"எலேய் இவனே"ன்னு பெத்தவங்களே நம்மை சில நேரம் கூப்பிடுறாங்களே அது ஏன் ? பெயர் மறந்துருக்குமோ இல்லை வேற உளவியியல் காரணம் ஏதும் உண்டா ? பெரும்பாலும் பெண்களே இப்படி கூப்பிடுகிறார்கள் ?
--------------------------------------------------------------------------------இளவரசன் தற்கொலைக்கு கலைஞர் உயர்மட்ட விசாரணை தேவைன்னு சொல்லி இருக்காரே அதன் அர்த்தம் என்ன ?
விசாரணையில் என்ன உயர்மட்டம் தாழ்மட்டம் வேண்டிகிடக்கு ? ஒருவேளை விசாரணையே பண்ணாதீங்கன்னு மறைமுகமா சொல்லுதாரோ?!!! - டவுட்டு
--------------------------------------------------------------------------------
படம் வெளி வருமுன்னே இரண்டாம் சிங்கத்தை அசிங்கியமா பேசினவிங்க இப்போ ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுறாங்களே இதுதான் மனுஷன் நிலையில்லாதவன்னு சொல்றதா ?
-------------------------------------------------------------------------------
[[எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்]]
நயன்தாரா ஃபீல்டு அவுட்டு ஆகி கொஞ்ச வருஷம் ஆச்சே இப்பவும் பில்டப் கொடுக்குறத பார்த்தால், சரோஜாதேவியின் "கோப்பால் கோப்பால்" சத்தம்தான் நினைவுக்கு வருகிறது ?
------------------------------------------------------------------------------
ரம்ஜான் ஆரம்பம் ஆகும் ரெண்டு நாட்கள் முன்பு சவூதி, குவைத், கத்தார் அரபிகள் என்ஜாய் செய்ய ஆவேசமாக ஹோட்டல்களுக்குள் வருவதைப் பார்த்தால், அவர்கள் சட்டதிட்டங்களைப் பார்த்து மனதுக்குள் கடுமையான சிரிப்பாகவே இருக்கிறது...!
குவைத்தி அரபிகளுக்கும் சவூதி அரபிகளுக்கும் நான்தான் பெரியவன் என்ற சண்டை எங்கள் ஹோட்டல் பார்"களில் அடிக்கடி நடப்பதுண்டு பாட்டல்கள் பறப்பதுண்டு, ஆனால் இவிங்க ரெண்டு பேரின் சங்கையும் [[தொண்டை]] அமெரிக்காகாரன் பிடிச்சு வச்சிருக்கானே அதைப்பற்றி ஒருத்தனும் பேசவே மாட்டேங்குறான்...!
----------------------------------------------------------------------------
குழந்தைகள் மருமகளின் தாயினிடம் சேர்வதைப்போல நம்மிடம் சேரமாட்டேங்குதேன்னு பல தாய்மார்கள் ஏங்குவதைப் பார்த்திருக்கிறேன், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
பெரும்பாலும் குழந்தைகள் பிறப்பது மனைவியின் தாய் வீட்டில்தான் இல்லையா ? எப்படியும் ஒரு ஆறேழு மாசம் இந்த குழந்தையை கவனிப்பது அந்த பாட்டிதான.
எனவேதான் குழந்தைகள் அம்மாவின் அம்மாச்சி மீது அதிக பாசம் வைக்கிறார்கள், லீவு வந்தால் உடனே பாட்டி வீட்டுக்கு போகணும்னு ஒற்றை காலில் சந்தோசமாக நிற்பதும் இதனால்தான்...!
ஆனால் இப்போது குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பிறப்பதால் ஆஸ்பத்திரி பாசம் வந்து அடிக்கடி ஆஸ்பத்திரி போய் வருவதாக சொல்றாங்க ஹி ஹி...
எங்கோ எப்பவோ படிச்சது



