Tuesday, August 2, 2011

என் குழந்தைகள் சொன்ன கதைகள்...!!!

என் மகன் மோசஸ் மனோ எனக்கு சொன்ன ஒரு ஜோக் உங்களுக்கும்....!!!

ரிமோட் கண்ட்ரோல் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறது...

ஐயோ வாங்க என் வாழ்க்கையை பற்றி கேளுங்க, எல்லாரும் என்னை நோன்டோ நோன்டுன்னு நோன்றாயிங்க, உங்களை நோண்டு நோன்டுன்னு நோன்டுனா உங்களுக்கு எப்பிடி இருக்கும்...??

இதுக்காக எனக்கு எப்போ சான்ஸ் கிடைக்குதோ, அப்பப்போ சோபா'க்கு கீழே போயி ஒளிஞ்சிகிடுறேன், இருந்தாலும் தடியணுக, தடிச்சிக, சோபா'மேலே ஏறி உக்காருறதுனால எனக்கு மூச்சி முட்டுது...!!!

நீங்க நல்லா காத்து வாங்கிட்டு உக்காந்து இருக்கீங்க, என்னை மட்டும் மூச்சி முட்ட வைக்கிறீங்க, உங்க மேல யாராவது குண்டா உக்காந்தா, உங்களுக்கு எப்பிடி இருக்கும்...???

நீங்க சிரிக்கனும்னாலும் என்னை நோன்டுறீங்க, அழனும்னாலும் [[சீரியல்]] என்னை நோன்டுறீங்க, திட்டனும்னாலும் [[விஜய்]] என்னை நோன்டுறீங்க.....??? கோவம் வந்தா என்னை தூக்கி எதுக்குடா எறியுறீங்க ராஸ்கல் ம்ஹும்.....!!! [[இதை ஹிந்தியில் சொல்லும் போது இன்னும் சூப்பரா இருக்கு...!!!]]

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என் மகள் எனக்கு சொன்ன ஒரு நீதிக்கதை.....!!!ஒரு ஊரில் ஒரு இளம் விதவையும் இரண்டு மகளும் வறுமையோடு வாழ்ந்தார்களாம், நாள்தோறும் விறகு பொறுக்கி விற்று ஜீவித்து வந்தார்கள், வறுமையோ நாளுக்கு நாள் கூடியதே தவிர குறையவில்லை......!!!


அப்படி இருக்கும்போது ஒருநாள் தாயும் மகள்களும் விறகு பொறுக்க போகும் போது, ஒரு காக்கா பசியோடு இருந்தது, அந்த காக்கா மூத்த சிறுமியோடு கேட்டது, அக்கா அக்கா நான் சாப்பிட்டு மூணு நாள் ஆச்சு, ரொம்ப பசியா இருக்கேன்....உன்கிட்டே இருக்குற ரொட்டி துண்டுல கொஞ்சூண்டு தந்தால் நான் பசி ஆறுவேன் என பரிதாபமாக கேட்டது....


ஆனால் அந்த மூத்த சிறுமியோ கல்லை எடுத்து எறிஞ்சி அந்த காக்காவை விரட்டி விட்டு போனாள், அடுத்ததாக வந்த இளைய பாப்பா'விடமும் காக்கா தன் பசியை சொல்லி அழுதது, அந்த சின்ன பாப்பா தன் தலையில் இருந்த விறகை இறக்கி வச்சிட்டு அந்த காக்காவுக்கு ரொட்டி திங்க கொடுத்தாள் பசி தீருமட்டும்....!!!


நன்றி கூறி சென்ற அந்த காக்கா, பிறதி உபகாரம் செய்ய நினச்சுச்சி, அனால் அவிங்க எங்கே குடியிருக்கிறார்கள்னு தெரியாம தேடி அலைஞ்சுது, எப்பிடியோ ஒருநாள் ஒரு ஊர்ல போயி ஒரு பெரியவரிடம், இவர்களை பற்றி விசாரிக்கவும் அவர் சரியாக வீட்டை காட்டி கொடுத்தார்....


அங்கே சென்ற அந்த காக்கா, வீட்டில் சின்னபாப்பா இருப்பதை கண்டதுமல்லாமல், அவர்கள் வறுமையையும் தெரிஞ்சி வேதனை பட்டது, உடனே எங்கேயோ பறந்து போயி திரும்பி வந்தது, ஒரு தட்டில் அநேகம் பொன்னாபரணம் முத்து வைடூரியம் போன்றவைகள் இருந்தது, அதை சின்னபாப்பாவுக்கு கொடுத்து சென்றது.....!!!


பாப்பாவும் அதை தன் அம்மாவிடம் கொடுத்து தன் குடும்பத்தின் வறுமையை போக்கி கொண்டாள்.........இதை அறிந்து பொறாமை கொண்ட அக்காள் சிறுமி, அந்த காக்காவை தேடி கண்டுபிடிச்சி, காக்கா காக்கா நானும் உனக்கு ரொட்டி தாரேன் எனக்கும் பொன்னும் பொருளும் தா என கேட்டாள்.....!!!


உடனே காக்கா சொன்னதாம் உன் ரொட்டி எனக்கு தேவையில்லை, பசியாய் இருந்தேன் எனக்கு நீ ரொட்டி தரவில்லை, இப்போது பசியில்லாமல் இருக்கிறேன் எனக்கு உன் சுயநலமிகுந்த அந்த சாப்பாடு வேண்டாம், ஆனாலும் உனக்கு பொன், பொருள் வேண்டுமானால் நான் சொல்வதுபடி செய்யவேண்டும் என்றது....!!

அதோ தெரிகிறதே ஒரு புற்று, அதுக்குள்ளே கையை விட்டு தேடுவாயானால், அங்கே நான் உன் தங்கச்சி பாப்பாவுக்கு குடுத்த அனைத்தும் இருக்கிறது என சொல்லி பறந்துடுச்சாம்.... அங்கே போன அக்காள் சிறுமி புற்றுக்குள் கையை விட பாம்பு கடிச்சி உயிர் போயிடுச்சாம்....!!!

நான் : ஐயய்யோ அந்த அக்கா பாப்பா பாவமாச்சேம்மான்னு கேட்டேன், டேய் டாடி இது மோரல் [[நீதி]] கதை, கேட்டோமா மோரல் என்னான்னு தெரிஞ்சோமான்னு போயிகிட்டே இருக்கணும் என்னன்னு கேட்டு மிரட்டுறாள்......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!!!

என் மகள் சொன்ன நீதி கீழே.............!!!

நீதி : பசித்தவனுக்கு ஆகாரம் கொடு.

நீதி : பசித்தவனுக்கு ஆகாரம் கொடாமல், உதவாமல் அதிகமாக ஆசைபட்டால் பாம்பு புற்று......!!

43 comments:

 1. போயிடு படிச்சிட்டு வாறன்

  ReplyDelete
 2. மிகவும் கருத்துள்ள கதை

  ReplyDelete
 3. பதிவர்கள் அனைவர் நெஞ்சங்களிலும்
  நீக்கமற நிறைந்திருக்கும்
  நாஞ்சில் மனோ அவர்களே தங்களை
  இன்றைய வலைச் சரத்தில்
  அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்புக்காக
  நான் பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறேன்

  ReplyDelete
 4. என்னய்யா இது???ஐயோ இந்த கொடுமைய கேளுங்கப்பு!!

  ReplyDelete
 5. siva said...
  meeeeeeeeeee the firstu...//

  ஹே ஹே ஹே ஹே சந்தோஷத்தை பாரு......

  ReplyDelete
 6. siva said...
  போயிடு படிச்சிட்டு வாறன்

  August 2, 2011 7:05 PM


  siva said...
  மிகவும் கருத்துள்ள கதை//

  மிக்க நன்றிங்கோ....

  ReplyDelete
 7. Ramani said...
  பதிவர்கள் அனைவர் நெஞ்சங்களிலும்
  நீக்கமற நிறைந்திருக்கும்
  நாஞ்சில் மனோ அவர்களே தங்களை
  இன்றைய வலைச் சரத்தில்
  அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்புக்காக
  நான் பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறேன்//

  வானளாவ புகழ்ந்து, அறிமுகபடுத்திய உங்கள் பெருந்தன்மையான மனசுக்கு நான் தலைவணங்குகிறேன் குரு....!!!

  ReplyDelete
 8. மைந்தன் சிவா said...
  என்னய்யா இது???ஐயோ இந்த கொடுமைய கேளுங்கப்பு!!//

  என்னய்யா நீரும் பாம்பு புற்றுகுள்ளே கையை விட்டுட்டீரா ஹி ஹி....

  ReplyDelete
 9. சந்தேகமே இல்லை.வருங்கால பிளாக்கர்கள் உங்கள் குழந்தைகள்.

  ReplyDelete
 10. http://rajiyinkanavugal.blogspot.com/
  டேய் சிபி அண்ணே, விக்கி அண்ணே,உங்க ரெண்டுபேரையும் இந்த பிளாக்ல நாறடிச்சிருக்காயிங்க நம்ம ராஜி......ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 11. இராஜராஜேஸ்வரி said...
  குழந்தைகளின் பார்வையும் நீதியும் சூப்பர்.//

  நன்றி மேடம்....

  ReplyDelete
 12. அவங்க சொன்ன கதையில நீங்க தூங்கிடிங்களா?

  ReplyDelete
 13. ஸாதிகா said...
  சந்தேகமே இல்லை.வருங்கால பிளாக்கர்கள் உங்கள் குழந்தைகள்.//

  நன்றி ஸாதிகா......

  ReplyDelete
 14. தமிழ்வாசி - Prakash said...
  அவங்க சொன்ன கதையில நீங்க தூங்கிடிங்களா?//

  என்னா தூக்கமா...??

  யோவ் நமக்கு பதிவு தேத்தனும் அம்புட்டுதேன் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 15. நம் குழந்தைகளை விட சிறந்த ஆசான் நமக்குக் கிடைப்பதில்லை.

  அப்புறம்...
  வருங்காலத்துல அவங்களும் பிரபல பதிவராயிடுவாங்க போலயே..
  ம்ம்ம் வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. Nice.,
  Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

  ReplyDelete
 17. உங்க வீட்லயும் ரிமோட் எறிதல் உண்டா !

  ReplyDelete
 18. பையரைவிட பொண்ணு அழகா கதை சொல்றாங்க..

  // கதையைக்கேட்டோமா மாரல் என்னான்னு தெரிஞ்சுக்கிட்டோமான்னு போயிட்டே இருக்கணும்//

  இது பாயிண்டு :-)))))))

  ReplyDelete
 19. நல்ல நீதி அண்ணா
  சுத்தி போடுங்க உங்க பசங்களுக்கு ஊர் கண் எல்லாம் அவங்க மேல தான்

  ReplyDelete
 20. பொண்ணு அழகா கதை சொல்றாங்க... சுத்தி போடுங்க.

  ReplyDelete
 21. டேய் டாடி இது மோரல் [[நீதி]] கதை, கேட்டோமா மோரல் என்னான்னு தெரிஞ்சோமான்னு போயிகிட்டே இருக்கணும் என்னன்னு கேட்டு மிரட்டுறாள்......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!!!


  ...... ஹா,ஹா,ஹா,ஹா.... அதானே, கதையை கேட்டோமா moral கத்துக்கிட்டோமா என்று இருக்கணும். You are blessed with smart kids. :-)

  ReplyDelete
 22. அம்புட்டு அறிவுங்க...

  இன்னும் நிறைய கதை கேளுங்க...

  ReplyDelete
 23. இதுக்காக எனக்கு எப்போ சான்ஸ் கிடைக்குதோ, அப்பப்போ சோபா'க்கு கீழே போயி ஒளிஞ்சிகிடுறேன், இருந்தாலும் தடியணுக, தடிச்சிக, சோபா'மேலே ஏறி உக்காருறதுனால எனக்கு மூச்சி முட்டுது...!!!//

  வணக்கம் அண்ணாச்சி,
  பசங்களுக்கு நல்ல வளமான எதிர்காலம் அமையும் என நினைக்கிறேன், வாழ்த்துக்கள். இப்பவே தத்துவம் எல்லாம் பேசுறாங்கள்.

  ReplyDelete
 24. எனக்கு உன் சுயநலமிகுந்த அந்த சாப்பாடு வேண்டாம், ஆனாலும் உனக்கு பொன், பொருள் வேண்டுமானால் நான் சொல்வதுபடி செய்யவேண்டும் என்றது....!//

  நீதிக் கதை....சூப்பர்.வாழ்வில் எப்போதும் எள்ளென்றாலும் ஏழாகப் பகிர்ந்து உண்ண வேண்டும் எனும் தத்துவத்தைச் சொல்லி நிற்கிறது.

  ReplyDelete
 25. டேய் டாடி இது மோரல் [[நீதி]] கதை, கேட்டோமா மோரல் என்னான்னு தெரிஞ்சோமான்னு போயிகிட்டே இருக்கணும் என்னன்னு கேட்டு மிரட்டுறாள்......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  >>>
  பொண்ணு அப்படியே உங்க ஜெராக்ஸ் போல. வருங்காலத்துல அவங்களும்பிரபல் பதிவரா வந்துடுவாங்க போல இப்பவே டேய்னு சொல்லி மிரட்டுதுங்களே. பொண்ணுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடுங்க. அப்படியே பையனுக்கும் சொல்லிடுங்க.

  ReplyDelete
 26. இரண்டாவது கதை நல்ல இருக்கே..

  ReplyDelete
 27. இரண்டுமே சூப்பர்

  ReplyDelete
 28. கதை கேட்ட விதமும் அதை சொன்ன விதமும் அருமை.

  ReplyDelete
 29. நேற்றைய பதிவர் சந்திப்பு: நேற்றைய நெல்லை நிகழ்வுகள்,
  “http://krvijayan.blogspot.com/2011/08/blog-post.html”
  சென்று பாருங்கள்.

  ReplyDelete
 30. பிள்ளைகள் கதை சொல்லிக் கேட்பது அருமை. அந்த அன்புக்குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. கதை சொன்ன விதம் அருமை.

  ReplyDelete
 32. மனோ!உங்களுக்கு மகுடப்பதிவு இதுதான்!

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் மனோ.

  ReplyDelete
 34. உமக்கு கதை கேட்கும் வயது ஆகிவிட்டதா? சரி நல்ல கதையா கேளுங்க.

  ReplyDelete
 35. பாவங்க ரிமொட்டு மேல ஏறி உக்காராதிங்க.

  சுட்டிக்கதை சூப்பர்

  ReplyDelete
 36. காலைலயே ஓட்டும் கமெண்ட்டும் போட்டுப் போனேன்..இப்போ ஓட்டு இருக்கு..கமெண்ட்டை எங்கே?


  ‘அப்பப்போ கலக்கலான பதிவு போட்டு அசத்திடுறீங்களே’-ன்னு தானே சொன்னேன்..

  ReplyDelete
 37. மகளிடம் பல நீதியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் மனோ!

  ReplyDelete
 38. பிள்ளைகளுடன் இனிதே வாழ வாழ்த்துகள் தலைவா!

  ReplyDelete
 39. நல்லாதான்யா இருக்கு காக்கா கத...!!

  ReplyDelete
 40. கதை அருமை,
  உங்கள் மகளுக்கு என் பாராட்டுக்கள்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!