Showing posts with label மீனவ நண்பன். Show all posts
Showing posts with label மீனவ நண்பன். Show all posts

Saturday, January 29, 2011

மீனவ நண்பன்

எனக்காக
கடல் ஆழம் தாண்டி
மீன் பிடித்து வந்த
நண்பன்
அதை காய வைத்து
சுட்டு....
உலக்கையால்
இடித்து காரம் கலந்து
அதில் அவர்கள்
அன்பையும் கலந்து
செய்த நண்பனின்
மனைவி [என் தங்கை]
கடல் கடந்து
வாழும் எனக்காய்
நீ கடல் ஓடி
பாசத்தோடும்
நேசத்தோடும்
அனுப்பிய அந்த
மீன் கருவாட்டின்
ருசியை நான்
அறியுமுன்
நீ
சுடப்பட்டு போனாயே நண்பா....
என் தங்கை
கைம்பெண்ணாகவும்
பிள்ளைகள்
தகப்பனில்லாமலும்
தவிக்கும் போது
எனக்கு நீ அனுப்பிய
மீன் பொடியை
நான் எப்படி
உண்பேன் மக்கா
அது
உன் உயிரல்லவா......
[[பிரதமருக்கு அனுப்பும்  சேவ் ஃபிஷர்மென்  அதில் எனது கையெழுத்தின் நம்பர் 1558  ]]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!