"எலேய் இவனே"ன்னு பெத்தவங்களே நம்மை சில நேரம் கூப்பிடுறாங்களே அது ஏன் ? பெயர் மறந்துருக்குமோ இல்லை வேற உளவியியல் காரணம் ஏதும் உண்டா ? பெரும்பாலும் பெண்களே இப்படி கூப்பிடுகிறார்கள் ?
--------------------------------------------------------------------------------இளவரசன் தற்கொலைக்கு கலைஞர் உயர்மட்ட விசாரணை தேவைன்னு சொல்லி இருக்காரே அதன் அர்த்தம் என்ன ?
விசாரணையில் என்ன உயர்மட்டம் தாழ்மட்டம் வேண்டிகிடக்கு ? ஒருவேளை விசாரணையே பண்ணாதீங்கன்னு மறைமுகமா சொல்லுதாரோ?!!! - டவுட்டு
--------------------------------------------------------------------------------
படம் வெளி வருமுன்னே இரண்டாம் சிங்கத்தை அசிங்கியமா பேசினவிங்க இப்போ ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுறாங்களே இதுதான் மனுஷன் நிலையில்லாதவன்னு சொல்றதா ?
-------------------------------------------------------------------------------
[[எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்]]
நயன்தாரா ஃபீல்டு அவுட்டு ஆகி கொஞ்ச வருஷம் ஆச்சே இப்பவும் பில்டப் கொடுக்குறத பார்த்தால், சரோஜாதேவியின் "கோப்பால் கோப்பால்" சத்தம்தான் நினைவுக்கு வருகிறது ?
------------------------------------------------------------------------------
ரம்ஜான் ஆரம்பம் ஆகும் ரெண்டு நாட்கள் முன்பு சவூதி, குவைத், கத்தார் அரபிகள் என்ஜாய் செய்ய ஆவேசமாக ஹோட்டல்களுக்குள் வருவதைப் பார்த்தால், அவர்கள் சட்டதிட்டங்களைப் பார்த்து மனதுக்குள் கடுமையான சிரிப்பாகவே இருக்கிறது...!
குவைத்தி அரபிகளுக்கும் சவூதி அரபிகளுக்கும் நான்தான் பெரியவன் என்ற சண்டை எங்கள் ஹோட்டல் பார்"களில் அடிக்கடி நடப்பதுண்டு பாட்டல்கள் பறப்பதுண்டு, ஆனால் இவிங்க ரெண்டு பேரின் சங்கையும் [[தொண்டை]] அமெரிக்காகாரன் பிடிச்சு வச்சிருக்கானே அதைப்பற்றி ஒருத்தனும் பேசவே மாட்டேங்குறான்...!
----------------------------------------------------------------------------
குழந்தைகள் மருமகளின் தாயினிடம் சேர்வதைப்போல நம்மிடம் சேரமாட்டேங்குதேன்னு பல தாய்மார்கள் ஏங்குவதைப் பார்த்திருக்கிறேன், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
பெரும்பாலும் குழந்தைகள் பிறப்பது மனைவியின் தாய் வீட்டில்தான் இல்லையா ? எப்படியும் ஒரு ஆறேழு மாசம் இந்த குழந்தையை கவனிப்பது அந்த பாட்டிதான.
எனவேதான் குழந்தைகள் அம்மாவின் அம்மாச்சி மீது அதிக பாசம் வைக்கிறார்கள், லீவு வந்தால் உடனே பாட்டி வீட்டுக்கு போகணும்னு ஒற்றை காலில் சந்தோசமாக நிற்பதும் இதனால்தான்...!
ஆனால் இப்போது குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பிறப்பதால் ஆஸ்பத்திரி பாசம் வந்து அடிக்கடி ஆஸ்பத்திரி போய் வருவதாக சொல்றாங்க ஹி ஹி...
எங்கோ எப்பவோ படிச்சது
ரைட்டு...
ReplyDeleteஆமா அரேபிகளுக்கு பார் என்ன வேலை? அவங்கதான் குடிக்கமாட்டாங்கள் என்று சில பேர் சொல்லி திரிகிறார்களே
ReplyDeleteமதுரை அண்ணே குடிகிறது தப்புன்னு எல்லாம் தான் சொல்லுறாங்க ஆனா எவன் கேக்குறான் \\\\
Deleteஇதுல்ல அரபி என்ன துறவி என்ன எல்லாம் போங்கு தான்
எனவேதான் குழந்தைகள் அம்மாவின் அம்மாச்சி மீது அதிக பாசம் வைக்கிறார்கள், லீவு வந்தால் உடனே பாட்டி வீட்டுக்கு போகணும்னு ஒற்றை காலில் சந்தோசமாக நிற்பதும் இதனால்தான்...!/
ReplyDelete/நீங்கள் சொல்வது சரிதான்
பொறுப்பை அங்கு தள்ளிவிட்டு
பின்னால் கொஞ்ச மட்டும் வந்தால்
நிச்சயம் இராண்டாம் இடம்தானே கிடைக்கும்
மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
...
9தாரா பாவம்...!
ReplyDeleteஎங்கோ எப்பவோ படிச்சது உண்மை தான்...
எங்கோ எப்பவோ படிச்சது....
ReplyDeleteஉண்மை தான்.
அனைத்தையும் ரசித்தேன் மனோ.
//இப்போது குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பிறப்பதால் ஆஸ்பத்திரி பாசம் வந்து அடிக்கடி ஆஸ்பத்திரி போய் வருவதாக சொல்றாங்க.//
ReplyDeleteஅது சரி...
நல்ல பகிர்வு...
ஒரு வேல உசரதுள்ள உக்காந்து விசாரணை பண்ணுவாங்களோ //////
ReplyDeleteஅண்ணே சட்டம் லாம் நல்ல தான் இருக்கு அவனவன் அவனுக்கு தகுந்த மாதிரி சட்டை மாதிரி மாத்திகிரனுங்க என்ன பன்றது
எல்லாமே சரிதாங்க...
ReplyDeleteஆஸ்பத்திரி பாசம் அருமை! சுவையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஆனால் இப்போது குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பிறப்பதால் ஆஸ்பத்திரி பாசம் வந்து அடிக்கடி ஆஸ்பத்திரி போய் வருவதாக சொல்றாங்க ஹி ஹி../////இப்போ குழந்தகள் எங்கே வீட்டில் பிறக்குதுங்க மனோ?
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
ReplyDeleteபொழுது போகாம.....வெட்டியா இருக்கீர்.....மனோ....ம்ம்ம்ம்....
அருமை!அந்தத் தாரா பாவம்யா,விட்டுடுங்க!......குழந்தைகள் மருமகளின் தாயினிடம் சேர்வதைப்போல நம்மிடம் சேரமாட்டேங்குதேன்னு பல ///"தாய்மார்கள்"///ஏங்குவதைப் பார்த்திருக்கிறேன்.§§§§§§"மாமியார்கள்" என்று வர வேண்டுமோ?
ReplyDeleteநயன் தாரா நிலமை இப்படியா ஆகணும்:)))!சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத பகிர்வு அண்ணாச்சி!
ReplyDeleteகிராமங்களில ஒத்தப் பிள்ளைனா ஏலே இவன... ரெண்டு பிள்ளைனா.. ஏலேய் சின்னவனே(வினை ) ...ஏலேய் பெரியவனே(வினை )..மூணுன்னா.. ஏலேய் நடுவுள்ளவனே... ஹி...ஹி.. எவள சிம்ப்ளா இருக்கு இல்ல..?
ReplyDeleteஉயர்மட்ட விசாரணை குறித்து டவுட்டு எதுக்கு சகோ ?....அதேதான் .
ReplyDeleteஆயிரம்தான் இருந்தாலும் அன்பு செலுத்த பாட்டி போல வராது .கருவாட்டுக் குழம்பு இப்போதும் கம
ReplyDeleteகமங்குது ......