Wednesday, September 18, 2013

கேரளா மன்னர்களுக்காக வைராக்கியமாக நின்ற தமிழ் தூண்கள்...!

திருவனந்தபுரம் பஸ் நிலையமும் ரயில்வே ஸ்டேசனும் இப்போது இருக்கும் இடத்தில் முன்பு ஒரு நாளில் செந்நாய்கள் நிறைந்த காட்டுப் பகுதி ஆகும், கள்ளர்களின் கூடாரமாக திகழ்ந்த காட்டுப் பகுதியும், பெண்களை கற்பழித்து கொன்று வீசும் திகில் பிரதேசமாக இருந்த அந்த காட்டை சூப்பரான சிட்டியாக மாற்றியவர் ஒரு தமிழர்....! திருவனந்தபுரத்தின் முந்தய பெயர் : தம்பானூர்...!

கேரளா இடுக்கி அணை கட்டப்படும் போது, காலில் ஏதோ தட்டுபட, தோண்டி பார்த்தால், இந்த இடத்தில் அணை கட்டலாம் என்ற கல்வெட்டு கிடைத்திருக்கிறது, அணை கட்டலாம் என்று முன்பே கண்டு பிடித்தவரும் அதே தமிழர்தான்...! அவர் பெயர்.....

சர் சி பி இராமசுவாமி 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் அக்டோபர் 8, 1936 - ஆகஸ்ட் 16, 1947

அதேபோல திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனை இருக்கும் இடமான பத்மநாபபுரம் என்ற பெயர் வர [[சூட்ட]] காரணமென்ன ? இந்த லிங்கை தட்டிப் பாருங்கள்...! அவரும் ஒரு தமிழன்தான்...!
---------------------------------------------------------------------------------------------------------

பஜாரில் கால்குலேட்டர் வாங்கும் போது அது சரியாக இயக்கத்தில் உள்ளதா என்று அறிய அதில் 12345679 என்ற எண்ணை 8 ஆல் பெருக்கிப் பாருங்கள் இப்பொது விடை 98765432 என்று வந்தால் அது நல்ல கால்குலேட்டர் என்று அர்த்தம்! செக் பண்ணிப் பாருங்கள்! 

செல்போனை சட்டைப் பாக்கெட்டில் வைப்பவர்கள் அதன் முன் பகுதி வெளியில் பார்த்த மாதிரி வைத்தால் போனில் இருந்து வரும் கதிர்வீச்சு பாதிப்புக்களை குறைக்கலாம். பொதுவாக சட்டைப் பாக்கெட்டில் வைப்பதை தவிர்த்தல் நலம்.

நன்றி : தளிர் 
----------------------------------------------------------------------------------------------------------

ஆண் புத்தி பெண் புத்தி பற்றி ஒரு காமெடி....காமெடிதான் ஆமா....

ஸ்கூட்டியில் வந்த இளம் பெண்ணும் பைக்கில் வந்த ஆணும் நேருக்கு நேராக மோதிவிட, ஆண் பயங்கரமாக அவளை திட்டுகிறான், அவள் சாந்தமாக பேசுகிறாள்,  கேட்கிறாள், கெஞ்சுகிறாள், ஆனாலும் இவன் விடாமல் திட்டுகிறான்.

அவள் பொறுமையாக காத்திருந்து விட்டு, இவன் திட்டி சோர்ந்தபின் மறுபடியும்  கேட்கிறாள்.

மனம் இளகி போன இவன், "சரி நான் மன்னித்துவிட்டேன், ஆனால் ஒரு கண்டிஷன்"

"என்ன சொல்லுங்க ?"

"நாம் சமாதானம் ஆகிவிட்டோம் இல்லையா அதனால என்கிட்டே ஒரு ஷாம்பெயின் பாட்டல் இருக்கு அதை ரெண்டு பெரும் பாதி பாதி குடித்து என்ஜாய் பண்ணவேண்டும் சரியா ?"

"சரி ஓகே நான் ரெடி" பெண் 

பாட்டலை திறந்து ஆண் பாதியை குடித்துவிட்டு அவளுக்கு கொடுக்குறான். ஆனால் அவளோ....

"ஏன்டா நாதாரி நன்னாறிப் பயலே குடிச்சுட்டாடா வண்டி ஓட்டுறே ? குடிச்சுட்டு வண்டி ஓட்டுனதும் அல்லாமல், என் மேலயும் வந்து மோதி இருக்கே ராஸ்கல்...."

ஆண்....

"அய்யய்யோ மேடம் மன்னிச்சுருங்க மன்னிச்சுருங்க....போலீசை கூப்பிட்டுறாதீக...."

"நீ ஷாம்பையினை திறந்ததுமே போலீசுக்கு போன் பண்ணிட்டேன்டா டுபுக்கு...."

16 comments:

 1. //இப்பொது விடை 98765432 என்று வந்தால் அது நல்ல கால்குலேட்டர் என்று அர்த்தம்!//
  அதேபோல், -25ன் ஸ்கொயர்ரூட் போட்டால், E என்று காட்டினால், அது சரியான கால்குலேட்டர் என அறியலாம். ஏனெனில், -25க்கு ஸ்கொயர் ரூட் கிடையாது. ERROR என்பதற்கு E என்று வரும்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல தகவல் நன்றி ஆபீசர்....

   Delete
 2. பாஸ், இந்த காமெடி படத்துலையே வந்திடுச்சு.. மதன்பாப் நடிச்சிருப்பார்..விக்ரமன் சார் படம்..

  ReplyDelete
  Replies
  1. அட அப்பிடியா ? எனக்கு ஒரு மலையாளி நண்பன் சொன்னது இது.

   Delete
 3. படம்: பிரியமான தோழி.

  கேரளா பற்றி அளித்த தகவல்கள் பயனுள்ளவை...

  ReplyDelete
 4. பஜாரில் கால்குலேட்டர் வாங்கும் போது அது சரியாக இயக்கத்தில் உள்ளதா என்று அறிய அதில் 12345679 என்ற எண்ணை 8 ஆல் பெருக்கிப் பாருங்கள் இப்பொது விடை 98765432 என்று வந்தால் அது நல்ல கால்குலேட்டர் என்று அர்த்தம்! செக் பண்ணிப் பாருங்கள்!//

  இதையே 9ஆல் பெருக்கினால் 111111111 என்று வரும். இப்படித்தான் நான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன்.... செய்தும் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 5. கேரளா பற்றிய தகவல் புதிது பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி!

  ReplyDelete
 6. இன்னும் தம்பானூர் என்று ஒரு எரியவே இருக்கு . வேலுத்தம்பி தளபதி தமிழரா

  ReplyDelete
 7. தகவல் பகிர்வுகள் அருமை! நன்றி!

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு...
  காமெடி... அருமை..

  ReplyDelete
 9. கேரளா பற்றிய அருமையான பகிர்வு நன்றி

  ReplyDelete
 10. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்
  http://blogintamil.blogspot.com/2013/09/5.html?showComment=1379718612357#c7139904404420736012
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!