பேஸ்புக்கில் கலக்கிக் கொண்டிருக்கும் [[https://www.facebook.com/deivaoswin.stanley]] ஆஸ்வின் அக்கா'வின் இன்னொரு முகம்தான் நீங்கள் வாசிக்கப்போவது...இந்த சிறப்பு பேட்டி கல்கி குழுமத்தில் வெளி வந்தது !
மனித நடமாட்டமே இல்லாத காடுகளில்தான் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களைக் கழிக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் கருப்பட்டியூரைச் சேர்ந்த தெய்வ ஆஸ்வின் ஸ்டாலின்.
கடலோரப் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த சதுப்பு நிலக்காடுகளின் மேம்பாட்டு ஆர்வலராக பல நாடுகளில் களப்பணியாற்றுபவரை சந்தித்தோம்.
"சதுப்பு நிலங்கள், கடலோரம் மற்றும் கடல் வளங்களை ஆராய்ச்சி செய்வதே என் பிரதானப் பணி. முத்துப்பேட்டைக் காடுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து சதுப்பு நிலக் காடுகளின் நன்மை குறித்து முழுமையாய் தெரிந்துகொண்டேன், சதுப்பு நிலங்கள் என்பவை அழகான, சுவாரஸ்யமான, கொஞ்சம் சிக்கலான சுற்று சூழல் கொண்டவை...
காட்டுக்குள் செல்லும் போது தேவையான உணவு, தண்ணீரை எப்போதும் எடுத்து செல்வது வழக்கம், ஆனால் அவை சீக்கிரமே காலியாகிவிடும், நடக்கும் போது அதிகம் பசி ஏற்படுவதினால் உணவு காலியாகிவிடும், குடிக்க தண்ணீர் இல்லாமையால் தவித்து, குட்டையில் கலங்கிய தண்ணீரை கைகுட்டையால் வடிகட்டி குடித்த நாட்களும் உண்டு, குறுக்கும் நெடுக்குமான கால்வாய்களில் நீந்தியும் பல மைல் தூரம் நடந்தும் போயிருக்கிறேன், படகு கவிழ்ந்து சகதியில் சிக்கி வெளியே வர சிரமப்பட்டு இருக்கிறேன், இப்படி பல அனுபவங்கள்...
இரவு நேரங்களில் காடுகளில் டெண்ட் அடித்துத் தங்குவோம், அப்போது பூச்சிகள் கடித்துவிடும், காட்டு எருமைகளையும், குள்ள நரிகளையும் எதிரிலேயே பார்க்க முடியும், இது போல பல ஆபத்துக்களை சந்தித்தாலும், ஆராய்ச்சி மற்றும் இயற்கை மீதுள்ள அக்கறையால் எதையும் கண்டு கொள்வதில்லை, சதுப்பு நிலங்கள் மீதான ஆர்வமும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும்தான் என்னை உலக நாடுகளிலுள்ள அனைத்து வகையான காடுகளிலும் பயணிக்க வைத்தது, ஆய்வு பணி முடிந்து வீடு திரும்பியதும் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு முன் கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்வேன்..." பணி மீது கொண்ட பற்றின் காரணமாக பொறிந்து தள்ளுகிறார் தெய்வா
பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தில் எம் பில் மற்றும் தஞ்சாவூரில் கடல் உயிரியல் பாடத்தில் முனைவர் படிப்பு முடித்ததும், உலகநாடுகள் முழுவதும் காடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் களப்பணியில் இறங்கிவிட்டேன்..."
கடற்கரை மற்றும் காடுகளுக்குள் செல்ல முன் அனுமதி பெற வேண்டாமா ?
"...கண்டிப்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும், அந்த கடிதத்துடன்தான் எப்போதும் பயணிப்பேன், ஒருமுறை தமிழக கடலோரப் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம், எல் டி டி ஈ இயக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் இங்கே நடமாடுகிறார்" என யாரோ போலீச்சாருக்கு தகவல் சொல்ல, உடனே போலீஸ் வந்துவிட்டது, அதிகாரிகளின் கடிதத்தை காட்டியப் பிறகுதான் விடுவித்தார்கள், மலைப்பகுதிகளில் வாழும் கிராம மக்களின் உதவியுடன் செல்லும் போது என்னுடைய பணி எளிதாக இருக்கும்..."
உங்கள் ஆராய்ச்சியின் மூலம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்கள் என்ன ?
"உலகளவில் மாங்குரோவ் காடுகள்தான் சுற்று சூழலுக்கு பாதுகாவலராக உள்ளன, இக்காடுகள் மீன் வளம் உள்ளிட்ட பல்லுயிர் இனப்பெருக்கத் தொட்டிலாகவும், பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் போன்ற அனைத்து உயிர்களின் தங்குமிடமாகவும், கடல் அரிப்பை தவிர்க்கும் கேடயமாகவும் உள்ளன, ஒரு ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்து நாம் அடையும் பொருளாதார பயனை விட, ஒரு ஹெக்டேர் சதுப்பு நிலக்காட்டை உருவாக்கினால் 25 மடங்கு கூடுதல் பயனைப் பெறலாம், உலகளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதால், ஒரு வருடத்திற்கு ஏற்படும் கார்பன் உமிழ்வு அதிகமாகிறது, எனவே சதுப்பு நிலக்காடுகள் மிகவும் இன்றியமையாததாகும்.
இது பற்றி துறை சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளேன், மியான்மர் நாட்டின் சதுப்பு நிலக்காடுகள் குறித்து மூன்று புஸ்தகங்கள், காடுகள் மற்றும் மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் பற்றியும் எழுதியுள்ளேன், நான் எழுதிய மருத்துவ புஸ்தகங்களும் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளன.."
இந்த துறைக்கு வர பெண்களுக்கு ஆர்வம் உள்ளதா ?
"இந்திய கலாச்சாரத்தைப் பொறுத்தவரை எல்லாருக்கும் குடும்பத்தில் ஆதரவு கிடைப்பதில்லை கடல், காடு மாதிரியான சூழலில் பெண்களை வேலை செய்ய அனுமதிப்பதும் இல்லை, ஆனால் இயற்கையை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பும், பங்கும் பெண்களுக்கு இருப்பதாக நினைக்கிறேன், "என்னால் முடியாது" எனக்கு இது தெரியாது" வராது" என்று பெண்கள் ஒதுங்கிவிடக்கூடாது, எந்த துறையில் பணி செய்யப்போனாலும் முயற்சி செய்து பார்த்து வெற்றி பெறுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.
வாழ்த்துக்கள்...
ரொம்ப பெருமையாய் இருக்குது அக்கா!
ReplyDeleteஎன்னவொரு மன உறுதி...
ReplyDeleteOswin Iam PROUD..to have a friend and a SCIENTIST like you ! GOD BLESS AND SHOWER MANY MORE BLESINGS UPON YOU!!!!
ReplyDeleteஅசத்தல்!தைரியமான பெண்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி !! உயிரியல் துறையில் இப்படி சுற்று சூழல் சார்ந்த துறையை செலெக்ட் செய்வதென்பது உண்மையில் அதிக மன திடமுள்ளவர்களால் தான் இயலும் ..அத்துறை மீதுள்ள காதல் தான் உங்களை சாதனை பெண்ணாக்கியுள்ளது ..இன்னமும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணா...
அட அக்காச்சி இப்படி ஒரு தைரியசாலியா விளையாட்டாக முகநூலில் கும்மியிருக்கின்றேன்[[[ இன்று சரி உண்மையை சொன்னீங்க அண்ணாச்சி!
ReplyDeleteEver wanted to get free Facebook Likes?
ReplyDeleteDid you know that you can get them AUTOMATICALLY AND ABSOLUTELY FREE by using Like 4 Like?