“என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால்: என் நேர்மைக்கும் நான் நேசிக்கும் என் தொழிலுக்கும் களங்கம் விளைவித்த ஆபத்தான சவாலான அதை “சத்தியம் ஒரு நாள் நிச்சியம் ஜெயிக்கும் என்ற என நம்பிகையினாலும் தெய்வத்தின் அருளாலும் ஜெயித்தேன் “ என்கிறார் நம்பி நாராயணன்.
எதிர்பாராத நேரத்தில் சவால்கள் எழுவதும் அதை எதிர்கொண்டு வெற்றிகொள்வது என்பதும் பெரிய நிருவனங்களில், அல்லது துணிவுடன் எதிர்நீச்சல் போட்டவர்களின் வாழ்க்கையில் மட்டுமில்லை. ஒரு தனிமனிதன் வாழ்க்கையிலும் நிகழக்கூடியது என்ற நிதர்சனமான உண்மையை புரிய வைக்கிறது இந்த விஞ்ஞானியின் வாழ்க்கை.
நம்பி நாராயணன் ஒரு விண்வெளியியல்விஞ்ஞானி.
ஏரோநாட்டிகல் எஞ்ஞினியரிங்கும், ராக்கெட் சையின்ஸும்படித்த பின் இந்திய விண்வெளித்துறையில் (ISRO)அப்துல் கலாம் சதிஷ் தாவன் போன்றவர்களுடன் 1970களில் பணியாற்றியவர். திரவ எரிபொருளின் சக்தியில் இயங்கும் ராக்கெட்மோட்டர்களை. எந்த வெளிநாட்டின் உதவியுமில்லாமல் 1970லேயே உருவாக்கியவர். மிக பெரிய வல்லரசுநாடுகள் மட்டுமே அறிந்தந்திருந்த அதிவேக ராகெட்களை செலுத்த தேவையான கிரையோஜினிக் என்ற திரவ எரிபொருளை உள் நாட்டிலியே தயாரிக்க ரஷ்ய பிரெஞ்ச் அரசு நிறுவனங்களுடன் 20 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்து அதை கற்றவர்.செய்யும் தொழிலையே தெய்வமாக நினைக்கும் இந்த மனிதருக்கு தன் தொழிலைத்தவிர வேறுஎதுவும் தெரியாது.
1994லில் ஒரு நாள் திருவனந்தபுரத்தில் இவர் வீட்டுக்கு வந்த போலீஸ் படைஇவரை கைது செய்கிறது. மறுநாள் தலைப்பு செய்திகள் சொன்ன தகவல் இவர் ராக்கெட் ரகசியங்களையும் ராணுவ ரகசியங்களையும் பாக்கிஸ்தானுக்கு விற்கிறார். என்பது.இன்று போல் செய்திகளை துரத்தும் டிவி சேனல்கள் அன்று இல்லை. ஆனால் மாநில மற்றும் தேசிய நாளிதழ்களில் தொடர்ந்து ஊகங்களின் அடிப்படையில் எழுந்த பல செய்திகள் விஸ்வரூபம் எடுத்து நம்பி நாராயணணையும், அவரது சகா சிகுமாரையும் தேசதுரோகிகளாக வர்ணித்தன.
மலையாளத்திலும் தமிழிலும் பல வாரபத்திரிகைகள் தொடர்களில் உண்மை”கதைகளை” வெளியிட்டன. ஒவ்வொருமுறையும் கோர்ட்டுக்கு அழைத்துசெல்லும்போது துரோகி என முகத்தில் குத்தி காரி உமிழ்ந்தனர் சிலர்... சிறையில் ”உன்னை சரியாக நடத்தாத மேலதிகாரியை மாட்டிவிடு” என்று கொடுத்த அட்வைஸை ஏற்காததால் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யபட்டார்.. இரண்டாண்டு நீண்ட பலவிசாரணைக்கு பின் சிபிஐ 1996ல்அறிவித்த முடிவு ”இது பொய்யாக புனையபட்ட ஒரு வழக்கு. வழக்கை தொடர்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், அவர்களுக்கு கோர்ட்மூலம்தகுந்த தண்டனையும் தரபடவேண்டும்”
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் 1998ல் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கபட்டார். ஆனாலும் மாநிலபோலீஸ் கேரள உயர்நீதிமன்றத்திற்கு போனது. அங்கும் வழக்குதள்ளுபடி செய்யபட்ட நிலையில் நம்பி நாராயணன் சந்தித்த அடுத்த சோதனை மாநில அரசு முழுவழக்கையும் மீண்டும் மாநிலபோலீஸ் மறுவிசாரண செய்ய இட்ட உத்தரவு.
ஏன் இவருக்கு இது நேர்ந்தது.? போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செல்வாக்குள்ள பணக்கார்களும் வில்லனின் கூட்டாளியாக கூட்டு சேர்ந்து அப்பாவி கதாநாயகனை பலிகடாவாக்கி தங்கள் பிரச்னைகளை தீர்த்துகொள்ள முயலும் தமிழ் கிரைம் திரில்லர் சினிமா திரைக்கதையின் உண்மைவடிவம்தான் இவரது கதை. தனது உயர் அதிகாரியை பழிவாங்க ராணுவ ரகசியம் கடத்தல் என ஒர் கற்பனை செய்தியை கசிய விட்ட போலீஸ் அதிகாரி, ஒரு பெரிய பத்திரிகை குடுமபத்தில் எழுந்த வாரிசு போரட்டத்தில் தனக்கு உதவாத அதே உயர் போலீஸ் அதிகாரியை வஞ்சம் தீர்க்க காத்திருந்த செல்வாக்குள்ள ஒருதினபத்திரிகையின் அதிபர், பொறியாக இருந்த இந்த பிரச்சனையை பெருந்தீயாக வளர்த்து, ”தேசத்ரோகிகளை காப்பற்ற முயல்கிறார் இந்த முதல்வர்” என சொல்லி அரசியல் பிரச்னையாக்கி. முதல் அமைச்சரையே பதவியிழக்க செய்த அரசியல்வாதிகள் என சேர்ந்த ஒரு கூட்டணியின் வெற்றி இந்த மனிதரின் வாழக்கையை பகடைகாயாக்கி ஆடியதில் பெற்றது..
வழக்கு நடைபெற்ற காலங்களில் நாரயணன் அடைந்த துயரங்களின் உச்சம் மன அழுத்தினால் அவர் மனைவி தன் செயல் திறன்களை இழந்து நின்றது. ”என்னால் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை. நான் தேசதுரோகி என என் காதுபடவே பேசுவார்கள்” என்கிறார் நாராயணன். நிரபராதி என அறிவிக்கபட்ட பின்னரும் அரசின் மறு விசாரணை அறிவிப்பினால் வெகுண்ட நம்பி சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார். அங்கும் கேரள அரசின் அணுகுமுறையை மிக கடுமையான வார்த்தைகளினால் விமர்சித்து கடிந்துகொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது. உச்சநீதிமன்றம். அரசு பதவி திரும்ப கிடைத்தாலும் கெளரவங்களை இழந்தார்.
மூத்த விஞ்ஞானியான இவருக்குஅதிகாரமில்லாத நிர்வாக பணிகளே தரபட்டது. மனிதனை சந்திரனுக்கு அனுப்ப இன்று திட்டமிடுகிறது இந்திய விண்வெளிதுறை. அதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்க ,உழைத்த , விருதுகள் வழங்கபட்டிருக்கவேண்டிய இந்த விஞ்ஞானி, எந்த கெளரவவும் இல்லாமல் 2001ல் பதவி ஓய்வு பெற்றார்.பொய் வழக்கு போட்டதற்காக குற்றம் சாட்டபட்டபட்டிருந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும், அந்த போலீஸ் அதிகாரிகள் பதவிஉயர்வு பெற்றார்கள். அதில் ஒரு மூத்த அதிகாரி ஓய்வுக்கு பின்னரும் பெரிய அரசு பதவி அளிக்கபட்டு கெளரவிக்கபட்டிருக்கிறார், கிளைமாக்ஸாக சிபிஐயின் பரிந்துறையின் பேரில் இந்த பொய்வழக்கை போட்ட போலிஸ் அதிகாரிகளின் மீது தொடர்ந்த வழக்கை அரசு கைவிட்டது. சொன்ன காரணம் “பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். நீண்ட காலமாகிவிட்டது.”
தவறாக குற்றம்சாட்டபட்டு பொய்வழக்குகள் போடபட்டு தாமதமாக கிடைத்த நீதியினால் தன் வாழ்க்கையின் வசந்தத்தை இழந்து போன நம்பி மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்த வழக்கில் அது கேரள அரசுக்கு இட்ட ஆணை நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய். கொடுக்க வேண்டும் என்பது. ஆணை இடபட்டது 2001ல். 2012 வரை கேரள அரசு அசையவில்லை.. வேறு எந்த மனிதனும் வீபரிதமான முடிவுகளை கூட எடுத்திருக்க கூடும் என்ற நிலையில் நம்பி நம்பிக்கையுடன் உயர் நீதிமன்றத்தை அணுகியதில் ”உடனடியாக 10 லட்சம் கொடுங்கள். பிரச்னைகளை பிறகு பேசுங்கள் என மாநில அரசை. எச்சரித்திருக்கிறது. ஆனால் இன்னமும் (இந்த கட்டுரைஎழுதும்வரை) அந்த பணமும் தரப்படவில்லை.
எனது பிரச்னை பணமில்லை. என் நேர்மையும் அநீதியை எதிர்த்ததில் நான் சந்தித்த சத்திய சோதனைகளும் பதிவு செய்யபடவே போராடுகிறேன்” என்கிறார் நாராயணன்.
”பத்திரிகைகளும், காவல்துறையும் அரசியல்வாதிகள் செய்த பொய்பிரசாரத்திற்கு அப்பாவி கேரளமக்கள் பலியாகிவிட்டனர். உங்களிடம் கேரள மக்கள் சார்பில்மன்னிப்பு கேட்கிறேன், கேரள எழுத்தாளர்கள், அறிவிஜிவிகள் சார்பாக மன்னிப்புகேட்கிறேன் பத்திரிகைகள் சார்பில் மன்னிப்புகேட்கிறேன் “எங்களை மன்னித்துவிடுங்கள் நம்பி சார்” என்று மிகசிறந்த கேரள இலக்கிய வாதிகளில் ஒருவரான பால்சக்காரியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருவனந்தபுரத்தில் ஓரு பத்திரிகையாளார் கூட்டதில் பேசியபோது அங்கிருந்தவர்களும், அதை மறுநாள் செய்திதாட்களில் படித்தவர்களும் அதை தாங்கள் கேட்ட மன்னிப்பாகவே உணர்ந்து நெஞ்சம் நெகிழந்தது நிஜம்.
நன்றி : சுவடுகள்
ஒரு மலையாளி நண்பன் சொன்ன தகவல் இது, உடனே கூகுளில் அந்த பெயரை தேடினேன், மனம் நொந்து போனேன், அதனால்தான் உங்களுக்கும் இதை பகிர்ந்துள்ளேன்.
ஒரு தமிழனை துரோகி ஆக்கிய கதை. உண்மையில் இப்படி எல்லாம் நடக்குமா என்று ஆச்சர்யப்படும் வகையில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள் பலருக்கும் நம்பியைப் பற்றி தெரியாமல் இருப்பது உண்மை. அதை விரிவாக சொன்னதற்கு நன்றி . இன்னமும் இழப்பீடு கிடைக்காதது வேதனை இவரைப் பற்றி கடந்த ஆண்டு நானும் ஒரு பதிவு எழுதி இருந்தேன்
ReplyDeleteஒரு தமிழ் விஞ்ஞானியை துரோகி ஆக்கிய அதிர்ச்சிக் கதை
சுயநலம் பெருகிவிட்ட காலமய்யா இது. இது நம்பிக்கு மட்டும் நேர்ந்த சோதனையல்ல,இந்தியாவின் விண்துறை வளர்ச்சியையும் பின்னுக்கல்லவா தள்ளிவிட்டது இந் நிகழ்வு
ReplyDeleteநிறைய நடக்கிறது அண்ணே இதுபோல்.. பணம் மட்டுமே நேர்மையை தீர்மானிக்கிறது இங்கே..
ReplyDeleteஇந்த விடயம் முன்பே பத்திரிகை வாயிலாக அறிந்திருக்கிறேன்.ஆனாலும்,பின்னர் இவர் பற்றிய செய்திகள் தென்படவில்லை.கோர்ட் தீர்ப்பையே மதிக்காத மாநில அரசுகள்...........ஹூம்....என்னத்தச் சொல்ல?ஒரு விஞ்ஞானிக்கே இப்படியான உபசரிப்பு என்றால்..............
ReplyDeleteஅந்நாளைய இந்தியா டுடே யில் இவரை பற்றின செய்திகள் கவர் ஸ்டோரி களாக வந்துண்டு. பின்னர் நிகழ்ந்தவைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன போலும். அவர் தமிழன் என்ற ஒரு காரணம் போதுமே பொறாமையும் திருட்டுத்தனமும் அவரை பழி வாங்க. அந்த மலையாள எழத்தாளர் பால் சகரியாவை பாராட்டவேண்டும்.
ReplyDeleteஇவரை பற்றி படித்து இருக்கிறேன்! அரசியல் லாபத்திற்காக இவரை பலியிட்டு பழிவாங்கி விட்டார்கள்! நேர்மையான ஒரு விஞ்ஞானியை அரசியல்வாதிகள் அசிங்கப்படுத்திவிட்டார்கள்! வெட்கபடவேண்டிய அரசுகள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவெட்கப்பட வேண்டிய நிலை !
ReplyDeleteமானங்கெட்ட அரசு... ஒரு நல்ல மனிதரை பலிவாங்கியிருக்கிறது.,
ReplyDeleteஇப்போது Times Now TV ல் கடந்த மூன்று நாட்களாக விரிவாக அலசுகிறார்கள். மனம் மிகவும் வேதனை அடைகிறது.
ReplyDeleteஇப்படி எல்லாம் நடக்குறத பாக்கும் போதுதான் திறமை உள்ளவங்க பலரும் வெளிநாடுகளுக்கு போய்டுறாங்க
ReplyDeleteஇவர் எல்லாம் படித்து முடித்ததும் அமெரிக்காவில் வேலைக்கு போய் இருக்க வேண்டும்.இன்றும் மரியாதையோடு கை நிறைய பணத்தோடும் இருந்து இருக்கலாம்.என்னத்த சொல்றது.
ReplyDeleteஅமேரிக்கா ரத்தின கம்பளம் விரித்தும் என் தாய் நாட்டிற்கே என் சேவை என்று வந்துவிட்டாராம் மேடம் அப்போதே....!
Delete