Thursday, February 16, 2012

கலவரமில்லாமல் நடந்த தேர்தல்...!!!

நேற்று இனிதே, கலவரமில்லாமல் தேர்தல் நடந்து முடிந்தாலும், முதல் முறையாக நண்பர்களுக்குள் சிறிது சலசலப்பு தவிர்க்க இயலவில்லை காரணம், இம்புட்டு நாள் காங்கிரஸ் ஆதரவாக இருந்த நண்பர்களை நான் வந்து காங்கிரஸுக்கு எதிராக திருப்பியதை அவர்களால் நம்பவும் முடியவில்லை ஜீரணிக்கவும் முடியவில்லை....!!!காங்கிரஸின் கையாலாகாதனத்தையும், ஒரு இனத்தையே சாகடித்த நாதாரி அரசு என்று சொன்னாலும் புரிந்து கொள்ளும்  நிலைமையில் அவர்கள் இல்லை, அவர்கள் சொல்லும் காரணமே வேறு, அதை பதிவில் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன், ஆனாலும் என் நிலைப்பாடு ஒன்றே...!!!


அறுபத்தைந்து சதவீதம் சிவசேனா வெற்றி என ரகசிய ரிப்போர்ட் வந்துள்ளது, நேற்றே காங்கிரஸ் அல்லக்கைகளின் முகம் கருத்து விட்டது...!!!

[[எங்கள் ஏரியா தமிழ் சங்க தலைவர் அண்ணன் மணி அவர்கள்]]

போலிங் முடிந்ததும் நண்பர்களுக்குள் கலவரம் சூழும் நிலை வரவும் உடனே எல்லாரிடமும் சொன்னேன், நாம் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல ஜஸ்ட் ஆதரவு மாத்திரமே...!

[[சிறு வயது முதல் ஆச்சி ஆச்சி என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் படையாச்சி ஆச்சியை ஓட்டு போட தூக்கிட்டு போகும் நண்பர்கள் கிருஷ்ணா, ஆண்டனி]]

நீ எந்த கட்சிக்கும் ஓட்டு போட்டுக்கோ, ஆனால் நாம் நண்பர்கள் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள், எனக்கு தமிழன் ஒருவனை நம்ம ஏரியாவில் பிரபலமாக்க வேண்டும் என்பதே நோக்கம் தமிழனின் நன்மைக்காக, அடுத்து காங்கிரஸை வேரடி மண்ணோடு சாய்க்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்...!! 


சிவசேனா ஜெயிக்கும் பட்சத்தில் ஒரு பதவி என் நண்பனுக்கு கிடைக்க இருக்கிறது என்பது எங்க ஏரியாவின் சரித்திரம், இத்தனை வருஷம் இங்கே வாழும் தமிழனின் தலையெழுத்து மாறப்போகிறது என்பதில் என் பங்கும் இருப்பதை நினைத்து மனம் உவகை கொள்கிறது....!

[[சிவசேனா ஜெயிக்கும் பட்சத்தில் பதவி வகிக்கப்போகும் நண்பன் சில்லி என்ற செல்வராஜ்]]

எப்படியோ தகராறு இல்லாமல் தேர்தல் நடந்து விட்டது, இன்றைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பார்ப்போம், ஜெயமா பராஜெயமா என்று....!!! 

23 comments:

 1. வெற்றிபெற வாழ்த்துக்கள் மக்களே..

  ReplyDelete
 2. அடிச்சி ஆடியிருக்கீங்க. ஜெயிக்கனும் மக்கா.

  ReplyDelete
 3. நிச்சயம் உமக்கு ஜெயம்!

  ReplyDelete
 4. மௌனகுரு said...
  Mumbaila entha area?//

  மரோல், ஜேபி நகர், சக்கலா சரவுண்டர்....

  ReplyDelete
 5. ஜெயமோ ஜெயம் ..அடைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. அண்ணே நீங்க கலக்குங்கன்னே, கண்டிப்பா வெற்றி உங்க பக்கம்தான்...

  ReplyDelete
 7. வெற்றிக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. ராத்திரி நீங்க ஆத்துன சொற்பொழிவுக்கு அர்த்தம் இன்னும் புரியல. அய்யா மவராசு. ப்ரீயா இருந்தா கால் பண்ணுங்க சாமி.

  ReplyDelete
 9. தமிழ் நாட்டுக்கு சீமான் ...மும்பைக்கு மனோவா !

  ReplyDelete
 10. அப்புடிப்போடு மொத அரிவாள!!!!இன்னியிலேருந்து பேதி காணனும்!!!!

  ReplyDelete
 11. தமிழன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. கலக்கிட்டீங்க!வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. வாழ்த்துகள் மனோ.

  ReplyDelete
 14. தமிழன்டா... தமிழன்டா... தமிழன்டா...

  ReplyDelete
 15. அண்ணனுக்கு ஜெ, நம்ம தலைவனுக்கு ஜே.

  ReplyDelete
 16. அண்ணா உங்கள் பிர்ச்சாரத்துக்கு கிடைத்த வெற்றி வாழ்க உங்கள் பணி ! அருவாள் மன்னனுக்கு ஒரு சிவகாசி வெடி   போடுவம்.ஹீ ஹீ

  ReplyDelete
 17. தமிழன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!