Sunday, November 3, 2013

ஆமாய்யா நான் போலீஸ்தான் என்ன சொல்லு ?

காமெடியா எழுதனும் அதை அனைவரும் ரசிச்சி சிரிச்சி ரிலாக்ஸ் ஆகனும்னு மனசு நினைத்தாலும், நம் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் சொல்லும், செய்யும் கோபப்படும்படி உள்ள காமெடிகளைப் பார்க்கும் போது....இவர்களை நடு ரோட்டில் தூக்கிப்போட்டு மிதிச்சா என்னான்னு தோணுது....!
காமன் வெல்த் மாநாடு.

இலங்கை"க்காக ஒரு துரும்பைக் கூட கொடுக்கக் கூடாது கொடுக்கவும் விடமாட்டேன், மீறினால் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என்று சொன்ன கருணாநிதியின் குடும்பம்தான் [[கேடி பிரதர்ஸ்]] சிங்களனோடு கூட்டணி அமைத்து இலங்கையில் வியாபாரம் செய்கிறார்கள்.

எப்பிடியும் இனி காங்கிரஸ் ஜெயிக்க முடியாது என்பதை நன்றாக அறிந்த இந்த மானமுள்ள [[த்தூ]] தலீவன், பிஜேபி பக்கம் போக இது ஒரு நல்ல சந்தர்ப்பம், பிஜேபி கூட திமுக கூட்டணி அமைக்குமானால் அது பிஜேபி"க்கு வெற்றி இல்லை, ஆப்பு மீது தானாக வல்கராக ஏறுவது என்று அர்த்தம்.

கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமுக்கமாக இருந்த நா....சரி வேணாம் நீ, காலையில் ஒரு சட்டி நிறைய இட்லியை தின்னுட்டு உண்ணாவிரதம் இருந்து நடித்து காட்டிய நீ, இப்போது சொல்கிறாய், இலங்கைக்காக ஒரு துரும்பை கூட எடுக்கக் கூடாது என்று...!

யுத்தம் என்று வந்தால் நல்லவன் ஒருவன், வெற்றியோ தோல்வியோ எப்போதும் ஒரு பக்கமே நிற்பான்....அதற்க்கு எங்கள் மானமுள்ள ஒரே தலைவன் எம்ஜியார் நல்லதொரு எடுத்துக்காட்டு....!

இலங்கையில் போராளி குழுக்கள் பலவும் பிரிந்து கிடக்கும் போதே, நியாயமுள்ள போராளி குழு எது என்பதை கண்டுபிடித்து, கடைசி வரை ஆதரித்து கை தூக்கி [[தாங்கி]] வந்தார். வீரியமுள்ள விதை அதுதான் என்று கண்டறிந்தார்...!

ஆனால் இந்த துரோகியோ....துரோகிகளுக்கு ஆதரவளித்து தாங்கி வந்தார்...ஒ...இனம் இனத்தோடுதான் சேரும் இல்லையா ?!
[[இந்த ஒரு படமே போதும் மானமுள்ள தலீவன் நாண்டுகிட்டு நிக்க]]

இப்போது அல்ல..........அப்போது இருந்தே சொல்லி வருகிறேன்....திமுக"வோ காங்கிரஸோ இரண்டுமே தமிழர் விரோத கட்சி என்பதை உணருங்கள் உணருங்கள் உணருங்கள்....!

என்னடா மனோ ரொம்ப அரசியல் பேசுறானே இவன் என்னத்தை செஞ்சான்னு கேட்டீங்கன்னா, போனதடவை நான் ஊர் வந்தபோது, எங்கள் ஏரியா [[மும்பை]] காங்கிரஸ் பார்ட்டியை வேரடி மண்ணோடு சாய்த்து, சிவசேனா கொடியை நட்டுகிட்டுதான் பஹ்ரைன் வந்தேன், என்னால் முடிந்தது அதுதான்.
[[மும்பை தேர்தல் பிரச்சாரத்தின் போது]]

காங்கிரஸ் நாதாரிகள் நான் போய் வரும் பாதையை ஸ்கெட்ஜ் போட்டதையும், அதை அறிந்த எனது நண்பர்கள் நான் அறியாமலேயே எனக்கு பாதுகாப்பு கொடுத்ததையும், என்னை வழியனுப்ப ஏர்போர்ட் வந்த நண்பர்கள் சொன்ன பின்புதான் அறிந்து மலைத்துப் போனேன்....! 
------------------------------------------------------------------------------

ஒரு சின்ன ரிலாக்ஸ்....

எங்கள் ஹோட்டல் நம்பரும் போலீஸ் ஸ்டேஷன் நம்பருக்கும் இடையில் ஒரே ஒரு நம்பர் மட்டுமே வித்தியாசம்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்லையா ? அப்பிடி ஒரு போன் லைன் மாறி வருது....ரிஷப்சன் பொண்ணு எடுத்து பேசுது...நான் உள்ளே ஆபீஸில் இருந்து கேட்டுட்டு இருக்கேன்.

"...................."

"ஆக்சுவலி......"

"..............................................................."

"சர்....."

"......................................................."

"நோ நோ........."

"................................................................."

"அய்யோஓஓஓஓ.......மனோஜ்........"

நான் ஓடி வரவும் பொண்ணு போனை தூக்கி என்மீது எறிய....

"ஹலோ...." 

"நீ போலீஸ்தானே நீ போலீஸ்தானே.....?" மேட்டரு எனக்கு புரிஞ்சிருச்சு [[அவ்வ்வ்வவ் இன்னைக்கு என்னப் பண்ணப் போறானோ]]

"சார் ஆக்சுவலி...." இடை மறிக்குறான் 

" ஏ......நீ போலீஸ்தானே போலீஸ்தானே ?" அவ்வ்வ்வவ்

" நோ சர், நான் வந்து இது வந்து..." குழப்பத்தில் வாய் குழற...

"டேய் நீ போலீஸ்தானே போலீஸ்தானே ?"

"ஹோலோ ச்சே ஹலோ......நீ யார்கிட்டே பேசிட்டு இருக்கே தெரியுமா ?"

"நீ போலீஸ்தானே போலீஸ்தானே ?" ஆஹா....

"ஆமாய்யா நான் போலீஸ்தான் என்ன சொல்லு ?" ரிஷப்ஷன் பொண்ணு சுவாரஸ்யம் ஆகுறாள் [[கொய்யால]]

"ம்ம்ம்ம்ம்ம் கார்பார்க்கிங்க்ல நிறுத்தி வச்சிருந்த என் கார் மேல யாரோ ஒரு பில்"லை வச்சிட்டு போயிருக்காங்க, நான் ஒன்னுமே சாப்பிடலை எனக்கு ஒன்னும் தெரியாது என்னான்னு சொல்லமுடியுமா ?"

"சரி.....அந்த பில்"ல என்ன எழுதி இருக்கு ?"

சாப்பாடு அயிட்டங்களை நிறைய சொல்கிறான்.

"இவளவும் நீ சாப்புட்டியா ?" எனக்கு புரிஞ்சி போச்சு.

"வல்லா.....எனக்கு இந்த சாப்பாடெல்லாம் எப்பிடி இருக்கும்னே தெரியாது"

"சரி அதுக்கு இப்போ என்ன செய்யலாம் ?"

"நீ போலீஸ்தானே நீ போலீஸ்தானே...?" கண்டுபிடிச்சுட்டானோ ?

"போலீஸ்தாம்ப்பா சொல்லு...?"

"நீ போலீஸா இருந்துகிட்டு என்ன செய்யலாம்னு என்கிட்டே கேக்குறே ? சரி நான் இந்த பில்"லை செட்டில் பண்ணலைன்னா கார்பார்க்கிங் கேட்"டை திறக்க மாட்டாங்களே அதான் பயமா இருக்கு, எனக்கு உடனே அவசரமா சவூதி போகணும்..."

"நோ பிராப்ளம் சார், நான் இப்பவே போன் பண்ணி சொல்லுறேன் நீங்க தாராளமா போங்க..."

கட்.
அல் ஒஸ்ரா ரெஸ்ட்டாரண்ட் சாப்பாடு மெனு கார்டை விளம்பரத்துக்காக காரில் செருகி வச்சிருந்ததை பார்த்துட்டு மப்புல ஏதோ கார் பார்க்கிங் பில்"ல்லுன்னு நினைச்சி போலீஸ்"க்கு போன் பண்ணுறேன்னு அதுலயும் குளறுபடி பண்ணி எனக்குன்னு வந்துருக்கான் பாருங்க அவ்வ்வ்வ்.....

ரிஷப்சன் பொண்ணு விஷயத்தை கேட்டு தெரிஞ்சிகிட்டு முதுகுல குத்தி குத்தி சிரிக்குது, நமக்கு சிரிப்பதா அழுவதா ஒன்னுமே வெளங்கல, வாங்கி வந்த வரம் அப்பிடி போல ம்ஹும்.

19 comments:

 1. முதல்ல வந்த கோபத்தை பாத்துபயமாத்தான் இருந்தது. அப்புறம் ஹோட்டல் காமெடி சிரிக்க வச்சுடுச்சு.

  ReplyDelete
 2. உணருங்கள் ... என அருமையா சொன்னீர்கள்.

  ReplyDelete
 3. அண்ணே, நான் கூட உங்களை சாதாரணமா நினைச்சிட்டேன்.... ஹோட்டல் காமெடி செம....

  ReplyDelete
 4. மக்கள் திலகம் போல் வருமா...?

  ReplyDelete
 5. Super. Congrats to become as a famous politician.

  ReplyDelete
 6. ஹஹஹா.. விழுந்து விழுந்து சிரிச்சேன் அண்ணே.

  ReplyDelete
 7. ஐயோ அண்ணா! நீங்க போலீசா!? அப்ப இனி அருவாக்கு பதிலா லத்தியும், துப்பாக்கியுமா!?

  ReplyDelete
 8. ஹோட்டல் காமெடி செம....

  அரசியல்.... என்னமோ போங்க!

  சபரிமலை பயணம் பற்றிய ஒரு பதிவில் நீங்க கேட்ட சந்தேகத்திற்கு விடை இன்னிக்கு சொல்லியிருக்கேன் பதில்...

  ReplyDelete
 9. நாங்கள்/நீங்கள் எவ்வளவு தான் கரடியாய்க் கத்தினாலும்,தொண்டரடிப் பொடிகள் செவி சாய்க்கவே மாட்டார்கள்.கோடி,கோடியாய்க் கொள்ளையடித்து மாமிச மலைகளாக வளர்ந்திருக்கும் இதுகள் எல்லாம்.................விடுங்கள்,எம்மால் முடிந்த அளவு எதிர்ப்பைத் தெரிவிப்போம்.அதன் பின்,ஆண்டவன் விட்ட வழி!///ஹோட்டல் ரிஷெப்ஷன்......... வயிறு குலுங்க சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கண்ணுல தண்ணி அண்ணே....மனசுல பாரம் அண்ணே....சொல்லி அழ யாரும் இல்லை அண்ணே....அதான் இந்த கோபம்.

   Delete
 10. காங்கிரஸ், தி,மு,க இன்னும் கொடி பிடிக்க பலர் இருக்காங்களே????

  என்ன செய்ய????

  ReplyDelete
 11. மாமா நான் அம்மாவோட சேர்ந்து இண்ணைக்கு கந்த சஷ்டி விரதம்
  கத்தியத் தூக்க வைக்காதீக ஆமா .என்னது நீங்க போலீசா ?.....:)))))))))))க்ர்ர்ர்ர்

  ReplyDelete
 12. காமன் வெல்த் மாநாட்டுக்கு செல்ல துடிக்கும் காங்கிரசின் கையாலாகத தனத்தை அருமையாக சாடியுள்ளீர்கள்! போலீஸ் ஜோக் செம! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 13. ஆமாம் அதுதான் கருணாநிதியின் முகம் மற்றும் இன்னபிற வைகோ, நெடுமாறன் கதையும் அதுதான்.
  ஆனா பாருங்க
  நீங்க மீனவ நண்பன் ரசிகன் தெரியாது

  ReplyDelete
 14. இசை பிரியாவின் கொடூரமான வீடியோவை சேனல் 4 விட்ட பின்னர்தான் இதுக ரொம்பவே துள்ளி துள்ளி குதிக்கிதுக.அது மாதிரி ஒரு வீடியோ பார்த்துத்தான் இதுகளுக்கு இன உணர்வு பொங்கி பீரிட்டு அடிப்பதைக்கண்டால் காரித்துப்பதான் வருகிறது.இன துரோகிகள்.

  ReplyDelete
 15. அம்புட்டுப் பயலும் அல்டாப்பு அண்ணே...
  இவனுங்க நம்மள இன்னும் செம்மறி ஆடாவே நினைச்சிக்கிட்டு இருக்காய்ங்க...
  ஆமா முதுகுல குத்து வாங்குறதுக்கு வரம் வாங்கிட்டு வந்திருக்கீங்களோ...

  ReplyDelete
 16. தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

  தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

  வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

  ReplyDelete
 17. //இவர்களை நடு ரோட்டில் தூக்கிப்போட்டு மிதிச்சா என்னான்னு தோணுது....!//
  வேணாம் விட்டுருங்க.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!