என்ன, குழந்தைகள் என்னிடம் கேட்ட கேள்விகள்தான் கொடூரமா இருந்தது, உதாரணத்துக்கு ஒரு கேள்வி, அங்கிள் தண்டவாளத்துல ரயில் போகுதா...??? இல்லை நாம போறோமா...??? அடுத்து, பக்கத்துல இருக்குற தண்டவாளம் ஏன் நம்ம கூடவே நிக்காம ஓடி வருதே அது ஏன்...??? [[விட்ருங்கடா அழுதுருவேன்]]
ஈரோடு ரயில் நிலையம்....
நல்ல வசதியான குடும்பம்தான் போல......நல்ல சிரிச்சி சகஜமா பேசிட்டு வந்துட்டு இருந்தோம்....ரயில் திருப்பதி தாண்டி வந்துட்டு இருக்கும் போது, மாம்பழம் விற்கும் பெண் கத்தி கொண்டே வந்தாள்... மாம்பழம்......... மாம்பழம்........ மாம்பழம்............அம்பது ரூபாய்க்கு மூனெய்......
ஈரோடு....
அந்த பெண் எங்கள் அருகில் வரவும், இந்த பெண் கேட்டாள் மாம்பழம் என்ன விலையென, மூன்று மாம்பழம் அம்பது ரூவா என பதில் வந்தது. மாம்பழம்'னு சொன்னதும் எனக்கு நம்ம ஆபீசர் நினைவுக்கு வர, மாம்பழத்தை ஆராச்சி செய்தேன், ஆமாம்ய்யா ஆபீசர் சொன்னா மாதிரியே பழத்துல பவுடர் பூசி இருந்தது....!!!
இந்த லிங்க் படிச்சி பாருங்க ஆபீசர் என்னா சொல்லி இருக்காருன்னு.....
ஈரோடு....இந்த கடையில் பயங்கர கூட்டம் இட்லிக்காக......??? நானும் அதிசயமா வாங்கி சாப்பிட்டேன் ம்ஹும் பாத்ரூம் நாறியே போச்சி....
இந்த பெண் [[பயணி]] கேட்டாள் இந்தா மூணு பழம் முப்பது ரூபாய்க்கு தர்றியா...??? அதெல்லாம் வராது என சொல்லி போய் விட்டாள் வியாபாரி....நான் சும்மா இருக்கபூடாதா அதிக பிரசங்கி, ஆபீசர் எழுதிய ரசாயன கல் வெச்ச மாம்பழம் சாப்பிடுவதால் கேன்சர் வரும், பாருங்க பவுடர் எல்லாம் இருக்கு ஒரு மணமும் இல்லை பழத்துல அதனால சாப்பிட கூடாது என்று சொல்லி, ஆபீசர் எழுதுன பிரகாரம் அதன் குண நலன்களை எடுத்து சொன்னேன்...!!!!
அந்த கடை அவ்வ்வ்வ்வ்வ்வ்....அடுத்த முறை இந்த வழியா வந்தால் இந்த கடைக்காரனுக்கு கட்டாயம் டின் உண்டு....
அந்த அம்மினியும் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார். ஆஹா நம்ம ஆபீசர் எழுதுனது இம்புட்டு வேகமா ஒர்க் அவுட் ஆகுதேன்னு சந்தோசப்ப்படுமுன்....அந்த மாம்பழம் வியாபாரி முப்பது ரூபாய்க்கு பழத்தை கொடுக்க வேகமாக எங்களை நோக்கி ஓடி வந்தார், அதுக்கிடையில் இந்த பெண் சத்தமாக ஏய் இந்தா நாப்பது ரூபாக்கு தா என கேட்கவும், மாம்பழ வியாபாரி வாயடைத்து போனாள்....!!!
ஈரோடு வருமுன் செல்வாவுக்கு போன் பண்ணினேன். எங்கே அந்த ராஸ்கல் வந்துருவானொன்னு பயந்துட்டே எடுத்த போட்டோ.....
நான் பேய் முழி முழிக்க, அந்த பெண் நாப்பது ரூபாய் குடுத்து, மூன்று மாம்பழத்தை வாங்கி தன் முந்தானையில் அந்த பவுடரை துடைத்து விட்டு ஒவ்வொரு பழமாக குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் ஒரு பழத்தை முந்தானையில் துடைத்து விட்டு என் முன்பே திங்க ஆரம்பிச்சிடுச்சி, என்னை கொலைவெறியா பார்த்துட்டே [[அவ்வ்வ்வ்வ்வ்வ்]] பக்கத்து சீட் ஆளுங்கள்லாம் என்னை ஒரு மாதிரியா பார்க்க, நான் ஓடி போயி பாத்ரூமில் நுழைஞ்சி தாள் போட்டுகிட்டேன்.....!!! [[பச்சபுள்ளையை இப்பிடியா கொடுமை படுத்துறது ம்ஹும்...]]
வெறிச்சோடி கிடக்கும் சாத்தூர்.....
இவங்களையெல்லாம் ஒரு ஆபீசர் இல்லை ஆயிரம் ஆபீசர் வந்தாலும் திருத்த முடியாது போல........!!!!
விருதுநகர் ரயில்வே ஸ்டேசன்.....
விருதுநகர்.......என் முன்னோர்கள் வாழ்ந்த ஊராச்சே அதான் ஒரு போட்டோ....!!!
டிஸ்கி : அடுத்தது நாஞ்சில் மனோ'வின் தத்துபித்துவங்கள்......
[[சாணி, பிஞ்ச செருப்பு, அழுகுன முட்டை, அழுகுன "தக்காளி" இன்னும் இத்யாதிகள் எல்லாம் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்களால் எல்லையிலேயே தடை செய்ய பட்டுள்ளது கவனிக்கபடதக்கது]]








