Wednesday, January 29, 2014

தொட்டால் தொடரும் கொஞ்சம் ரிலாக்ஸ்...!

என்னடா ஒரே தொடரா எழுதிகிட்டு இருக்கானேன்னு நினைச்சிராதீகப்பூ, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு தொடரலாம் சரியா ? [[நோ நோ பேச்சு பேச்சாத்தான் இருக்கோணும்]]

@சின்னதா விரலை வெட்டி போட்டுகிட்டு, ஹேண்டிகேப் என்று சொல்லி அரசாங்க சலுகை வேலை பெற்றவங்களும் இருக்காங்க, உண்மையாகவே ஹேண்டிகேப் ஆளுங்க அந்த அரசாங்க வேலைக்கு அப்ளை செய்து, காலம் காலமாக காத்து இருக்குறவங்களும் இருக்காங்க...!

@ஊருல நிலத்தை விற்று பிசினஸ் பண்ணலாம்னு பணம் கொண்டு இங்கே [[பஹ்ரைன்]] வந்த பங்களாதேசி ஒருவன், ஒரே நாளில் இந்தியன் டிஸ்கோவில் ஒரு நடன அழகிக்கு மாலை போட்டு மொத்தப் பணத்தையும் இழந்து நிற்பதை பார்த்தபோது, ஒரு மனிதனின் நிலைமை ரெண்டு மணி நேரத்தில் மாறி விடுவதை பார்க்கும் போது மனதில் ரணம்...!

@ஒரு மலையாளி நண்பனை பங்களாதேஷ் நபர் ஒருவன் கோபப்படுத்திட..

"ப்போ குத்தா"க்காப் பட்டி...பில்லி"க்கா பூச்ச.....ன்னு திட்டினானே பார்க்கனும். விழுந்து விழுந்து அந்த சூழ்நிலையிலும் நான் சிரிச்ச சிரிப்பை பார்த்து கோபப்பட்ட நண்பனும் அலறி சிரிக்க, சமாதானம் நிலவி விட்டது.

ஹிந்தியில் குத்தா என்பது நாய், மலையாளத்தில் பட்டி என்றாலும் நாய்"தான்  [[குத்தாக்கா பட்டி]], ஹிந்தியில் பில்லி என்றால் பூனை, மலையாளத்தில் பூச்ச என்று சொல்வார்கள்...!

@கேரளாவில், பேஸ்புக்கில் தனது போட்டோக்களை கேவலமாக வெளியிட்டவனை சைபர் கிரைமில் புகார் குடுத்தும் போலீஸ் ஏற்காததால், கோர்ட் போயி அங்கும் நியாயம் கிடைக்காமல் விஜிதா என்கிற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்போதைய தகவல்படி, அந்த போலீஸ் எஸ் ஐ சஸ்பென்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.

நீதி : தோழிகளே, சகோதரிகளே கவனமாக இருங்கள்.

@இங்கே வேலை செய்யும் மனோ'ஜ் என்னும் ஆளு நல்லவனா கெட்டவனான்னு பொண்ணை கட்டி கொடுக்கும் மாப்பிளைகிட்டேயே வந்து விசாரிச்சது என்கிட்டே மட்டும்தான்னு நினைக்கிறேன்...!

"அவனைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு வாங்க காப்பி சாப்புட்டுட்டே சாவகாசமா பேசுவோம்"ன்னுட்டு

காப்பி வரவச்சு குடிக்க வச்சிட்டு, "அதோ அந்த பையன் மனோஜ் பற்றி வெவரமா சொல்லுவான்னு சொல்லிட்டு நான் கேஷ் கவுண்டரில் போயி [[மும்பை ஏர்போர்டில் அப்போது வேலை]] உட்கார்ந்தேன்.

அவனிடம் இவர்கள் விவரம் கேட்க...அவன் என்னைப் பார்த்த பார்வையில் சீவலப்பேரி ஆளுங்களுக்கு விஷயம் புரிஞ்சிருச்சு போல...

எங்கடா முதுகுல இருந்து அருவாளை உருவப் போறானுகளோன்னு வாசல் பக்கமா கண்ணோட்டமாகவே இருந்தேன் [[எல்லாம் ஓடுறதுக்குதான்]]

என் நண்பனை "தம்பி நீங்க போங்க"ன்னு அவனை அனுப்பினாங்க, எனக்கு கால் கிடுகிடு...

காப்பி குடிச்சுட்டு முறைச்சு பார்த்துட்டு வந்த மாதிரியே தோணுது எனக்கு, நடுங்கிட்டு எழும்பி நின்னேன்...

பக்கத்துல வந்ததும் படார்ன்னு என் கையை பிடிச்சுட்டு "எலேய் மாப்பிளேய் மன்னிச்சிருலேய்..ஊர்ல இருந்து உங்க கல்யாணத்துக்குதான் வந்துருக்கேன், நான் பொண்ணோட சின்னைய்யா..உம்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சிலேய் மாப்பிளேய்...வந்ததும் உக்காரவச்சி காப்பி வாங்கி குடுத்துட்டு பேசுனீகளே அது நம்ம குடும்பத்துக்கே ஒத்துப்போகும் பண்பு...சந்தோசம்... கல்யாணத்தன்னைக்கு சந்திப்போம் என்ன"

சும்மா விட்டுருவோமா என்ன ? மும்பை ஏர்போர்ட் முழுவதையும் அருவாள் மச்சான், மாமன்மார்களுக்கு இலவசமா சுற்றிக் காட்டி அனுப்பினேன், மனம் குளிர்ந்து போனார்கள்...!


13 comments:

 1. நிலம் வாங்கின பங்களாதேசியின் அப்பன் பாவம்...!

  விஜிதா அவர்களின் சம்பவம் வருத்தம்...

  ReplyDelete
 2. இப்படி ஒரு அனுபவம் யாருக்காவது கிடைக்குமாங்கறது சந்தேகம்,செமையா இருந்திருக்கும்ல?

  ReplyDelete
 3. மாப்ளை பத்தி மாப்ளை கிட்டயே கருத்துக் கேட்ட அனுபவம் ரொம்ப ரொம்ப வித்தியாசமானது மனோ! ரசிச்சேன்!

  ReplyDelete
 4. சும்மா விட்டுருவோமா என்ன ? மும்பை ஏர்போர்ட் முழுவதையும் அருவாள் மச்சான், மாமன்மார்களுக்கு இலவசமா சுற்றிக் காட்டி அனுப்பினேன், மனம் குளிர்ந்து போனார்கள்...
  >>
  அவர்கள் மட்டுமில்ல. அண்ணியும்தான்

  ReplyDelete
 5. ரெம்ப வித்தியாசமான அனுபவம் தான் அண்ணா..
  கோவம் வந்தா எகிறதும், தப்புன்னு தெரிஞ்ச உடனே மன்னிப்பு கேக்கிறதும், நம்ம ஆளுங்ககிட்ட நல்ல பண்புனா...

  ReplyDelete
 6. என்ன ஒரு விசாரணைத் திறமை..அவங்களுக்கு இன்னுமா சிபிஐ-ல வேலை கிடைக்கலை?

  ReplyDelete
 7. யோவ், கல்யாணம் எப்பன்னு சொல்லுய்யா.

  ReplyDelete
 8. சின்ன சின்ன செய்திகள் சுவாரஸ்யம்! மாப்பிள்ளை விசாரிப்பு ஜோருதான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. எலேய் மாப்பிளேய் Super லே :D

  ReplyDelete
 10. ஹஹஹா.. சூப்பர் அண்ணே!

  ReplyDelete
 11. அன்புடையீர்..
  தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  http://blogintamil.blogspot.com/2014/02/2.html
  நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு....

  ரசித்தேன் மனோ.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!