ஏர்போர்ட்டாய்யா அது?
டாஸ்மாக் கடைய விட கேவலமா இருக்கு,
நான் மும்பை செட்டில் என்பதால் எனது பதிமூணு வருஷ பஹ்ரைன் வாழ்க்கையில், நான் லீவுக்கு போயி இறங்குவது மும்பையில்'தான்.
ஆனால் இந்த முறை திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இறங்கும் படியான சூழ்நிலை, எனக்கும் சந்தோசம்.
அந்த சந்தோஷத்தை நாசமாக்கியது அந்த ஏர்போர்ட்!!!
பிளேன்'ல இருந்து ஏணி மூலமா இறங்கி ஒரு பஸ்சுல ஏறி இமிகிரேஷன் வந்தா, ஹேய் இமிகிரேஷன்ல இருப்பவன் போலீசா இல்லை கபாலியான்னே தெரியலை! யூனிபாம் இல்லாம சொட்டையா ரெண்டு மொக்கை கவுண்டர்ல உக்காந்துட்டு மெதுவா வேலை செய்கிறார்கள், க்யுவை பாத்தீங்கன்னா கேரளாவுல ஒயின் ஷாப்'ல கியூ'ல நிக்குற மாதுரியே இருக்கு!
இமிக்கிரேஷன் முடிஞ்சதும் அங்கிட்டு பாத்தா ஒரு போலீஸ்காரர் குடிச்சிட்டு காக்கி டிரெஸ்ஸோட மல்லாந்து கிடக்கார்! [காலை மணி நான்கு]
சரி பஹ்ரைன் தினாரை மாற்றலாம்னு பேங்கை தேடினால், ஒரு போலீஸ் சேட்டன் முக்குல ஒரு இடத்தை காட்டினார், போக பயமாக இருந்தது காரணம் மடியில் கனம்,
மும்பை எர்போர்ட்னா எந்த பயமும் கிடையாது ஏன்னா வெளிநாடு போகுமுன் நான் வேலை பார்த்த இடம்,
அல்லாமலும் எனக்கு தெரிந்த நண்பர்கள் நிறைய பேர் அங்கே வேலை செய்கிற
படியால் நான் வீடு சேருமுன் நான் ஊர் வந்த செய்தி நண்பர்களுக்கு போயிடும், பயமில்லை.
ஆனால் இங்கே போலீஸ் சேட்டன் ஒரு முக்குக்கு போங்குறார் பயந்துதான் போனேன் [வேறவழி?]
அங்கே ஒரு சின்ன ரூமில் சின்ன சின்ன சாக்கு மூட்டைகளும் பேப்பர் கட்டுக்களுமாக கிடந்தது,
ஒரு ஆள் சேரில் இருந்தவாறே மேஜையில் தலை வைத்து உறங்கிட்டு இருந்தார். ''எஜ்ஜிகூச்சிமீ'' ன்னு எழுப்பி சேஞ்சி பண்ணிட்டு டூட்டி ஃபிரீ ஷாப் பாத்தா கேவலம் சேம் நம்ம ஒயின்ஷாப் மாதிரிதான் இருந்தது!
வெளியே வந்தால் எனது குடும்பம் ஆதரவாய் என்னை அனைத்து கொண்டார்கள்.
அடுத்து திருவனந்தபுரம் டூ நாகர்கோவில் ரோடு [சத்தியமா நான் இனி இந்த வழியா வரமாட்டேன்]
அந்த வழியா போற வர்ற வாகன ஓட்டிகளை சம்மதிக்கணும் [சர்க்கஸ்]
அத்தனை அபாயமான வளைவுகள்,
ஒரு மண்ணுக்கும் உருப்படாத ரோடு,
ஏற்றம் இரக்கம் அய்யோ அய்யோ, இப்பிடி பயந்து கொண்டே பயணிக்கும் போது அம்மா சொன்னாள்.
இப்பிடித்தான் நம்ம சொந்தக்காரன் [தூரத்து] பஹ்ரைன்'ல இருந்து இதே வழியா வரும் போது விபத்தாகி கோமா'வில் இருக்கிறான் என்றாள்..
எனக்கு திகில் இன்னும் கூடியது டிரைவரோடு மெதுவாக போங்கன்னு சொன்னா அவர்
நம்ம மெதுவா போனாலும் மோதுறவன் வேகமா வந்துதான் மோதுவான்னு கூலா சொல்லி என்னை கலவர படுத்தினார்,
திருவனந்தபுரம் டூ நாகர்கோவில் வரை வேறெங்கும் இல்லாத அளவு [ஹைவேயில்] எலும்பு முறிவு ஆஸ்பத்திரிகள் உள்ளனவாம்.....!!!!
அத்தனை விபத்துக்கள்!!!
எய்யா தக்கலை வந்த பிறகுதான் உயிர் திரும்பியது...
ஏன் இந்த விபத்துக்கள்?
ரோடு சிறியதாக இருப்பதும் ஒரு காரணம்...
ஹா, ஏர்போர்ட் அப்பிடி,
ரோடு இப்பிடி,
நாம எப்பிடி....