என் மகன் மோசஸ் மனோ எனக்கு சொன்ன ஒரு ஜோக் உங்களுக்கும்....!!!
ரிமோட் கண்ட்ரோல் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறது...
ஐயோ வாங்க என் வாழ்க்கையை பற்றி கேளுங்க, எல்லாரும் என்னை நோன்டோ நோன்டுன்னு நோன்றாயிங்க, உங்களை நோண்டு நோன்டுன்னு நோன்டுனா உங்களுக்கு எப்பிடி இருக்கும்...??
இதுக்காக எனக்கு எப்போ சான்ஸ் கிடைக்குதோ, அப்பப்போ சோபா'க்கு கீழே போயி ஒளிஞ்சிகிடுறேன், இருந்தாலும் தடியணுக, தடிச்சிக, சோபா'மேலே ஏறி உக்காருறதுனால எனக்கு மூச்சி முட்டுது...!!!
நீங்க நல்லா காத்து வாங்கிட்டு உக்காந்து இருக்கீங்க, என்னை மட்டும் மூச்சி முட்ட வைக்கிறீங்க, உங்க மேல யாராவது குண்டா உக்காந்தா, உங்களுக்கு எப்பிடி இருக்கும்...???
நீங்க சிரிக்கனும்னாலும் என்னை நோன்டுறீங்க, அழனும்னாலும் [[சீரியல்]] என்னை நோன்டுறீங்க, திட்டனும்னாலும் [[விஜய்]] என்னை நோன்டுறீங்க.....??? கோவம் வந்தா என்னை தூக்கி எதுக்குடா எறியுறீங்க ராஸ்கல் ம்ஹும்.....!!! [[இதை ஹிந்தியில் சொல்லும் போது இன்னும் சூப்பரா இருக்கு...!!!]]
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் மகள் எனக்கு சொன்ன ஒரு நீதிக்கதை.....!!!
ஒரு ஊரில் ஒரு இளம் விதவையும் இரண்டு மகளும் வறுமையோடு வாழ்ந்தார்களாம், நாள்தோறும் விறகு பொறுக்கி விற்று ஜீவித்து வந்தார்கள், வறுமையோ நாளுக்கு நாள் கூடியதே தவிர குறையவில்லை......!!!
அப்படி இருக்கும்போது ஒருநாள் தாயும் மகள்களும் விறகு பொறுக்க போகும் போது, ஒரு காக்கா பசியோடு இருந்தது, அந்த காக்கா மூத்த சிறுமியோடு கேட்டது, அக்கா அக்கா நான் சாப்பிட்டு மூணு நாள் ஆச்சு, ரொம்ப பசியா இருக்கேன்....உன்கிட்டே இருக்குற ரொட்டி துண்டுல கொஞ்சூண்டு தந்தால் நான் பசி ஆறுவேன் என பரிதாபமாக கேட்டது....
ஆனால் அந்த மூத்த சிறுமியோ கல்லை எடுத்து எறிஞ்சி அந்த காக்காவை விரட்டி விட்டு போனாள், அடுத்ததாக வந்த இளைய பாப்பா'விடமும் காக்கா தன் பசியை சொல்லி அழுதது, அந்த சின்ன பாப்பா தன் தலையில் இருந்த விறகை இறக்கி வச்சிட்டு அந்த காக்காவுக்கு ரொட்டி திங்க கொடுத்தாள் பசி தீருமட்டும்....!!!
நன்றி கூறி சென்ற அந்த காக்கா, பிறதி உபகாரம் செய்ய நினச்சுச்சி, அனால் அவிங்க எங்கே குடியிருக்கிறார்கள்னு தெரியாம தேடி அலைஞ்சுது, எப்பிடியோ ஒருநாள் ஒரு ஊர்ல போயி ஒரு பெரியவரிடம், இவர்களை பற்றி விசாரிக்கவும் அவர் சரியாக வீட்டை காட்டி கொடுத்தார்....
அங்கே சென்ற அந்த காக்கா, வீட்டில் சின்னபாப்பா இருப்பதை கண்டதுமல்லாமல், அவர்கள் வறுமையையும் தெரிஞ்சி வேதனை பட்டது, உடனே எங்கேயோ பறந்து போயி திரும்பி வந்தது, ஒரு தட்டில் அநேகம் பொன்னாபரணம் முத்து வைடூரியம் போன்றவைகள் இருந்தது, அதை சின்னபாப்பாவுக்கு கொடுத்து சென்றது.....!!!
பாப்பாவும் அதை தன் அம்மாவிடம் கொடுத்து தன் குடும்பத்தின் வறுமையை போக்கி கொண்டாள்.........இதை அறிந்து பொறாமை கொண்ட அக்காள் சிறுமி, அந்த காக்காவை தேடி கண்டுபிடிச்சி, காக்கா காக்கா நானும் உனக்கு ரொட்டி தாரேன் எனக்கும் பொன்னும் பொருளும் தா என கேட்டாள்.....!!!
உடனே காக்கா சொன்னதாம் உன் ரொட்டி எனக்கு தேவையில்லை, பசியாய் இருந்தேன் எனக்கு நீ ரொட்டி தரவில்லை, இப்போது பசியில்லாமல் இருக்கிறேன் எனக்கு உன் சுயநலமிகுந்த அந்த சாப்பாடு வேண்டாம், ஆனாலும் உனக்கு பொன், பொருள் வேண்டுமானால் நான் சொல்வதுபடி செய்யவேண்டும் என்றது....!!
அதோ தெரிகிறதே ஒரு புற்று, அதுக்குள்ளே கையை விட்டு தேடுவாயானால், அங்கே நான் உன் தங்கச்சி பாப்பாவுக்கு குடுத்த அனைத்தும் இருக்கிறது என சொல்லி பறந்துடுச்சாம்.... அங்கே போன அக்காள் சிறுமி புற்றுக்குள் கையை விட பாம்பு கடிச்சி உயிர் போயிடுச்சாம்....!!!
நான் : ஐயய்யோ அந்த அக்கா பாப்பா பாவமாச்சேம்மான்னு கேட்டேன், டேய் டாடி இது மோரல் [[நீதி]] கதை, கேட்டோமா மோரல் என்னான்னு தெரிஞ்சோமான்னு போயிகிட்டே இருக்கணும் என்னன்னு கேட்டு மிரட்டுறாள்......அவ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்.........!!!
என் மகள் சொன்ன நீதி கீழே.............!!!
நீதி : பசித்தவனுக்கு ஆகாரம் கொடு.
நீதி : பசித்தவனுக்கு ஆகாரம் கொடாமல், உதவாமல் அதிகமாக ஆசைபட்டால் பாம்பு புற்று......!!












