக்கையாயிடுட்டாங்க... திருஷ்டிக்காக)//

  குசும்ப பார்யா...:))//

  ஹா ஹா ஹா ஹா லொள்ளு.....

  ReplyDelete
 97. //jayaram said...
  periya puraanam...kelvi pattu irukkiren...
  peyar puraanam ...ippothu thaan kelvi padukiren.. mika thelivaai eluthi irukkeenga oru sila thavirthu irukkalaamey....//

  இப்போதைய பதிவுலக லேட்டஸ் டிரென்ட் "பெயர் புராணம்"

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!