முன்பு ஒரு சமயம் நான் மும்பையில் இருந்து ஊர் போன போது நடந்த சம்பவம். எங்கள் ஊரிலேயே உள்ள ஒரு பெண்ணை நண்பன் லவ்வி கொண்டிருந்தான். ஆனால் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் வீட்டில் கடுகடுமையான எதிர்ப்பு. நண்பர்கள் வழக்கம் போல சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள். ஓடிப்போகவும் முடியாத நிலை. நண்பன் பிளேடால் கைகளில் கீறி கொண்ட காயங்களை பார்த்து நொறுங்கி போனேன். யோசிக்க ஆரம்பித்தேன் ஹி ஹி ஹி ஹி நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே...
நண்பர்களை அழைத்து கொண்டு எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்கு போனேன், அந்த கிணறு நாங்கள் சிறுபிள்ளைகளில் குதித்து சாடி குளித்த கிணறு அதின் ஆதி அந்தம் நல்லாவே தெரியும் எங்களுக்கு. பிளான் ரெடியானது, அதன்படி...[[ அந்த கிணற்றில் இப்போது யாருமே குளிப்பது கிடையாது, எப்பவுமே அதில் ஆறு எழு அடி தண்ணீர் இருக்கும். ஆனால் அந்த சமயம் இடுப்பளவுதான் தண்ணீர் இருந்தது]]
ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஊரே உறங்கிட்டு இருக்கும் நேரம், நண்பனின் காதலி, ஓ என அலறிக்கொண்டே ஓட....ஊராரும் எழும்ப, காதலி ஓடிபோயி கிணற்றில் குதித்து விட்டாள்....!!! [[எங்கள் நண்பர்கள் குழு தயாராய் பார்த்து கொண்டு இருந்தோம்]] பின்னாலேயே ஓடி வந்த நண்பன், அவனும் கிணற்றில் குதிக்க ஊரே அல்லோலகல்லோல பட்டது.
அந்த பெண்ணுக்கு நீச்சல் தெரியாது. எப்பிடியோ காப்பாற்றி பெண்ணையும் நண்பனையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து பஞ்சாயத்து நடந்தது. எவ்வளவு அன்பு இருந்தால் இந்த பெண் அவனுக்காக கிணற்றில் குதித்து இருப்பாள் என்று நாங்கள் ஸ்துதி ஏற்ற [[ஹி ஹி நாடகாசிரியர் மனோ]]
இரண்டு வீட்டாரும் சாதி மறந்து சம்பந்தி ஆனார்கள். ஊரே வாழ்த்த கல்யாணம் நடந்தது.
சரி இனி நாடகம் எப்பிடி அரங்கேறியது...??? சொல்றேன். . . . .
இரண்டு நாள் முன்பே முதலில் நான் கிணற்றினுள் குதித்து ஆழம் எவ்வளவு என பார்த்தேன். தண்ணீர் இடுப்பளவுதான் இருந்தது. காதலனையும் குதிக்க சொன்னென் அவனும் குதித்து ஊர்ஜிதம் செய்தான். அப்புறமா காதலியை ரகசியமாக அழைத்து வந்து, செயல் முறை விளக்கினேன். அவள் பயந்துபோனாள் [[நீச்சல் தெரியாது]] , அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு...
அப்புறம்தான் அவளுக்கு தைரியம் [[என் மீது இரக்கபட்டோ என்னவோ]] வந்தது. நாடக அரங்கேற்றமும் வந்தது, அவள் கிணற்றில் குதிக்கும் போது நண்பர்கள் நாங்கள் எல்லோரும் சுற்றி உள்ள மரங்களின் மேலே இருந்தோம் [[ம்ஹும் குரங்கே]] ஊராருக்கு தெரியாது.
அப்புறம் என்ன டும் டும் டும் டும்தான்....
டிஸ்கி : நண்பனின் காதலியின் அண்ணனுக்கு ஒரு டவுட்டு வர, தற்செயலாக அந்த கிணற்றை சுத்தி பார்த்திருக்கிறான். அவனுக்கு லேசாக பொறி தட்ட, என் நினைவும் வர டவுட் கிளீயராகிருச்சி. ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம் [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன். அண்ணன் காரனுக்கு எங்கள் நாடகம் புரிஞ்சி போச்சு. ஆனால் என்ன ஒரு விஷயம்னா, அதுக்குள்ளே நண்பனுக்கும் காதலிக்கும் கல்யாணம் முடிஞ்சி போயிருந்தது.
டிஸ்கி : பெண்ணின் அண்ணன் இப்போதும் எனக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள் [[வேற எதுக்கு முதுகுல டின் கட்டத்தான் ஹி ஹி ஹி]] அடகொன்னியா மூணு குழைந்தங்க உன் தங்கச்சிக்கு பிறந்த பிறகும் ஏன் இந்த கொலைவெறி...??? இப்போ இடையில் ஒரு லீவுக்கு போன போது அவனை ஒரு கல்யாண வீட்டில் பார்த்தேன். அவன் என்னோடு பேசவில்லை நானும் பேசவில்லை, ஆனால் அவன் என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான். என் மனைவி அதை கண்டு என்னிடம் சொன்னாள். ஹி ஹி ஹி மேட்டரை நான் சொன்னதும் குஷி ஆகிவிட்டாள், ஏன்னா நாங்களும் காதலிச்சிதானே கல்யாணம் செஞ்சோம் [[இரு வீட்டாரின் சம்மதத்தோடு]]....




