Saturday, September 28, 2013

பிரபல பிராப்ள பதிவர்கள் கடும் அதிர்ச்சி...!!!???

நீ கசக்கி எறிந்த காகிதத்தை 
இன்னும் பத்திரமாகதான் வைத்திருக்கிறேன் .அதை கிழித்து ஏறிய மனமில்லை உனக்கு என்ற நம்பிக்கையுடன் 

..######நான் எழுதி கொண்டிருக்கும் *எங்கக்கா மகளே இந்து* என்கிற கவிதை தொகுப்பில் இருந்து...

அஞ்சா சிங்கம்.


நாவல் சீசன் எல்லாம் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் திரைப்பட இயக்கம் ஆரம்பம்.

க்ளோசப்பில் அவள் காதலை மறுத்து செல்ல, நாயகன் மிட்ஷாட்டில் சோகத்துடன் திரும்பிப் பார்க்க, அவள் மிட்லாங் ஷாட்டில் நடந்து செல்கிறாள். லாங் ஷாட்டில் வில்லன் அவளை மானப்பங்கப்படுத்த காத்திருக்கிறான். இது தான் சீன் நம்பர் 46A.நான் எடுத்துக் கொண்டிருக்கும் "பாப்பா போட்ட தாப்பா" திரைப்படத்தில் இருந்து

# ஆகிறேண்டா நானும் இயக்குனர்...

ஆரூர் மூனா.
சென்னை, ஈரோடு, மதுரை, கோவை, திருவாரூர், பஹ்ரைன்னு தேடி, தேடி கொலை பண்ணி இருக்கீங்களே!! ஏன் இதுப் போல பண்ணீங்க!?

பழகுன பாசத்துக்காக, மொக்கை கவிதையை ஆஹா! ஓஹோன்னு புகழலாம். டப்பா பட விமர்சனத்துக்கு எங்களை காப்பாத்திட்டீங்கன்னு ஆச்சர்யப்படலாம். புடிச்ச கட்சி தலைவரை திட்டினாலும் கூட நடுநிலையான அலசல்ன்னு கமெண்ட் போடலாம். ஆனா, இப்போ, புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையா, போன வாரம்லாம் அரே சம்பா!ன்னு இம்சை பண்ணானுங்க. இந்த வாரம் நாலு லைன் எழுதிட்டு, எழுதிகொண்டிருக்கும் 

********** நாவல்ல இருந்துன்னு கொலையா கொல்றானுங்க....,

விரைவில் தமிழகம் ஃபுல்லா தினசரிகள்ல வரப் போற ”இம்சைகள் அழிக்கப்பட வேண்டும்” தொடரிலிருந்து...

காந்திமதி.

 [[ஆமாமா ஒரு பயலையும் உயிரோடு விட்டுறப்டாது]]

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சையாக தெரிந்த அந்த காட்டில் ஒற்றையாய் நின்றிருந்த ஓலைக்குடிசையில் சிவப்பு விளக்கு ஒன்று எரிய, மஞ்சள் சேலை உடுத்தியிருந்த அவளை வெள்ளையன் என்ற அந்த வெள்ளையத்தேவன் வாரியணைத்து முத்தமிட்டபோது அந்த கருப்பி என்ற கருப்பாயியின் கன்னம் சிவப்பான அதே நேரம் குடிசையின் கூரையிலிருந்து சொயிங் என்று பறந்தது இரண்டு வெள்ளைப் புறாக்கள்..

#தற்போது எழுதிகொண்டிருக்கும் பறந்துவா பஞ்சவர்ணக்கிளி என்ற கிராமத்து கில்மா நாவலில் இருந்து ...

ஆவிப்பா.

அவள் ஸ்கூட்டியை வேகமாக ஸ்டார்ட் செய்து என் பைக் அருகே வந்தாள்... ஸ்கூட்டியை விட்டு இறங்கி நேரே என்னிடம் வந்து என் கையை பிடித்து இழுத்தாள்.

அவள் இழுத்த வேகத்தில் அவள் மீது விழுந்தேன்...தாங்கிப் பிடித்து என் சட்டையை பிடித்து இழுத்து நச்... நச்... என... முத்தம்....

என்னுடைய காதல் வாகனம் என்ற கிரைம் நாவலில் இருந்து சில வரிகள்...

தமிழ்வாசி பிரகாஷ்.

அவள் இடுப்பில் இலையாடை தரித்திருந்தாள்,மார்கச்சையாக பட்டும் படாமல் தாமரைஇலை,அவளுக்கு பெரிய கண்கள்.அந்த கண்கள் அவள் கைகள் பற்றியிருந்த வில்லின் மையத்தில் இழுத்துபிடிக்க பட்டிருக்கும் அம்பில் பதிந்திருந்தன.அவள் குறிபார்த்த திசையில் காதல் மொழி பேசிகொண்டிருந்த இரண்டு சிட்டுகுருவிகள் மரக்கிளையில் அமர்ந்திருந்தன.

விஷ்க்........

சிட்டுக்குருவிகள் திசைக்கொண்றாக பறந்தன,மரக்கிளையில் ஒரு பாம்பின் தலை தைக்கப்பட்டிருந்தது.

எழுதும்"மலையரசி" நாவலில் இருந்து.

மணிவண்ணன்.


இந்தவொரு நொடிக்குத்தன் ஏங்கிக்கொண்டிருந்தான். ஏற்பட்ட இருளில் ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றிய இதேநொடி. வெளிச்சப்புள்ளி ஒன்று நூறாகி, நூறு பல்லாயிரமாய்ப் பெருகப் பெருக, மோன நிலையை எய்துகொண்டிருந்தான்.மௌனங்கலைக்க ஒவ்வா மோனம்.

எனது "எல்லா பாலும் சிக்சர்" என்ற நாவலிலிருந்து.

இலக்கிய செம்மல் வெளங்காதவன்.


சாவனும்னு முடிவெடுத்துட்டா நாங்க மலையா இருந்தாலும் சரி, புளியமரமா இருந்தாலும் சரி, டாஸ்மாக் இருக்குற ஹைவேயா இருந்தாலும் சரி......

பதிவர்களுக்கு குட்மானிங் சொல்லாம சாவமாட்டோம்.....

"விஜய் படத்தை பார்த்துட்டு பன்னிகுட்டியின் ரியாக்ஷன் என்ன...?" என்று நான் எழுதும் புதிய நோவல் ச்சே நாவலில் இருந்து ஒரு பகுதி....

நாஞ்சில்மனோ.
---------------------------------------------------------------------------

டிஸ்கி : ஏம்யா ஏம் இம்புட்டு கொலைவெறியில கெளம்பியிருக்கீங்க ? போயி மலையில இருந்து குதிலேய் மக்கா'ன்னா ஓடிபோயி குதிக்கப் போறேன் அதவிட்டுட்டு, நாவல் எழுதுறாயிங்களாம், தொடர் எழுதப் போராயிங்களாம், டைரக்ஷன் பண்ணப் போறாயிங்களாம் அவ்வ்வ்வ்....
-------------------------------------------------------------------------

நான் இன்று வாசித்த ஒரு செய்தி.....


அமெரிக்காவில் கணவன் வெளிநாடு சென்று திரும்பியபோது, ஆசையாக ஓடிவந்து கட்டிபிடித்த மனைவி, கணவனிடம் இருந்து வந்த ஷாக்கிங்கால் தூக்கி வீசப்பட்டாள்....! [[இது நாங்க வருஷா வருஷம் பார்க்குறதுதானேன்னு யாரோ முனுமுனுப்பது கேக்குது]]25 comments:

 1. நாவல் கமடி சிரிப்பு வெடிதான் அண்ணாச்சி :)))

  ReplyDelete
 2. பாவம் அமெரிக்கா அம்மணி:)))

  ReplyDelete
 3. ஹா... ஹா... கலக்கல் தொகுப்பு...

  ReplyDelete
 4. இந்த கொடுமையான நாவலை படிப்பதுக்கு பதில் தும்பபூவில் தூக்குபோட்டு சாகலாம்.
  #நான் எழுதும் "என்ன வாழ்க்கைடா இது" நாவலில் இருந்து. . . .,

  ReplyDelete
 5. வாரம் ஒரு டாபிக் எடுத்து கொல்றாங்கண்ணா நம்ம பசங்க.

  ReplyDelete
  Replies
  1. கொல்லட்டும் கொல்லட்டும். நம்ம பிள்ளைங்கதானே....

   Delete
 6. டேங்க்ஸ் பார் த பப்ளிக்குட்டி அண்ணே!! ;-)

  ReplyDelete
  Replies
  1. எலேய் என் பெயர் நாஞ்சில் மனோ......பப்ளிக்குட்டி இல்லை ஹி ஹி....

   Delete
 7. நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது!நடப்பைவையும் நன்றாகவே நடக்கின்றன!!நடக்கப் போவதும் நன்றாகவே நடக்கும்!!!(கீதோபதேசம்,ஏன்னுல்லாம் கேக்காப்பிடாது)ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
 8. கலக்கி இருக்கீங்க போங்க.. அதுவும் பாப்பா போட்ட தாப்பா...ஹி..ஹி...

  ReplyDelete
  Replies
  1. கொலை கொலையா முந்திரிக்கா.....

   Delete
 9. அசத்தலா இப்படியும் பதிவு போடலாம்னு தெரிய வைச்சிட்டீங்க சகோ!..:)

  உங்களுக்கும் இங்கு நீங்கள் பகிர்ந்துகொண்ட சக பதிவர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. பதிவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. நம்ம எழுதன நாவல வச்சு ஒரு பதிவே தேத்திட்டாரே சித்தப்பு

  ReplyDelete
  Replies
  1. இதுதான் சந்துல சிந்து பாடுறதோ ஹா ஹா ஹா ஹா...

   Delete
 12. அரே ஓ சாம்பா

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் முதல்லே இருந்தா.......? ஒடுலேய் மனோ.....

   Delete
 13. எப்பப்பா, இனி இதை வச்சே கொஞ்ச நாள் ஓடுமே!

  ReplyDelete
 14. நான் என் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன், தூரத்தில் சில கோழிகள் அங்குமிங்கும் விளையாடிக்கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் வேகத்தைக் குறைத்தேன். நெருங்கும் சமயத்தில் எல்லா கோழிகளும் தெறித்து ஓட ஒரே ஒரு கோழி மட்டும் கடைசியாக ஓடி முன் சக்கரத்தின் முன்னே நின்றது. நான் லாவகமாக வண்டியைத் திருப்பி தப்பினேன். சிறு வயதில் சைக்கிளில் சென்று ஒரு கோழியைக் கொன்ற அனுபவமும் அதற்குப்பின் பல நாட்கள் அந்தத் தெரு வழியே போகாத அனுபவமும் உண்டு என்பது என் மனதில் வந்துசென்றது.

  நான் எழுதிக்கொண்டிருக்கும் கோழிக்கிறுக்கல்கள் என்ற நாவலிலிருந்து...

  ReplyDelete
 15. கலக்கலான தொகுப்பு அண்ணா...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!