"அண்ணே ஒரு பஞ்சாயத்து....."
ஆஹா இன்னைக்கு எவன்கிட்டே மாட்டப்போறேனோ தெரியலையே மக்கா.....
"அண்ணே நான் இவன்கிட்டே ரெண்டு உளுந்து வடை வாங்கிட்டு வரச்சொன்னேன் ஆனால் இவன் ஒன்னுதான் வாங்கிட்டு வந்துருக்கான் என்னன்னு கேளுங்க"
அடுத்தவன் வடை பொட்டலத்தை பிரித்து "அண்ணே இங்கே பாருங்க, இது ஒரு வடை இது இன்னொரு வடை" ரெண்டு பீசை காட்டுகிறான்,
"அண்ணே ஒன்னு இன்னா இருக்கு இன்னொன்னு எங்கே ?"
"இன்னொன்னு இன்னா இருக்கு" என்று அடுத்ததை தூக்கி காட்டுகிறான்.
நாட்டாமைக்கு பிரஷர் ஏறுகிறது.....
"அண்ணே....இது ஒரு வடை ஓகே, இன்னொரு வடை எங்கே ?"
டென்ஷனான நாட்டாமை "இன்னொரு வடை இன்னா இருக்குடா கொய்யால கொன்னேப்புடுவேன்..."
நாட்டாமை கையில் இருந்து வடையை பிடுங்கி காட்டி...
"நீயெல்லாம் ஒரு நாட்டாமையாடா ? சொல்லு நீயெல்லாம் ஒரு நாட்டாமையா ?" [[என்னாது டா'வா ?]]
ஆஹா....என்னமோ வில்லங்கம் இருக்கு போலேயே....."நாட்டாமைக்கும் வடைக்கும் என்னடா சம்பந்தம்...?"
"இந்த வடையில ஓட்டை இருக்கு அதான் உளுந்து வடை, அந்த வடையில ஓட்டை இல்லை அதனால அது வடை இல்லை...நாட்டாமையாம் நாட்டாமை போடா அங்கிட்டு..." [[அண்ணே'ன்னு கூப்பிட்டவன் கடைசில கழுவி ஊத்திட்டானே...]]
"அவ்வ்வ்வ்வ்"
வடையை சுட்டவன் என் கையில அம்புட்டாம்னா கொன்னேப்புடுவேன், அந்த ஒரு வடைக்கு மட்டும் ஏன்டா ஓட்டை போடாம விட்டே...? ச்சே நாட்டாமையை கேவலப் படுத்திட்டானே...!
ReplyDeleteஹா..ஹா... என்னிக்கி காக்கா பாட்டிகிட்டேருந்து வடையை தூக்கிட்டு போனுச்சோ அன்னிக்கி ஆரம்பிச்சது இந்த வடை பிரச்சனை... கடைசில நாடாமை வரை வந்து நிக்குது... :-)
பஞ்சாயத்து செம...!
ReplyDeleteவடையால் வீழ்ந்த பதிவர்கள் லிஸ்டுல அவரும் சேர்ந்துட்டாரு போல??
ReplyDeleteவெள்ளிகிழமை லீவுன்னா ரெண்டு கட்டிங் வுட்டுட்டு குப்ர விழுதடிச்சி தூங்க வேண்டியதுதானே. மகா மொக்கையா ஒரு பதிவ போட்டு எங்க கழுத்த வேற அறுக்கணும் ?
ReplyDeleteஅது சரி ஓட்டை இல்லன்னா அது வடை இல்லையா - வக்கீல்களின் வாதம் சரி - நாட்டாமை தீர்ப்பு சொன்னதும் சரி - அதுக்காக கழுவி ஊத்தறதா - கிராமெமல்லாம் கெட்டுப் போச்சுப்பா - நல்வாழ்த்துகள் மனோ - நட்புடன் சீனா
ReplyDeleteடேய் ராஸ்கல் ;-))
ReplyDeleteஅண்ணே....
Deleteகடைசியில் வடைச்சண்டையில் நாட்டாமையும் மாட்டிக்கிட்டாரே:))))
ReplyDeleteவடை பிரச்சனை உங்க ஊரு வரைக்கும் வந்தாச்சா..... :)))
ReplyDeleteஆபீசர்....நீங்க சொல்லுங்க இவனை தூக்கிப்போட்டு மிதிக்கிறேன் ஹி ஹி.....
ReplyDeleteஅண்ணே அருமையான பஞ்சாயத்து...
ReplyDeleteநடத்துங்க... நடத்துங்க...