Tuesday, August 7, 2012

பிரபல பதிவர்களின் கொலைவெறி தாண்டவம்...!


கருவாடு சாப்பிட ஆசைபட்டு மலையாளி கடையில போயி பார்த்தேன், விதவிதமான கருவாடுகள் தொங்கிட்டு இருந்துச்சு, ஒரே ஒரு கருவாடு பார்சல் பார்க்க ரொம்ப கவர்ச்சியா அழகா டேஸ்ட்டா இருக்கும் போல இருக்கவே, அதை வாங்கிட்டு [[கொள்ளை விலை]] ரூமிற்கு வந்து, காரைக்"குடி" நண்பனிடம் பொரித்து கொண்டுவா சாப்பிடலாம் என்றேன்.


"அண்ணே, இது நம்ம ஊர் மீன் மாதிரி இல்லையே அண்ணே" 

"டேய், இல்லைன்னாலும் நீ சாம்பாருக்குள்ளே ஆட்டுகுடலை போட்டவன்தானே...... உனக்கு என்ன தெரியும்..? போ கொண்டுபோயி பொரிச்சி எடுத்துட்டு வா" 

சாப்பாட்டுடன் பொரித்த கருவாடும் வந்தது....

"அண்ணே, நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துர்றேன் நீங்க சாப்புடுங்க"

நான் சாப்பிபிட ஆரம்பித்து ரெண்டு கவளம் சோறு சாப்பிட்டுவிட்டு கருவாட்டை எடுத்து கடிச்சேன், கடி படலை மறுபடியும் கடிச்சு இழுத்தேன் அசையவே இல்லை, ரெண்டு கையிலையும் பிடிச்சு கடிச்சி இழுத்தேன் ம்ஹும் வரவே இல்லை, ரப்பரை விட ஸ்ட்ராங்கா இருக்கவே.....கடுப்பாகிட்டேன்....

சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு நேரே கருவாட்டு கடைக்கு போயி சேட்டன்கிட்டே காட்டி சண்டைக்கு போனேன், அவன் கூலாக சொன்னான் "அண்ணா, இது 'பிலிப்பைனிகளின்' கருவாடு, இதை நம்மாளுங்க சாப்பிட மாட்டாங்க, நீ என்னமோ எல்லாம் தெரிஞ்சாப்புல வாங்கிட்டு போனாயோன்னு நினைச்சேன், உன் பிலிப்பைனி கேர்ள் ஃ பிரண்டுக்கு" [[கொய்யால]]

"டேய் என்ன கிண்டல் பண்ணுறியா...? கருவாடுன்னா சாப்புடுறாப்ல இருக்க வேண்டாமா என்னா இது ரப்பரை விட மோசமா இருக்கு?"

"ஐயோ அண்ணா, அதான் சொன்னேனே "பிலிப்பைனி"களுக்குத்தான் இதை எப்படி பண்ண வேண்டும்னு தெரியும், இதை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின்னரே அவர்கள் கூட்டோ, கறியோ வைத்து சாப்பிடுவார்கள், நீ உடனே பண்ணினா நடக்குமா என்ன..?"

"ங்கே ங்கே ங்கே"

பல்பை கையிலும், பாக்கட்டிலும் வாங்கிட்டு ரூமுக்கு வந்தால், காரைக்குடி'காரன் மிரண்டு போயி உக்காந்து இருக்கான் ரூமில், அப்போ பயபுள்ள விஷயம் தெரிஞ்சிதான் வெளியே ஓடி இருக்கான் போல....நான் ஒன்னுமே சொல்லாமல் போயி சாப்பிட்டுட்டு வந்துட்டேன். ராத்திரி பயபுள்ளைங்க என்னை பலி ஆடு ஆக்கி வெட்டி வெட்டி சிரிக்கிறானுக.....

ம்ம்ம்ம்ம்ம் பயிற்சி இன்னும் போதாது மக்கா....
------------------------------

நல்ல நல்ல நண்பனுங்களா இருக்காங்கப்பூ நம்ம லிஸ்ட்ல.....பாக்குறீங்களா...? இதுல நீங்க யாருன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்...?

ஒருத்தன், எப்பவும் அருவாளோடே சுத்துறான்...

ஒருத்தன், எப்பவும் இடுப்புல ரிவால்வாரை கட்டிகிட்டு சுத்துறான்...

ஒருத்தர், இடுப்புல வேஷ்டியே இல்லாமல் சுத்துறார்...


ஒருத்தர், எப்பவும் பெல்ட்டை சுழட்டிகிட்டே சுத்துறார்....[[கனவுலயும்ல்லா வந்து மிரட்டுறார்]]

ஒருத்தன், எடுத்ததுக்கும் பிடிச்சதுக்கும் சரேல்னு கால்ல விழுறான்....

இதுல ஒரு குரூப் "வெட்டி"யாவே இருந்து போட்டு கொல்லுரானுவ...

ஒருத்தன், டேய் நான் போலீஸ்காரன் போலீஸ்காரன்னு கத்தி கவிதை எழுதுறன்...

ஒருத்தன், ராஜாவும் நானே ஆ ராசாவும் நானேன்னு அலறிகிட்டு திரியுதான்...

ஒருத்தர், எதுக்கெடுத்தாலும் டைரக்டா போன் பண்ணி காதுல வென்னியை ஊத்துறார்...[[உலகத்துல பங்கு சந்தை உயர்ந்தாலும் குறைஞ்சாலும் நானாய்யா கிடைச்சேன் இவருக்கு...?]]

ஒருத்தன், அவன் போட்டோவை குளோசப்ல காட்டியே கொல்லுறான்...

ஒருத்தன், பல்பு வாங்கவும் விற்கவும்னு அலையுறான்....


என்னய்யா உலகம் இது.....இங்கே பக்கத்துல மலை ஏதும் இருக்கா உடனே சொல்லுங்க...? "அவனை" தூக்கிப் போட்டுருவோம்.....
----------------------------------------------------------------------------

முதலாளி நல்லா இருந்தால் கம்பெனி நல்லா இருக்கும்....
கம்பெனி நல்லா இருந்தால் முதலாளி நல்லா இருப்பான்...

தொழிலாளி நல்லா இருந்தால் கம்பெனி நல்லா இருக்கும்..
கம்பெனி நல்லா இருந்தால் தொழிலாளி நல்லா இருப்பான்...


தொழிலாளி நல்லா இருந்தால் அவன் வீடு நல்லா இருக்கும்...
அவன் வீடு நல்லா இருந்தால் அந்த குடும்பம் நல்லா இருக்கும்...

குடும்பம் நல்லா இருந்தால் அந்த ஊர் நல்லா இருக்கும்...
ஊர் நல்லா இருந்தால் நாடு நல்லா இருக்கும்...

இங்கே ஆரம்பமே சரியில்லையே நாடு எப்பிடிய்யா நல்லா இருக்கும்...?

நான் நம்ம சிங்"டி யை சொல்லலைன்னு சொன்னா நம்பவா போறீங்க...!!!

24 comments:

 1. அருவாளோட சுத்துறது நீங்க
  பெல்டோட சுத்துறது நெல்லை ஆபிஸர்

  கவிதை செளந்தர்தான் போலிஸ் அவர் போலிஸ்னு அவர் பதிவில் படிச்சாதாக ஞாபகம் இந்த மூன்றும் உறுதி

  சரேல்னு கால்ல விழுறான் உங்கள் ஈரோட்டு நணபராக இருக்கலாம்

  துப்பாக்கியோடு சுத்துறது உங்கள் நண்பர் விஜயனாக இருக்கனும் அவர்தான் போலிஸ் மாதிரி இருக்கார்

  எனக்கு தெரிஞ்சதெல்லாம் இதுதான்

  ReplyDelete
 2. TERROR-PANDIYAN(VAS) said...
  :)//

  சிரிப்பை பாருங்கய்யா....

  ReplyDelete
 3. Avargal Unmaigal said...
  அருவாளோட சுத்துறது நீங்க
  பெல்டோட சுத்துறது நெல்லை ஆபிஸர்

  கவிதை செளந்தர்தான் போலிஸ் அவர் போலிஸ்னு அவர் பதிவில் படிச்சாதாக ஞாபகம் இந்த மூன்றும் உறுதி

  சரேல்னு கால்ல விழுறான் உங்கள் ஈரோட்டு நணபராக இருக்கலாம்

  துப்பாக்கியோடு சுத்துறது உங்கள் நண்பர் விஜயனாக இருக்கனும் அவர்தான் போலிஸ் மாதிரி இருக்கார்

  எனக்கு தெரிஞ்சதெல்லாம் இதுதான்//

  இன்னும் இன்னும் முயற்சி பண்ணுங்க.......வியட்னாம்'ல ஒருத்தன் கிடக்கானே மறந்து போச்சா...? ஹி ஹி.....

  கடைசில உள்ளது யாரு விஜயனா....அவ்வ்வ்வ்வ் அவரு பச்சபுள்ள.....

  ReplyDelete
 4. அண்ணே அவிக கூப்டாக...இவிக கூப்டாகன்னு போறத(!)விட்டுபுட்டு என்ன ஏதுன்னு தெரிஞ்சி கிட்டு செய்யா...உன் கெளரவம் ஒன்னும் குறைஞ்சிடாது கொய்யால...

  நீங்க இன்னும் வளரனும் வெண்ணே...ச்சே அண்ணே!

  ReplyDelete
 5. இன்னைக்குள்ள இவங்க யார் யார்னு கண்டுபுடிக்கறதுதான் முதல் வேலை.

  ReplyDelete
 6. ///விஜயனா....அவ்வ்வ்வ்வ் அவரு பச்சபுள்ள...//

  நான் என்ன அவரு பச்சபுள்ள இல்லைன்னு சொன்னேனா? துப்பாக்கினுதான்னு சொன்னேன் உண்மைதுப்பாக்கின்னா சொன்னேன், பச்சபுள்ள வைச்சிருக்கிறது சிவகாசில வாங்கின துப்பாக்கிங்க...

  ReplyDelete
 7. நம்ப, மாசின்னு சொல்வோமே, அந்த கருவாடு வகையைச் சேர்ந்ததோ..!?
  ஆமாம் மனோ, நீங்க துபாயில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், ஆனால் பதிவுகள் - இங்கே கருவாடு வாங்கினேன், அங்கே காரக்குடிகாரனை சந்தித்தேன், இங்கே மாதுழம் வாங்கினேன் மாங்காய் வாங்கினேன், கேரளாவில் மழை,பம்பாயில் வெள்ளம்.. அப்படி இப்படின்னு வருதே.. ! கோவிச்சுக்காதிங்க, தெரிஞ்சுக்கலாமேன்னுதான். ரசிகையாயிட்டாலே தெரிஞ்சுக்கனுங்கிறது தொல்லையாப்போகுது. :(

  ReplyDelete
 8. கண்டு பிடிச்சுட்டேன்...கண்டு பிடிச்சுட்டேன்.வியட்னாமுல உள்ள மிலிட்ரிதான் ரிவால்வார் வைச்சு சுத்துறது

  ReplyDelete
 9. மனோ ஒரு உலகன் சுற்றும் வாலிபன் அவர் இந்தியாவிலேயும் இருப்பார் துபாயிலேயும் இருப்பார் அதுமட்டுமல்ல உலகெங்கும் ஊள்ள பெண்கலின் மனசுலேயும் இருப்பார்.. நான் சொன்னது சரிதானே மணோ

  ReplyDelete
 10. வேட்டியே இல்லாம சுத்துறார்னு நீங்க நம்ம நக்ஸை சொல்லலைதானே!

  ReplyDelete
 11. பொதுவா நீங்க மற்ற்வங்களுக்கு கொடுத்து(பார்த்து)ட்டு அப்புறமாத்தானே சாப்பிடுவீங்க! :)) இந்த முறை ஏமாந்துட்டீங்களோ!

  ReplyDelete
 12. "நீர் உயர நெல் உயரும்"
  என்ற ஒளவையின் பாடல் போல
  நீங்கள் எழுதிய அந்த கடைசி வாக்கியங்கள்
  நெஞ்சில் நின்றது மக்களே..

  ReplyDelete
 13. பல பேரை யோசனை பண்ண வைச்சுட்டீங்க...

  முடிவில் சொன்ன கருத்துக்கள்... உண்மையான கருத்துக்கள்...

  படங்கள்... அப்பப்பா... என்ன ஒரு கொலைவெறி !

  பகிர்வுக்கு நன்றி…

  ReplyDelete
 14. அப்போவே சொன்னோம்
  நீங்க எங்கயோ போயிட்டீங்க
  லேப்டாப் மனோ அண்ணே

  ReplyDelete
 15. மனோ அண்ணே! மனோ அண்ணே! எப்படின்னே! இப்படி எலக்கியமா எழுதி தள்ளுறீங்க...!

  ReplyDelete
 16. சித்தப்பு நீங்க நெம்ப நல்லவரு உங்க லிஸ்டுல நான் இல்ல

  ReplyDelete
 17. மக்கா, உம்மகிட்ட.... இத..... இத... இதாம்ல எதிர்பார்த்தேன்...

  செம கலாய்ப்பு மக்கா...

  ReplyDelete
 18. பிச்சி உதறிட்டிங்க ... அதுவும் கவிதை வீதியை ... ஹி ஹி ...

  ReplyDelete
 19. மக்கா ஏன் இந்த கொலவெறி - ஓரமா ஒக்காந்து முறுக்கு தின்னுகிட்டு வேடிக்கை பாக்குறேன் - ஆரு கண்டு பிடிக்கிராங்கன்னு....

  ReplyDelete
 20. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
  நம்ப, மாசின்னு சொல்வோமே, அந்த கருவாடு வகையைச் சேர்ந்ததோ..!?
  ஆமாம் மனோ, நீங்க துபாயில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், ஆனால் பதிவுகள் - இங்கே கருவாடு வாங்கினேன், அங்கே காரக்குடிகாரனை சந்தித்தேன், இங்கே மாதுழம் வாங்கினேன் மாங்காய் வாங்கினேன், கேரளாவில் மழை,பம்பாயில் வெள்ளம்.. அப்படி இப்படின்னு வருதே.. ! கோவிச்சுக்காதிங்க, தெரிஞ்சுக்கலாமேன்னுதான். ரசிகையாயிட்டாலே தெரிஞ்சுக்கனுங்கிறது தொல்லையாப்போகுது. :(//

  நான் இருப்பது பஹ்ரைன்ல, நான் எழுதுவது முன்பு நடந்த சம்பவங்களையும், நடந்துட்டு இருக்கிறவைகளையும்தான், எனக்கு ஊரில் அம்மா வீடு [[கன்னியாகுமரி]] இருக்கு மும்பையிலையும் வீடு இருக்கு, பஹ்ரைன்ல வேலை செய்யுறேன். ஸோ எல்லா இடத்தின் தகவல்களும் இருக்கும்.

  ReplyDelete
 21. நல்லா புதிர் போட்டீங்க! தலைசுத்துது!

  இன்று என் தளத்தில்!
  சென்ரியுவாய் திருக்குறள்
  எம்புள்ளைய படிக்கவைங்க!
  உடைகிறது தே.மு.தி.க
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 22. குடல்ல சாம்பார்...பிலிப்பைன் கருவாடு......நாத்தமடிக்குது !

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!