Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Friday, March 4, 2016

எங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் விஞ்ஞானி...!



பேஸ்புக்கில் கலக்கிக் கொண்டிருக்கும் [[https://www.facebook.com/deivaoswin.stanley]] ஆஸ்வின் அக்கா'வின் இன்னொரு முகம்தான் நீங்கள் வாசிக்கப்போவது...இந்த சிறப்பு பேட்டி கல்கி குழுமத்தில் வெளி வந்தது !

மனித நடமாட்டமே இல்லாத காடுகளில்தான் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களைக் கழிக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் கருப்பட்டியூரைச் சேர்ந்த தெய்வ ஆஸ்வின் ஸ்டாலின்.


கடலோரப் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த சதுப்பு நிலக்காடுகளின்  மேம்பாட்டு ஆர்வலராக பல நாடுகளில் களப்பணியாற்றுபவரை சந்தித்தோம்.


"சதுப்பு நிலங்கள், கடலோரம் மற்றும் கடல் வளங்களை ஆராய்ச்சி செய்வதே என் பிரதானப் பணி. முத்துப்பேட்டைக் காடுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து சதுப்பு நிலக்  காடுகளின் நன்மை குறித்து முழுமையாய் தெரிந்துகொண்டேன், சதுப்பு நிலங்கள் என்பவை அழகான, சுவாரஸ்யமான, கொஞ்சம் சிக்கலான சுற்று சூழல் கொண்டவை...

காட்டுக்குள் செல்லும் போது தேவையான உணவு, தண்ணீரை எப்போதும்  எடுத்து செல்வது வழக்கம், ஆனால் அவை சீக்கிரமே காலியாகிவிடும், நடக்கும் போது அதிகம் பசி ஏற்படுவதினால் உணவு காலியாகிவிடும், குடிக்க தண்ணீர் இல்லாமையால் தவித்து, குட்டையில் கலங்கிய தண்ணீரை கைகுட்டையால் வடிகட்டி குடித்த நாட்களும் உண்டு, குறுக்கும் நெடுக்குமான கால்வாய்களில் நீந்தியும் பல மைல் தூரம் நடந்தும் போயிருக்கிறேன், படகு கவிழ்ந்து சகதியில் சிக்கி வெளியே வர சிரமப்பட்டு இருக்கிறேன், இப்படி பல அனுபவங்கள்...

இரவு நேரங்களில் காடுகளில் டெண்ட் அடித்துத் தங்குவோம், அப்போது பூச்சிகள் கடித்துவிடும், காட்டு எருமைகளையும், குள்ள நரிகளையும் எதிரிலேயே பார்க்க முடியும், இது போல பல ஆபத்துக்களை சந்தித்தாலும், ஆராய்ச்சி மற்றும் இயற்கை மீதுள்ள அக்கறையால் எதையும் கண்டு கொள்வதில்லை, சதுப்பு நிலங்கள் மீதான ஆர்வமும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும்தான் என்னை உலக நாடுகளிலுள்ள அனைத்து வகையான காடுகளிலும் பயணிக்க வைத்தது, ஆய்வு பணி முடிந்து வீடு திரும்பியதும் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு முன் கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்வேன்..." பணி மீது கொண்ட பற்றின் காரணமாக பொறிந்து தள்ளுகிறார் தெய்வா 
பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தில் எம் பில் மற்றும் தஞ்சாவூரில் கடல் உயிரியல் பாடத்தில் முனைவர் படிப்பு முடித்ததும், உலகநாடுகள் முழுவதும் காடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் களப்பணியில் இறங்கிவிட்டேன்..."

கடற்கரை மற்றும் காடுகளுக்குள் செல்ல முன் அனுமதி பெற வேண்டாமா ?

"...கண்டிப்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும், அந்த கடிதத்துடன்தான் எப்போதும் பயணிப்பேன், ஒருமுறை தமிழக கடலோரப் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம், எல் டி டி ஈ இயக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் இங்கே நடமாடுகிறார்" என யாரோ போலீச்சாருக்கு தகவல் சொல்ல, உடனே போலீஸ் வந்துவிட்டது, அதிகாரிகளின் கடிதத்தை காட்டியப் பிறகுதான் விடுவித்தார்கள்,  மலைப்பகுதிகளில் வாழும் கிராம மக்களின் உதவியுடன் செல்லும் போது என்னுடைய பணி எளிதாக இருக்கும்..." 

உங்கள் ஆராய்ச்சியின் மூலம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்கள் என்ன ?

"உலகளவில் மாங்குரோவ் காடுகள்தான் சுற்று சூழலுக்கு பாதுகாவலராக உள்ளன, இக்காடுகள் மீன் வளம் உள்ளிட்ட பல்லுயிர் இனப்பெருக்கத் தொட்டிலாகவும், பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் போன்ற அனைத்து உயிர்களின் தங்குமிடமாகவும், கடல் அரிப்பை தவிர்க்கும் கேடயமாகவும் உள்ளன, ஒரு ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்து நாம் அடையும் பொருளாதார பயனை விட, ஒரு ஹெக்டேர் சதுப்பு நிலக்காட்டை உருவாக்கினால் 25 மடங்கு கூடுதல் பயனைப் பெறலாம், உலகளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதால், ஒரு வருடத்திற்கு ஏற்படும் கார்பன் உமிழ்வு அதிகமாகிறது, எனவே சதுப்பு நிலக்காடுகள் மிகவும் இன்றியமையாததாகும்.
இது பற்றி துறை சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளேன், மியான்மர் நாட்டின் சதுப்பு நிலக்காடுகள் குறித்து மூன்று புஸ்தகங்கள், காடுகள் மற்றும் மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் பற்றியும் எழுதியுள்ளேன், நான் எழுதிய மருத்துவ புஸ்தகங்களும் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளன.."

இந்த துறைக்கு வர பெண்களுக்கு ஆர்வம் உள்ளதா ?

"இந்திய கலாச்சாரத்தைப் பொறுத்தவரை எல்லாருக்கும் குடும்பத்தில் ஆதரவு கிடைப்பதில்லை கடல், காடு மாதிரியான சூழலில் பெண்களை வேலை செய்ய அனுமதிப்பதும் இல்லை, ஆனால் இயற்கையை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொடுக்க  வேண்டிய பொறுப்பும், பங்கும் பெண்களுக்கு இருப்பதாக நினைக்கிறேன், "என்னால் முடியாது" எனக்கு இது தெரியாது" வராது" என்று பெண்கள் ஒதுங்கிவிடக்கூடாது, எந்த துறையில் பணி செய்யப்போனாலும் முயற்சி செய்து பார்த்து வெற்றி பெறுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. 


வாழ்த்துக்கள்...






Monday, November 21, 2011

நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!

பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான மதிப்பிற்குரிய பாத்திமா பாபு அவர்களிடம், நாஞ்சில்மனோ வலைத்தளத்திற்கு பேட்டி தரமுடியுமா என்று கேட்டதும், அன்பாக ஒப்புகொண்டார்கள்...



எனக்கு நம்பவே முடியலை, நேற்று சிவாஜி சந்தானம் சார் பேட்டியையே இன்னும் நம்ப முடியாமல் இருக்கேன், இதோ அடுத்த நட்சத்திர தேவதையும் பேட்டிக்கு தயாரா வந்ததை நினைத்து பூரித்துப் போனேன்....


எவ்வளவு எளிமையாக பழகுகிறார்கள், அதனால்தான் இவர்கள் நட்சத்திரங்களாக மின்னுகிரார்கள்...!!! தூரத்தில் இருந்து பார்க்கும் போது நாம் மிரண்டு போகிறோம் இவர்களைப் பார்த்து, அருகில் போனால் இனியவர்கள், மிகவும் அன்பாக இருக்கிறார்கள்...!!! வாழ்த்துக்கள் மேடம், நன்றிகளும்....


இனி நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், பாத்திமா பாபு'வின் பதில்களும்....

1 : ஒரு டிவி செய்தி வாசிப்பாளரா ஆன உங்களுக்குத்தான் முதல் தகவல்கள் வரும், அதிர்ச்சியான செய்திகள் வரும் போது உங்கள் மன நிலை எப்படி இருக்கும்...?

கேட்கும் உங்களுக்கு இருப்பது போலவே...


2 : பார்த்தேன் ரசித்தேன் படத்துல சிறப்பாக கலகலப்பான பேர்வழியா நடிச்சி அசத்தி இருந்தீங்க, உங்க கூட நடிச்ச பிரசாந்த், லைலா, சிம்ரன் பற்றி சொல்லுங்க மேடம்...? 

லைலாவிடம் விளையாட்டுத்தனம் அதிகம். ப்ரஷாந்த் அந்த காலத்திலேயே கணிணியை அபரிமிதமாக நேசித்தவர் 
சிம்ரன் முதல் படத்தில் (விஐபி) பார்த்ததற்கும் அப்போதைக்கும் அபரிமிதமாக பரிமளித்திருந்தார்...நடிப்பில் ஒரு முதிர்ச்சி இருந்தது...!!!


3 : உங்களுக்கு பிடிச்ச உலக தலைவர்கள்...?

ஒபாமா, நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூ கீ....!


4 : இயற்கை பேரழிவுகள், எந்த ரூபத்தில் எப்போது வரும் என கனிக்க முடியாத இந்த வேளையில், அணுமின் நிலையங்கள் இன்னும் தேவையா...?

அணுமின் நிலையங்களின் சாதகங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்களை மேம்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். 
கரண்ட் கூடத்தான் ஷாக் அடிக்கும்....பெட்ரோல், எரிவாயு போன்றவையும் கவனமாக கையாளப்பட வேண்டியவை...நாம் உபயோகிக்கவில்லையா? அணுவும் அது போலவே...


5 : உங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் பற்றி சொல்லுங்களேன்...?

எல்லோரையும் பிடிக்கும்....கமல், மோஹன்லால், நந்திதாதாஸ், ரேகா(ஹிந்தி), பெரிய லிஸ்ட்....அது...


6 : உங்க வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்லுங்களேன்..?

இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும்? so very cliched it sounds..


7 : எப்போதாவது பல்பு வாங்கிட்டு முழிச்ச சம்பவங்கள் உண்டா...?

இல்லைன்னா அது பொய்யா இருக்கும்....


8 : தைரியமாக வேலை செய்ய போய்க்கொண்டிருக்கும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை...?

CONTINUE.....


9 : எப்போதும் உற்சாகமாக அழகா இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன...?

உங்க கேள்வியிலேயே பதிலும் இருக்கு,,,,உற்சாகம்....ஆமாம் மனசுல எந்த negative thoughts ம் இல்லாம சந்தோஷமா இருக்கறேன்....அது காரணமா இருக்கலாம்.


10 : மீடியா, நடிப்பு, குடும்பம், எப்பிடி இருக்கு வாழ்க்கை...?

ஒவ்வொன்றிற்குமான நேரம் கிடைக்கிறது.


11 : உங்களுக்கு பிடித்த இயக்குனர், வெள்ளித்திரை, சின்னத்திரை...?

மணிரத்னம், கே பாலசந்தர் வெள்ளித்திரையில்....சின்னத்திரையில்....என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்திய உப்பலபட்டி நாராயண ராவ்...


12 : வேகமாக வளர்ந்து பெருகி வரும், பதிவுலகம், பதிவர்கள் பற்றி சொல்லுங்க மேடம்...? 

நல்ல ஆரோக்கியமான அறிவியல் வளர்ச்சி....


13 : பதிவுலகில் அட்டகாசமாக பிரகாசித்து வரும் பெண் பதிவர்களுக்கு [[ஆண் பதிவர்களுக்கும்]] உங்கள் ஆலோசனை என்ன...?

நானே ஒன்றரை ஆண்டுகளாகத்தான் பதிவுலகில் தடம் பதித்திருக்கிறேன்....அவர்கள் தான் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டும்..... 
சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.,,,,censor இல்லை இங்கே...


14 : இப்போது என்னென்ன படங்களில் நடித்து கொண்டு இருக்குறீர்கள்...?

தமிழில் - என் பெயர் குமாரசாமி மலையாளத்தில் ஜோஸ் ஏட்டண்டெ ஹீரோ & தி கிங் அண்ட் தி கமிஷ்னர்.


15 : உங்களை அன்புடன் தாங்கும் உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்...? 

கணவர் பாபு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அக்கௌண்ட்ஸ் ஆஃபிஸர், மகன் ஆஷிக் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு, மகன் ஷாருக் எட்டாம் வகுப்பு
அத்தனை பேருக்கும் நான் தான் குழந்தை போல...


16 : கடைசி ஸ்பெஷல் கேள்வி, சந்தானம் சிவாஜி சார் நழுவின மாதிரி சொல்லிறாதீங்க, அரசியலில் ஈடுபட்டு பெண்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் 
மனதில் எழுந்தது உண்டா....? [[ஹை மாட்டிகிட்டாங்களே]] 

கீதையிலிருந்து - எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்...


டிஸ்கி : மிகவும் நன்றி மேடம்...

Sunday, November 20, 2011

நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!

நடிகர் சிரிப்பு திலகம்' சிவாஜி ஆர் சந்தானம் அவர்களை தெரியாத தமிழர்கள் கிடையாது, அபூர்வ சகோதரர்கள் படம் மூலம் "தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க" என்ற வார்த்தை பேச்சு, அன்றைய, இன்றைய மக்களிடையே மிகவும் பாப்புலராக பேசப்படுகிறது, இப்பவும் நாம் நண்பர்களிடம் இப்படி சொல்லி கலாயிப்பது உண்டு, இவர் எப்போதுமே என்னை கவர்ந்தவர்....!!! அவர் பாடி லேங்க்வேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும்....!!!



ரெண்டு நாளைக்கு முன்னாடி, நாஞ்சில்மனோ வலைத்தளத்துக்கு உங்களை பேட்டி எடுக்கலாமா என்று கொஞ்சம் பயத்துடனே கேட்டேன், எடக்குமடக்கா கேட்டுராதீங்கப்பா என சொன்னபடியே உடனே சம்மதித்தார், எந்த ஒரு பந்தாவோ பாவ்லாவோ இல்லாமல், மனுஷர் அநியாயத்துக்கு எளிமையா இருக்கிறார்....!!! [[மிக்க நன்றி சார்]]


இனி, நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், சந்தானம் சிவாஜி அவர்களின் பதில்களும்....

௧ : உங்கள் முதல் படம் எது சார்...?

      உதவி இயக்குநராக “ பண்ன்ரீர் புஷ்பங்கள் ”
   நடிகனாக : எனது முதல் படமான பன்ன்ரீர் புஷ்பங்களில்யிருந்து நடித்து கொண்டு


   வருகிறேன் . என்னை ஒரு நடிகனாக பிரபலம் ஆக்கியது “ஆபூர்வ சகோதரர்கள்’

௨ : நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிச்ச சினிமா எது சார்...?

   பிரதாப் போத்தன் இயக்கிய “மீண்டும் ஒரு காதல் கதை”

௩ : உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்...?

   எல்லோரையும் பிடிக்கும்...


௪ : இப்போதைய தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, உங்கள்
பார்வையில் சொல்லுங்கள்...?

   நல்லாவும் இருகிறது , பயமாவும் இருகிறது....



௫ : உங்களை கவர்ந்த நடிக, நடிகைகள் யார் யார்....?

நடிகர் திலகம் , மக்கள் திலகம் , என். எஸ்.கே , மார்ல்ன் பிராண்டோ ,
அல்பாச்சினோ , ராபர்ட் டி நிரோ , டஸ்டின் ஹாஃப்மன் , கமல்ஹாசன்,
ரஜினிகாந்த், முத்துராமன், பிரபு, கார்த்திக் (முத்துராமன்)
விமல் , விதார்த் மற்றும் இன்றைய புதுமுக நடிகர்கள் இயல்பாக இருக்கிறது
இவர்களின் நடிப்பு
பத்மினி , கே.ஆர்.விஜயா , கண்ணாம்பாள். ரேவதி , அஞ்சலி, அனன்யா...

அபிநயா,   பாவனா , மற்றும் இன்றைய புதுமுக நடிகையர்கள் (இயல்பாக
இருக்கிறது இவர்களின் நடிப்பு)


௬ : உங்கள் முதல் காதல் அனுபவம் [[மாட்னாருய்யா ஹி ஹி]]....?

[[மாட்டலைய்யா ஹி ஹி]]....உண்டு...ஆனால் தோல்வி அடைந்தது ...கல்லூரி
 படிக்கும்போது...


௭ : உங்கள் நகைச்சுவையை விரும்பி ரசிப்பவர்கள் நாங்கள், ஆனால் தற்போது
உங்களை அதிகமாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே...?

       யாரும் கூப்பிடுவதில்லை ......


௮ : மதிப்புக்குரிய நகைச்சுவை நடிகர் ஜனகராஜை நீங்கள் சந்திப்பது உண்டா...?

    உண்டு

௯ : இப்போது காமெடியில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து
உங்கள் கருத்து...?

திறமைசாலி....!!!


௰ : எப்படி இருக்கிறது உங்கள் சினிமா வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும்...?

இரண்டும் இரு துருவங்கள்...


௧௧ : அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறீர்களா...?

அரசியலில் இடுபாடு கிடையது.



௧௨ : அணு உலைகள் பற்றி கருத்து சொல்ல முடியுமா...?

நான் சொல்வதை கேட்கவா போகிறார்கள்...?


௧௩ : தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?

தங்கத்தையும் வாங்கும் நம்ம மக்களுக்கு இது ஒன்றுமில்லை...



௧௪ : உங்களுக்கு மிகவும் பிடித்த டைரக்டர் பற்றி சொல்லுங்க சார்...?

டைரக்டர் சி.வி ஸ்ரீதர் ......புதுமை விரும்பி, இளமை, புதிய பரிமாண கதைகள்

யாரும் பார்த்திராத ஷாட்ஸ், பல புதுமுக நடிக நடிகைகளின்,அந்த
காலக்கட்டதில் தைரியமாக அறிமுக படுத்தியவர், , பாடல்கள் எடுக்கும் திறமை
நிறைய அவரைப்பற்றிஅடுக்கிக்கொண்டே போகலாம்..அவருக்கு தாதா சாஹப் பால்கே
விருது கொடுக்காம்ல் போனது எனக்கு வருத்தம்...!



௧௫ : கடைசி கேள்வி [[அவ்வ்வ்வ் அடிக்க வராதீங்க சார்]] உங்களுக்கும்
அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டா...?
[[ஒடுலேய் மனோ ஓடு அண்ணன்கிட்டே அடி வாங்குமுன்]]

 ஹா ஹா அடிக்க மாட்டேன்...அந்த எண்ணமெல்லாம் கிடையாது.....


டிஸ்கி : மிக்க நன்றி சிவாஜி சந்தானம் சார்......!!!

நன்றி : எனது போட்டோவை கார்ட்டூன் ஆக்கிய நண்பன் "வீடு" அவர்களுக்கு....

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!