Showing posts with label பிரபல பதிவர்கள் கடும் அதிர்ச்சி. Show all posts
Showing posts with label பிரபல பதிவர்கள் கடும் அதிர்ச்சி. Show all posts

Thursday, June 2, 2011

பிரபல பதிவர்கள் கடும் அதிர்ச்சி

புது லேப்டாப் வாங்கியாச்சுலெய் மக்கா....

நான் ஊருக்கு போறதுன்னு முடிவெடுத்ததும் ஒரு புது லேப்டாப் வாங்கனும்னு ஆசைபட்டேன். பழைய லேப்டாப் நான் போட்ட போடுல ஜீவனை [[ரஜீவன் அல்ல]] விட்ருச்சி அப்பமே. சரி பஹ்ரைன்ல எங்கேயாவது ஸ்பெஷல் ஆஃபர் வருதான்னு நோட் பண்ணியும் நண்பர்களிடம் சொல்லியும் வைத்திருந்தேன். சில பல ஆஃபர்கள் வந்தும் திருப்தி இல்லாமல் இருந்தது. 


அப்பத்தான் என் கூட வேலை செய்யும் அண்ணன் அனில் சொன்னார் நம்ம ஹோட்டலில் தங்கியிருக்கும் அமெரிக்கன் நேவிகாரன் [[மிலிட்டரி]]  நண்பனிடம் சொல்லிபாரேன் ஒருவேளை யூ எஸ் மேட் லேப்டாப் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னார். 


எனக்கு கொஞ்சம் சாங்கோஜமா இருந்தது காரணம், கிறிஸ்டோபர் பண்டோலா எப்பவும் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரண்டு ஃபிகரை அணைச்சி பிடிச்சுட்டுதான் சுத்துவான் [[எனக்கு வாய்க்கிற நண்பனுங்க ஏன் இப்பிடி நாதாரியா இருக்கானுங்க..? டேய் டேய் சிபி நான் உன்னை சொல்லலடா அவ்வவ்...]] 


ஏன்யா இப்பிடி ஒன்னுக்கு ரெண்டு ஃபிகரை வச்சிட்டு சுத்துறேன்னு கேட்டா ஹேய் எனக்கு இதுவும் பத்தாதுன்னு சொல்லி என் கண்ணை சிவக்க வைப்பான்...!!!

இப்பிடியாக ஒருநாள் தனியாக [!] சிக்கினான். கிறிஸ்டோபர் எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் வேணும்னு கேட்டேன், ராஸ்கல் கேர்ள்ஸ் போன் நம்பர் வேணுமான்னு கேட்டு கண்சிமிட்டுகிறான் [[அடிங்]] ராசா உன் அமெரிக்கன் கப்பல்ல இருந்து சீப்பா ஒரு லேப்டாப் கிடைக்குதான்னு பாரு நான் ஊர் கொண்டு போகன்னு சொன்னென்.


ப்பூப்ப் இம்புட்டுதானா நான் பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னான். அடுத்த நாள் வந்தவன், நேவி கப்பலில் விற்பனைக்கு உள்ள லேப்டாப் புக் கொண்டு வந்து காட்டினான். நானும் சீப்பா உள்ள ஒரு லேப்டாப்பை காட்டி, இது ஓகே என்றேன். சரி நாளை பணம் தா வாங்கி வருகிறேன்னு, சொல்லிட்டு குட்டிகளையும் கூட்டி கொண்டு போய் விட்டான்.

அடுத்தநாள் வந்தான் பணத்தை கொடுத்தேன் பயத்தோடு, காரணம் இவனுகளை நம்பமுடியாது!!!! போய் விட்டு ஒருமணி நேரத்தில் வந்தவன் கையில் லேப்டாப் இல்லை, கொலை நடுங்கி போச்சு எனக்கு [[பணம் ஹி ஹி]] 

அவன் சொன்னான் ஹேய் மனோ, என் நண்பன் சொன்னான் இன்னும் மூன்று நாளில் இன்னொரு கப்பல் யூ எஸ்'ல இருந்து வருது, அதில் இன்னும் சூப்பரான லேப்டாப் இருக்குமே'ன்னு சொன்னான் ஆகவே நான் இப்போது வாங்கவில்லை பொறுத்ததே பொறுத்தாய் இன்னும் மூன்று நாள் பொறுத்துக்கொள் என்று பணத்தை கையில் தந்தான் [[ச்சே இவனை போயி சந்தேகிச்சமே]] 


அடுத்த மூன்றாவது நாள் வந்தான் வந்து, அங்குள்ள [[புதிய கப்பல்]] லேப்டாப் புக்கை தந்தான் எல்லாம் சோனி கம்பெனி, அமெரிக்கன் மேட் லேப்டாப். செலக்ட் பண்ண சொன்னான். பல விலைகளில் பலவித லேப்டாப்கள் இருந்தன, நான் 596 அமெரிக்கன் டாலர் விலை உள்ள லேப்டாப்பை காண்பித்து 225 பஹ்ரைன் தினார் கொடுத்தனுப்பினேன்.

போனவன் அரைமணி நேரத்துக்குள் கொண்டு வந்துட்டான் லேப்டாப்பை. சந்தோசமாக நன்றி சொல்லிவிட்டு, தக்காளிக்கு போனைபோட்டு மேட்டரை சொன்னென். அவரும் சிஸ்டத்தை பற்றி நான் சொல்ல, தெரிந்து கொண்டு ஆச்சர்யபட்டார். அதாவது இதே லேப்டாப் வியட்நாமில் 1100 அமெரிக்கன் டாலராம்...நான் வாங்கியதோ 596 அமெரிக்கன் டாலர்....!!!


விக்கி ஒருவேளை நம்மளை தூக்கி பெசுராரோன்னு ஒரு டவுட்டு [[இல்லைன்னாலும்]] சரி சிஸ்டத்தை செட் பண்ணனுமே அதுக்கு, குளச்சலை சேர்ந்த தம்பிமார் [[நண்பர்கள்]] களிடம் குடுக்க நண்பன் சதீஷை கூப்பிட்டேன். அவரும் சந்தோசமாக வந்து கொண்டு போனார்.


அடுத்தநாள் சதீஷிடமிருந்து போன், மக்கா தம்பிமார் லேப்டாப் விலையை கேட்டுவிட்டு அசந்து போனார்கள்...!!! இந்த லேப்டாப் வெளியில் வாங்கினால் குறைஞ்சது 400 தினார் குடுக்கவேண்டுமாம் என அலறினார். அப்புறம் நான் அறிமுகபடுத்திய பதிவர் ரவிக்குமாரும் [[பஹ்ரைன்]] அதை உறுதி செய்தார்....!!! அப்புறம்தான் நினச்சேன் "விக்கி தக்காளி" கிண்டல் பண்ணலைன்னு.


எது எப்பிடியோ எனக்கு ஒரு லேப்டாப் சீப்பா கிடச்ச சந்தோஷம்...!!! கீழே என்னென்ன சிஸ்டம் அதுல இருக்குன்னு போட்டுருக்கேன், நீங்களும் உங்க ஊர்ல இதின் விலை என்னன்னு பின்னூட்டம் இடுங்கள் எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்.

SONY NOTEBOOK PC W/ 17.3" DISPLAY
intel core i3-350M processor, 4GB system memory, 320GB Hard drive, Dual layer DVD Drive, ATI Mobilitty Radeon HD5470 with 512MB Dedicated Graphics, MOTION EYE Camera and Microphone, 802.1 1 b/g+N Wireless LAN, HDMI Out, Microsoft Office 2010 Starter, Windows 7 Premium 64-Bit # EC22FX/BL

நன்றி அந்த அமெரிக்கன் நண்பன் கிறிஸ்டோபர்க்கு....!!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!