மலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அனுபவமும் கூட, மலையாளி தோழிகள் வாயால் சொல்லியும் கேட்டிருக்கிறேன். அதுக்கு காரணம் கேட்டால் அவர்கள் சொல்வது, தமிழர்கள் நீங்கள் மனைவிகளை பொன்னை [[தங்கம்]] போல நேசிக்கிறீர்கள், வேலைக்கு போகவிடாமல் அன்பாய் நடத்துகிறீர்கள் ஆனால் கேரளாவில் வேலை இல்லாத பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள், அப்பிடியே நாங்கள் வேலைக்கு போயி படும் அவஸ்த்தை எங்களுக்குத்தான் தெரியும் அதில் உங்கள் ஊர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். கூட பிறந்த சகோதரிகளையும் அப்படியே நேசிக்கிறார்கள். அந்த குணம் பண்பு பாசம் நேசம் கேரளாவில் குறைவு மனோ என்பார்கள்.....எனக்கு இருக்கும் மலையாளி தோழிகளை பார்த்து கேரள நண்பர்கள் காதில் எப்போதும் புகை வரும்....[[தண்ணி வந்தாலாவது நல்லாயிருக்கும்]]
உதாரணம் : எனது ஹோட்டலில் தங்கி இருக்கும் டாக்டர் ஃபேமிலி ரூமில் வேலை பார்க்கும் ஹவுஸ் மெயிட் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கேன். இவங்க அக்கவுண்டண்டா கேரளாவில் வேலை பார்த்துட்டு இருந்தவங்க குடும்ப கஷ்டத்தால் பஹ்ரைன் வந்துருக்காங்க, ரெண்டு நாள் முன்பு வேலை முடிந்தபின் வீடு போக காருக்காக வெளியே காத்திருக்கும் போது கார் வர லேட் ஆகவே பயந்து ஹோட்டல் உள்ளே வந்து விட்டாள். என்னாச்சுன்னு கேட்டேன் கார் வர லேட்டாயிடிச்சி மனோ வெளியே நிக்க பயமா இருக்கு என்றாள் சரி உக்காருங்க என சொல்லி அமர வைத்தேன்.
அப்பிடியே கார் வர லேட்டாக ஆரம்பிக்கவும் என்னோடு சகஜமாக பேசி சிரித்து கொண்டிருந்தோம், அப்போது கேட்டாள் நீங்க சாப்பாடு ஹோட்டல்ல சாப்புடுறீங்களா அல்லது சமைத்தா என்று...நான் சொன்னேன் எனக்கு சுடுதண்ணிக்கு பிறகு சோறு மட்டும் சமைக்க தெரியும் என்பதால் குழம்பு கூட்டு ஹோட்டலில் வாங்கி ஃபிர்ஜில் வைத்து சூடு பண்ணி சாப்பிடுவேன் என்றேன். ஓ அப்பிடியா என்று கேட்டுகொண்டவள் கார் வந்ததும் கிளம்பி போய் விட்டாள்.
இன்று மதியம் அவள் போகும் கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்தது [[ஹே ஹே கேமரால பார்த்துட்டு இருக்கேன்]] அவள் காரில் ஏறாமால் என் ஆபீஸ் நோக்கி ஓடிவருவது தெரிஞ்சது, என்னாச்சுன்னு நான் சேரில் இருந்து எழும்பவும் வந்து விட்டாள், மூச்சு வாங்க வந்து என்னிடம் ஒரு பாக்சை தந்துவிட்டு திரும்பவும் ஓடி காரில் ஏறி பறந்து விட்டாள். நான் என்னடா இதுன்னு ஓப்பன் பண்ணி பார்த்தேன் சாரை சாரையாக கண்ணீரே வந்து விட்டது எனக்கு......... அதில் ரெண்டு பீஸ் ஃபிரை சிக்கன், பருப்பு கூட்டு, சிக்கன் கறியும் இருந்தது....இதற்கிடையில் அவள் போன் செய்தாள் சேட்டன் இனி ஹோட்டலில் சாபிடாதே நானே உனக்கு தினமும் சமைத்து கொண்டு தருகிறேன்னு சொன்னாள் நான் வேண்டாம் என கூறுமுன் போனை துண்டித்து விட்டாள்.
என்ன மக்கா நான் மேலே சொன்னது உண்மைதானே....இன்னும் பல தோழிங்க இருக்காங்க நர்சாக, அட்மினிஷேசன் மானேஜராக, வெயிட்ரசாக, சேல்ஸ் கேர்ளாக....நம்ம பண்பு அவங்களுக்கு பிடிச்சிருக்கு அப்பிடின்னுதான் நான் நினைக்கிறேன்...
டிஸ்கி : நான் மேலே சொன்னதை எந்த மலையாளி ஆம்பிளைங்கிட்டேநீங்க சொல்லி அடி வாங்குனா கம்பெனி பொறுப்பு கிடையாது...




