Tuesday, August 14, 2012

மறுபடியும் மலையாளி சேட்டனின் கும்மாலக்கிடி...!

கீழே இடப்பட்டிருக்கும் படங்கள் யாவும் பஹ்ரைன் படங்கள்...!

ஒரு முக்கிய வேலை இருந்தபடியால்,  பஹ்ரைன் லேபர் அத்தாரிட்டி ஆபீசுக்கு போகவேண்டி இருந்ததால், போன ஞாயிறு அன்று அவசரமாக கிளம்பி வண்டி பிடிச்சு ஓடிப்போயி அங்கே பார்த்தால்....செம கூட்டம், ஆத்தீ இதுக்கு டோக்கன் வேற எடுக்கனுமாம், நல்லவேளை உக்கார நிறைய சேர் போட்டு வைத்து இருந்தார்கள்.
[[மனாமா ஸரோட்டன் ஹோட்டல்]]

என்ன செய்ய, எம்புட்டு பெரிய வி ஐபி நான்னு இவிங்களுக்கு தெரியலை போல, டோக்கனை தந்தவன் காத்திருக்கும் இடம் எதுன்னு கூட வாயால் சொல்லாமல் கையால் சைகை காட்டி விரட்டினான் ம்ம்ம் அம்புட்டு மரியாதை நமக்குன்னு சந்தோஷமாக அங்கே போயி பார்த்தால், கூட்டம் மொத்தமா டோக்கன் நம்பர் வரும் கவுன்டர் நம்பரையே வெறித்து பார்த்துகிட்டு இருக்காயிங்க.
[[BAHRAIN LMRA கட்டடம், நான் போனது இங்கேதான்]]

எங்கே என்னை பார்த்ததும் எழும்பி நின்று வணக்கம் சொல்லி பீதியை கிளப்பிருவாங்களோன்னு பயந்து, முகத்தை மறச்சிகிட்டே போயி ஒரு சீட்டில் அமர்ந்தேன், ஏன்னா இப்போ பஹ்ரைனிலும் சமூக வலைத்தளங்களை பாவிக்கிறவர்கள் அதிகமாக [[தமிழர்கள்]] பெருகி விட்டார்கள். [[ஆனால் ஒருத்தனும் நேரில் வரமாட்டான் ஹி ஹி]]

[[ஜூஃபேர் ராமி இன்டர் நேஷனல் ஹோட்டல்]]

எனது டோக்கனை ஒரு முறை பார்த்தேன் ஆயிரத்தி நூற்றி பதினைந்து.....அய்யய்யோ என்னாப்பா இது, எப்போ நான் வீட்டுக்கு போறது? இங்கேயே தூங்கவச்சி ராத்திரிதான் விடுவானுகளோன்னு நடுக்கம் வந்துருச்சு, கொஞ்சம் நம்பர் வரும் டிவியை எட்டிப் பார்த்தேன் எல்லாவற்றிலும் ஆயிரம், ரெண்டாயிரம், எட்டாயிரம், எழாயிரத்திலேதான் இருந்தது, கனத்த நெஞ்சை கையில் பிடித்து கொண்டு அமர்ந்தேன்.

[[ஷியா"க்கள் அடிக்கடி கலவரம் நடத்தும் இடம், பழைய ஜூஃபேர் பஸ்நிலையம் அருகில்]]

மொத்தம் 24 கவுன்டர்கள் இருந்தாலும் வெறும் நான்கே கவுன்டர்கள்தான் ஓப்பனாக இருந்தது [[அலட்சியமா..? ரம்ஸான் காரணமா தெரியாது]] வந்திருந்ததில் 95 சதவீதம் இந்தியர்கள், அதில் மலையாளிகள் மிகவும் குறைவு என்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது...! எல்லாமே வட இந்தியர்கள்...!
[[மனாமா பஸ்நிலையம், நம்ம திருநெல்வேலி பஸ்நிலையம் மாதிரி ஹி ஹி]]

ச்சே இப்பிடி தெரிஞ்சிருந்தால் லேப்டாப்பை கொண்டு வந்துருக்கலாமேன்னு நினைத்துக் கொண்டே பக்கத்தில் இருப்பவனை பார்த்தேன், ஒரு மாதிரியா முழிச்சிகிட்டே இருந்தான், ஆளைப் பார்த்தால் மலையாளி போல இருந்தான், சரி அப்பிடியே கண்ணை மூடிகிட்டே சாய்வோம்னு, ஒரு சொறி வரப்போவது தெரியாமல் சாஞ்சிட்டேன் சேர்ல...
[[அஷ்ரஃ ப், சோனி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எல்லாம் தரமானதாக கிடைக்கும் இடம், பஹ்ரைனில் இருப்பவர்கள் கண்டிப்பாக இங்கே சென்றிருப்பார்கள்...!]]

கண்ணை மூடிட்டு இருக்கும் போதே யாரோ என்னை பலமா பாக்குறாப்ல மனசுக்கு தோணினாலும் மனப்பிராந்தினு நினச்சுட்டே இருந்தேன், கொஞ்சம் நேரம் கழித்து என் தொடையை யாரோ சொறிவதை அறிந்து அதிர்ந்து எழும்பினேன்.
[[ஹப்ஸா, துணிக்கடை மற்றும் தரமில்லாத பொருட்களும் இருக்குமிடம், குதேபியா ஹப்ஸா கடை என்றே அட்ரஸ் சொல்லித் தருவார்கள், அம்புட்டு பேமஸ்]]

அதே பக்கத்து சேர்க்காரன்தான், "சேட்டா நிங்ஙள் மலையாளியானோ..?" [[ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்]] 

"மலையாளி அல்லா, மலையாளம் அறியாம் பறையு" [[மலையாளம் தெரியாதுன்னுட்டு மலையாளம் பேசுறானேன்னு ஜெர்க் ஆகிறான் ஹி ஹி]]

தனது டோக்கனை காட்டி "சேட்டோ இது எத்தரையானு நம்பரு...?" [[எண்ணால் எழுதி இருப்பதுமா தெரியல என்ற கோபம் எனக்கு]]

"எந்தா...?  எழுத்து வாயிக்கான் அறியித்தில்லே நிங்ஙள்க்கு..?"

"செமிக்கனம் சேட்டா, எனிக்கு இது மனசிலாவுந்நில்லா அதானு சோதிச்சு"

எனக்கு வந்த அதே டவுட்டுதான் போல....

டோக்கனை பார்த்து விட்டு சொன்னேன் "ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"எந்தோ...?"

"ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"ஓ...?"

"ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"மனசிலாயில்லா...?"

"ஹலோ....ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"ஓ...எந்தோ..?"

"மலையாளத்தில் பறைஞ்சா மனசிலாவுல்லே நிங்கள்க்கு...?"

என் கோபத்தை பார்த்ததும் சைலண்ட் ஆகிவிட்டான் சேட்டன், ஆனால் நான் கலவரம் ஆகிவிட்டேன், மலையாளத்திலும் தமிழிலும் எண்கள் ஒருபோலதானே இருக்கும் இவனுக்கு ஏன் புரியவில்லை என்று ஆராய்ச்சி பண்ண தொடங்கினேன்....ஆஹா.......மனசை சொறிய வச்சிட்டானே, நம்ம மலையாளம்தான் கோணலாகிப் போச்சோன்னு யோசிச்சிட்டு இருக்கும் போதே, இன்னொரு மலையாளி சேட்டன் மற்றொரு சீட்டில் அமர.....அவனை பிடித்துக் கொண்டான் இவன்.

[[குதேபியா மார்க்கெட் தெரு, நம்மைப் போல ஏழைகளுக்கு பர்ச்சேஸ் பண்ண ஏற்ற இடம், அரபிகளுக்கும்தான்...!]]

"சேட்டன் மலையாளியானோ..?"

"அதே"

" ஈ நம்பர் எத்தரையான்னு பறையாமோ..?"

அவனை மேலும் கீழுமாக பார்க்கிறான். "ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"எந்தோ...?"

"ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"ஓ...?"

"ஆயிரத்தி நூற்றி ரெண்டு"

"மனசிலாயில்லா...?"

கோபமாக...."ஓ....நிங்ஙள் காசர்கோடானோ...? 'ஆயிரத்தி "ஒரு"நூற்றி ரெண்டு" ஓகே"

"அதே அதே மனசிலாயி மனசிலாயி..."

அடப்பாவிகளா இப்பிடி வேற புதுசா சொல்லலாமா...? எங்கே போனாலும் நமக்கு வேட்டு வைக்கவும், பல்பு வாங்கி பாக்கெட்டில் திணிக்கவும் ஸ்பெஷலா திறிவானுக போல....! 

ஒரு வி ஐ பி"க்கு மரியாதையே இல்லை ம்ஹும்.....!
------------------------------

எல்லாருக்கும் நாஞ்சில்மனோ"வின் சுதந்திர தின வாழ்த்துகள்....!

இந்நாளில் "சென்னிமலை" நாயகனையும் என் நினைவில் கொண்டு வணங்குகிறேன்.......அவர்.......
.எங்கள் "கொடிகாத்த குமரன்...!!!"

ஜெயஹிந்த்...

டிஸ்கி : நம்ம சிபி செந்தில்குமார் அண்ணனும் சென்னிமலை"காரர்தான்...!

41 comments:

 1. Nallathoru anupavam than. Padankaludan pathivum kalakkuthu

  ReplyDelete
 2. ///
  மனாமா ஸரோட்டன் ஹோட்டல்
  //

  நம்மளையெல்லாம் உள்ள விடுவாய்ங்களான்னே?

  இடது புறம் இருக்குற Bahrain trade center-உள்ள போயிருக்கீங்களா? தக்காளி கார் பார்க்கிங்க்கு மூணு தினார் வாங்குறாய்ங்கன்னே! :(

  ReplyDelete
 3. //
  BAHRAIN LMRA கட்டடம்
  //

  இவய்ங்களுக்கு ஏதாவது ஒரு வேட்டு வைக்கனும்னே! பஹ்ரைன்ல.., பஹ்ரைன் கிங்க்கு பிறகு நான்தான் பேமஸ்ன்னு CNN சொல்லுது அப்பிடியிருந்தும் நான் அங்க ஒருமுறை போயிருந்தபோது ஒழுங்க மரியாதை தரலைன்னா பார்த்துக்குங்களேன்! :)

  ReplyDelete
 4. கார் பார்க்கிங்கு மூனு தினாரா...? கொய்யால அவன் மேல காரை ஏத்தலியாக்கும் நீங்க?!!!!

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா ஹா அண்ணனை மாதிரி பம்மிகிட்டு சமத்தா வெளியே வந்துறனும் ஹி ஹி....

  ReplyDelete
 6. பயண அனுபவத்தில் கிட்டிய நகைச்சுவையை அழகாய்
  பகிர்ந்து மகிழ்ச்சியான மன நிலையில் வைத்து நீங்க சொன்ன
  மாதிரியே சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ ஜெயஹிந்த் !!!.....

  ReplyDelete
 7. //மனாமா பஸ்நிலையம்//

  நம்ம ஏரியாவுக்கு பக்கத்தில வந்திட்டீங்களே, இதுக்கு ஆப்போசிட்ல மூணாவது குறுக்கு சந்துல முப்பத்தி மூணாம் நம்பர் வீட்டுல தான் நான் குடியிருக்கேன்! :)

  BTW, நாம இருக்குற ஏரியா இதுக்கு opposite தான்

  ReplyDelete
 8. //அஷ்ரஃ ப், சோனி எலக்ட்ரானிக்ஸ்///

  உள்ள இருக்குறவய்ங்க ரொம்ப நல்லவய்கன்னே.. நான் ஒரு நாள் ஒரு ஒன்னரை மணி நேரம் வீடியோ கேம் விளையாண்டேன் தக்காளி ஒரு பயலும் ஏன்னு கேக்கலையே ஹி ஹி ஹி!

  ReplyDelete
 9. //ஹப்ஸா, துணிக்கடை//

  இங்கே தான்னே நான் இன்னும் போகலை எல்லாரும் உலக பேமஸ்ங்குராய்ங்க... நமக்கு போக முடியலையேன்னு நினைச்சு நினைச்சு அழுகையா வருது :(

  ReplyDelete
 10. //குதேபியா மார்க்கெட் தெரு//

  அப்பிடியே அந்த ரூபம் சாரிஸ் கடையையும் படம் பிடிச்சு போட்டுருந்தீங்கன்னா.. நாளைக்கு பல அன்னிமார்கள் அண்ணன்களின் பர்சை பதம் பார்த்திருப்பாங்க.. கூப்பிட்டு போகாத கொள்ள பேறு வீட்டுல கலவரம் வந்திருக்கும்.. இதுக்கு பிறகு நீங்க முகமூடி போடுக்கிட்டுதான் வெளிய நடமாட முடியும்! :)

  உள்ள ஒரு தையல் கடைகாரர் இருக்காருன்னே நமக்கு எப்போதும் அவர்தான் பேண்ட் தைச்சு கொடுப்பாரு! நல்லா தைப்பாரு (ஒரு விளம்பரம் ஹி ஹி ஹி)

  ReplyDelete
 11. இதயம் நிறைந்த இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்ன்னே! :)

  ReplyDelete
 12. //
  MANO நாஞ்சில் மனோ said...

  கார் பார்க்கிங்கு மூனு தினாரா...? கொய்யால அவன் மேல காரை ஏத்தலியாக்கும் நீங்க?!!!!
  //

  ஏத்தலாம் தான்.. கொஞ்ச நாள் கழிச்சு நம்மளையும் அதே மாதிரி ஏத்தி கொள்ளுவாய்ங்ளேன்னு நினைச்சு டர்ராகி (கண்ணுக்கு கண்ணுதானே இவங்க சட்டம்) பில்லோட ஆபிஸ் வந்து சேர்ந்திட்டேன் (office-ல claim பன்னிருவோம்ல ஹி ஹி)

  ReplyDelete
 13. அம்பாளடியாள் said...
  பயண அனுபவத்தில் கிட்டிய நகைச்சுவையை அழகாய்
  பகிர்ந்து மகிழ்ச்சியான மன நிலையில் வைத்து நீங்க சொன்ன
  மாதிரியே சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ ஜெயஹிந்த் !!!....//

  உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்...

  ReplyDelete
 14. வரலாற்று சுவடுகள் said...
  //மனாமா பஸ்நிலையம்//

  நம்ம ஏரியாவுக்கு பக்கத்தில வந்திட்டீங்களே, இதுக்கு ஆப்போசிட்ல மூணாவது குறுக்கு சந்துல முப்பத்தி மூணாம் நம்பர் வீட்டுல தான் நான் குடியிருக்கேன்! :)

  BTW, நாம இருக்குற ஏரியா இதுக்கு opposite தான்//

  பழைய லிக்கர் ஷாப் [[டாஸ்மாக் மாதிரி]] இருந்த இடம்ல அது?

  ReplyDelete
 15. வரலாற்று சுவடுகள் said...
  //அஷ்ரஃ ப், சோனி எலக்ட்ரானிக்ஸ்///

  உள்ள இருக்குறவய்ங்க ரொம்ப நல்லவய்கன்னே.. நான் ஒரு நாள் ஒரு ஒன்னரை மணி நேரம் வீடியோ கேம் விளையாண்டேன் தக்காளி ஒரு பயலும் ஏன்னு கேக்கலையே ஹி ஹி ஹி!//

  சாமான் வாங்காம பச்சைபுள்ள ஒன்னு விளையாடுதுன்னு விட்டுட்டாங்க போல....நான் அங்கே போயி நாலஞ்சி வருஷம் ஆச்சு.

  ReplyDelete
 16. வரலாற்று சுவடுகள் said...
  //ஹப்ஸா, துணிக்கடை//

  இங்கே தான்னே நான் இன்னும் போகலை எல்லாரும் உலக பேமஸ்ங்குராய்ங்க... நமக்கு போக முடியலையேன்னு நினைச்சு நினைச்சு அழுகையா வருது :(//

  அப்பிடி அழுரதுக்கு அதுக்கு உள்ளே விஷேசமா ஒன்னுமே இல்லையே ஹி ஹி...

  ReplyDelete
 17. உள்ள ஒரு தையல் கடைகாரர் இருக்காருன்னே நமக்கு எப்போதும் அவர்தான் பேண்ட் தைச்சு கொடுப்பாரு! நல்லா தைப்பாரு (ஒரு விளம்பரம் ஹி ஹி ஹி)//

  லேடீஸ் இல்லையாக்கும்? நம்புராப்ல இல்லியே.....

  ReplyDelete
 18. வரலாற்று சுவடுகள் said...
  இதயம் நிறைந்த இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்ன்னே! :)//

  உங்களுக்கும் இனிய வாழ்த்துகள் தம்பி...

  ReplyDelete
 19. ஏத்தலாம் தான்.. கொஞ்ச நாள் கழிச்சு நம்மளையும் அதே மாதிரி ஏத்தி கொள்ளுவாய்ங்ளேன்னு நினைச்சு டர்ராகி (கண்ணுக்கு கண்ணுதானே இவங்க சட்டம்) பில்லோட ஆபிஸ் வந்து சேர்ந்திட்டேன் (office-ல claim பன்னிருவோம்ல ஹி ஹி)//

  அட ஆமால்ல....இருந்தாலும்....ம்ம்ம்ம் சரி விடுங்க, என் கூட வாங்க ஒருநாள்....

  ReplyDelete
 20. பஹ்ரைன் கட்டங்கள் அழகு.. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. மறுபடியும் ஒரு சுற்று பயணம்
  ஊர் சுற்றிக்காட்டும் மனோ
  லேப்டாப் மனோ அண்ணா வாழ்க வாழ்க

  ReplyDelete
 22. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. படற கஷ்டத்தை கூட நகைச்சுவையா சொல்லி கலக்கிட்டீங்க பாஸ்.ஆயிரத்து ஒரு நூற்று இரண்டு சூப்பர்

  ReplyDelete
 24. படங்களும் பதிவும் அருமை... நன்றி...

  ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளரட்டும்... இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

  ReplyDelete
 25. சேட்டன் பல்பு கொடுத்தன் மூலம்` நானும் பார்த்தேன் அருமையான நகரின் அழகிய படங்களை!

  ReplyDelete
 26. என்னையும் அந்த குதேபியா கூட்டிப்போவீங்களா !ஹீ

  ReplyDelete
 27. நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. சென்னி மலை வரலாறு சாலப்பொறுத்தம்.

  ReplyDelete
 29. மனோ வெறும் கட்டட படம் மட்டும்தானா???
  கொஞ்சம் பஹ்ரைன்-ல உள்ள பொண்ணுங்க படத்தையும் போடுறது....

  ReplyDelete
 30. நல்ல காமெடியான அனுபவம்! நன்றி! சென்னிமலைன்னதும் எனக்கு சி.பி ஞாபகம் தான் வந்தது!

  ReplyDelete
 31. நல்ல அனுபவம்...

  உங்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள்!

  ReplyDelete
 32. ஆமாண்ணா... எங்கூட இருக்கும் மலையாளியும் அப்படித்தான் பேசுவான்... என்னிடம் ஒரு முறை ஆயிரத்தி ஓரு நூறு என்றான். நான் என்ன ஆயிரத்தி இரநூறா என்றேன். இல்ல ஒரு நூறு என்றான். அப்புறம்தான் அது ஆயிரத்தி நூறு என்று தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 33. நல்ல காமெடி
  ஒரு நுற்றி ஹஹா  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 34. பல்பும் பஹ்ரைன்ல பலவிதமா கிடைக்கும்போல!

  ReplyDelete
 35. மனோவிற்கு மலையாளம் கற்றுக்கொடுத்த சேட்டன்.

  ReplyDelete
 36. இதுவே ஒரு மலையாளிப்பொண்ணா இருந்தா வேற மாதிரி சொல்லிக்கொடுத்திருக்கும். என்ன செய்ய, விதி வலியது.

  ReplyDelete
 37. மிக நல்ல காமெடி  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 38. கட்டங்கள் அழகு.

  ReplyDelete
 39. பெரிய பெரிய கட்டிடங்கள் பார்க்கவே அழகாயிருக்கின்றன.வாழ்த்துக்கள்.நல்ல படப்பிடிப்பு.

  ReplyDelete
 40. தமிழாளிAugust 23, 2012 at 1:47 PM

  சேட்டோவ் எவிட போயி, ஆலக்கனரில்லா வேகம் வா, வந்நு பதிவு போடு.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!