Thursday, March 10, 2016

கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் என்பது யாதெனில்...!


பெண் போல கொண்டை வைத்திருந்த நண்பனுக்கும், ஆம்பிளை மாதிரி கிராப் வச்சிருந்த பிலிப்பைனி பெண்ணுக்கும், வேலை செய்யுமிடத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட...[[அவனுக்கு ஊர்ல கல்யாணமாகி குழந்தைகள் இருக்கு]]
சேர்ந்தே வசித்தார்கள் இங்கே...எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு, பத்து வருஷமா...
நேற்று திடீரென அவனைப் பார்க்க நேர்ந்தது...முடியெல்லாம் வெட்டி ஆம்பிளையாகிருந்தான்[!]...
"என்னப்பா உன் ட்ரேட் மார்க் முடிக்கு என்னாச்சு வெட்டிட்டே?"
"சலூன்ல செட்டிங் பண்ண சொன்னா, எசகு பிசகா பண்ணுனதுல மொத்த முடியையும் எடுக்க வேண்டியதா போச்சு, அதான்..."
"சரி, மே [[மேரி'யை நாங்கள் மே என்று கூப்பிடுவோம்]] எப்பிடி இருக்காள் நலமா ?"
"அதையேன் கேக்குற அது முடிஞ்சிபோச்சு, அவ இப்போ வேற ஆள்கூட செட்டில் ஆயிட்டாள்"
"உன்னை மிகவும் லவ் பண்ணுனாளேடா..."
"ஆமாடா நானும்தான் காதலிச்சேன், ஆனா அவ இந்த ம...ர காதலிச்சிருக்கா...முடியை வெட்டிட்டு ரூமுக்குப் போனதும், ரூமுக்குள்ளேயே விடம்மாட்டேன்னு ஒரே சண்டை..."
"அப்புறம் ?"
"அப்புறமென்ன அப்புறம், நானும் ஒதுங்கிட்டேன்..."
ரெண்டுபேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிட்டு இருந்தபோது, அவள் இவன் தலைமுடியைப் பற்றியே சிலாகித்தாள், இவனும் ஆண் பெண் கலந்த அந்த தலை முடியைப் பற்றியே சிலாகிப்பான்...[[பயபுள்ளைங்க ஒரு மார்க்கமாத்தேன் இருந்துருக்காங்க]]
ஆக...ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி இப்பிடித்தான் உருவாகிருக்கு...
இந்த டேஸ்'க்குத்தாண்டா என்னை விரும்பிருக்கான்னு அவன் மலையாளத்துல சொன்ன ஸ்லாங் கேட்டு இன்னமும் சிரிச்சிட்டு இருக்கேன்...


8 comments:

  1. கெமிஸ்ட்ரிங்கறது
    கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது
    இப்ப புரிஞ்சு போச்சு

    ReplyDelete
  2. அதாவது எதுக்கோ ஒர்க் ஆகும்
    எதுக்கோ அவுட் ஆகும்
    அதுதான் ஒர்க் கவுட்
    சரியா

    ReplyDelete
  3. ஓ...நீங்க கொண்டை போட சில நாட்களாக முயற்சி செய்வதாக செய்திகக் கசிகிறதே.....உண்மையா?

    ReplyDelete
  4. முடி வளர்த்தாத்தான் பிடிக்குமா?... :)
    அது சரி...

    ReplyDelete
  5. எப்படியோ தலையில் முடியிருப்பவன் இன்னொரு பக்கொடா சாப்பிட ஆசைப்படுகின்றான் என்பதைச்சொல்லுகின்றீங்க எனக்கு பல் இல்லை[[

    ReplyDelete
  6. கெமிஸ்ரி எல்லாம் படிக்கல சயன்ஸ் பெயில்[[ விஞ்னாணம் சூனியம் எனக்கு!!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!