Sunday, August 5, 2012

எனது நாயகர்களும், அழிந்து போன டைரியும்...!

நான் வாசித்த புத்தகங்கள், நாவல்களின் பெயர்கள் அனைத்தையும், மற்றும் நான் படித்த, பிடித்த தகவல்கள், படங்கள் எல்லாவற்றையும் கட் பண்ணி எடுத்து ஒரு பெரிய டைரியில் ஒட்டி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன் பனிரெண்டு வருஷங்களுக்கு முன்பு....!


[தமிழச்சி தங்கபாண்டியன்.....தங்கபாண்டியன் கராத்தே மாஸ்டர் ஜாக்கிரதை]


பல தலைவர்கள் படங்களும், அவர்களின் சுவாரஸ்யமான சம்பவங்களும், அரசியல் தலைவர்கள் பற்றி, எழுத்தாளர்கள் பற்றி என்னுடைய கருத்துகளையும் அதின் கீழே எழுதி வைப்பது வழக்கம், அப்போதே சுஜாதாவின் போட்டோவை ஒட்டி வைத்து "இவர் ஒரு திறந்த பல்கலைகழகம்" என்று எழுதி வைத்திருந்தேன், அது அவர் இறந்த பின்பும் எவ்வளவு உண்மை என்பதை நினைத்து பூரித்து போவது உண்டு...!

[எங்கள் ஆசானும், எங்களின் பல்கலைகழகமும்]

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி எல்லாபாகத்தையும் [[இப்போ திமுக'வுக்கு வக்காலத்து வாங்குறவனுக படிச்சானுகளோ என்னவோ...?]] ரோமபுரி [[இத்தாலி]] பாண்டியன், தென்பாண்டி சிங்கம், சங்கத் தமிழ், பாயும்புலி பண்டாரக வன்னியன், மொழிப்போரில் ஒரு களம், மீசை முளைத்த வயதில், நெருக்கடி நெருப்பாறு, இளைய சமுதாயமே எழுகவே, மலரும் நினைவுகள், கையில் அள்ளிய கடல்,  இன்னும் நிறைய அவர் எழுதியவைகள்.....!


 சாண்டில்யனின் எல்லா "யவன சுந்தரி"கள், யவன ராணி, ராஜபேரிகை, கவர்ந்த கண்கள். கடல் புறா'க்கள், சேரன் செல்வி, மூங்கில் கோட்டை, மாதவியின் மனம், நில மங்கை, மன்னன் மகள், விலை ராணி, ராஜ திலகம், கடாரம் வென்றான், கபாலம் கொன்றான்னு அனைத்தும் படிச்சிருக்கேன்...!

[திலகவதி ஐ பி எஸ், இப்போ ரிட்டையர்ட் ஆகிட்டாருன்னு நினைக்கிறேன்]

வைரமுத்து'வின் கருவாச்சி காவியத்துக்கு முன்பே என் குளத்தில் [[மனதில்]] கல்லெறிந்தவர்கள் முதற்கொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் எல்லாம் படிச்சிருக்கேன், வாலி, பாலகுமாரன், ஞாநி, ராஜேஷ்குமார், அசோகமித்திரன், அனுராதா ரமணன், ஸ்டெல்லா புரூஸ், நேரு, காந்தி ஏன் ஹிட்லர் எழுதிய மெயின் காம்ப் [[சுயசரிதை]] கார்டுவேல், எஸ் ராமகிருஷ்ணன், சாரு நிவேதா, தமிழ்மணியன் அருவி, 

[வெற்றிலை காவியமும், கருவாச்சி காவியமும்]

திலகவதி ஐ பி எஸ், மதன், கார்க்கி, அம்பேத்கார், மணிமேகலை பிரசுரங்கள், வால்காவில் இருந்து கங்கை வரை [[யார் எழுதியதுன்னு மறந்துருச்சு]] நாஞ்சில் நாடன், சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன், ரமணி சந்திரன், மனுஷ்ய புத்திரன், ரகுமான்கான், ஜெயமோகன், கப்பல் கேப்டன் நரசய்யா, 

[கேப்டன் நரசய்யா....இரண்டாம் உலகப்போரில் இந்தியாவுக்காக விக்ராந்த் போர் கப்பலின் கேப்டன்...!]

ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், குமுதம், ரிப்போர்டர், குங்குமம், வண்ணத்திரை, கல்கண்டு, ராணி, தேவி, நக்கீரன் போன்ற வார இதழ்களை தவறாமல் என் ரூமிற்கே வரசெய்து [[கடைக்காரனிடம் அட்வான்சாவே பணம் கொடுத்துருவேன்]] படிப்பது வழக்கம்...!

[இவரின் பயண கட்டுரைகள்தான் என்னையும் பயண தொடர் எழுத தூண்டியதுன்னு சொல்வேன்...!]

இன்னும் நிறைய எழுத்தாளகர்கள் பெயர் மறந்து போச்சு, இவர்கள் எழுதிய எந்தெந்த புத்தகங்களை வாசித்தேன் என்று அந்த டைரியில் எழுதி வைப்பது உண்டு, விகடன் பிரசுரம் வெளியிட்ட வெளியீடுகளில் தொன்னூறு சதவீதம் புத்தகங்கள் வாங்கி படித்து [[போஸ்டில்]] இருக்கிறேன்...!

[சாரு நிவேதா, இவரை நிறைய பேர்கள் விமர்சித்தாலும், திட்டினாலும், எனக்கு இவரின் நையாண்டி எழுத்துகள் மிகவும் பிடிக்கும், இலக்கிய தாகம் கொண்டவர்]

எப்போதும் என்னோடு அந்த டைரி இருக்கும், அந்த டைரி பக்கங்கள் முடிந்ததும், நான் ஊருக்கு லீவில் போகும் போது பத்திரமாக வைக்க சொல்லி என் வீட்டம்மாவிடம் [[மும்பை]] கொடுத்து வைத்திருந்தேன், லீவு முடிந்து வெளிநாடு வந்தபோது ஒருநாள் மனைவியிடமிருந்து போன்.....

"அத்தான், இங்கே கனமழை பெய்து கொண்டிருக்கிறது வீட்டுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டது என்ன செய்யன்னே புரியலை"

[மும்பை மழையின் கொடூரத்தின் ஒரு காட்சி]

"உடனே எல்லா பொருட்களையும் அப்படியே விட்டுவிட்டு குழந்தைகளை கூட்டிக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு போய்விடு சீக்கிரமாக" [[நீச்சலும் தெரியாது]]

வீட்டுக்குள் நெஞ்சளவு தண்ணீர் நிரம்பிய பின்தான் மழை நின்றுள்ளது, மும்பையின் பேரழிவு நாள் அது, எங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம், வீட்டுக்குள் நிப்பாட்டி வைத்து இருந்த பைக் நாசமாக போச்சு, அரசாங்கம் கொடுத்ததோ வெறும் நாலாயிரம் ரூபாய் மட்டுமே.,..! [[தலைக்கு ஆயிரம் ரூபாய் வீதம்]]

எங்கள் வீட்டு டாகுமென்ட்ஸ் மற்றும் ஏனைய பேப்பர்களை எல்லாம் நனைந்தும் நனயாமலும் காப்பாற்றி விட்டாள் என் மனைவி, அடுப்புல வச்சி சூடு பண்ணி ரெடியாக்குனது இப்போ நினைத்தாலும் வேதனையான சிரிப்புதான் மிஞ்சும்.

மறுபடியும் ஒருமுறை லீவில் மும்பை போனபோது எதேச்சையாக மனைவிடம் கேட்டேன், நம்ம கல்யாண ஆல்பம் மற்றும் போட்டோக்கள் ஆல்பம் எல்லாத்தையும் எடு புள்ள பார்க்க ஆசையாக இருக்கு என்றேன், "ஆங்...அதான் எல்லாத்தையும் பாழாப்போன மழை கொண்டு போயிருச்சே அத்தான்"

திடீர் நினைவு வந்தவனாக, "ஏய் அந்த என் டைரி என்னாச்சும்மா?"  "ம்ம்ம்ம் அதுவும் தண்ணில ஊறி போயிருச்சு தூரப்போட்டுட்டேன்"

[[சல்மா.....இவரின் கணவரின் பெயரை நான் படித்ததும் இல்லை கேட்டதும் இல்லை, எழுத்தாளர் சல்மா என்றிருக்கும் இல்லையெனில் கவிஞர் சல்மா என்றே எங்கும் எழுதப்பட்டிருக்கும், மேற்கொண்டு தகவல்கள் தெரியவில்லை]]

எனக்கு லட்சம் பணம் போனது கவலையே இல்லை, ஆனால் அந்த டைரி போனதை மனசு தாங்கவே இல்லை, இப்பவும் மனைவிகிட்டே சொல்லி புலம்புவது உண்டு...!

இதை ஏன் சொல்ல வந்தேம்னா, நேற்று என் சூட்கேசை ஒரு பேப்பர் எடுப்பதற்காக திறந்தவன், அங்கே இன்னும் என்னன்னவோ துண்டு பேப்பர்கள் இருப்பதை பார்த்து, முற்றிலுமாக ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்த போது....வார இதழ்களில் இருந்து நான் வெட்டி வைத்திருந்த [[செய்திகள்]] சில பேப்பர்கள் அங்கே இருந்தது,  அதில் ஜூனியர் விகடனில் வெளியான ஒரு செய்தியை கட் பண்ணி வச்சிருப்பதை பார்த்து அசந்து போனேன்...!

அது, கடைசி காலத்தில் பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளிடம் இருந்து அவர்களை காத்துக்கொள்ளும் ஒரு ஐடியாவை ஒருவர் எழுதி இருந்தார், அதை நான் உங்களுக்கு டைப் பண்ணி நாளை வெளியிடுகிறேன், விகடன் படிப்பவர்களுக்கு தெரிந்து இருக்கலாம், இது தெரியாதவர்களுக்காக....!

டிஸ்கி : என்னப்பா தலீவர் புத்தகம்தான் நிறைய படிச்சிருக்கே போலன்னு கேக்குறீங்களா....? 

ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா அவர் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் இத்தனை வருஷமாக அவரை அவதானிக்கும் போது, அவர் எழுத்துக்கும் அவர் செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல் நடுவில் ஏழரை சனி நின்னு டங்கு டங்குன்னு ஆடி கண்ணுக்குள்ளே விரலை அல்ல காலையே விட்டு ஆட்டுதே.....? அந்த கோபங்களை  என் எழுத்துகளில் நீங்கள் பார்க்கலாம்....! வேறே என்னத்த சொல்ல போங்க...!

தொடரும்.......

27 comments:

 1. ஒரு பெரிய நூலகத்தையே வைத்திருக்கிறீர்கள்.நீங்கள் அசாதாரண புத்தக தாகம் உடையவர் என்பது புரிந்துபோனது. அது உங்கள். எழுத்துக்களிலும் பிரதிபலிக்கிறது. இந்தப் பதிவின் மூலம் உங்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிகிறது.

  ReplyDelete
 2. முத்தமிழ் நாஞ்சில் மடிகணினி
  மனோ அண்ணா அவர்களே
  வணக்கம்
  அப்பாடி இத்தனை புத்தகம்
  என்று முதல் படிப்பாளி மனோ என்று அன்புடன் அழைக்க படுகிறார்

  ReplyDelete
 3. மனோ பிறர் பயனடையும் வண்ணம் எழுதியிருக்கிங்க.ஒரு லைப்ரரியை அறிமுகம் செய்துவச்சதுபோல இருக்கு.இதன்வழி நான் சில புத்தகங்களை தெரிந்துகொண்டேன்,சில மனிதர்களையும்!

  ReplyDelete
 4. படங்களும் அதற்கேற்ற கருத்தும் அசத்தல்...
  புத்தகப் பிரியர் என்பதும் தெரிகிறது...

  நல்லதொரு ஐடியாவை எதிர்ப் பார்க்கிறேன்...
  (பிள்ளைகளை கைவிடும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்...)

  நன்றி…

  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 5. எனக்கும் வெட்டி ஒட்டி வைக்கும் பழக்கம் உண்டு மனோ. ஆனால் இப்போதெல்லாம் முடிவதில்லை....

  இனிய அனுபவங்கள். ஒட்டி வைத்த டைரி மழையில் ஊறிப் போனது தான் வருத்தம்....

  ReplyDelete
 6. Mano....
  Ini..nee list potta...books-i
  yaaraavathu....
  Padippaanga...????

  ReplyDelete
 7. Mano....
  Ini..nee list potta...books-i
  yaaraavathu....
  Padippaanga...????

  ReplyDelete
 8. மக்கா, உங்களை கொஞ்சம் அறிந்து கொண்டேன்

  ReplyDelete
 9. அண்ணன் பெரிய படிப்பாளியா இருப்பாரு போல? இது தெரியாம நான் வேற அப்பப்போ அப்பு அப்புனு அப்பி இருக்கேனே............?

  ReplyDelete
 10. நானும் வெட்டி ஒட்டி வெச்சிருந்தேன்..... பத்திரிக்கைகள்ல வந்த கில்மா படங்களை....!

  ReplyDelete
 11. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நானும் வெட்டி ஒட்டி வெச்சிருந்தேன்..... பத்திரிக்கைகள்ல வந்த கில்மா படங்களை....!
  /////////////////////////
  ரொம்ம புகழாதிங்க மனோவை..!அடுத்த பதிவு கில்மா படங்களைப் பற்றிதான்....!அவ்வ்வ்வ்!

  ReplyDelete
 12. மனோ நீங்க பெரிய படைப்பாளிதான் ஒத்துக்குறோம்!
  அப்படியே நீங்கள் வைத்திருக்கும் சரக்குகளின் பட்டியலையும் வெளியிடவும்

  ReplyDelete
 13. ////வீடு சுரேஸ்குமார் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நானும் வெட்டி ஒட்டி வெச்சிருந்தேன்..... பத்திரிக்கைகள்ல வந்த கில்மா படங்களை....!
  /////////////////////////
  ரொம்ம புகழாதிங்க மனோவை..!அடுத்த பதிவு கில்மா படங்களைப் பற்றிதான்....!அவ்வ்வ்வ்!//////

  யோவ் ஏதோ நாம சின்னப்பசங்க படத்த ஒட்டி வெள்ளாண்டோம், அண்ணன் ரேஞ்சுக்கு படத்தையா ஒட்டி வெள்ளாடியிருப்பாரு?

  ReplyDelete
 14. நீங்கள் வாசித்த புத்தகங்கள் காணும் போது புரிந்து கொள்ள முடிகின்றது மனோவின் தேடலின் ஆர்வத்தை !

  ReplyDelete
 15. இயற்கையின் சதியில் இழந்து போன டயறியின் பெறுமதியை நினைக்கும் போது மனதுக்கு வேதனை தான்!

  ReplyDelete
 16. மனோ...கொடுமையா இருக்கு மனோ...
  வர கமெண்ட்ஸ் பார்க்குரப்போ.....

  ReplyDelete
 17. நீங்கள் டைரியில் வைத்திருந்தீர்கள் ஆனால் நான் ஒரு அலமாரி மூழுவதும் செய்திகளை கதை நாவல்களை புக்காக பைண்டிங்க் செய்து வைத்திருந்தேன். நான் சென்னை வந்தபோது எங்கள் பெற்றொர்கள் வீடு மாறிய போது எல்லாவற்ரையும் பழைய பேப்பர் வாங்குபவனுக்கு கொடுத்துவிட்டார்கள்...அது எனக்கு தெரியவந்த போது பல மாதங்கள் தூக்கமில்லாமல் தவித்து இருக்கிறேன் இன்ன்று நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது...எனது படிக்கும் ஆர்வத்தை நேற்று என் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் நினைவு படித்தினார் 15 ஆண்டுகளுக்கு அப்புறம் நேற்றுதான் அவரை சந்த்தித்தேன் அது போல உங்களது இந்த பதிவும் எனது பழைய நினைவுகலை தூண்டிவீட்டது


  எனது தூக்கத்தை கெடுத்த உங்களுக்கு எனது கடும் கண்டனங்கள்

  ReplyDelete
 18. ஏதாவது தனியா போட்டு தரியா என்ன....??????????

  ReplyDelete
 19. உங்களை லாப்டாப் மனோன்னு சொல்லாம புக்கு மனோன்னு சொல்லலாம் போல

  ReplyDelete
 20. பிரமித்துப்போனேன்.நாட்குறிப்பு போனது ஈடு செய்ய முடியாத இழப்பே! அடுத்த முக்கிய பதிவை எதிர்நோக்கி,...

  ReplyDelete
 21. 'ஒரு டைரியின் கதை' வலிக்கிறது. இதுபோல் சேர்த்துவைத்து காணமல் போக்கியவர்களுக்குத்தான் இதன் வலி தெரியும்.-பகவத் குமார்.[நாஞ்சில்]

  ReplyDelete
 22. இந்தப் பழக்கம் வேறு இருக்கா??!! நான் படிப்பதோடு சரி. மிகவும் பிடித்தால் அப்படியே மனதில் பதிந்துவிடும். ஆனால், உங்கள் அளவுக்கு பொறுமை இல்லை. நல்ல பதிவு.

  ReplyDelete
 23. உங்களின் சோர்வில்லாத சரளாமான எழுத்து நடையிலேயே தெரிந்துக்கொண்டேன், நிச்சயம் நீங்கள் வாசிப்பின் உச்சத்தில் உள்ளவர் என்பதை. இப்போது நீங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
  உங்களின் அந்த டைரி தொலைந்துப்போனது எனக்கும் வருத்தமே.! :(
  எனக்கும் இப்பழக்கம் உண்டு. ஆனால், என்னுடையது பத்திரமாகவே உள்ளது. அந்த கையட்டக்க பேஃக’ஐ (ஒரு நோட் புத்தகத்தில், சேகரித்து வெட்டி ஒட்டி , மூன்று புத்தகங்களைச் சேகரித்து, அந்த ஃபயில் போன்ற பேக்கில் வைத்துள்ளேன். யாராவது தொட்டால், என உயிரை யாரோ தொடுவதைப்போல் உணர்வேன். அது வெறும் டைரியல்ல, என் உயிர்.

  அற்புதமான பகிர்வு மனோ. தொடருங்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...மனோ....
  இந்த கமெண்ட்-ஐ படிக்க உனக்கே வெக்கமா இல்லை...

  உன் மனத்தை தொட்டு சொல்லு.....?????????
  ஜெல்லி அடிக்காதே....  இதைதான் நீ உண்மையிலேயே விரும்புறியா....??????????

  அப்படி என்னில்...அதே மாதிரி நானும்....ஆஹா...ஓஹோ..ன்னு போறேன்...

  ReplyDelete
 25. நிறைய விஷயம் இருக்கு.ஆனலும் கலகலப்பு.சிறப்பான தொகுப்பு மனோ !

  ReplyDelete
 26. அன்பின் மனோ - டைரி மழையில் அழிந்து போனது மிக்க வருத்தத்தை உண்டு பண்ணுகிறது - கடும் உழைப்பினால் எழுதப்பட்ட - மனதிற்கு பிடித்த படங்களூடன் உள்ள டைரி மழையில் அழிந்ததும் தங்களுக்கு ஏற்பட்ட சோகமயமான நிகழ்வு.

  ம்ம்ம் என்ன செய்வது .....

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 27. //வால்காவில் இருந்து கங்கை வரை [[யார் எழுதியதுன்னு மறந்துருச்சு]]..//


  "வால்காவில் இருந்து கங்கை வரை"...எழுதியவர்---ராகுல் சாங்கிருத்யாயன்.


  Maakkaan.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!