Sunday, August 26, 2012

அருவாளை சாணை பிடிக்கச் சொல்லி உத்தரவு....!

புது இடத்தின் வேலையில் நான் புதிதாக சேர்ந்த மூன்றாவது நாள் நடந்த ஒரு சின்ன சம்பவம்....!

௧௨௩ : [[இவர் ஒரு தமிழர்,  பெயர் வேண்டாம்]]  : வாட் இஸ் யுவ்வர் நேம்?

நான் : மை நேம் இஸ் மனோஜ்...

௧௨௩ : யுவார் கம்மிங் ஃபிரம்?

நான் : இந்தியா சர்...

[[டென்ஷனாகி விட்டத்தை முறைக்கிறார்....]]

௧௨௩ : ஐ நோ, இன் இந்தியா விச் ஸ்டேட் ஆப் யூ...? [[என்னை மலையாளின்னு நெனச்சு கடுப்புல கேக்கும் கேள்வியாகும் இது]]

நான் : தமிழ்நாடு சர்....

[[அவர் முகம் பிரகாசமாகிறது, அப்புறம் தமிழில் பேசுகிறார்]]

௧௨௩ : தமிழ்நாட்டுல எந்த ஊர்...?

நான் : கன்னியாகுமரி பக்கம் சாமிதோப்பு சர்....

௧௨௩ : நீங்க மலையாளம் சூப்பரா பேசுறதை கேட்டேன், மலையாளின்னே நினச்சுட்டேன்.

நான் : சார் நான் ஹிந்தி கூட நல்லா பேசுவேன் அப்போ என்னை ஹிந்திக்காரன்னு நினைப்பீங்களா சார்...? 
இங்கிலீஷ் கூட நல்லா தெளிவா அடுத்தவிங்களுக்கு புரியாம பேசுவேன் அப்பிடின்னா என்னை ஆஸ்திரியா [[ஆஸ்திரேலியா அல்ல]] காரன்னு நினைப்பீங்களா சார்??

௧௨௩ : யப்பா.... ஃபிரன்ட் ஆபீசுக்கு ஏற்ற ஆளைத்தான் ஜி எம் செலக்ட் பண்ணியிருக்காருப்பா....! எனிவே காங்கிராட்ஸ்....

நான் : நன்றி சார், இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன் இனிதான் ரொம்ப இருக்கு....

௧௨௩ : யப்பா உனக்கு அரபிதான் லாயக்கு என்னை ஆளைவிடு....[[ஓடுறார்]]

நான் : சார் ஹலோ சார் நில்லுங்க.........

என்னைக்கு என் பிளாக்கை படிச்சுட்டு அலறப்போறாரோ தெரியலை ஹி ஹி.....!
---------------------------------------------------------------------------

படித்ததில் ரசித்தது.....!

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.பெரிய பெரிய மருத்துவர்களிடம் போய்ப் பார்த்து, மருந்து ,
ஊசி எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய அறிவுள்ள மனைவி ஒரு நாள் சொன்னா, ‘நீங்க மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல விலங்கு மருத்துவர் கிட்டபோய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்கு சரியான மருத்துவம் கொடுக்க முடியும்’னாள்.

என்னது விலங்கு மருத்துவர்கிட்டேயா? உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ரெண்டு வாய்தின்னுட்டு , பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி அலுவலகத்துக்குப் போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் அலுவலகம் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பேருந்துல அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி இரவு சாப்பாட்டை ‘லபக் லபக்'’னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவங்களை மனித மருத்துவர் எப்படிங்க
குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை மருத்துவரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க, கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு வச்சாளாம் மனைவி..!
----------------------------------------------------


அருவாளை சாணை பிடிக்க சொல்லி உத்தரவு வந்துருக்கு கொங்கு மண்டலத்தில் இருந்து, அதான் ஒரு சாம்பிளுக்கு இந்த போட்டோ ஹி ஹி ஆபீசர் மன்னிச்சு....! 

நன்றி : சின்னவீடு"சுரேஷ்.

29 comments:

 1. இரண்டாவது சூப்பர் மனோ... :)

  சரியாத்தான் சொல்லி இருக்காங்க!

  ReplyDelete
 2. அருவாளோட இப்பிடிப் பயமுறுத்தினா...ஆராச்சும் இந்தப் பக்கம் வருவாங்களோ.....மனோ !

  ReplyDelete
 3. அருவாளைக் கீழ போடுங்க சகோ !...
  அப்புடியே கொஞ்சம் பின்னால திரும்பி
  பாருங்க!...(இப்ப நாங்கள் தப்பித்து விட்டோம் :)

  ReplyDelete
 4. அந்த வேலை இடத்திலதானா இன்னும் வேலை பாக்கிறீங்க மனோ...பாவம் அந்த முதலாளி !


  ஒரு ஆண்சிங்கத்தை....இப்பிடியெல்லாம் சொல்லியிருக்காங்க....அவங்க !

  ReplyDelete
 5. இரண்டும் மிக நல்ல இருக்கு


  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 6. ஓ...மனோ!யானை மருத்துவரை பார்க்கும் மர்மம் இதுதானோ...!

  ReplyDelete
 7. உமக்கு எதாவது வலிப்பு இருக்கா...எப்ப பாரு இரும்ப புடிச்சிட்டுர் இருக்கீறே...

  ReplyDelete
 8. அருவாளை எடுத்திட்டா சீவாம கீழே வைக்க மாட்டார் மனோ. ஜாக்கிரதை!

  ReplyDelete
 9. கேள்வி கேட்டவனையே கேனையனாக்கிய மனோ

  ReplyDelete
 10. படித்ததில் ரசித்தது - ரசிக்க வைத்தது...

  ReplyDelete
 11. ஏன்னே இவ்வளவு டெரர் லுக்

  ReplyDelete
 12. உங்களை ராகிங் செய்ய நினைச்சு கேட்டிருப்பாரோ?? ஆனால் நீங்க அவரை உண்டு இல்லன்னு செய்து தலைதெறிக்க ஓடவெச்சுட்டீங்களே... :)

  மனைவி கணவனை விலங்குகளை பார்க்கும் டாக்டரை பார்க்கச்சொன்னதுக்கு சொன்ன காரணம் படித்ததும் சிரிப்பு வந்துட்டுது... பாவம் அந்த கணவன்... அது நீங்க இல்லை தானே மனோ???

  போட்டோ சூப்பர் மனோ... :)

  ReplyDelete
 13. எங்க
  இப்படி அருவா கட்டி பயமுறுத்திறீங்க

  ReplyDelete
 14. படித்தது ஜோக் அருமை .. பாவம் உங்க மேல் அதிகாரி ...

  ReplyDelete
 15. ஓக்கே .. ஓக்கே உங்களுக்கு பல மொழிகள் தெரிகிறது... ஒத்துக்குறேன்..படித்ததில் ரசித்தது அழகாக இருக்கு

  ReplyDelete
 16. படித்ததில் பிடித்தது சூப்பர்ர்ர் சார்...

  ReplyDelete
 17. ரெண்டாவது கதை சூப்பர்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
 18. அருவா நொங்கு வெட்டுறதா
  இல்லை தலையை வெட்டுறதா தெரியவில்லை
  ஆனாலும் கொங்கு மண்டலத்தில்தான் பிரச்சனை
  என்பதால் நாங்கள் தப்பித்தோம்

  ReplyDelete
 19. தலைப்பும் அதற்கு விளக்கமாக அமைந்த கவிதையும்
  மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. ஹிந்திக்காரனும் ஆஸ்திரியாகாரனும் என்ன கலர்ல இருப்பாங்கன்னு உங்க மேலாளருக்கு தெரியாது போல?
  நகைசுவை சூப்பர் மனோ

  ReplyDelete
 21. படித்ததில் பிடித்தது சூப்பர் மணோ!

  ReplyDelete
 22. வேலை இடத்தில் கூட அருவாள் கூர்மைதான் அறிவில்!ஹீ

  ReplyDelete
 23. கத்திக்கு சானை பிடிக்க நான் வாரன்!ஹீ

  ReplyDelete
 24. படித்ததில் ரசித்தது அருமை

  ReplyDelete
 25. அண்ணே மனோ அண்ணே...இந்த படித்ததில் பிடித்தது உண்மைச்சம்பவம் தானே????உங்னவிட்டுகதைதானே!!ஹீஹீஹீ......

  ReplyDelete
 26. கதை சூப்பர்...

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 27. படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடிச்சிருக்குங்க!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!