Wednesday, August 7, 2013

பெண்ணென்றால் ஹோட்டலும் இறங்கும்...!

கிர்ர்ர்ர்........கிர்ர்ர்ர்ர்ர்.....

கிர்ர்ர்ர்.......கிர்ர்ர்ர்....[[ போன்தான் ]] ஆத்தீ சவுதி நம்பரு [[யாரவது நம்மை போட்டு குடுத்துட்டானுவளோ]]


"ஹலோ...."

" ஹலோ மனோ...." எதிரில் பெண் குரல் அதுவும் "மனோ" என்று என் பெயரை சொல்லி அரபியில் பேசுது.

"நீங்க யாருன்னு தெரியலை ராங்க் நம்பர்ன்னு நினைக்கிறேன், என் பெயர் மட்டும் பாதிதானே தெரிஞ்சிருக்கு..."


"ஐயோ மனோ.....நான்....... ஹுதா [[அரபி பெயர்தான்]] பேசுறேன்..."

"அட நீயா ஹா ஹா ஹா ஹா ஹா உனக்கு எப்பிடி என் நம்பர் கிடைச்சுது ? "

"நம்பர் உன் கேர்ள் பிரண்டு தந்தாள் [[கூட வேலை செய்யும் பிலிப்பனியை கேர்ள் பிரண்ட் ஆக்கிட்டியா வெளங்கிரும்]]

"நான்தான் எந்த கஸ்டமருக்கும் என் நம்பர் குடுக்க கூடாதுன்னு சொல்லி இருந்தேனே..சரி அதென்ன என் பெயர் மனோஜ் அல்லவா நீ எதுக்கு மனோன்னு கூப்பிட்டே ?"

"அதெல்லாம் மாலீஸ் பண்ணி வாங்கிருவோம்ல, மனோஜ் என்பது அரபியில் மோசமான கெட்ட வார்த்தை யாருமே உனக்கு சொல்லலையா ? அதான் மனோன்னு கூப்பிட்டேன்..." [[ கெட்ட வார்த்தையா....? அதான் அரபி பய புள்ளைங்க அந்தப் பெயரை யூஸ் பண்ணாம இருக்காயிங்களா அவ்வ்வ்வ்வ்வ் இவளவு நாள் தெரியாம போச்சே மனுஷா...]]


"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...."

"ஈத் பெருநாளுக்கு பஹ்ரைன் வாறேன் ரூம் புக் பண்ணு எனக்கும் என் தங்கச்சிக்கும்"

"ஸாரி மேடம் ரூம் எல்லாம் ஆல்ரெடி புக்காகி ஃபுல்லாகிருச்சு, அல்லாமலும் ஈத் பெருநாள் சாதாரணமாக 40 தினாருக்கு [[ஆறாயிரம்]] கொடுக்கப்படும் ரூம் மூன்று நாட்கள் ஈத்"துக்கு மட்டும் ஒருநாளைக்கு 120 தினார் [[பதினேழாயிரம்]] தெரியுமில்ல ?"


"ஒ மை காட்......மனோ பிளீஸ் மனோ...."

"அப்போ என் ரூமுக்கு வாறியா...?

"கொன்னேப்புடுவேன்"

"சரி சரி ஏதும் ரூம் கேன்சல் ஆனால் உனக்கு ரெடி பண்ணி வைக்க சொல்றேன் ஆனால் 120 தினார் நியாபகம் வச்சுக்கோ..."


"மனோ மன்னு மன்னு பிளீஸ் பிளீஸ்...."

இவளவு கெஞ்சி கொஞ்சுனா விட்டுருவோமா என்ன......?

30 தினாருக்கு [[நாலாயிரம்]] ரூம் கொடுத்துட்டோமுல்ல [[ கம்பெனி உருப்பட்டுரும் விடுங்க ]] நேற்று ராத்திரியே நேரில் வந்து அட்வான்ஸ் மற்றும் எனக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு சென்ட் பாட்டல், பேரீச்சம் பழம் பாக்ஸ் ஒன்று பரிசு தந்துவிட்டு போனாள்....! [[எங்கேயோ புகையிற வாசம் வருதே]] பக்கத்துல என் அசிஸ்டென்ட் முறச்சிகிட்டு நிக்குது, ஓடிருலேய் மனோ......

நீதி : பெண்ணென்றால் ஹோட்டலும் இறங்கும்.

17 comments:

 1. ஹோட்டல் மட்டுமல்ல, நீரும் இறங்கி விட்டீர்,,,

  ReplyDelete
 2. ஒரு பதிவாவது இப்படி சுவாரஸ்யமாக
  அனைவரும் ரசிக்கும்படி நகைச்சுவை இழையோட
  பதிவு எழுத அதிக ஆசை.பார்ப்போம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நன்றாக உள்ளது தங்கள் பதிவு... ஹோட்டல் மட்டுமில்லை, நீங்களும் இறங்கிட்டீங்க... சென்ட், பேரீட்சை பழம்... நல்லா சாப்பிடுங்க....

  ReplyDelete
 4. இறங்கினது ஹோட்டல் இல்ல நீங்கதான்!!

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா ஆமா இது ஹோட்டல் முதலாளிக்கு தெரியுமா

  ReplyDelete
 6. ராஜி சொல்றது கரெக்ட் தாங்க....

  ReplyDelete
 7. புகையற வாசம் தெரியுது ஆனா அது ஒங்க ஊரு வரைக்கும் போய் சேரனும் கடவுளே..! மதுரைக்கு பூரிக்கட்டை போல உங்களுக்கு... ஒரு விறகு கட்டை.. நிச்சயம்.. ஹா... ஹா..!

  ReplyDelete
 8. ஆஹா இப்படி வேற சங்கதியா இருங்க வீட்டில் அருவாளைத்தீட்டச்சொல்லுவம் அண்ணியிடம் :))))) !

  ReplyDelete
 9. ச்சா...........என்ன வாழ்க்கடா இது?ஐரோப்பாவில குப்ப கொட்டுறோம் னு பீத்தல் வேற,ச்சா!!!!!!!!!

  ReplyDelete
 10. [[எங்கேயோ புகையிற வாசம் வருதே]] பக்கத்துல என் அசிஸ்டென்ட் முறச்சிகிட்டு நிக்குது, )பதிவு எழுதியதன் நோக்கமே அதுக்குத்தானே?

  ReplyDelete
 11. இளகிய மனம் கொண்ட மனோ வாழ்க! இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. முதலாலி விளங்கிடுவார்..!!:-)

  ReplyDelete
 13. பெண் என்றல் ஹோட்டல் மட்டும் அல்ல பிரபல பதிவரும் இறங்கிவிடுவர்

  ReplyDelete
 14. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்,..............ம்ம்ம்ம்ம்ம்....அதேதான்........இது ஆபீசர் கமெண்ட்.....

  ReplyDelete
 15. அண்ணா... நீங்க இறங்கினது அண்ணிக்குத் தெரியுமா???????

  ReplyDelete
 16. //ஹா ஹா ஹா ஆமா இது ஹோட்டல் முதலாளிக்கு தெரியுமா //

  அவருக்கு தெரிஞ்சா என்ன, தெரியாட்டி என்ன, வீட்டுல தெரியுமா.... அது தான் கேள்வி!

  ReplyDelete
 17. பெண் என்றல் ஹோட்டல் மட்டும் அல்ல பிரபல பதிவரும் இறங்கிவிடுவார்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!