Monday, December 19, 2011

மெத்த படித்த முட்டாள்கள் வாழும் தெய்வத்தின் நாடு...!!!

நேற்று இரவு வேலை முடிந்ததும் என் மலையாளி நண்பன் அசோகனை பார்க்கப் போனேன், அவனுக்கு நேற்று லீவு என்பதால் கூப்பிட்டான், நெருங்கிய நண்பன் என்பதால் பார்க்கபோனேன், மூன்று மலையாளி நண்பர்கள், நான் மட்டும் தமிழ்...என்னமோ தெரியலை இங்கே எனக்கு தமிழ் நண்பர்களை விட மலையாளி நண்பர்களே அதிகம், ஜாலியாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தோம், "ஜீவிதம் நாய் நக்கி" என்ற சொல் இவர்களிடையே வழக்கு, அதாவது "வாழ்கையை நாய் நக்கி விட்டது" என்று அர்த்தம்.


இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதும் சிரிப்பதும் உண்டு, அப்படியே பேச்சு முல்லைப்பெரியாருக்கு மாறியது, இரண்டு பேர் ஆதரவாகவும் ஒருத்தன் மட்டும் கடும் எதிர்வாதங்களை பேசிக்கொண்டு இருந்தான்.


நான் அவனுக்கு பொறுமையாக எல்லா காரியங்களையும், தமிழக, கேரளா அரசியல் நாதாரிகள் மக்களுக்கு அளித்த துரோகங்களையும், பூகம்பம் வந்தால் புதிய அணை மட்டும் உடையாதா, அப்படியே உடைந்தாலும், கீழே இருக்கும் இடுக்கி அணைக்குதான் இந்த தண்ணீர் மலைகள் வழியாக வருமே ஒழிய ஊருக்குள் வராது...


அப்படியே ஓடி வரும் வெள்ளம் படிப்படியாக வேகம் குறைந்தே இடுக்கி அணைக்குள் வந்து சேரும், ஒரு பாதிப்பும் கிடையாது, வீணாக அரசியல்வியாதிகள், சினிமாகாரர்கள் பேச்சை நம்பாதீர்கள்...


நீங்கள் தலையில் வைத்து கொண்டாடும் உங்கள் எழுத்தாளர்கள் [[பால் சக்கரியா உட்பட]] சிலர் அணைபற்றிய உண்மையை சொல்லி வருகிறார்களே, அவர்களையும் உங்களைப் போல தீவிரவாதிகள் அச்சுறுத்துவது ஏன்...?


உங்கள் சினிமாக்காரர்களுக்கு சென்னையில் வீடு இருந்தால்தான் பெருமை என்பது உங்களுக்கே தெரியுமல்லவா, சென்னையில் வீடு இல்லாத எந்த பிரபலமான சினிமா பிரமுகரும் கிடையாது...


அப்படி இருக்க, தமிழ் மக்களை நீங்கள் அகதிகள் போல அச்சுறுத்தி இங்கே அனுப்புவது என்ன நியாயம்...?? இங்கே [[பஹ்ரைன்]] நீயும் நானும் அடித்துக்கொண்டால், அரபிக்காரன் உன்னை மலையாளி என்றும், என்னை தமிழன் என்றுமா சொல்லுவான், நம்மை இந்தியன் என்றே சொல்லுவான்...

மலையாளிகளையும் நாங்கள் அகதிகளாக, ஒரு பேச்சுக்கு அனுப்பினால் என்னவாகும் கொஞ்சம் சிந்திக்கலாமே, கேரள பத்திரிக்கை மலையாளிகள் தாக்கப்படுகிறார்கள் என்றும், தமிழக பத்திரிக்கை தமிழர்கள் தாக்கபடுகிரார்கள் என்றும் தன் வியாபாரத்தை கூட்டிக்கொள்கிறது என்பதும் உண்மை...


ஏற்கனவே உங்களை அரசியல்காரனுவ பயங்காட்டுனான் போதாததுக்கு ஒருத்தன் டேம் 999 படம் எடுத்து பேதியை கூட்டி இருக்கிறான், அவன் டைமிங்கா படம் எடுத்துட்டு போட்டு பீதியை கிளப்பிட்டு ஷார்ஜா ஓடிட்டான்...


அரசியல்வாதிகள், சினிமாகாரர்களை தவிர்த்து, மக்கள் நாம் சிந்திப்போம், நீங்கள் படித்தவர்கள்தானே, சொந்தமா யோசிங்கள் என்றேன், ஒட்டன்சத்திரம் வழி வரும் காய்கறிகள் நிறுத்தத்தால், கேரளாவின் தக்காளி விலையை பார்த்தாயா..?


இனியும் இருக்கும் வழி தடங்களை அடைத்தால் கேரளா என்னாகும்...? மெத்த படித்த மலையாளிகளே தன் குழந்தைகளை தமிழ்நாட்டுக்குத்தான் அனுப்புகிறார்கள், ஏன் நம் ஏனைய மலையாளி நண்பர்களும் தமிழ்நாட்டில் படித்தவர்கள்தானே...?


இப்படி நிறைய லக்சர் எடுத்து கோபமாகவும், அன்பாகவும் வைகோ அண்ணன் மாதிரி பேசவேண்டியதா போச்சு, அந்த ஒரு மலையாளி மட்டும் கேட்குற மூடில் இல்லை...


கடைசியாக கிளம்பும் போது அந்த நண்பனிடம் சொன்னேன் விளையாட்டாக [[உள்குத்து]] "மோனே வெள்ளம் கிட்டியில்லை எங்கில் நிங்கட "ஜீவிதம் நாய் நக்கும்" மறக்கல்லே..... தின்னான் ஒன்னும் கிட்டுவில்லா' என்று சொல்லி சிரிச்சேன், மற்ற நண்பர்களும் விளையாட்டாய் சிரித்து விட்டு கிளம்பி சென்றோம்...!!!


[[மகனே தண்ணீர் மட்டும் தர வில்லை என்றால் உங்கள் வாழ்க்கையையும் நாய் நக்கிவிடும் மறக்காதே திங்க ஒன்றும் கிடைக்காது]]

இன்னும் நிறைய நடிகைகளின் படங்கள் போடணும்னு நினைச்சேன், ம்ம்ம் வேண்டாம்னு விட்டுட்டேன்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய ராணுவ பொறியாளர்களை கொண்டு அணையை ஆய்வு செய்யவேண்டும், இது இப்போ புதுசா கெளப்பி இருக்கிறார்கள் கேரளா அரசியல்பீ[வா]திகள்...

சேட்டன் வாயில ஈ போகுதுங்கோ....

அட நாதாரி பன்னாடைகளா அன்றைக்கு தண்ணீர் தராமல் மல்லு கட்டிய உங்க முதல்வர்'தானேடா இன்றைக்கு ராணுவ அமைச்சரா [[ஏ கே அண்டனி]] இருக்கான், ஆய்வு நேர்மையா நடக்குமா கொய்யால.....!!! [[ம்ம்ம் கிளார்க்'கா வேலை செய்யவேண்டியவன் எல்லாம் ராணுவமந்திரி நாசமாபோச்சு போங்க]]

முஸ்கி : இன்டலி ஓட்டுல என் பெயர் [[ianaman]] அப்பிடின்னு இருக்கு, ஏன் சொல்றேன்னா நானும் இன்டலி ஓட்டு உங்களுக்கு போட்டுட்டு இருக்கேன்னு தெரியப்படுத்ததான் ஹி ஹி..

டிஸ்கி : சிபி கண்ணாடி மேல சத்தியமா படமெல்லாம் உள்குத்து இல்லைன்னு நான் சொன்னாலும் நம்பவா போறீங்க...!!!!
67 comments:

 1. பெட்ரோல் குண்டு

  ReplyDelete
 2. பிச்சுவா கத்தி

  ReplyDelete
 3. வந்த வுடனே இப்படி பயமுறுத்துனா எப்படி?

  ReplyDelete
 4. இப்போ உனக்கு பிரச்ச்னை ஃபிகரா ஃப்ரெண்டா ஹிஹி!

  ReplyDelete
 5. நல்லா நடத்துவாங்களே ரானுவப்பொறியாளர்கள் ஆய்வு!

  ReplyDelete
 6. ராஜி : ஆஹா நான் அருவா எடுக்கும் முன்பே என் தங்கச்சி எல்லா வெப்பன்ஸ்சும் கொண்டு வந்தாச்சு வாங்கலேய் பாத்துருவோம் மலையாளிகளை....!!!

  ReplyDelete
 7. கோகுல் said...
  வந்த வுடனே இப்படி பயமுறுத்துனா எப்படி?//

  நானும் தங்கச்சியும் எப்பவும் இப்பிடித்தான், இப்பிடித்தான் எப்பவுமே....

  ReplyDelete
 8. விக்கியுலகம் said...
  இப்போ உனக்கு பிரச்ச்னை ஃபிகரா ஃப்ரெண்டா ஹிஹி!//

  டேய் மூதேவி, பேத்து புடுவேன் பேத்து ராஸ்கல்....

  ReplyDelete
 9. கோகுல் said...
  நல்லா நடத்துவாங்களே ரானுவப்பொறியாளர்கள் ஆய்வு!//

  நம்ம அமைச்சர்களும் எம் பி'க்களும் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்குறது ஆச்சர்யமா இருக்கு...!~!!!

  ReplyDelete
 10. MANO-- எதுக்கு எத முடிச்சி போடுரீர் ....நான் என்ன சொன்னேன் ..

  ReplyDelete
 11. அவ்வ்..

  இவ்வளவு படம் எதுக்கண்ணே

  ReplyDelete
 12. NAAI-NAKKS said...
  MANO-- எதுக்கு எத முடிச்சி போடுரீர் ....நான் என்ன சொன்னேன் ..//

  அண்ணே என்னண்ணே சொன்னீங்க நீங்க புரியல..?

  ReplyDelete
 13. மதுரன் said...
  அவ்வ்..

  இவ்வளவு படம் எதுக்கண்ணே//

  ஆஹா பயற்சி போதாதோ எனக்கு....

  யோவ் படத்தில் இருப்பது எல்லாம் மலையாளி சேச்சிகள்...!!! தண்ணிதான் தரமாட்டேங்குறான் ஆனால் நடிகைகளை வண்டி வண்டியா அனுப்பிட்டு இருக்கான்னு சொல்லவந்தேன் அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 14. அணையை பத்தி எழுதுகிறீர். அணையின் போட்டோவோ இல்லை ஒரு ஆணின் போட்டோ கூட இல்லை. எல்லாம் பெரிய மேட்டரா இருக்கே. இது ஒவ்வொன்ன்றும் பெரிய அணை என்று தானே சொல்ல வருகிறீர். இவ்வளவு அணை இருக்கும்போது இனி புது அணை எதுக்குன்னு தானே கேட்குறீர்???? சரிதனேய்யா???

  ReplyDelete
 15. அக்கா, என்ன ஆச்சுக்கா..

  ReplyDelete
 16. ஆமாமா . படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை...

  ReplyDelete
 17. ராஜி அக்காவுக்கு இம்புட்டு கோவம் வருதுங்க...

  சீக்கிறம் ஓடிப்போ மக்கா...

  ReplyDelete
 18. சூப்பர் பாஸ்!

  //இன்டலி ஓட்டுல என் பெயர் [[ianaman]] அப்பிடின்னு இருக்கு//

  நல்லாத் தெரியும் பாஸ்! நாங்களும்! :-)

  அப்பால, மீனா ஆன்டியும் மலையாளியா?

  ReplyDelete
 19. அழகாய் இருக்கிறார்கள் - அறிவில்லாமல்.

  ReplyDelete
 20. கே. ஆர்.விஜயன் said...
  அணையை பத்தி எழுதுகிறீர். அணையின் போட்டோவோ இல்லை ஒரு ஆணின் போட்டோ கூட இல்லை. எல்லாம் பெரிய மேட்டரா இருக்கே. இது ஒவ்வொன்ன்றும் பெரிய அணை என்று தானே சொல்ல வருகிறீர். இவ்வளவு அணை இருக்கும்போது இனி புது அணை எதுக்குன்னு தானே கேட்குறீர்???? சரிதனேய்யா???//

  ஹா ஹா ஹா ஹா நடிகைகளை அள்ளித்தந்த நாடுய்யா ஹி ஹி...

  ReplyDelete
 21. வேடந்தாங்கல் - கருன் *! said...
  அக்கா, என்ன ஆச்சுக்கா..//

  வீர பொண்ணுய்யா என் தங்கச்சி...!!!

  ReplyDelete
 22. வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஆமாமா . படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை...//

  அடப்பாவி வாத்தி, இம்புட்டு நடிகைகளை தந்த நாடுன்னு சொல்லவந்தேன் அவ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 23. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ராஜி அக்காவுக்கு இம்புட்டு கோவம் வருதுங்க...

  சீக்கிறம் ஓடிப்போ மக்கா...//

  நீ எதுக்குய்யா ஓடுற, தகராறு பண்ணும் மலையாளிகளுக்கு எதிராதான் பொங்குறாங்க தங்கச்சி...!!!

  ReplyDelete
 24. ஜீ... said...
  சூப்பர் பாஸ்!

  //இன்டலி ஓட்டுல என் பெயர் [[ianaman]] அப்பிடின்னு இருக்கு//

  நல்லாத் தெரியும் பாஸ்! நாங்களும்! :-)

  அப்பால, மீனா ஆன்டியும் மலையாளியா?//

  கேரளா கண்ணூர் பகுதியை சேர்ந்தவராம்...!!!

  ReplyDelete
 25. வெளங்காதவன் said...
  :-)//

  ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 26. தமிழ் உதயம் said...
  அழகாய் இருக்கிறார்கள் - அறிவில்லாமல்.//

  சும்மா நச்சின்னு சொல்லிட்டீங்க மக்கா....!!!

  ReplyDelete
 27. மெத்தப் படித்தவகள் என்றால் தான்புரிந்து கொண்டிருப்பார்களே
  படித்தவர்கள் அதிகம் பேர் அவ்வளவே
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. இதை இதை தான் எதிர்பார்த்தேன்- சவுக்கடி

  ReplyDelete
 29. சொன்னால் எல்லாம் திருந்த மாட்டனுங்க - கொடுத்தே தீரனும்

  ReplyDelete
 30. Ramani said...
  மெத்தப் படித்தவகள் என்றால் தான்புரிந்து கொண்டிருப்பார்களே
  படித்தவர்கள் அதிகம் பேர் அவ்வளவே
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  வாழ்த்துக்கள்//

  சரியாக சொன்னீர்கள் குரு...!!

  ReplyDelete
 31. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  அருமையா சொன்னீங்க.//

  மிக்க நன்றி மக்கா...

  ReplyDelete
 32. மனசாட்சி said...
  இதை இதை தான் எதிர்பார்த்தேன்- சவுக்கடி//

  இருப்பாய் தமிழா நெருப்பாய்...

  ReplyDelete
 33. மனசாட்சி said...
  சொன்னால் எல்லாம் திருந்த மாட்டனுங்க - கொடுத்தே தீரனும்//

  போராடுவது பெரிசில்லை, நம் உரிமையை பெற்று, அதை பாதுகாத்து கொள்ளவும் வேண்டும்...!

  ReplyDelete
 34. விடாமல் அடிச்சி சொன்னாலும் ஏறாதோ அந்த சேட்டன் நண்பர்களுக்கு ...
  சேட்டனின் சேட்டைகள் இன்னும் தொடர்ந்தால் பாதிப்பு அவர்களுக்கு தான் என்பதை எப்படி அண்ணே புரிய வைப்பது ...

  ReplyDelete
 35. நடிகைகளை இங்கே இறக்குமதி பண்றாங்க அப்படிங்கிறது தெளிவா புரிஞ்சுது.
  என்ன செய்ய?

  அங்கே அரசியல் ஓடனும் - பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

  ReplyDelete
 36. இப்பிடித்தான் இருக்கவேணும் உணர்வுள்ள ஒரு மனுசன்.அசத்திட்டீங்க மனோ !

  ReplyDelete
 37. மலையாளிகளே இப்படிதான்....எப்படியோ உங்களுக்கு பூசைகுடுக்கமா விட்டாங்களே அதான் கவலையா இருக்கு...

  ReplyDelete
 38. அரசன் said...
  விடாமல் அடிச்சி சொன்னாலும் ஏறாதோ அந்த சேட்டன் நண்பர்களுக்கு ...
  சேட்டனின் சேட்டைகள் இன்னும் தொடர்ந்தால் பாதிப்பு அவர்களுக்கு தான் என்பதை எப்படி அண்ணே புரிய வைப்பது ...//

  அவனுகளுக்கு அதுவும் நல்லா புரியுது, இருந்தும் சேட்டை பண்ணுகிறார்கள்...!!!

  ReplyDelete
 39. அப்பு said...
  நடிகைகளை இங்கே இறக்குமதி பண்றாங்க அப்படிங்கிறது தெளிவா புரிஞ்சுது.
  என்ன செய்ய?

  அங்கே அரசியல் ஓடனும் - பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.//

  அரிசி மூட்டையை நிறுத்தணும்...!!!

  ReplyDelete
 40. ஹேமா said...
  இப்பிடித்தான் இருக்கவேணும் உணர்வுள்ள ஒரு மனுசன்.அசத்திட்டீங்க மனோ !//

  மிக்க நன்றி...

  ReplyDelete
 41. S.Menaga said...
  மலையாளிகளே இப்படிதான்....எப்படியோ உங்களுக்கு பூசைகுடுக்கமா விட்டாங்களே அதான் கவலையா இருக்கு...//

  அம்மாடியோ அவனுக பூசை தரலைன்னாலும் நீங்களே போட்டு தள்ளிருவீன்களோ அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 42. எல்லோரும் கேரள நடிகைகளா?
  நண்பருக்கு உங்கள் விளக்கம் அருமை!

  ReplyDelete
 43. நன்றி மனோ, எங்க செல்லத்தை நாளைக்கு ஒரு நாளைக்கு உங்களுக்கு தர்றேன். அதுல ரத்தக்கண்ணீர் தான் பார்க்கணும். அதற்கடுத்த நாளில் இருந்து வரிசையில 25 பேர் இருக்காங்க. நாளைக்கு முடிஞ்ச வரைக்கும் யூஸ் பண்ணிக்கிடுங்க. அதற்கப்புறம் உங்க முறை வர்றதுக்கு பத்து நாளைக்கு மேல ஆகும்.

  ReplyDelete
 44. சென்னை பித்தன் said...
  எல்லோரும் கேரள நடிகைகளா?
  நண்பருக்கு உங்கள் விளக்கம் அருமை!//

  ஆமாம் தலை எல்லாமே கேரளா'தான், மீனா மட்டும் கொஞ்சம் டவுட்டாக இருந்தது, தேடிப்பார்க்கும் போது, மலையாள பத்திரிக்கைக்கு மீனா அளித்த பேட்டியில் தான் கேரளாவில் உள்ள கன்னூரை சேர்ந்தவள் என பேட்டி கொடுத்துள்ளார்...!~!!!

  ReplyDelete
 45. ஆரூர் முனா செந்திலு said...
  நன்றி மனோ, எங்க செல்லத்தை நாளைக்கு ஒரு நாளைக்கு உங்களுக்கு தர்றேன். அதுல ரத்தக்கண்ணீர் தான் பார்க்கணும். அதற்கடுத்த நாளில் இருந்து வரிசையில 25 பேர் இருக்காங்க. நாளைக்கு முடிஞ்ச வரைக்கும் யூஸ் பண்ணிக்கிடுங்க. அதற்கப்புறம் உங்க முறை வர்றதுக்கு பத்து நாளைக்கு மேல ஆகும்.//

  இப்பவே பிரிவியூ பதிவு காட்டு காட்டு'ன்னு என்னை போட்டு கொன்னுட்டு இருக்கார் சாட்ல ஹி ஹி...

  ReplyDelete
 46. வணக்கம் அண்ணே,
  நகைச்சுவை கலந்து உங்கள் நண்பர்களுக்கு தண்ணீர்ப் பிரச்சினைக்கான காரணத்தினைப் புரிய வைத்திருக்கிறீங்க.

  நடிகைகள் படங்களும், மலையாள நடிகைகள் பற்றிய தகவலும்.
  அவ்./..அவ்...

  ReplyDelete
 47. கிளார்க் வேலைக்கு கூட தகுதி இல்லாதவன் தான் இந்த ஏ. கே. ஆண்டனி. இவனை இந்திய நாட்டின் ராணுவ அமைச்சராக ஆக்கியது அந்தோனியா சோனியா. இந்த ஆண்டனியின் திறமை, மேன்மை மும்பை தீவிர வாதிகள் தாக்குதலின் போது வெட்ட வெளிச்சமாகி மீடியாக்களில் சிரிப்பாய் சிரித்ததை கண்கொண்டு வெகுண்டு இந்த நாதாரி நாயை திட்டி தீர்த்தவன் நான். பத்திரிக்கை, மீடியாகளின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் கூட பதில் சொல்ல முடியாமல் "பட்லர் இங்லீசில் " எஸ், நோ என்று சொல்லிவிட்டு ஓடிப்போனவன். அதே வேளைகளில் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகளும் , அமைச்சர்களும் வெளிநாட்டு மீடியாக்களுக்கு அளித்த பேட்டிகளில் இருந்த நையாண்டியும் கேலியும் என்னை நிரம்ப பாதித்து உண்மை. இவனைப்போன்ற புறம்போக்குகள் தான் இந்திய நாட்டின் ராணுவ மந்திரி. காங்கிரஸ் நாசாமை போகவேணும். நம்ம நாடு நல்லாயிடும்.

  ReplyDelete
 48. நீ நீர் கொடுத்தால்
  உன் வாழ்வாதாரனமான உணவுப் பொருட்களை
  நாங்கள் கொடுக்கிறோம் என்ற
  ஆலமரத்தடி பஞ்சாயத்து போட்டு தானே இன்று வரை நடந்தது..
  இன்று யாரோ சில் சுயநலவாதிகளின் புரன்கூற்றுகளை
  மெத்தப் படித்த முட்டாள்களும் நம்பிக்கொண்டிருக்கிரார்களே...
  இங்கே அயல்நாட்டில் இருக்கும் நம்மவர்களிடம்
  மலையாளிகள் முறைப்பதும் நாம் பதிலுக்கு முறைப்பதும்
  வாகிக்கையான வேடிக்கையாகி விட்டது நண்பரே...

  /// தங்கை ராஜி யா கூட்டிகிட்டு சண்டைக்கு போகப் போறீங்களா???////

  ReplyDelete
 49. பாஸ் உங்கள் வாதங்கள் எல்லாம் தமிழனின் நியாயங்கள்....
  இந்த விடயத்தை பதிவுகள் மூலம் அதிகம் பெசிவர் நீங்கள்தான்...
  உங்களுக்கு ஒரு சல்யுட் பாஸ்

  ReplyDelete
 50. நடிகைங்க போட்டோ எல்லாம் சரி..

  நம்ம மீனா மலையாள நடிகையா???????????????????????????????????????????????? :(
  நிஜமாவா பாஸ்... நான் மீனா சுத்த தமிழ் பொண்ணு என்று எல்லா இருக்கேன்

  ReplyDelete
 51. இன்னும் அதிக மலையாளி நடிகைளின் படங்களை போட வேண்டும் என சிபி தலைவராக இருக்கும் ஜெள்ளர்கள் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறேன்...

  ReplyDelete
 52. நானும் ஓட்டு போடுகிறேன்....sureshkumaryuva நான்தானுங்க...ஹிஹிஹிஹி

  ReplyDelete
 53. //அழகாய் இருக்கிறார்கள் - அறிவில்லாமல்.//

  வழிமொழிகிறேன்  செல்லக் குட்டி பிறந்தநாள்

  ReplyDelete
 54. சூப்பர் பிகரு சாரி போஃஸ்ட்

  ReplyDelete
 55. அந்த மலையாளி நன்பருக்கு இங்க பிலாக் இருக்கிற விஷியம் தெரியது இல்ல

  ReplyDelete
 56. தண்ணீர் பிரச்சினைதான் ..அழகழகான சேச்சி படங்களை போட்டு எங்கள் வாயில் தண்ணீர் வரவைத்து விட்டீரே...ஹி..ஹி .. ஹி ரொம்ப நன்றி

  ReplyDelete
 57. அவனுங்க மேலே நிறைய கோபம் இருக்கு, நீங்க இந்த மாதிரி படம் போட்டு கோபத்தை குறைக்க பாக்குறீங்க. ஆனா கடைசி படம் பாத்தோன மறுபடி கடுப்பாயிடுச்சு

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!