Wednesday, September 4, 2013

பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்....!


@ இது எங்கள் ஹோட்டல் ரூல்ஸ் இதை மீறி உங்களுக்கு என்னால் ஏதும் செய்ய இயலாது என்று அழுத்தி சொல்லும்போது பதிலுக்கு அவர்கள் "தேங்க்யூ" என்று அழுத்தி சொல்லும் வார்த்தைக்கு அர்த்தமென்ன ?

@ உலகமே அழிந்த பின் ஒருத்தன் மட்டும் உயிரோடு இருப்பான், கனவில் [[ஹி ஹி]]

@ நரகத்தில் அமலாபால்'க்கு தண்டனை - ஓமகுச்சி நாராயணனுடன் நடனம் [[பேச்சு பேச்சாத்தான் இருக்கனுன் ஆமா]]

@ சொர்க்கத்தில் ரஜினிக்கு சந்தோசம் - சரோஜாதேவியுடன் நடனம் [[சரீ சரீ]]

@ ஆசாரி வீட்டு கதவு பேந்து [[உடைந்து]] இருக்கும், ஏசி மெக்கானிக் வீட்டு ஏசி உயிரே இல்லாம இருக்கும், என்று ஒரு அரபி நண்பன் சொல்றான் ஆக நாம வாத்தியார் வீட்டு பிள்ளை மக்குன்னு சொல்றோம் இல்லையா?

@ பேன்ட் அணிந்து பனியன் அணிந்து சட்டையை இன் செய்து, டை கட்டிவிட்டு, கோட்டை உடம்பில் அணிந்து நிலை கண்ணாடியில் திரும்பி பார்த்தால் சும்மா ஜிவ்வுன்னு இருக்கே, மனசும் உடம்பும் சும்மா பரபர என்று சுறுசுறுப்பாக எகத்தாளம் இடுகிறதே....!!!

அதே போல வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்து வேஷ்டியை தூக்கி கட்டியதும் மனசு இன்னொன்றையும் தேடுதே [[சத்தியமா அருவா இல்லை ஹி ஹி]] கண்டாங்கி சேலை கட்டிய மனைவி [[கண்டாங்கி சேலையை கண்டாலே ஒடுறாயிங்கலெய்]]


@ ஹனிமூன் கொண்டாட யாராவது பஹ்ரைன் வருவாங்களா என்ன ? இங்கே [[எங்க ஹோட்டல்ல]] ஒருத்தன் வந்துட்டு "கொல்றாயிங்க கொல்றாயிங்க"ன்னு கத்திகிட்டே ஓடுறான் கொய்யால, ஹனிமூன் கொண்டாடனும்னா இந்தியா, ஐரோப்பா, அமேரிக்கா பக்கம் போகவேண்டியதுதானேன்னு பர்சனலா சொல்லி விட்டுருக்கேன் பாவம்....!

@ சரக்கடிச்ச மாதிரி நடிக்க [[குடிக்க]] தெரியாத நடிகர்கள் [[டைரக்டர்கள்]] தெரிந்து [[அறிந்து]] கொள்ளவேண்டியது என்னான்னா.....நேரே கன்னியாகுமரி கடலுக்குள் போயி இடுப்பளவு கடலில் நிற்கவும், அலைகள் வந்து மோதும்போது நீங்கள் எப்படி அசைகிறீர்களோ [[தள்ளாடுகிரீர்களோ]] அதுதான் நேச்சுரல் சரக்கடிச்சுட்டு நடப்பது [[ஹி ஹி பத்த வச்சிட்டியே பரட்டை]]

18 comments:

 1. தீராதைய்யா தீராது! ஹா ஹா ஹா

  ReplyDelete
 2. //இது எங்கள் ஹோட்டல் ரூல்ஸ் இதை மீறி உங்களுக்கு என்னால் ஏதும் செய்ய இயலாது என்று அழுத்தி சொல்லும்போது பதிலுக்கு அவர்கள் "தேங்க்யூ" என்று அழுத்தி சொல்லும் வார்த்தைக்கு அர்த்தமென்ன ? //
  ” நீங்களெல்லாம் நல்லா வருவீங்க” -இதைத்தவிர வேறென்னவாக இருக்கும்?

  ReplyDelete
 3. //நேரே கன்னியாகுமரி கடலுக்குள் போயி இடுப்பளவு கடலில் நிற்கவும், //
  ஆள்களை அப்படியே பரலோகத்திற்கு பார்சல் அனுப்ப வழி சொன்னா மாதிரியே இருக்கே! ஹா ஹா ஹா

  ReplyDelete
 4. எப்படி எல்லாம் யோசிக்கிறாருயா

  ReplyDelete
 5. பாவம் ஓமக்குச்சி நாராயணன் அமலபாலுடன் நடினம் ஆடும் நிலை வந்தால்!:))))))

  ReplyDelete
 6. ரொம்பத்தா கொழுப்பு எகிறி கிடக்கு போல. அமலா பாலை ஏன் நரகத்துக்கு அனுப்பனும்? ஓமகுச்சி நரசிமனுடன் டான்ஸ் வேறா? அந்த புள்ள மட்டும் படிச்சா நிச்சயம் பக்ரைன் வந்து ஒன்னிய ஒதைக்காம விடாது.
  பச்சையா போன்ன்டு தின்னு மனோ! கொழுப்பெலாம் கொறஞ்சிடும்.

  ReplyDelete
 7. கற்பனைகள் அனைத்தும் அற்புதம்
  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  (அமலாபாலை நினைக்கத்தான் பாவமாக இருந்தது )
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. கன்யாகுமரியில் அபப்டி ஒரு பயிற்சியா?ஹ்ம்ம் நல்லா வருவிங்க

  ReplyDelete
 9. வணக்கம் அண்ணா

  தங்கள் வலைப்பூவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
  நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே..


  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7179.html

  நன்றி...

  நேசத்துடன்
  சே.குமார்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா என்னையும் பிரபல வதிவர்கள் வரிசையில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி....

   தாமதத்திற்கு மன்னிக்கவும்...

   Delete
 10. ஹஹஹா ஆவி ரீச் ஆயிடுச்சு அண்ணே..!

  ReplyDelete
 11. உங்கள் தளத்தில் இணைந்து விட்டேன்  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!