Sunday, March 6, 2016

கிரிக்கெட் என்னைப் போடா வெண்ணை என்றது !


இந்தியா - பங்களாதேஷ் கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ வெளில எங்கேயும் [[கடைகளுக்கு]] போயிறாதேன்னு நண்பர்கள் சொல்வதுண்டு இங்கே...[[பஹ்ரைன்]]
[[நமக்குதான் கிரிக்கெட்"ன்னா வேப்பங்காய் ஆச்சே...]]
அது தெரியாம நேற்று பெங்காலி லாண்டரி கடையிலப் போயி மூன்று நாளைக்கு முன்பு கொடுத்த துணிமணிகளைக் கேட்டேன்...
ரெடியாக இல்லை என்றான்...ஒரே நாள்ல ரெடியாகிருமே, நான் கொடுத்து மூன்று நாளாச்சே...என்றேன்...பத்து நாளானாலும் முடிஞ்சா தருவேன் இல்லைன்னா தரமாட்டேன், என்ன செய்யனுமோ செய் போ என்றான் கோபமாக...
எனக்கு கண்ணைக்கட்டிருச்சு பிரஷர் ஏறிடுச்சி...விட்டுருவோமா என்ன...?
பேசாம திரும்பி வந்துட்டேன்.
அப்புறமாத்தேன் தெரிஞ்சுது, நான் அங்கே போன நேரம்தான் இந்தியா ஜெயிச்சிருக்கு அவ்வவ்...
இப்பிடித்தான் முன்பு ஒருமுறை பெங்காலி ஹோட்டல்ல போயி சாப்புட்டுகிட்டு இருந்தேன், பெங்காலிங்க கூட்டமா இருந்து டீவில மேட்ச் பார்த்துட்டு இருந்தாங்க...
இந்தியா - பங்களாதேஷ் மேட்ச்...நான் ஒருவன்தான் இந்தியன், பாதி சாப்புட்டுகிட்டு இருக்கும்போதே...பங்களாதேஷ் ஜெயிச்சிருச்சு, அம்புட்டுப் பேரும் என் பக்கமா எழும்பி நின்னு கைத்தட்டி சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கே, அசடு வழிந்த வண்ணம் சீக்கிரமா கை அலம்பிவிட்டு வெளியேறின சம்பவமும் உண்டு !
நீதி : இடம் பொருள் ஏவல் தெரிஞ்சி செயல்படனும்.


8 comments:

  1. ஆமாம் எல்லோரும் கிரிக்கெட் கிரிக்கெட் என பேசுகிறார்களே அது என்னாங்க? எனக்கு கிரிக்கெட் என்ற வார்த்தைய தவிர அதைப்பற்றி வேறு ஏதும் தெரியாது மக்கா

    ReplyDelete
    Replies
    1. நம்ம கிட்டி-புல் தான் அது

      Delete
    2. அதே அதே...எங்க ஊர்ல கவுண்டேஸ் விளையாட்டும் ஏகதேசம் இப்படித்தான் இருக்கும்.

      Delete
  2. சில சமயங்களில் இப்படித்தான்!

    ReplyDelete
  3. எனக்கும் இந்த விளையாட்டு பிடிக்காது சுத்த வேஸ்ட்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வாந்தி வாந்தியா வரும் நேசன்.

      Delete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!